சாம்சங் -மோட்டோரோலா
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்வெளியிட்ட, "கேலக்ஸி' வரிசை ஸ்மார்ட் போன்களின் விற்பனை,இப்போது ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிறுவனம், கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், முதன் முதலாக, "கேலக்ஸி' வரிசையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, "கேலக்ஸி எஸ்', "கேலக்ஸி எஸ் 2' மற்றும் "எஸ் 3', "கேலக்ஸி நோட்', "கேலக்ஸி நோட் 2', "கேலக்ஸி ஒய்' உட்பட, 13 வகையான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனையில், "கேலக்ஸி' பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது. 2012 ஜனவரி முதல், ஜூன் வரையிலான அரையாண்டில்இந்தியாவில் 10.24 கோடி அலைபேசி சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. ஸ்மார்ட் போன்வகைகள் விற்பனை 55 லட்சம்ஆகும் . சாம்சங் 41.6%, நோக்கியா 19.2 %,ரிம் 12.1% ஆக விற்பனை விகிதம் உள்ளது . இப்படி அலை பேசிகள் விற்பனை இருக்கும் போது இந்த அலைபேசி துறையில் முதலிலேயே கால் பதித்த மோட் டரொலோ நிறுவனமோ தனது சென்னை தயாரிப்பை கட்டுபடியாகாமல் மூடுகிறது . ம...