"நேரலையாளர்கள்"
கூறும் மனிதாபிமானம் இன்று செய்திகளை முந்தி தரவும்,அதை நேரடியாக ஒளிபரப்புவதிலும் ஊடகங்களுக்குள் ஏற்படும் போட்டி மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. கொஞ்ச காலத்துக்கு முன் சாலையில் சென்ற பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதை அரை மணி நேரம் படம் எடுத்து ஒளிபரப்பி விட்டு அதை தடுக்க யாருமே முன்வரவில்லையே என்று காரசாரமாகசெய்தி ஒளிபரப்பியநிருபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தது தெரிந்திருக்கும். மற்றவர்கள் வரவில்லை.மனிதாபிமானம் செத்து விட்டது என்று பலாத்காரத்தை அங்குலம்,அங்குலமாக படம் எடுத்த நிருபர் ஏன் உதவவில்லை?அவர் மனிதரில்லையா?மனிதாபிமானம் அவருக்கு செல்லாதா? அதை போல் பல நிகழ்வுகள். சமீபத்தில் பேருந்து ஒன்று வயதான பெண்மணி காலில் ஏறி இறங்கியதால் அவதி பட்டு துடித்தாராம்.அங்கு நின்றுஅந்த நிருபர் ஒருமணி நேரமாக பார்த்ததில் யாருமே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக வில்லையாம்.108 கூட வரவில்லையாம். காவல்துறையினர் தாமதமாக வந்து பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றதா அப்பெண் இறந்து விட்டாராம். இந்த செய்தியை அந்த நிருப...