கல்வி-கதிர் =வீச்சு



தமிழ் நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதீயவர்கள் எண்ணிக்கை 6.76 லட்சம் .ஆனால் இவர்களில்2,448 பேர்கள்தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இது நமது வருங்கால ஆசிரியர் சமுதாயம் எந்த அளவு திறமையுடன் இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தேர்வு எழுத காலம் போதாது,கேள்விகள் மிக கடினமாக இருந்தது அதை எளிமையாக்க வேண்டும் என்று  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ்ர்கள் போல் ஆசிரிய தேர்வாளர்கள் புலம்பியுள்ளனர்.
இவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு இவர்கள் எந்த அளவு பாடம் நடத்து வார்கள் ,பாடத்தில் சந்தேகங்களை தீர்ப்பார்கள்.?
கொஞ்ச காலமாகவே பள்ளிகளில் பாடங்கள் விளக்கமாக நடத்தப்படுவதில்லை.

பாடங்களின் சந்தேகங்கள் தீர்க்கப் படுவதில்லை என்ற முறையீடுகள் எழுந்து வருகிறது. மாணவரகள் பாடங்களை மனப்பாடம் மட்டும் செய்து தேர்வெழுதுவதுதான் இப்போதைய நடமுறையாகிவிட்டது.
அதில்தான் மதிப்பெண்களை பெற்று வருவதும் நடக்கிறது.
பாடத்தில் சந்தேகங்களை கேட்டால் விளக்கத் தெரிந்தவர்களே ஆசிரியர்களிளேயே கிடையாத போது மாணவ்ர்கள் எப்படி இருப்பார்கள்.அதைத்தான் இந்த தேர்வு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.தான் நடத்தப் போகும் பாடத்தில் தானே கேள்விகள் கடினம்-நேரம் போதாது என்பவர்களை என்ன சொல்லுவது?
மாணவர்கள் மனப்பாட எந்திரமாகி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெற்றி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்போகிறார்களாம்.அப்படியே எல்லோரும் தேர்வாகும் வரை நடத்துவதற்கு தகுதி தேர்வு என்று பெயரா?
இப்படி நடத்துவதற்கு பதில் முந்தைய மாதிரியில் பேசாமல் வேலையை போட்டுக்கொடுத்திடலாம்.
எதற்கு அரசுக்கு வெட்டி செலவு-வெட்டி வேலை?
_______________________________________________________________________

அணு பாதுகாப் [பற்ற] பு    கொள்கை?,

கூடங்குளம் போன்றுஅணு மின் நிலையம் புதிதாக உருவாகி வரும் நிலையில் இந்திய அணு மின் நிலையம் பாதுகாப்பு நிலை பற்றி கேள்விஎழுந்துள்ளது.
சுரன்

அது மட்டுமின்றி "அணு  உலைகள் விபத்தில் மனிதர்கள் பாதிக்கப் பட்டால் அதிக பட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 500/- வழங்கலாம் என்ற தாராள அறிவிப்பும் அதிர்ச்சியைத் தருகிறது.
அணு பாதுகாப்புக்கொள்கையும், கதிர் வீச்சுபாதுகாப்பும் மிகவும் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளதாக தெரிகிறது.அதையும் நமக்கு இந்திய தலைமை தணிக்கை அலுவலகம்தான் தெரியப்படுத்தியுள்ளது.

அணு பாதுகாப்புக் கொள் கையை தயார் செய்யாத அணு சக்தி ஒழுங்குஆணையத்தை நாட்டின் தலை மை கணக்குத் தணிக்கை அதி காரி அலுவலகம் கண்டித்துள்ளது.
தணிக்கை அலுவலகம் மக்களவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,
" 168 பாதுகாப்பு ஆவணங்களில் 27ஐ இன்னும் உருவாக்கவில்லை. 1987 மற் றும் 1997ம் ஆண்டு 2 குழுக்கள் அளித்துள்ள பரிந்துரைகளில், பாதுகாப்பு ஆவணங்கள் விரைவுப்படுத்தப்பட வேண் டும் என அறிவுறுத்தி இருந்த போதும் ஏஇஆர்பி அதனைக் கடைப்பிடிக்கவில்லை"
- குற்றம்சாட்டியது.இந்த அறிக்கையில், மேலும் ஏஇஆர்பி மீது உள்ள குறைபாடாக அந்த அமைப்பு தனி மதிப்பீடு மற்றும் அணு மின் நிலையங்களில் பணி யாற்றுபவர்களுக்கு கதிர்வீச்சு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கண்காணிப்பில் நேரடியாக பங்கு வகிக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.இந்தியாவில் கதிர்வீச்சு வெளிப்பாடு மற்றும் கதிர்வீச்சு கண்காணிப்பு என்பது அணு மின் நிலையங்களை இயக்கு பவர்களின் கட்டுப்பாட்டி லேயே உள்ளது. இதன்படி இந் திய அணுமின் கழகமே அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அணுசக்தி யை ஒழுங்குபடுத்தும் ஏஇ ஆர்பி வசம் இந்த கண் காணிப்பு பங்கு இல்லை.
சுரன்

அதே போன்று ஏஇஆர்பி அமைப் பிடம் கதிர்வீச்சு ஆதாரவளம் குறித்த முழுப் பட்டியலும் இல் லை. பயன்படுத்தப்படாத கதிர் வீச்சு வளங்களை, பாதுகாப் பாக அகற்றுவதற்கான திறன் வாய்ந்த ஒழுங்குத் தன்மை யையும் உறுதிப்படுத்த முடியா மல் உள்ளது என சிஏஜி கூறி யுள்ளது. கதிர்வீச்சுக் கழிவுகளை பயன்பாட்டுக்கு பின்னர், பாது காப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான உரிய நடைமுறைகள் இல்லை. அதேபோன்று நாட்டின் பல் வேறு கதிர்வீச்சு வாய்ப்பு உள்ள இடங்களில் கண் காணிப்பு முறை மற்றும் உரி மம் புதுப்பிப்பு முறை பலவீன மாக உள்ளது என்றும் தணிக் கை அமைப்பு குற்றம்சாட்டி யுள்ளது. இதனால் குறிப்பிட்ட அளவு கதிர்வீச்சு அமைப்பு கள் தகுதிவாய்ந்த உரிமங்கள் இல்லாமலேயே செயல்பட்டு வருகின்றன என்றும் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.நாட்டில் 91சதவீத மருத் துவ எக்ஸ்ரே அமைப்புகள் ஏஇஆர்பியுடன் பதிவு செய்யா மல் உள்ளன. 2001ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஒவ்வொரு மாநிலத் திலும் கதிர்வீச்சு இயக்குன ரகம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவை கடைப்பிடிக் கப்படவில்லை.
 கேரளாவிலும் மிசோரமிலும் இவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை.அணுசக்தி ஒழுங்கு ஆணையம் 85சதவீத கதிர் வீச்சு தொழில் மற்றும் ரேடி யோ தெரபி அமைப்புகளில் ஒழுங்குமுறை ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.நோய் கண்டறிதல் கதிர் வீச்சு அமைப்புகளில் 97 சத வீதத்திற்கும் மேலாக ஆய்வு செய்வதில் குறைபாடு உள்ளது.ஏஇஆர்பி தொடர்ச்சி யான ஒழுங்குமுறை ஆய்வு களை மேற்கொள்வதில்லை என சர்வதேச அணுசக்தி முகமை பரிந்துரைத்துள்ள நிர்ணய அளவீடுகளை ஆய்வு செய்த சிஏஜி குறை கூறியுள்ளது.
அணுமின் நிலையங்களில் மனித பாதுகாப்பு குறித்து ஏஇ ஆர்பி அறிவிப்பு வெளியிட்டு 13 ஆண்டுகளான பின்னரும் கூட  இந்தியாவில் எந்த அணுமின் நிலையமும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.இந்திய அரசும் அதை கண்டு கொள்ளவில்லை.
 30 ஆண்டுகள் செயல் பட்ட அணுமின்நிலையங் களும் இதனை கடைப்பிடிக்க வில்லை. 
சுரன்

உரிய செயல்பாடு களை உறுதிப்படுத்துவதற்கு ஏஇஆர்பிக்கு எந்த விதியும் இல்லை. சர்வதேச அளவீடு கள் மற்றும் சிறப்பு செயல் முறை களை ஏஇஆர்பி கண்டு கொள்ளாமல் மிக மெத்தன மாகவே இருந்து வரு கிறது.இது இந்திய மக்களின் வாழ்க்கையோடும்-உயிரோடும் விளையாடுவது போன்றது"என்று தலைமைத் தணிக்கை அலுவலகம் தனது அறிக்கையில் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் இதை நமது மன்மோகன்சிங் [அரசு ]வழக்கம் போல் வாயை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டுள்ளது.அது அரசின் தலைக்குள் அல்லது புத்தியில் ஏறியதா? என்றே தெரியவில்லை.
மன்மோகன் முகத்தை பார்த்து என்னதான் தெரிந்து கொள்ள முடியும்?
இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் வேறு தனது வேலையை துவக்குகிறது.
_______________________________________________________________________

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?