மும்பை தாக்குதல்

 முக்கிய சம்பவங்கள்:
கசாப்புக்கு  மரண தண்டனை  உறு தி  செய்யப்பட்டுள்ள நிலையில்  மும்பை தாக்குதல் பற்றி சில விபரங்கள் :
2008, நவ. 26: கசாப் மற்றும் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவி 60 மணி நேரம் பயங்கர தாக்குதல் நடத்தியதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
நவ. 27: அதிகாலை 1.30 மணிக்கு கிர்காவ் சவுப்பாத்தி அருகில் கசாப் உயிருடன் சிக்கினான்.
நவ. 29: போலீசிடம் வாக்குமூலம் அளித்த கசாப், மும்பை தாக்குதலில் தனது பங்கை ஒப்புக் கொண்டான்.
நவ. 29: தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டு கொன்றன.
2009, ஜன. 13: மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக எம்.எல்.தஹில்யானி நியமிக்கப்பட்டார்.
ஜன 16: பலத்த பாதுகாப்புமிக்க ஆர்தர் ரோடு சிறையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பிப். 20/21: மாஜிஸ்திரேட் ஆர்.வி.சாவந்த் வாகுலே முன்னிலையில் கசாப் வாக்குமூலம் அளித்தான்.
ஏப். 15: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
ஏப். 29: கசாப் மைனர் அல்ல; மேஜர் என்பதற்கான ஆதாரங்களை நிபுணர் குழு அளித்தது.
மே 6: கசாப் மீது 86 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
டிச. 16: அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
2010, மார்ச் 9: நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடைபெற்றது.
மார்ச் 31: இரு தரப்பு வாதங்கள் முடிந்தது. மே 3ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மே 3: கசாபை குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 6: கசாபுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஜூன் 8: தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கசாப் அப்பீல் செய்தான்.
2011, ஜன. 17: விசாரணை முடிந்து, பிப்ரவரி 7ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பிப். 7: மீண்டும் பிப்ரவரி 21ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பிப். 21: கசாபுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஜூலை 29: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப் அப்பீல் செய்தான்.
2012, ஆக. 29: கசாபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?