"நேரலையாளர்கள்"
கூறும் மனிதாபிமானம்
இன்று செய்திகளை முந்தி தரவும்,அதை நேரடியாக ஒளிபரப்புவதிலும் ஊடகங்களுக்குள் ஏற்படும் போட்டி மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது.
கொஞ்ச காலத்துக்கு முன் சாலையில் சென்ற பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதை அரை மணி நேரம் படம் எடுத்து ஒளிபரப்பி விட்டு அதை தடுக்க யாருமே முன்வரவில்லையே என்று காரசாரமாகசெய்தி ஒளிபரப்பியநிருபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தது தெரிந்திருக்கும்.
மற்றவர்கள் வரவில்லை.மனிதாபிமானம் செத்து விட்டது என்று பலாத்காரத்தை அங்குலம்,அங்குலமாக படம் எடுத்த நிருபர் ஏன் உதவவில்லை?அவர் மனிதரில்லையா?மனிதாபிமானம் அவருக்கு செல்லாதா?
அதை போல் பல நிகழ்வுகள்.
சமீபத்தில் பேருந்து ஒன்று வயதான பெண்மணி காலில் ஏறி இறங்கியதால் அவதி பட்டு துடித்தாராம்.அங்கு நின்றுஅந்த நிருபர் ஒருமணி நேரமாக பார்த்ததில் யாருமே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக வில்லையாம்.108 கூட வரவில்லையாம்.
காவல்துறையினர் தாமதமாக வந்து பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றதா அப்பெண் இறந்து விட்டாராம்.
இந்த செய்தியை அந்த நிருபர் அவ்வப்போது எடுத்த புகைப்படங்களை போட்டு செய்தியாக எழுதி இது அவர் அடி பட்டவுடன் எடுத்தது,இது அந்த ஆள் பார்த்துக்கொண்டே உதவாமல் போன போது என்ற ரீதியில் படத்துடன் பரபரப்பாக செய்தி வெளியிட்டு கடைசியில் நம் நகரில் மனிதாபிமானம் மக்களுக்கு இல்லை.காப்பாற்ற ஒரு மனிதர் கூட இல்லாதது வெட்ககரமானது என்று முடித்திருந்தார்.
பாவம் அவரை அவரே மனித குலத்தில் ஒருவராக சேர்க்கவில்லை போலும்.
அத்தனை படங்கள் எடுத்தவர் .
அவரே முதலில் 108க்கும் காவல்துறைக்கும் சொல்லியிருக்கலாம் அல்லவா?
அவருக்கு அந்த மனிதாபிமானம் இல்லையா.அல்லது பிணத்தின் மீது அரசியல் நடத்தும் நபராகி விட்டாரா?
ஊடகத்தினர் தாங்கள் செய்தி சேகரிக்கும் எந்திரங்கள் மட்டும் என்ற நினைப்பை கைவிட வேண்டும்.
விபத்து,கொலை பலாத்காராம் போன்றவற்றி செய்தி சேகரிக்கும் வேளையில் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் உதவாமல் மற்றவர்கள் உதவில்லை என்று செய்தி எழுதுவது அவர்களுக்கு மனிதாபிமானம் என்று எழுதும் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.
அவர்கள் தாங்கள் செய்திய முன்னாள் தர வேண்டும் என்பதற்காக செய்யும் செயல்கள் பல மற்றவர்கள் உயிரை பறித்து விடுகிறது.
இதோ மும்பை தாக்குதலில் ஊடகத்தினர் நடந்த விதம் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குரியதாக்கிய விவகாரம்.
"மும்பைத்தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் லஷ் கர்-ஏ-தொய்பா தீவிரவாதி அஜ்மல் காசப்பிற்கு மரண தண்டனையை உறுதிப் படுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தபோது, இந்தத்தாக் தலை டி.வி.ஊடகங்கள் நேரடி ஒளிபரப்புச் செய்த தால் நாட்டின் பாதுகாப் புக்கு அபாயம் ஏற்பட்டது என எச்சரித்தது.
மும்பையில், 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி யன்று பாகிஸ்தானில் இருந்துவந்த 10 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்தியத்தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத்தாக்குதலில் ஈடு பட்டு, உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் காசப் பிற்கு உச்சநீதிமன்றம் தூக் குத்தண்டனையை உறுதிப் படுத்தியது.இந்தத்தீர்ப்பை அளித்து நீதிமன்றம் கூறு கையில், பாகிஸ்தான் தீவிர வாதிகள் மும்பையில் தாக்கு தல் நடத்திய 72 மணி நேர மும் டி.வி.க்கள், அதனை நேரடி ஒளிபரப்புச் செய் தன.
இப்படி தாக்குதலை நேரடியாக ஒளிபரப்புச் செய்வது நாட்டின் பாது காப்புக்கு தீங்கு விளைவிப்ப தாக உள்ளது. அதை பார்த்தே காவல்துறையின் நடவடிக்கைகளை கணக்கிட்டு தீவிரவாதிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை செய்யவும்-தப்பிக்கவும் வசதியாகிவிட்டது.
இந்தியத் தொலைக்காட்சிகள், தேசிய நலன் கருதியோ, அல்லது சமூக நோக்கத்திற்காகவே, அந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ளவில்லை என்றது.தாக்குதல் நடந்தபோது, தீவிரவாதிகள் கண்ணுக்கு தெரியாமல் பதுங்கி இருந்து, சுட்டு, உயிர்ச்சேதம் ஏற்ப டுத்தினர். அவர்களை சுட்டு வீழ்த்துவதற்கு பாதுகாப்புப் படையினர்
மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கை யையும் டி.வி.க்கள் நேரடி யாக ஒளிபரப்பியபோது, இந்திய மண்ணுக்கு வெளி யே உள்ளே நபர்கள், நேரடி ஒளிபரப்பு காட்சி விவரங் களின்படி பாதுகாப்புப் படையினர் முன்னேறிவ ரும் இடம்குறித்து, தீவிரவா திகளுக்கு தகவல் தெரிவிக் கும் நிலை ஏற்பட்டது.தாக்குதலின் தொடக்கம் முதல் இறுதிவரை இடை விடாமல் டி.வி.க்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டது. ஒவ்வொரு டி.வி.க் களும் போட்டி போட்டுக் கொண்டு, நிமிடத்திற்கு நிமிடம், சமீப நடவடிக்கை விவரங்களை காட்டிக் கொண்டிருந்தன. பாது காப்பு படையினரின் நட மாட்டம் மற்றும் அவர்கள் நிற்கும் நிலை குறித்தும் விவரிக்கப்பட்டது. இந்த நேரடி ஒளிபரப்பு பாதுகாப் புப் படையினருக்கு அபா யத்தை ஏற்படுத்தியதுடன் சிரமத்தையும் ஏற்படுத்தி யது என நீதிமன்றம் தெரி வித்தது. உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை யை குறிப்பிட்டு டி.வி. சேனல்கள் தங்களது செய லை நியாயப்படுத்த முயல் கின்றன. இது முற்றிலும் தவ றானது. அந்தச் சூழ்நிலை யில் ஏற்க முடியாத ஒன்று என்றும் அமர்வாயம், டி.வி.க்களின் செயல்பாட் டைக் கண்டித்தது.பாதுகாப்புப் படையி னரின் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அதுவரை எடுத்ததைஒளிப ரப்பு செய்திருக்கலாம்.
______________________________________________________________________________
விலைவாசியை கட்டுப்படுத்திய முறைகேடு
காங்கிரசு மன்மோகன் அரசு இப்போது ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி முறைகேட்டில் சிக்கி முழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது.இதனால் இந்திய மக்களுக்கு நல்ல சூழல் உருவாகியுள்ளது.
இதனால் டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு இப்போது உயர்த்தாது என்று தெரிகிறது.
இதனால் டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு இப்போது உயர்த்தாது என்று தெரிகிறது.
"தற்போதைய சூழ்நிலையில், எரிபொருட்கள் விலையை உயர்த்துவது என்பது மிக மிக கடினமான ஒன்று.
ஊழல் சூழல்-மத்திய அரசை நிலையில்லாமல் ஆக்கியுள்ளது.மக்களிடம் அரசின் நம்பகத்தன்மை கெட்டுள்ளது.இந்த நேரம் விலை உயர்வுக்கு சாத்தியம் இல்லை என்று தெரிகிறது.
டீசலை அதன் விலையில் ரூ.15.55 குறைவாகவும், மண்எண்ணெய்யை ரூ.29.97 தள்ளுபடி விலையிலும், சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.231 குறைவாகவும் விற்பனை செய்து வருவதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் ரூ.450 கோடி இழப்பை சந்தித்து வருவதாக மன்மோகன் சிங்கின் காங்கிரசு அரசு புலம்பல் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆனால் இலட்சத்து 86 ஆயிரம் கோடி விவகாரம் தணிந்த பின் இதன் விலைகள் உயரலாம்.
பார்ப்போம் அதற்குள் இன்னொரு லட்சம் கோடிகள் முறைகேடு வராமலா போயிடும்.