புகை நமக்கு பகை.
இன்று புகையிலை எதிர்பு நாள், புகைக்கப் புகைக்க சுகமாக இருந்து, புற்று நோய்க்குக் கூட்டிச் செல்வது தான் புகைப்பழக்கம். இந்தியாவில் புகை யிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே போகிறது. புகைப்பிடிப் பவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்வதோடு, அருகில் உள்ள வர்களின் உடல்நலத்தையும் சேர்த்துக் கெடுக் கின்றனர்; சுற்றுச்சூழலையும் சீரழிக்கின்றனர்.“அபாயகரமான பொருள்” என்று எச்ச ரிக்கை வாசகத்தோடு சிகரெட், பாக்கு உள் ளிட்ட போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு. கடைகளில் “அபாயகரமான போதைப் பொருள்” என்ற எச்சரிக்கை அட்டையை வைத்துவிட்டுத் தயக்கமின்றி விற்பனை நடைபெறுகிறது. புகையிலைப் பழக்கத்தின் பிடியில் சிக்கிய வர்கள் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத் தாமல் சிகரட், பீடி, ஹான்ஸ், மாவா, பான் பராக் என வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் ஆண்டுதோறும் இறந்து போகிறவர்களில் 9 லட்சம் பேர் புகையிலை அடிமைகளானவர்கள். அதாவது நாள்தோ றும் 2,500 பேர்! வறுமை, பஞ்சம் பட்டினியிலும், கலவரங்களிலும், இயற்கைச் சீற்றத்திலும் கூட இவ்வளவு பேர் மடிவதில்லை.இந்திய அரசுக்...