"சோலை" -நினைவு.
சோலை.
=========
தனது சுவையான ஆணித்தரமான அதேநேரம் கண்ணிய மான எழுத்தாளர்.
அவரின் கட்டுரைகளைப்படிப்பதற்காகவே மக்கள் குரல்,மக்கள் செய்தி,அலை ஓசை போன்ற தினசரிகளைமுன்பு படிப்பதுண்டு.இப்போது நக்கீரனில் தொடர்ந்து எழுதி வந்தார்.
எம்.ஜி.ஆர் நடத்திய "அண்ணா" நாளிதழில் எழுதியவர் சோலை.ஆனால் பொதுவுடமைவாதி அவர்.
எம்ஜிஆரால் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக வலம்புரி ஜானுக்கு முன் நியமிக்கப்பட்டவர்.ஜெ எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் கருத்துக்களும்-கரங்களும்தான் உதவியது.
ஆனாலும் இவருக்கு ஜெயுடன் ஒத்துப்போகாததால் விலகிவிட்டார்.
அதன் பின் பல்வேறு இதழ்களில் சுதந்திரமாக எழுதியவர் சோலை.
தனது 80 வயது வரை சாகும் வரை பேனாவை நிறுத்தவில்லை.
அவரின் இழப்பு மிக கொடுமையானது.சின்ன குத்தூசியை இழந்த நமக்கு சோலை இழப்பும் பேரிழப்புதான்.
சோலை போன்று எழுத முயன்று தோற்றுப்போனவர்கள் பலரைத்தெரியும்.அக்கூட்டத்தில் நானும் உண்டு.
சுவையுடன் அரசியல் கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்கள் கூட வெறுப்பை காட்டமுடியாதவாறு கண்ணியமாக எழுதிட இனி யார்?
_________________________________________________________________________________
"டெங்கு"
இன்று தமிழகம் முழுக்க பயமுறுத்தி பரவிக்கொண்டிருக்கும் உயிர் பலி "டெங்கு"காய்ச்சல் வராமல்தடுப்பதற்கு உரிய மருத்துவ முறைகளை .
இங்கு "ஆயுர் வேத மருத்துவம்"தளத்தில் இருந்து மீள்பதிவாக பதிவிட்டுள்ளேன்.
"டெங்கு" வராமல் உங்களை முடிந்த அளவு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆயுர் வேத மருந்துகள் "டெங்கு:வை மட்டுமல்ல.இது போன்ற விடக்காய்ச்சல்,ஆங்கில மருத்துவ முறையில் இனங்கான முடியா மர்மக்காய்ச்சல்[?]களுக்கும் உபயோகிக்கலாம்.
நாங்கள் ..மேலே சொன்ன மருந்துகளை எங்களது கிளினிக்கில் இலவசமாக பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..நோயாளிகள் சீக்கிரம் குணம் அடைகிராரர்கள் என்பதே அதில் சிறப்பு ..
நன்றி:ஆயுர் வேத மருத்துவம்.தளம்
Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com/#ixzz1wNNWqZrV

வாழ்க்கை
____________
தமிழகத்தின் மூத்த பத் திரிகையாளரான சோலை அவர்கள் இன்றைய திண் டுக்கல் மாவட்டம் அய்யம் பாளையத்தில் ஒரு விவசா யக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் சோமசுந்தரம். இளம் வயதி லேயே பெற்றோரை இழந்த அவர் பாட்டியால் வளர்க் கப்பட்டார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த பின் மதுரையிலுள்ள மது ரைக்கல்லூரியில் இண்டர் மீடியட் வரை படித்தார். பின்னர் காந்தி கிராமத் திற்குச் சென்ற அவர் வினோ பாஜியின் பூமிதான இயக்கத் தால் ஈர்க்கப்பட்டார். அவ ருடன் சேர்ந்து இந்தியா முழுவதும் நடைபயணம் சென்றார். சில ஆண்டுகளுக் குப்பின் காந்தி கிராமம் திரும்பிய அவர், பத்திரிகை களுக்கு கட்டுரைகள் எழுது வது, மொழியாக்கம் செய் வது என்பதைச் செய்து வந் தார். 1958ம் ஆண்டில் சீனா வின் விவசாயம் குறித்து அவர், ஜனசக்தி நாளித ழுக்கு கட்டுரை ஒன்றை அனுப்பினார். அந்தக் கட்டு ரையைப் படித்த ஜனசக்தி ஆசிரியரும் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜீவா, சோலையை சந்திக்க விரும்பி அவரை வரச்சொன்னார். அவருடைய எழுத்து ஆர் வம் குறித்து அறிந்த ஜீவா, ஜனசக்தி ஏட்டில் உதவி ஆசிரியராக பணியாற்றும் படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு சோலை உதவி ஆசிரியரானார்.ஜனசக்தியில் அவர் ஏரா ளமான கட்டுரைகள் எழுதி யுள்ளார். எந்தக் கடினமான விஷயத்தையும் எளிய வார்த் தைகளில் சிறிய வாக்கியங் களில் எழுதுவது அவரது சிறப்பு. 1963ம் ஆண்டில் கட்சி யில் தத்துவார்த்த கருத்து மோதல் உருவாகி வந்த நேரத்தில் ஜனசக்தியிலி ருந்து வெளிவந்த சோலை, மார்க்சிய-லெனினியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக் கோடு வார இதழ் ஒன்றை துவங்க விரும்பிய கட்சியின் மாகாண கவுன்சில் உறுப்பி னர் எல். அப்புவுடன் சேர்ந்து 1963ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி தீக்கதிர் வார இதழை வெளிக்கொண்டு வந்தார். அடுத்த பல மாதங்களுக்கு அதன் ஆசிரியர் போல் அவர் செயலாற்றினார்.
பின் னர் குடும்பச்சூழல் காரண மாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு முறையில் துவக்கிய ‘நவ மணி’ நாளிதழில் துணை ஆசிரியரானார். பல ஆண்டு களுக்குப்பின் ‘மக்கள் செய்தி’ நாளிதழின் பொறுப்பாசிரி யர் ஆனார். 1972ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை துவக் கியபொழுது அண்ணா நாளிதழை துவங்கினார். எம்.ஜி.ஆர். அதன் ஆசிரிய ராகவும் சோலை அதன் பொறுப்பாசிரியராகவும் பல ஆண்டுகள் செயல்பட் டார். பல ஆண்டுகளுக்குப் பின் அவர் பத்திரிகைக ளுக்கு கட்டுரைகள் எழு தும் பத்திரிகையாளரானார். சோவியத் நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘புதிய வானம், புதிய பூமி’ என்ற தலைப் பில் தனது அனுபவங்களை எழுதியுள்ளார். சுமார் ஆயிரம் கட்டுரை களுக்கு மேல் எழுதியுள்ள சோலை, ஏகாதிபத்தியத் திற்கு எதிராகவும், மதவாத சக்திகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு எதிராக வும் ஏராளமான கட்டுரை கள் எழுதியுள்ளார். அவருக்கு வயது 80. அவருக்கு மனைவி சரோஜாவும், 2 புதல்விக ளும், மூன்று புதல்வர்களும் உள்ளனர்.
_________________________________________________________________________________
"டெங்கு"
இன்று தமிழகம் முழுக்க பயமுறுத்தி பரவிக்கொண்டிருக்கும் உயிர் பலி "டெங்கு"காய்ச்சல் வராமல்தடுப்பதற்கு உரிய மருத்துவ முறைகளை .
இங்கு "ஆயுர் வேத மருத்துவம்"தளத்தில் இருந்து மீள்பதிவாக பதிவிட்டுள்ளேன்.
"டெங்கு" வராமல் உங்களை முடிந்த அளவு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆயுர் வேத மருந்துகள் "டெங்கு:வை மட்டுமல்ல.இது போன்ற விடக்காய்ச்சல்,ஆங்கில மருத்துவ முறையில் இனங்கான முடியா மர்மக்காய்ச்சல்[?]களுக்கும் உபயோகிக்கலாம்.
- டெங்கு வராமல் தடுக்க -நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை முப்பது மிலி வெறும் வயிற்றில் -மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..
- டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
- இந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்
- நிலவேம்பு தயாரிக்க நினைப்பவர்கள் ..இந்த கட்டுரையை( இங்கே கிளிக் செய்யவும் நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள் ) படித்து எளிதாக வீட்டிலே தயாரிக்கலாம் ..தயாரிக்க பயன்படும் மூலிகை பொருட்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
- நில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் ..
- ஆயுர்வேதத்தில் ..அம்ருதாரிஷ்டம் இருபத்தைந்து மில்லி மருந்து சம அளவு வெந்நீருடன் காலை மாலை பருக ..வராமலும் தடுக்கலாம் ...வந்தாலும் பயப்படாமல் ஓட ஓட விரட்டலாம் ..அம்ருதாரிஷ்டம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam
- மேலும் சடங்க பானியம் என்னும் -நில வேம்பில் உள்ள ஒன்பது பொருட்களில் உள்ளவற்றில் ஆறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரும் நல்ல பலன் தரும் -இது பாட்டில் மருந்தாக பல கேரளா கம்பெனிகள் தயாரிக்கின்றன ..
- மேலும்வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்-டெங்கு காய்ச்சலுக்கும் நன்றாக பயன்படும் -இதுவும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது
- எனது பழைய கட்டுரைகளில் கூறியுள்ள காய்ச்சலுக்கு பயன்படும் இந்த மருந்துகளும் நன்றாக பயன்படும் ..
- மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornam-என்ற மருந்து -எல்லாவிதமான காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகவும் ,காய்ச்சலை குணமாக்கவும் பயன் படும் என்பதில் இந்த கட்டுரையில் சவால் விட்டது போல் இப்போதும் என்னால் சவால் விட முடியும் .
- மேலும் சித்த மருந்துகளில் பிரம்மானந்த பைரவம் ,வாத சுர குடிநீர் ,மிக மிக குறைந்த அளவிலே லிங்க செந்தூரம் போன்றவையும் காய்ச்சல் வராமலும் வந்தாலும் தடுக்கவும் உதவும்
- காய்ச்சல் வந்த பின் முதலில் பட்டினி கிடப்பது நல்லது ...ஆயுர்வேதத்தில் லங்கனம் பரம ஔசதம் என்பார்கள் ...சத்தான எளிதில் செரிக்கூடிய கஞ்சி வகைகளே மிகவும் நல்லது ..திட உணவை முற்றிலும் காய்ச்சல் குறைந்தாலும் தவிர்ப்பது நல்லது
- ஊசி மருந்தை கொண்டு உடனடியாக காய்ச்சலை குறைக்கிறேன் என்று ஸ்டீராய்ட் கலந்த ஊசிகளை தவிர்ப்பது நல்லது ...உங்களுக்கு ஊசி போட போகும் மருத்துவரிடம் இந்த ஊசியிலே டெக்சா அல்லது ஸ்டீராய்ட் இல்லேயே என்பதை உறுதிபடுத்துவது நல்லது ...ஏனெனில் ஸ்டீராய்ட் உடனடியாக காய்ச்சலை குறைக்கலாம் ...ஆனால் அதில் ஆபத்து அதிகம் ..
- மேலே சொன்ன ஆயுர்வேத மருத்களையும் சித்த மருத்துகளையும் சாப்பிடலாம்..
- ஆங்கில மருந்தோடு கூட நான் சொன்ன மேலே சொன்ன ஆயுர்வேத சித்த மருத்துகளை எடுத்துகொள்ளலாம் ...ஆங்கில மருந்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தில்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள் ..
- ம்ருத்துன்ன்ஜய ரசம் ,விஷம ஜ்வரான்குச லோஹம் ,வெட்டுமாரன் குளிகா போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்
- இரத்த தட்டுக்களை குறைய விடாமல் காக்கவும் ,இரத்த தட்டுக்களை மிக வேகமாக இரத்த பிளாஸ்மா ஏற்றுவது போல் வேகமாக கூட்ட அற்புத மருந்து ஆடாதோடை மூலிகை ...இது ஆயுர்வேதத்தில் இரத்த பித்த நோய்களில் மிக சிறந்த மருந்தாக கூறப்படுகிறது ...எனவே ..ஆரம்ப நிலையில் இரத்த தட்டுக்கள் குறைந்த நோயாளிகள் ( அதாவது ஒரு இலட்சத்திற்கும் மேல் இரண்டு இலட்சத்திற்கும் உள் உள்ளவர்கள் )..இந்த ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதனை சற்று சூடு செய்து ஐந்து முதல் பத்து மிலி அளவுக்கு ஒரு வாரம் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும் ...ஒரே நாளில் அணுக்கள் கூடியிருப்பதை கண் கூடாக பார்க்கலாம்
- ஆடாதோடை பச்சை இலை கிடைக்காதவர்கள் ..ஆடாதோடை குடிநீராக கடைகளில் இருந்தும் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம் ..
- ஆடாதோடை இப்போது வசாகா என்ற மாத்திரையாக ஹிமாலய கம்பெனி தனி மூலிகை கேப்ச்யூளாக தாயாரிக்கிரார்கள் ...அருகில் உள்ள மருந்து கடைகளில் இதை எளிதாக பெற்று கொள்ளலாம்
- மேலும் மஹா மஞ்சிஷ்டாதி கஷாயம் ,இரகத்த பிட்டதாந்தக லோஹா மாத்திரைகளை,சீந்தில் சேர்ந்த மாத்திரைகளை சாப்பிட்டும் அதிகமாக்கி கொள்ளாலாம் ..இரத்த தட்டுக்கள் ஐம்பதாயிரத்திற்கு உள்ளே உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க கூடாது ..அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் இரத்தம் ஏற்றுவது நல்லது ..