தான விற்பனை ?
உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது.
அதிலும்" மனிதனின் சிறுநீரகம்தான் இப்போது கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது" என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்கும்சேவையில் ஈடுபட்டுள்ள உடலுறுப்பு வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவாங்கிக்கொண்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் வெறும் 3,200 ரூபாய்மட்டுமே தரப்படுவதாகத் தெரிகிறது. சிறுநீரகத் தேவைதற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.இதனால், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது.இதிலும் கஞ்சிக்கு வழியில்லாமல் சிறு நீரகம் விற்போர் ஏமாற்றப்படுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இப்போதைய ஹாலிவுட் பட வசூல் வரிசை.
கிரிக்கெட் போட்டி முடிவு ஆட்டம் போடும் முதல்வர் மம்தா பானர்ஜி.
அதிலும்" மனிதனின் சிறுநீரகம்தான் இப்போது கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது" என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்கும்சேவையில் ஈடுபட்டுள்ள உடலுறுப்பு வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவாங்கிக்கொண்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் வெறும் 3,200 ரூபாய்மட்டுமே தரப்படுவதாகத் தெரிகிறது. சிறுநீரகத் தேவைதற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.இதனால், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது.இதிலும் கஞ்சிக்கு வழியில்லாமல் சிறு நீரகம் விற்போர் ஏமாற்றப்படுகின்றனர்.
போதை அடிமைகள் சிலர் போதைமருந்துக்கள் வாங்கவும்-சிலர் போதையில் அவர்களுக்கு தெரியாமலும் சிறு நீரகம் எடுக்கப்படுகிறது.ஆப்ரிக்க ,இந்திய மக்கள்தான் சிறுநீரக விற்பனையில் முன்னணியில் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜூலை 9 இணையம் முடக்கமா?
கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.
அவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜுலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. Men in Black 3, $55 million, first three days; $70 million, first four days
2. The Avengers, $37 million, three days; $46.9 million, four days; $523.6 million, fourth week
3. Battleship, $10.8 million, three days; $13.8 million, four days; $47.3 million, second week
4. The Dictator, $9.6 million; $11.8 million, four days; $43.6 million, second week
5. Chernobyl Diaries, $8 million, first three days; $9.3 million, four days
6. Dark Shadows, $7.5 million, three days; $9.4 million, four days; $64.9 million, third week
7. What to Expect When You’re Expecting, $7.15 million; $8.85 million, four days; $23.9 million, second week
8. The Best Exotic Marigold Hotel $6.35 million, three days; $8.2 million, four days; $18.4 million, fourth week
9. The Hunger Games, $2.75 million; $2.85 million, four days; $395.9 million, tenth week
10. Think Like a Man, $1.4 million, three days; $1.8 million, four days; $88.7 million, sixth week
_________________________________________________________________
அதிக விலை சிகப்பு வைரக்கல்.
ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் ஆறே நிமிடங்களில் எதிர்பார்க்காத அளவுக்கு அதிக விலையில் இளஞ்சிவப்பு வைரைக்கலலொன்று விலை போயுள்ளது.
மார்ஷியன் இளம் சிவப்பு வைரம் என்று அழைக்கப்படும் அந்த வைரக்கல் 12 காரட்டுகள் அதாவது சுமார் 2.5 கிராம் எடை கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது என்று கூறப்படுகிறது.
வட்டவடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தொலைபேசியின் மூலமே17.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
இந்த வகையான ஒரு வைரக்கல் விற்கப்படுவதும் இதுதான் முதல் முறையாகும்.
1976 ஆம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ஒரு செயற்கை கோளை அனுப்பியதை நினைவு கூறும் வகையிலும், அந்த கிரகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும் இதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயரிடப்பட்டது.
இந்த வைரக்கல் எட்டு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
இதே போன்ற வைரம் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 1947 ஆம் ஆண்டு அவரது திருமணத்தின் போது பரிசாக கொடுக்கப்பட்டது. 23. 6 காரட் எடை கொண்ட அந்த வைரம் பின்னர் மேலாடையில் அணிந்து கொள்ளும் ஒரு நகையில் பதிக்கப்பட்டது.
வில்லியம்சன் பிங்க் என்றழைக்கப்படும் அந்த வைரம்தான் இப்போதும் உலகளவில் மிகவும் பிரலமான வைரக்கல் என்று கருதப்படுகிறது.
தற்போது ஹாங்காங்கில் ஏலத்துக்கு விலைபோயுள்ள மார்ஷியன் வைரக்கல், அமெரிக்க வைரவியாபாரி ஹாரி வின்ஸ்டன் கடையில் பட்டைத்தீட்டப்படாத வைரமாக இருந்தது.
அமெரிக்கர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம் அங்கு சென்றடைந்ததை சாதனையை நினைவு கூறும் படி பட்டைதீட்டும் போது இந்த வைரம்இளஞ்சிவப்பு நிறமாக செவ்வாய் கிரக நிறத்தில் இருப்பதாக அதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயர் சூட்டியுள்ளாராம்.
_____________________________________________________________________________________________________
கிரிக்கெட் போட்டி முடிவு ஆட்டம் போடும் முதல்வர் மம்தா பானர்ஜி.