பாதுகாப்பது யார்?

முல்லைப்பெரியாறு அணை வலுவாக இல்லை என்று கொஞ்சகாலம் அரசியல் நடத்தி மதுரை,தேனி மாவட்ட மக்களை கொதிக்க வைத்த கேரள அரசு இடையில் கொஞ்சம் பேசாமல் இருந்தது .சரிதான் கொஞ்சம் பொறுப்பாக இருக்கிறது என்று நினைத்தால்.
சுரன்

இப்போது தனது குசும்பை மீண்டும் முல்லைப்பெரியாறில் காட்டிவருகிறது.
நீதிபதி ஆனந்த் குழு அணை ஆய்வுக்காக "அணையின் உறுதியை சோதிக்க சில இடங்களில் துளையிட்டு மாதிரியை எடுத்து சென்று ஆய்வு செய்தது.அதன் அடிப்படையில் அணை வலுவாக இருக்கிறது என்று குழு முடிவும் செய்து அறிக்கை கொடுத்துவிட்டது.
இப்போது சோதனைக்காக துளையிட்ட இடங்களை மீண்டும் பூசி அடைக்க சென்ற பொதுப்பணித்துறையினரை அணையின் பக்கமே நெருங்க கேரள காவல்துறை விடவில்லை.
அடுத்த நாள் சென்ற போதும் அதே தடைதான்,
மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த பிரச்னையை சொல்லியபோது வழக்கமான செவிடன் காது சங்குதான்.
இப்படி துளைகளை அடைக்காமல் இருந்து விட்டாலாவது அணை பல்கீனமாகி விடாதா?அதன் மூலம் அணையை ஓரங்கட்டி தான் நினைத்ததுபோல் புதிய அணை கட்டலாம் என்ற பரந்த மனப்பான்மைதான் கேரளாவுக்கு.
மத்திய அரசு இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது மீண்டும் இரு மாநிலங்களிடையே கலவரத்தை உண்டாக்கிவிடும்.
முல்லைப்பெரியாறு அணையை பராமரிப்பது தமிழ் நாடு பொதுப்பணித்துறை.
அதற்கு பாதுகாப்பு கேரள காவல்துறை .வேடிக்கையான இந்த பாதுகாப்பை இனி மத்திய பாதுகாவல் படையினரே செய்ய வேண்டும்.அல்லது அதை தமிழக காவல்துறையினரின் வசமிட வேண்டும்.தற்போதைய நிலமைக்கு அதுதான் சரியாக இருக்கும்.
சுரன்

மத்திய காவல் படையினர் வசம் இருந்தால்தான் கேரள அணை அரசியல் கொஞ்சம் அடங்கும்.
மத்திய அரசு இதை செய்ய யோசித்துக்கொண்டே இருந்தால் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இனைத்து விடுங்கள்.எல்லா பிரச்னைகளும் ஓய்ந்து விடும்.பராமரிப்பும்,பாதுகாப்பும் தமிழ் நாடு என்றாகி விடும்.
அணை உடைந்தாலும் பாதிக்கப்படுவது தமிழகமாகி விடும்.கேரளா அரசியல் நடத்த இயலாமல் போய்விடும்.
என்ன மன்மோக்ன் சிங்.?காங்கிரசு அரசு கேரளாவில் இருப்பதால்தானே இதை எல்லாம் செய்ய மாட்டேன் என்று செவிடன் போல் நடித்துக்கொண்டிருக்கீறீரகள்.அதுதான் உங்களுக்கு பலகீனம்.அணை பலகீனமல்ல.
அது எப்படி மன்மோகன் சிங் விலைவசி உயர்வு,பெட்ரோல் விலை உயர்வு,அணு சக்தி ஒப்பந்தம்,சில்லறை வணிகத்தில் அந்நியர் நுழைப்பு எது என்றாலும் தீயைக்கொளுத்தி போட்டு விட்டு ஒன்றும் தெரியாதவ்ர் போல் பொம்மை போல் மக்களவையிலும் ,மக்கள் மத்தியிலும் வலம் வருகிறீர்கள். சரியான ஆளைத்தான் பிரதமர் வேலைக்கு சோனியா தெர்ந்தெடுத்திருக்கிறார்.
கோபப்படாதீர்கள் நீங்கள் கையை ஆட்டிக்கொண்டு நடந்து வருவதைப்பார்க்கும் போது தம்பிப்பாப்பா வைத்திருக்கும் சாவி கொடுத்த பொம்மையைப்போலேயே இருக்கீறீர்கள்.
தலைப்பாகையும் ,தாடியும் தான் வித்தியாசம்.
{நமது பதிவை படித்த உம்மன் சாண்டி பயத்தில் துளைகளை அடைக்க அனுமதிப்பதாகக் கூறியுள்ளார்.என்று போட்டால் நம்பவா போகிறீர்கள்.ஆனால் துளையை அடைக்க கேரள அரசுஒத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.}
_________________________________________________________________________________

இரண்டாம் உலகப் போர்


சில புகைப்படங்கள்.
_____________________


சுரன்

திரும்பி வந்தால்தான் அடுத்த முத்தம் கிடைக்கும்.

சுரன்

சுரன்

சுரன்

சுரன்

சுரன்

சுரன்

சுரன்

சுரன்

சுரன்


சுரன்

சுரன்

போர்முடிந்தது.எஞ்சிய தோழர்களின் ஆனந்தம்.
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?