வியாழன், 31 மார்ச், 2011

”ஜன”நாயகம்,,,,,,,,,,

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update ” இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1872ம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 103 கோடியாக இருந்தது.

இந்நிலையில், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதல் கட்ட பணிகள் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கின. அதைத் தொடர்ந்து 2&ம் கட்ட கணக்கெடுப்பு பணி, கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 640 மாவட்டங்கள் மற்றும் 5,924 துணை மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ரூ.2,200 கோடி செலவிடப்பட்டது.
           உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் சந்திர மவுலி ஆகியோர் 2011 சென்சஸ் முதல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டனர். அதன்படி, இந்திய மக்கள் தொகை 121 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பைவிட 18 கோடி அதிகமாகும். ஆண்கள் 62.37 கோடி பேரும், பெண்கள் 58.65 கோடி பேரும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர். கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் 66.84&ல் இருந்து 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதமாக உள்ளது. கடந்த முறை 21.15 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமாகும். உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா இரு மாநில மக்கள் தொகை, அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகம். உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17 சதவீதமாகும்.

மாநில அளவில் உத்தரபிரதேசம் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. அங்கு மக்கள் தொகை 19.9 கோடி. மக்கள் நெருக்கம் உள்ள மாநிலம் டெல்லி. அதற்கு அடுத்த இடத்தில் சண்டிகர் உள்ளது. டெல்லி வடகிழக்கு மாவட்டம் மிக அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு சதுர கி.மீட்டருக்கு 37,346 பேர் உள்ளனர். மிக குறைந்த மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு ஒரு சதுர கி.மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து அனைவருக்கும் 12 இலக்க தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
        மக்கள் தொகை18 கோடி கூடிய போதும் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது சற்று ஆறுதலான ஒன்றாக உள்ளது.இந்த விகிதத்தினை அதிகரித்து மக்கள்தொகையினை அடுத்த கணக்கெடுப்பில் வெரும் 8 கோடியினைக்காண்பிக்க நாம் என்ன செய்யலாம். ஒன்றும் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தால் போதும் .
---------------------------------------------------------------------------------------------------------------
மகராசனாக குறுக்கு வழி.........
      ‘அடிபட்ட வேட்பாளர் ”எங்கத்தலைவர் டார்ச்லைட்டைத்தான் ரிப்பேர் பார்த்தார் “ என்று சமாளிக்கிறார்.அடித்த கருப்பு எம்.ஜி.யாரோ “ஆமாய்யா அடித்தேன் என் ஆளைத்தானே அடித்தேன்.என்கிட்டே அடிவாங்கினால் மகராசனாகி,நல்வாழ்வு வாழ்வான் என்கிறார்.
 தேர்தல் முடிந்த பின் அவர் கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்வாழ்வு வாழ,மகராசனாக வாழ அவர் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்வோம். பின்னே மத்தத்தொண்டர்கள் என்ன இளிச்ச வாயர்களா? அவர்களுக்கும் மகராசனாக வாழ ஆசை இருக்காதா?
==================================================================================
இலவச அனுமதி.....
    எல்லாக்கட்சித்தலைவர்களும் மக்கள் மேல் கரிசனையுடன் இலவசங்களை அள்ளித்தெளித்துள்ளனர். ஆனால் அம்மையார் அறிவிப்பைப்பார்க்கும் போது
 கொஞ்சம் பயமாக உள்ளது. அவர் கலைஞரை நக்கல் செய்யவே இப்படி இலவசமாக அறிக்கையை வெளியிட்டுள்ளாரோ? என்றுதான்.
         மிக்சி கிரைண்டரை ஒப்பந்தப்புள்ளியிட்டு செய்து வாங்கி கொடுத்திடலாம் .கலர் டி.வி.மாதிரி. இந்த நான்கு ஆடுகளுக்கு என்ன செய்யப்போகிறார்[வென்று விட்டால் தான்] .ஒரு வேளை இப்பவே தயாரக்கிட கால்நடை வளர்ப்பவர்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டாரோ?
 இவர் இலவசமாகக் கொடுக்கும் 4ஆடுகள்,ஒரு மாடு,5கோழிகள்[சொன்னாரா]இவைகளை வளர்க்க நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் அனுமதியையும் அம்மாதான் இலவசமாக வாங்கித்தர்வேண்டும்.
===========================================================================

தாமரையின் கடிதம்,,,,

காங்கி

இக்கடிதம் நம் கவிதாயினி வெளியிட்ட அறிக்கை. படியுங்கள்.
 ஏற்புடையதாயின் அப்படியே நடந்து கொள்ளுங்கள்.

செவ்வாய், 29 மார்ச், 2011

அண்ணாவின் ஆவிதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது  "நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும்.
விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்.
விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா?
கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் முடியாது என்றார்.
வடிவேலுதான் காமெடி பீசு என்று நினைத்தால் விஜயகாந்த் அவரைவிட காமெடி பண்ணுகிறார்.
 தேர்தலில் நிற்பதற்கும்,கட்ச்சிதலைவராவதற்கும்  எம்.ஜி.யார் படங்களில் போட்டுவரும் உடைகளின் நிறம்,மணம்,குணம் தெரிந்தால் போதுமா.அதுதான் தகுதி என்று விஜய்காந்த் நினைக்கிறாரா?
அதைவிடக்கேவலம் ‘பகுத்தறிவுவாதி என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அண்ணா ஆவியாகவந்து இவரிடம் அ.தி.மு. க,உடன் கூட்டணிவைக்கக்கூறியதுதான். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம். அண்ணா தான் உருவாக்கிய தி.மு.க.வை விடுத்து அவர் இருக்கும் போது இல்லாத கட்சியான அ,தி.மு.க,உடன் கூட்டணிவைக்கக் கூறியதுதான்.அதுவும் அண்ணா காலத்தில் சாதாரண நடிகராக க்கூட இல்லாத இவரிடம் வந்து கூறியதுதான் . இது அண்ணாவின் ஆவிக்கு பெருத்த அவமானம் .
அன்புள்ளவிஜய்காந்த் அவர்களே. நீங்கள் கூட்டணியேக் கிடையாது என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர். இப்போது எனக்கு பக்கத்தில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா என்று உங்களால் கேள்வி எழுப்பப்பட்டு இன்னமும் நாங்கள் விடை தெரியாமல் அலையும் ஜெயலலிதாவுடன் கூட்டணிவைத்துக்கொண்டவர் நீங்கள். 40 சீட்டும் 100கோடியும் ஜெ,விடம் கேட்பதாக செய்திகள் வந்தபோது அதை முதலில் மறுத்தவர் நீங்கள். இப்போது பணத்தை வாங்கவில்லை ,அதை மதிக்க மாட்டேன் என்பதை நாங்கள் நம்பவேண்டுமா?
உங்கள் கட்சிக் கொள்கைகளைக்[இருந்தால்]கூறி வாக்குகேளுங்கள். மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற தற்போதையப் பாணியிலேயே சென்றால் ,காமெடியெ செய்துவந்தால் மக்கள் உங்களை முட்டாளாக்கி விடுவார்கள் .ஜாக்கிரதை.
அப்புறம் அண்ணாவின் ஆவி மட்டுமல்ல,எம்.ஜி.ஆரின் ஆவியாலும் கூட இந்த கருப்பு எம்.ஜி.யாரைக்{?} காப்பாற்ற இயலாது,

சனி, 26 மார்ச், 2011

ஊழல்களின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது,,,,,,


-தே. இலட்சுமணன்
இந்தியத் திருநாட்டில் இமய மலை யையே விழுங்கும் அளவிற்கு ஊழலின் உச் சம் உயர்ந்துவிட்டது. இந்திய மக்கள் அதிர்ந்து போய்க்கிடக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் 100 பேரிடம் உள்ள மொத்த சொத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகி தம் ஆகும். அந்த அளவற்ற பணக்குவியலுக் கும், அளவற்ற ஊழல் தொகைக்கும் சம்பந்த முண்டு.

நவீன தாராளமயக் கொள்கைதான் இதற் கெல்லாம் முக்கிய காரணம். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்ப்பந்தத் தாலும், இவைகளின் பின்னால் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தளர்த் தப்படுகிறது. தாராளமயமாக்கப்படுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரால் அந்நிய மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் நாட்டை சூறையாட வழிவகுக்கப்படுகிறது. வாய்க்கல் வெட்டித்தரப்படுகிறது. அரசாங் கமே இந்த வாய்ப்பை வலிய உருவாக்கித் தருகிறது. அரசு மூலதனம் என்பது தனியார் மூலதனமாக ஆக்கப்படுகிறது.

உதாரணமாக, 1956ஆம் ஆண்டின்படி இந்திய அரசின் கொள்கை இரும்பு, நிலக்கரி, பாக்சைட், மாங்கனீசு, கிரானைட், சிலிகான், புளோரைட் போன்ற முக்கிய கனிமங்களை பொதுத்துறை நிர்வகித்தது. அதன் லாபமும் அரசாங்கத்துக்குச் சென்றது. நாட்டின் வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.

ஆனால் 1991ஆம் ஆண்டு புதிய பொரு ளாதாரக் கொள்கையின் ஓர் அங்கமான தாராள மயக் கொள்கை அமலாக்கப்பட்டதால் 1993 ஆம் ஆண்டு தேசிய கனிம வளங்கள் தனி யாருக்கு தாரைவார்த்துத் தரப்பட்டது. அந்நிய முதலீடு நுழைய இந்திய அரசு அனுமதித்தது. இதன் மறுபொருள் தனியார் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் லாபம் சுருட்ட லாம். அதற்குக் கட்டுப்பாடு ஏதும் இல்லை. தனியார் எல்லை இல்லா லாபம் குவிக்கலாம் என்று வந்த பிறகு, அரசின் உத்தரவுகள், கட்டுப்பாடுகள், எல்லைகள், புறச்சூழல் கட்டுப்பாடு என்பவையெல்லாம் மீறப்பட்டன. அதிகாரிகளை வளைத்துப் போட, ஆட்சியா ளர்களைக் கட்டிப்போட, எல்லை இல்லா லாபம் சுருட்ட, எல்லை இல்லா லஞ்சமும் கொடுக்கப்பட்டது. அதனால்தான் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்க முடிந்தது. கர்நாடக அர சையே ஆட்டிப் படைக்க முடிந்தது. இரண்டே வருடம் முதலமைச்சராக இருந்த மதுகோடா ரூ. 4000 கோடி ஊழல் செய்ய முடிந்தது. ஒரிசா சுரங்க ஊழல் ரூ. 7000 கோடிக்கு விஞ்சியது, ஸ்கார் பென் சப்மைரின் ஊழல் ரூ.18,979 கோடி யைத் தாண்டியது, ராணுவ ரேசன் ஊழல் ரூ. 5000 கோடிக்கு மேல் போனது, பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ரூ.50,000 கோடிக்கும் அதிகம். தேக்குமர வளர்ப்பு ஊழல் ரூ. 8000 கோடியை எட்டியது, பிரபென்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடியாகும். அதேபோல் ரூ. 100 கோடி ஊழல், ரூ. 200 கோடி ஊழல், ரூ. 500 கோடி ஊழல், ரூ. 1000 கோடி ஊழல் எனப் பட்டியல் இட்டால் அது மேலும் அனுமான் வாலாக நீளும்.

இப்போது அண்மையில் வெளிவந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ரூ.1,76,000 கோடி ஊழல் எனவும், காமன்வெல்த் விளையாட்டுக்கு செலவு செய்த மக்கள் பணம் 9 லட்சம் கோடி டாலரில் முறைகேடுகள் நடந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் விழுங்கப்பட்டு விட்டதாகச் சொல்லி அதுவும் விசாரணையில் இருக்கி றது. இதற்கு மேல் ஒரு மெகா ஊழல், பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள விண் வெளித் துறையில் ஓர் ஊழல்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நிலங் களை மாநில அரசுகளே முன்வந்து அடி மாட்டு விலைக்கு பகாசுர கம்பெனிகளுக்கு தாரைவார்க்கின்றன. விளைநிலமெல்லாம் கூட விலை பேசப்பட்டு விட்டன. மும்பை நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டதில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக ளுக்கு இடையில் கடுமையான போட்டியேற் றப்பட்டு ரூ. 4000 கோடிக்கு விலை போயிற்று! இது அமெரிக்காவில் போகும் விலையை விட அதிகமாம்.

இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையி னால் ஒரு சிலரிடம் ஏராளமான பணம் குவிந்து கிடக்கின்றன. உலகப் பணக்காரர் களின் பட்டியலில் ஒரு சில இந்திய முத லாளிகளும் முன்நிற்கிறார்கள். அந்நிய நாட்டு மூலதனமும் இந்திய நாட்டில் தாராளமாக நுழைய அனுமதிக்கப்பட்டு விட்டன. அந்நிய முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்நிய மூலதனம் நுழைய நுழைய ஊழலும் அதிகமாகும் என் பது ஒரு சித்தாந்தம். அந்நிய மூலதனத்தின் வீச்சும், உள்நாட்டு மூலதனத்தின் வீச்சும் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை. “விவசாய நாடு இந்தியா” என்பது அடுத்த முப்பதாண்டுகளில் விவசாய நாடு என்பது மறைந்து போகும் போலும். தாராளமயக் கொள் கை கொண்டு வந்த “சீதனம்” இது. மூல தனத்தின் சக்தி எதுவரை பாயும் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம்.

சத்தீஸ்கார் மாநிலத்தில் 23.6 கிலோ மீட்டர் கொண்ட ஆற்றை அரசு 22 வருடங் களுக்கு தனியார் கம்பெனி ஒன்றுக்கு குத்த கைக்கு எழுதிக் கொடுத்து விட்டது. கம்பெனி இரு கரை ஓரமும் முள்வேலி போட்டு விட்டது.

மருத்துவத்தை, கல்வியை லாப நோக்கத் தோடு பார்க்கக் கூடாது என்பது மரபு. ஆனால் தாராளமயம், தனியார்மயம் எனும் கொள்கை இந்தியாவில் அவைகளையும் லாபம் கொழிக்கும் ஸ்தலங்களாக மாற்றி விட்டது. அதற்குப் பெயர் ஊடிசயீடிசயவந ழடிளயீவையட, ழடிளயீவையட ஐனேரளவசல என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் தனியாரின் ஆதிக்கம் வெள்ளிடை மலையெனத் தெரிகிறது. திட்ட மிட்டு பொது மருத்துவமனை சீரழிக்கப்படு கிறது. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனை கள் ஆண்டுக்கு ரூ. 1,62,906 கோடி ஈட்டு கின்றன.

கல்வி விஷயத்திலும் இதே நிலை தான். தனியார் மருத்துவக் கல்லூரிகள், என்ஜினிய ரிங் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழ கங்கள் எனக் காளான்களாக வளர்ந்து, கை யூட்டு கொடுத்து சீட்டுகள் வாங்கப்படுகின் றன. மாணவர்களும் கல்லூரிகளில் அப்பட்ட மாக சுரண்டப்படுகிறார்கள். வருடத்துக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு மேல் லாபம் கொட்டு கிறது. கல்வியையும் வியாபாரமாக்கிவிட்ட பெருமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

இப்படியாக மில்லியனர்களை, டிரில்லிய னர்களை உருவாக்கி விட, அந்த கார்ப்பரேட் அதிபதிகள் இப்போது ஆதிக்கம் செலுத்து வது எங்கு என்றால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் யார் எந்தெந்தத் துறைக்கு அமைச்சர்களாக வர வேண்டும் என்கிற முடிவையும் தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள், வளர்ந்து விட்டார்கள்,

அமெரிக்க தேர்தலும் இப்படித்தான் நடக் கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என அமெரிக்காவில் உள்ள பெட்ரோல் வியாபாரி களும், ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்கிற முதலாளிகளும்தான் தீர்மானிக்கிறார் கள். அதற்காக பல மில்லியன் டாலர்களும் செலவு செய்கிறார்கள். அதே நிலை இந்தியா விலும் உருவாகிறது. நாடாளுமன்றத்தில் நம் பிக்கைக் கோரும் தீர்மானம் கொண்டு வந்த போது, மன்மோகனை தப்பிக்க வழி செய்த தும், பணம் செலவு செய்ததும், ஓர் இந்திய கார்ப்பரேட் செக்டார் தான். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதும் அம்பலமானது.

ஆகவேதான் பொதுத் தேர்தலிலும் கோடி கோடியாக செலவு செய்கிற கட்டாயமும் உருவாக்கப்பட்டு விட்டது. காசு கொடுத்து காய்கறி வாங்குவது போல பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தையும் உருவாக்கி விட்டார்கள். ஓட்டு வாங்கவும் பல கோடிகள் செலவழிக்கப்படுகின்றன.

மூலதனத்தை மேலும் மேலும் குவிக்க எல்லாம் வணிக மயம் ஆக்கப்பட்டு வருகின் றன. அடிப்படை தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதாரம் முதற்கொண்டு நுகர்வுக் கலாச்சாரம் வரை காசே கடவுளாக்கப்பட்டு விட்டது. வறுமையும், வேலையின்மையும் விலைவாசி உயர்வும் ஒருபக்கம் பெருகிவர, மறுபக்கம் ஜனநாயக உரிமைகளும், அடிப் படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கை கள் சுருக்கப்படுகின்றன. அவற்றின் தேர்தல் களும் கேலிக்கூத்தாக ஆக்கப்படுகின்றன. நீதிமன்றமும், சில நேரங்களில் நில நடுக்கம் கொள்கின்றது.
                                                                                                                               நன்றி:தீக்கதிர்,

வெள்ளி, 25 மார்ச், 2011

இதுவும் ஒரு அரசியல்   ""நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

 தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்  தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.

காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல். கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும். ராமதாஸ், கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.

மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது. ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

"தினமலர்' இதழில் வெளியான செய்திபடி, நான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோ, அதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன்’என்றார்..
  இவர் சிவன் போல் மனைவிக்கு சரி பாதி கொடுப்பாராம்,ஆனால் கருனாநிதி சரிபாதி கொடுத்தால் தப்பா?என்ன அவர் கட்சி ஆரம் பித்து நாளாகி முதல்வரும் ஆனதால் அதிகாரம்,வருமானம் எல்லாத்திலும் சமஉரிமை கொடுக்க வேண்டியதாகிற்று,
 மக்களுடன் கூட்டணி,கடவுளுடன் கூட்டணி அப்பால மக்களை சிரிக்கவைபவர்களுடன் கூட்டணி[அப்படி என்றால் இவர் வடிவேலுடன் தானே கூட்டணி வைக்க வேண்டும்] என்றெல்லாம் கூறி விட்டு தனது தேர்தல் அறிக்கை மூலம் இலவசமாக ஆடு,மாடு,மிக்ஸி,கிரைண்டர்,பேன்,தாலி,தருவதாகக்கூறி மக்களை சிரிக்கவைத்துள்ள ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துவிட்டார்.இவரையும் ஒரு தலைவராக,அரசியல்வாதியாக எண்ணி ஒட்டு போட அதுவும் தி.மு.க,அ.தி.மு.க,வுக்கு மாற்றாக எண்ணியுள்ளவர்கள் இப்போதே தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வது நல்லது.இவர் அவர்களைவிட நல்லது செய்வார் என்று நினைத்தால் உங்களுக்கு இன்னும் உலக அனுபவம் காணாது அல்லது நடிகர்களைத்தலைவர்களாக்கும் வியாதி உங்களையும்பாதித்துள்ளது என்றுதான் கொள்ளவேண்டும்.
 விருத்தாச்சலம் தொகுதிக்கு 5ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாரே சட்டமன்றத்துக்கு ஜெ,யை விட இரு நாட்கள்தான் கூடப்போய்யுள்ளார்.அங்கு பேசியது உண்டா?தொகுதிக்கு என்ன செய்தார்.அரசு செய்யாவிட்டால் போராடி எதை பெற்றுத்தந்தார்.ஏன் இப்போது அதேத்தொகுதியில் போட்டியிடவில்லை?
 ரிசிவந்தத்தை குசிவந்தமாக்கப்போகிறாராம்.தொகுதி பக்கமே போகாமல் அதை பசிவந்தமாக்காமல் இருந்தால் சரி. ஆட்சி அதிகாரம் கேட்கவில்லையாம்[கேட்டாலும் ஜெ, கொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்] தன் மக்கள் நலனுக்காகவே இக்கூட்டணி வைத்துள்ளாராம்.அது ஒன்றுதான் உண்மை. இரு மக்களுக்காக என்று சொல்ல மறந்துவிட்டார்.
     எப்படியோ குடித்துவிட்டு பேசுபவரும்,பக்கத்தில் இருந்து ஊத்திக்கொடு[த்தாரா?]த்தவரும் கூட்டணி வைத்து விட்டார்கள்.மக்களுக்கு நல்ல பொழுது போக்குத்தான் .இப்போதைவிட வென்று விட்டால் கிளைமாக்ஸ் சண்டை தூள் பறக்கும்.காத்திருப்போம்.வேறு வழி.அதுதானே தமிழகத்தின் தலைவிதி.

வியாழன், 24 மார்ச், 2011

இலவசத்தால் வீணாகும் தமிழகம்’’’’’’’’’2’’

அதிமுக[  தேர்தல்]இலவசங்கள் அறிக்கை

தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.
பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
 அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.
அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும்.
58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.
கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்
.குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது அனைத்து தீர்வு காணப்படும்.
இவைகளைப்படிக்கும் போதே கண்ணைக்கட்டுகிறது. 
                    அய்யா கலஞர்தான் இலவசத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பவர் என்றால், அம்மா ஜெ,யோ வாரிக்கொடுப்பதில் பொம்பளை பாரி யாகிவிட்டார்.
                      தி.மு.க ,தேர்தல் அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் தான் அ.தி.மு.க ,வின் தேர்தல் அறிக்கை.
 வாக்களர்களுக்கு பணம் ,அன்பளிப்பு கொடுக்கக்கூடாது என்று தெருவில் போகிறவன் கோமணத்தில் உள்ள பத்து ரூபாய்க்கும் கணக்கு க்கேட்கும் தேர்தல் ஆணையம் இது போன்ற இலவசங்கள் அறிக்கைக்கும் கடிவாளம் போடாதது ஏன்.?
                     இலவசங்கள் அனைத்துமே மக்கள் வரிப்பணத்தில்தானே கொடுக்கப்போகிறார்கள். திராட்சைத்தோட்ட ,கொடநாடு தேயிலை விற்றப்பணத்திலும்_-அலைக்கற்றை விற்றப்பணத்திலுமா தரப் போகிறார்கள்.
                    இந்தப்பணதில் சில தொழிற்சாலைகள் அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தால் அவர்கள் உழைத்தக்காசில் எல்லாம் வாங்கிவிட்டுப்போகிறார்கள்.[ஆனால் அதில் டெண்டர் விட்டு காசுப்பார்க்க முடியாதே]
              ஒரு சமுதாயத்தையே தேர்தலுக்குத் தேர்தல் இலவசங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழைப்பைமறந்துவிடும் பிச்சைக்காரர்களாக்கும் 
 அரசியல் வியாபாரிகள் தமிழ்நாட்டில் மையம் கொண்டிருப்பது நமது தமிழகத்தின் கேடு காலம்.
               இதற்கானப்பணத்தில் விவசாய மானியம் வழங்கி வேளாண்மையைப் பெருக்கலாம்,பெட்ரோல்-சமையல் வாயுக்கான வரிகளைக்குறைத்து விலைவாசிகளை கட்டுப்படுத்தலாம், மின் உற்பத்தியைப் பெருக்கலாம். 
               நம் நாட்டில் வஞ்சமின்றி கிடைக்கும் சூரியசக்தியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் மின்கலங்களை கிராமம் தோரும் அரசு அமைத்து சேமித்து மின்தட்டுப்பாட்டையே போக்கலாம். இலவச மின்சாரத்தை விவசாயப் பணிகளுக்கு வழங்கலாம் இப்படி எத்தனையோலாம் கள் செய்யலாம்.
               என்ன சொல்லி என்னசெய்ய நம் மக்கள் என்று இது போன்ற இலவசங்களுக்கு எதிராக வாக்களிக்கப்போகிறார்களோ அன்றுதான் தமிழகம் முன்னேறும் மாநிலமாகும்.
              ஆனால் இருப்பதில் நல்ல கொள்ளி எது என்று எடுத்து தலையைச் சொரியும் நிலையில் அல்லவா நம் மக்கள் இருக்கிறார்கள்.அம்மா-அய்யாவைவிட்டால் அண்ணன் கேப்டன் வீடு,வீடாக வந்து இலவசமாக சோறு பொங்கித்தரும் திட்டத்தை சொல்லியல்லவா ஓட்டுக்கேட்டுவிடுவார். இப்போதைக்கு வேறு வழியே நம் முன் இல்லையே,,,,

செவ்வாய், 22 மார்ச், 2011

”வைகோ” வை விரட்டியது ஏன்......தன் மீது பொது மக்கள் மத்தியிலும் அதிமுக தொண்டர்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவே எனக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஜெயலலிதா படுத்தியபாட்டால் நொந்து போய் விட்டார் வைகோ. இதுவரை இல்லாத அளவுக்கு அவமானப்பட்டுவிட்ட வைகோ, இந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் அறிவித்து விட்டார்.

இந் நிலையில் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றுள்ளார் வைகோ.
நேற்று மாலை சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்ற வைகோ அங்கிருந்து கலிங்கப்பட்டிக்குக் கிளம்பினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து தேர்தலை புறக்கணிக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிப்பதாகவும், எப்படி இருந்தாலும் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு வைகோ அளித்த பதில்,
234 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 74 தொகுதிகள் போக மீதமுள்ள 160 தொகுதிகளுக்கும் கடந்த 16ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போதே மதிமுகவை பிடரியை பிடித்து நாங்கள் வெளியேற்றுகிறோம் என்ற விதத்தில் அவமதித்து, கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார்.
இதனால் மக்கள் மன்றத்தில் அதிமுக மீது ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக 19ம் தேதி அன்று அதிமுக எங்களுக்கு ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கை 12 தான் என்பதையும் ஊடகங்களில், செய்தி ஏடுகளில் எண்ணிக்கை குறித்து உலவ விடப்பட்ட செய்திகள் உண்மை அல்ல என்பதையும், அதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்ட 12 தொகுதிகள் என்பதில் இருந்து நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டை உண்மை என்று அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.
அதிமுக தொண்டர்கள் மனதிலும், பொது மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள, அதிருப்தியின் காரணமாகவே எனக்கு இப்படியொரு கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார் என்றார் வைகோ.
அதிமுகவுக்கு எதிராக நீங்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு,
எனது தாயாரை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவை பார்க்க செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் எந்த அறிக்கையும் விடப்போவதில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறேன் என்றார் வைகோ.
 கலிங்கப்பட்டியில் அவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியம்மா கோயில் கும்பாபிஷேகத்தில் வைகோ கலந்து கொண்டார். கோயிலில் நின்ற வைகோவிடம் ஊர் மக்கள் ஜெயலலிதாவின் செயல் குறித்து துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தனர்.
 

வைகோ விரட்டப்பட்டக்காரணம்


கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய ராஜபக்சேயும்,2 தொழிலதிபர்களும்.
மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.
முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு ‘எஸ் டைப் சேர்’மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.
21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ”அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க” என்று பழைய ராகம் பாடினர்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ”உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது” என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.
காபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ”நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்” என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.
சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள ‘உதவி’ தான் என்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து
உதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.
வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.  
 எப்படியோ ஜெ,யின் வைகோ உதாசீனத்தின் பின் ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது.அது இதுவாக இருக்க வாய்ப்புகள் ஏராளம்.
                   மொத்ததில் வைகோ மட்டுமல்ல மேலேகூறிய காரணங்கள் உண்மையாக இருந்தால் தமிழக மக்களும்தான் பாவம்.
                                                                             நன்றி,தகவல்:அலைகள்,

திங்கள், 21 மார்ச், 2011

அமெரிக்க உதவி,,,,,,,,,,

கடாபியின் மகன் காமீஸ் கடாபி மரணம்.


       லிபியா அதிபர்
 கடாபியின் பல மகன்களில் ஒருவரான காமீஸ் கடாபி என்பவர் போரில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரிப்போலி மருத்துவமனையில் பலத்த காவல்களுக்கு மத்தியில் இவருடைய சிகிச்சைகள் நடைபெற்றதாகவும், கடந்த வாரமே இவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவர் மரணமடைந்த செய்தி  இதுவரை உறுதி செய்யப்படவில்லை. போராளிகளின் விமானி ஒருவரே கடாபியின் பப் அல் அஸீசியா விமான கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கடாபியின் மகன் காமீஸ் கடாபி தலைமையிலான இராணுவ அணி லிபியாவில் போராடியவர்கள் மீது தாக்குதல்களை செய்த அணியாகும். காமீஸ் படை அணி என்பது லிபியாவில் உள்ள போராட்டக்காரர்களைநடுங்க வைத்த அணியாக இயங்கி வந்தது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம்
அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகள் லிபியா மீது வான் வெளி தாக்குதல் நடத்தி குண்டுமாரி பொழிகிறது.இதில் பழி்யாவது அப்பாவி மக்கள்தானே எத்தனையோ நாடுகள் சுதந்திரம் கேட்டு போராடும் போது அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா லிபியா,ஈராக்,ஈரான்,போன்ற நாடுகள் மீது மட்டும் மக்களுக்காக கரிசனை காட்டி போர் முழக்கமிட்டு இறங்குவது ஏன்?இலங்கையில் போரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களைக் கண்டு கொள்ளாததும் ஏன்?
 காரணம்  நாலே வார்த்தைகள்தான்,,,
                      “பெட்ரோல்   “,
 இலங்கையிலும் ஈராக்,ஈரான்,லிபியா போன்ற அரபு நாடுகளைப்போல் பெட்ரோல் ஊற்றெடுத்தால் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது பக்சே அரசுக்கு ஆதரவாகவோ களம் இறங்கியிருக்கும்.
      அமெரிக்க ஆதரவெல்லாம் ஆதாயம் இல்லாமல் ,,,,,, யாரும் ஆற்றோடு போகமாட்டார்கள் என்ற கதைதான்......

நண்பர்களே கவனியுங்கள்


தமிழகம் சென்று வந்த டென்மார்க் தமிழரின் மனக்குழுறல் !

March 20, 2011

தமிழகமும் அதன் கோலமும் பரடைசியா ம. ரமேசுவின் மடல்
(தமிழகம் சென்று திரும்பிய எனது மனவோட்டம்)
படித்தவர்கள்முதல் பாமராகள்வரை து}ய்மை துப்புரவுபற்றி யாரும் பொருட்படுத்துபவர்களாக காணோம் தமது தேவை முடிந்தால் போதுமென்று போய்க்கொண்டே இருக்கின்றனர்.
வீதிகளில் வண்டிகளை தமது விருப்பப்படி ஓட்டுகின்றனர் சுதந்திர இந்தியர்களாக வீதிக்கட்டுப்பாடுகளை விதிமுறைகளைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே கிடையாது போலும். சென்னையின் வீதிகளில் வாகனம் செலுத்துவதென்பது மகா வேலை அதற்கு விமானமே ஓட்டிவிடலாம்.
மலசல கூடங்கள் மிகுந்த அசுத்தமாகவே இருத்தல் வேண்டும் என்பது தமிழர்கள் விருப்போ என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது இது பற்றி தெளிவு ஏற்படுத்த கமலும் ரசனியும் விசையும் வருவார்களா திரையில்? பராமரிப்பாளர்களை கவனிப்பதற்கும் ஆள் தேவைப்படுகின்றது சமயங்களில் பரா மறைவு.

மொத்தத்தில்; எங்கும் ஒழுங்கு கடைப்பிடிப்பவர்களாக தமிழர்கள் இல்லை பாடசாலையிலிருந்து கற்றுவந்திருக்கவேண்டிய விடயம் முந்தி வினாயகர்களாக ஒழுங்கின்றி மொய்க்கும் தமிழர்கள் வாழ்வே தமிழகத்தில் அசுத்தம். இராமேசுவரம் என்னும் புனிதத்துவம் வாய்ந்த ஊருக்கு சென்றேன் மிகுந்த வேதனையடைந்தேன் புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாரோ இந்தியர்கள் என நினைக்க வைத்தது கோயில் சுற்றாடலே மிகுந்த அசுத்தம் நிறைந்திருந்தது பராமரிப்பு என்பது சுத்தமாய் இருக்காது போலும்.
அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க சென்றோம் அங்கும் தெருக்கள் அலங்கோலமே சேறும் சௌ;ளலும் நட்பு கொண்டிருந்தது கலாம் பிறந்த ஊரே இப்படியென்றால் மற்றைய ஊர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்;;;;. கன்னியாகுமரி சென்றேன் கடலலை தாலாட்டியது விவேகானந்தர் பாறை சென்றேன் வியப்புடன் மலைக்குன்றிலில் நின்றேன் வள்ளுவதாத்தா சிலை சிங்கமாய்
சிறப்புடன் நிமிர்ந்து நிற்பதை கண்டு உள்ளம் உவகையடைந்தது அந்தோ திரும்பிப்பார்த்தேன் ஈழத்து அன்னை மகனே என இருகரம் நீட்டி அழைப்பது போலிருந்தது அக்கரையிலிருந்து. சற்றே கண்களும் இதயமும் கனத்தது ஆறுதல் சொல்ல யாருமின்றி மீண்டும் இந்தியக்கரை தொட்டது பாதங்கள்.
உணர்வும் வடிப்பும்
அராலியூர் ம.இரமேசு                                                               நன்றி:அலைகள்
பரடேசியா,
          இக்கடிதம் நம் தமிழர்களின் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறையப்பற்றி புலங்கடந்த மற்றொரு தமிழரின் கருத்துக் கடிதம்.
      நம் வீட்டை எப்படி  சுத்தமாக வைத்திருக்கிறோமோ அவ்வாறு பொது இடங்களையும் வைத்திருக்க மறந்து விடுகிறோம்,.நாம் மற்றவர்கள் போக்குவரத்திலும்,சுகாதார விடயங்களிலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறோமோ,அவ்வாறு முதலில் நாம் பொது இடங்களில், பொது நிகழ்வுகளில் நடந்து கொள்ளாததே இது போன்ற நிகழ்வுகளுக்குக்காரணம்.
 இனி பொது இடங்களில் சுத்தம், சுகாதாரம்,கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள நாம் முடிவெடுப்போம்.அது மற்றவர்களுக்கும் தானே பரவி விடும்.
  “சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்”

ஞாயிறு, 20 மார்ச், 2011

தன் மானச்[அ] சிங்கம்


மதிமுக பொதுச் செயலர் வைகோ

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது.
’கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை மதிமுகவுக்கு இல்லை’ என்றும் மதிமுக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
     இந்த தீர்மானதிற்கு ‘தேர்தல் பங்கிடு நெருக்கடியில் சரியான இடம் ஒதுக்கமுடியவில்லை.நான் உங்கள் அன்பு சகோதரிதான்.” என்று ஜெயலலிதா வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகக்கேள்வி.
பாவம்.வைகோ.இவர் தூக்கு தூக்கி என்ற பழைய சிவாஜி படத்தைப் பார்த்திருப்பார்.அதில் வரும்’கொண்டுவந்தால் தந்தை......என்ற பிரபல வசனத்தை மறந்திருக்க மாட்டார்,அவர் கதையிலும் அன்பு சகோதரியே இப்படி சொல்வார் என்று கனவிலும் எண்ணியிருக்கமாட்டார். பொடா,,வையும் மறந்து போயஸ் தோட்டதில் காத்துக்கிடந்த அவருக்கு இப்படியொரு பரிசா?
     தேர்தல் பங்கீடு நெருக்கடியில் இடம் ஒதுக்க முடியவில்லையாம்.இன்று வந்த தே.மு.தி.க,வுக்கு 41இடம் ஒதுக்க முடிந்தது.சரத் குமாருக்கு 2.ஆனால் காலம்காலமாக தன்னைத்தொடர்ந்துவரும் பொடா வீரர்வைகோவை  தொகுதி ஒதுக்கிடு விடயமாக இதுவரை கூப்பிடவே இல்லையே.
 நெருக்கடியில் ம.தி.மு.க,கட்சியையே மறந்து விட்டீர்களா?அல்லது அவர்கள் அனைவரும் அ.தி.மு.க, கட்சியினர் என்ற நினைப்பில் விட்டுவிட்டீர்களா?
   வைகோ பாவம் சற்று உணர்ச்சிவசப்பட்டாலே கண்களில் நீரைக்கோர்த்துக்கொள்ளும் தன்மையுள்ளவர்,அவரைப்பார்த்து அவர்கட்சியினர் கலங்குவது வேதனை தருகிறது.
 கொஞ்சம் முன்னதாகத்தெரிந்தால் மூன்றாவது அணி அல்லது.பாசமிகு அண்ணன் கலைஞரிடமாவது  சென்றிருக்கலாம்.
 ஜெ,யின் குணம் மாறவில்லை என்பதை இப்பாடு பட்டுதான் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.நாங்கள் எப்போதுமே சொல்லிவருகிறோமே. இடதுசாரிகளையும் ,உங்களையும் வைத்துக்கொண்டே காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகவும் ராசாவை நீக்குங்கள் என்றாரே அப்போதுஅவர் உண்மைக்குணத்தை உங்களால் உணர முடியவில்லை என்பது உங்களின் தவறு.
 சரி கவலையை விடுங்கள் .உங்கள் அன்பொழுகும் சகோதரி சட்டப்பேரவைத்தேர்தலில் இடம் ஒதுக்காவிட்டாலும் அவரின் பாசமிக்க இதயத்தில் இடம் ஒதுக்கியிருக்கிறாரே.அதை வைத்து இப்போதுக்கு சமாளித்துக் கொள்ளுங்கள்.

சனி, 19 மார்ச், 2011

பிரபாகரனை காக்க முயன்ற மேலை நாடுகள்,,,பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள் !
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் மறைந்திருந்த பகுதியில் ராணுவம் கடும் குண்டுவீச்சை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி பீட்டர் பர்லர், வாஷிங்டனுக்கு குறிப்பு அனுப்பினார்.
இருப்பினும் இதை சீனா மட்டும் விரும்பவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரை பாராட்டும் வகையில் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கருத்து தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் மேனன் பேசுகையில், புலிகள் மீது இலங்கை ராணுவம் தான் எதிர்பார்த்ததை விட கடும் போர் மேற்கொள்வதாகவும்,விரைவில் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார் மேனன்.
       சீனா மட்டுமின்றி  இந்தியாவும் பிரபாகரன் ,விடுதலைப்புலிகள் அழிப்பில் இலங்கைக்கு ஆதரவாகவே செயல் பட்டன.இந்தியா தனது பாதுகாப்பு,இறையாண்மை,ராஜதந்திரம் இவைகளை முற்றாக மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் முகமாகவே புலிகள் விடயத்தில் நடந்து கொண்டது.இன்று நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை தானாகவேத்தேடிக்கொண்டுள்ளது.
       ஆனால் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு உதவியதின் மூலம் இலங்கையில் தனது கால்களை சீனா ஆழப்பதித்துக் கொண்டது.கச்சத்தீவின் அருகே தனது தளத்தை ஆரம்பிப்பதின் மூலம் கிழக்கில் இருந்து இந்தியாவை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.அருணாசல பிரதேசம் மூலம் வடக்கில் இருந்து ஏற்கனவே அச்சுறுத்துகிறது. விடுதலைப்புலிகள் அழித்தொழிப்பு மூலம் இந்தியாவுக்கு இழப்பே.இதை வழக்கம்போல் தாமதமாகவே அரசு உணர்ந்துள்ளது. 

ஜெ,குழப்பம்

"கேட்கிறவன் கேனையன்னா கேழ்வரகில் நெய் வடியும்,ஜெ,யின் ஆணவமும்,பிடிவாதமும்,பிறரை மதியாத் திமிரும் உலகப்பிரசித்தம்,முன்பு எப்படியோ இப்போது எதையாவது செய்துவிட்டு அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது அவரின் வர்னாசிரமப்பத்திரிக்கைகள் ஒரே குரலில் சசி வகையராக்கலால்தான் இது ,என்று கூறி ஜெ,யை உத்தமப்புத்திரியாக்கிவிடுகின்றன,ஜெ,திருந்தவே இல்லை,திருந்தவும் முயற்சிக்க மாட்டார்.அவரைத்தேர்தலில் தேர்ந்தெடுத்தவர்களுக்கு,பைபிளில் வருவதுபோல் “அய்யோ” தான்."

  

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கூட்டணிக் கட்சிகளின் திடீர் போர்க்கொடியை தொடர்ந்து, அதிமுக பணிந்தது. அவர்கள் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. நேரில் அழைத்து அவர்களுக்கான தொகுதிகளின் பட்டியல்களையும் ஜெயலலிதா வழங்கினார்.
சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய ஜெ,கூட்டணி பரப்பு இப்போது சற்று தெளிவடைந்துள்ளது.
அந்தத்தொகுதிதான் வேண்டும்,இந்தத்தொகுதிதான் வேண்டும் என்று கூட்டணிக்கட்சிகள் தரப்போகும் தொல்லையைத் தவிர்க்க இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டால் அக்கட்சிகள் விழுந்தடித்துக்கொண்டு வந்து பேசி நாம் ஒதுக்கும் தொகுதிகளை என்னைப்போலத்”திருட்டு முழி”த்துக்கொண்டு வாங்கிக்கொண்டுப் போய்விடும் என்று ஒரெழுத்து பத்திரிக்கக்கார நண்பர் யோஜனா மஹாசமுத்திரம் கூறினாராம். அதை செயல்படுத்திவிட்டு இப்பொது அவரின் முழியை அ.தி.மு.க,த் தலைவி கடனுக்கு வாங்கியுள்ளார்.
            ஆனால் அவரினம் சார்ந்தபத்திரிகைகளோ ஜெ, செய்தத்தவரை ஒத்துக்கொள்ளவில்லை. என்பதுடன் அதை சரிக்கடும் வேளையிலும் இறங்கியுள்ளன.இவைகளைப்பார்க்கும் போது முதல்வர் கருணாநிதி கூறிய அவாள் பத்திரிக்கைகள் கருத்து உண்மை என்றேத்தெரிகிறது.
     கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் விமர்சிப்பதில் இரட்டை தராசு அளவு இவ்வூடகங்கள் பயன் படுத்துவது புலனாகிறது.
    நாம் நடுநிலை என்று எண்ணும் துக்ளக்,ஆனந்தவிகடன் குழுமம் ஆ.வி,ஜூ.வி,தினமணி,கல்கி,தினமலர்,ஹிந்து,எக்ஸ்பிரஸ், என்.டி.டி.வி,போன்றவைகளின் ஒருசார்பு மிகப்பட்டவர்த்தனமாகத்தெரிகிறது. என்.டி.டி.வி.,தி.மு.க.&காங் கூட்டணி இழுபறியை செய்திகள் மூலம் துவைத்து காயப்போட்டது.ஆனால் இபபோதைய பரபரப்பான அ.தி.மு.க, இழுபறியை பற்றி கண்டு்கொள்ளவேயில்லை.
சசிகலா உறவினர் பட்டியலை மாற்றிவிட்டராம்.அது தெரியாமல் வெளியிட்டாராம்.[மேலே உள்ள பழமொழியை மீண்டும் படித்துக் கொள்ளவும்] இவர் ஒருவேளை நாளை முதல்வராக வந்தால் அரசாணைகளுக்கும் இதே கதிதானோ?
வெளியிடும் முன் சரிபார்க்கவேண்டாமா/சாதாரண சலவைக்கணக்கைக்கூட இருமுறை சரி்பார்ப்பது வழக்கமாயிற்றே.ஒரு பெரிய கட்சியை வழிநடத்துபவர் இப்படி இருந்தால் இவரின் ஆட்சி எப்படி இருக்கும்.இவரின் ஆட்சி சென்ற முறையிலேயே நடக்கும் என்பதற்கு இது ஒரு மோசமான முன்னுதாரணமாகக் கொள்ளலாமா?
எல்லா மோசமான செயல்களையும் செய்துவிட்டு சசிகலா மேல் பழிபொடுவதன் மூலம் ஊடக உறவினர்கள் உதவுகின்றனர்.அது உண்மையாகவே இருக்கட்டும்,சசிகலாவே மோசமான செயல்களை செய்கின்றார் என்றால் அவரை இன்னும் ஏன் தோட்டத்தில் வைத்துக்கொண்டிருக்கிறீகள்.சசிகலா ,அவர் உறவினர்களை தோட்டத்தைவிட்டு அப்புறப்படுத்த வேண்டியதுதானே?அதை யார் தடுக்கிறார்கள்,அல்லது எது தடுக்கிறது?
மொத்ததில் ஜெயலலிதா கொஞ்சம்கூட மாறவில்லை,மாறவும் மாட்டார்.பிறவிக்குணம் மாறா,.அவர் தன்னைவெளீப்படுதிக் கொண்டார் .அவர் சொந்தமாகவோ,அல்லது சசிகலா சொந்தங்கள் மூலமாகவோ இப்படியே எடுத்தேன்,கவிழ்த்தேன் பாணியில்தான் செயல்படுவார்,
இவைகளை கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும் சிந்தித்து செயல்படவேண்டும்.

வெள்ளி, 18 மார்ச், 2011

இலங்கை{பிரச்சினை}தீர்ந்த காரணம்,,


”சிறீலங்காவில் இந்திய அமைதிப்படை தரையிறங்கிய காலத்தில் இந்தியாவின் புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றிய நாராயணன் பின்னர் வன்னிப் போர் நடைபெற்றபோது இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.
நாராணயனும், சிவசங்கர் மேனனும் இணைந்தே வன்னிப்போரின் இந்த முடிவுக்கான காரணிகளை வகுத்திருந்ததாக” சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கந்தியின் பணிப்பின்பேரில் அதிகளவான துணைஇராணுவக்குழுக்களின் அதிகாரத்தை நாராயணன் ஏற்படுத்தியிருந்தார்.
சோனியா கந்தியுடன் தனிப்பட்ட உறவுகளை பேணியவாறு நாராயணன் முன்னாள் தூதுவர் டிக்சித் என்பவரை போலவே செயற்பட்டிருந்தார்.
ராஜீவ் காந்தியின் பரம்பரைக்கு அவர் விசுவாசமானவர். இந்திய காவல்துறையில் 1955 ஆம் ஆண்டு இணைந்த நாராயணன் இந்திய புலனாய்வுப்பிரிவில் பல காலம் பணியாற்றியிருந்தார்.
அவர் 40 வருடங்கள் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.இவர் விடுதலைப்புலிகளின் மீது வெறுப்பைக்கொண்டவர்.அவர்களை அழிப்பது என்பதை தனது குறிகோளாகக் கொண்டவர் போல் செயல் பட்டார்”என அமெரிக்கா தனது தகவலில் மேலும் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
      இப்படிபட்ட கேரள மாபியாக்களை நாம் இலங்கை பிரச்சினைக்காக தூது அனுப்பிக்கொண்டும், கடிதம் எழுதிக்கொண்டும் இருந்தால் பிரச்சினையின் முடிவு இப்போதையது போன்றுதானே இருக்கும்.
       தங்கள் சொந்த கருத்தின் படி அரசின் வெளியுறவுக்கொள்கைகளை வகுத்து செயல்படும் இதுகளைப்போன்றவர்களால்தானே இன்னும் காஸ்மீர் போன்ற பிரச்சினைகள் தீராமலே உள்ளன.  

வியாழன், 17 மார்ச், 2011

நாற்காலி கனவுகள்


விஜயகாந்த்


 
                                          எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டமையால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வியாழனன்று கூடி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.
ஆனால் இவர்களிடையே கருத்தொற்றுமை எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. 
       கூடிக்,கூடி பேசியும் இவர்கள் ஒரு முடிவும் எடுக்கவில்லை.எடுக்கவும் மாட்டார்கள். கார்திக்கிடம் உள்ள தில் இவர்களிடம் கிடையாது
 இவர்கள் புத்தியறிந்தே தனது பிரசாரத்தைத்தள்ளிவைத்து விட்டு ஜெ,இவர்கள் வருகைக்காகக்காத்திருக்கிறார்.
      இப்பவே இப்படி. இவர்கள் ஜெயித்து ஜெ ,ஆட்சியிலும் அமர்ந்துவிட்டால் பாவம் இவர்கள். இவர்கள் தோட்டம் வாசல் அருகே வரிசையாகக் காத்திருக்கும் அழகு இப்பவே மனக்கண்ணில் தெரிகிறது.
 இப்போது துள்ளும் விஜயகாந்த் அப்பொது ஜெ,யை எதிர்த்து வெளியிடும் அறிக்கைக்காகக் காத்திருங்கள்.
        அவசரப்பட்டு ஜெ, உருவப்பொம்மையை விஜயகாந்த் ரசிகர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் எரித்திருக்கவேண்டாம். நாளை இவர் ஜெயை சந்திக்கும்போது எப்படி மூஞ்சியை பார்த்து தைரியமாகப் பேசமுடியும்.
        ஜெ,யின் குணம் தெரிந்துதானே வைகோ எந்த சத்தமும் எழுப்பாமல் இருக்கிறார்,விஜயகாந் கொஞ்சம் வைகோவிடம் பொடா அனுபவங்களைக்கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லதாகப்படுகிறது.
  இவர்கள் போகிறப்போக்கைப்பார்த்தால் எங்கே நான் மீண்டும் சுய மரியாதை[அ]சிங்கங்கள் இடுகை இட வேண்டிய இக்கட்டான நிலைவருமோ என்று பயப்படுகிறேன்,,,

தமிழகத் தொகுதிகள் விபரம்.

1: கும்மிடி பூண்டி 2: பொன்னேரி (தனி)
3: திருத்தணி 4: திருவள்ளூர்
5: பூந்தமல்லி(தனி)
6: ஆவடி 7: மதுரவாயல் 8: அம்பத்தூர்
9: மாதவரம் 10: திருவொற்றியூர் 11: Dr. இராதாகிருஷ்ணன் நகர் 12: பெரம்பூர்
13: கொளத்தூர் 14: வில்லிவாக்கம் 15: திரு.வி.க. நகர் (தனி) 16: எழும்பூர் (தனி)
17: இராயபுரம் 18: துறைமுகம் 19: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 20: ஆயிரம் விளக்கு
21: அண்ணா நகர் 22: விருகம்பாக்கம் 23: சைதாப்பேட்டை 24: தியாகராய நகர்
25: மைலாப்பூர் 26: வேளச்சேரி 27: சோழிங்கநல்லூர் 28: ஆலந்தூர்
29: ஸ்ரீபெரும்புதூர்(தனி) 30: பல்லாவரம் 31: தாம்பரம் 32: செங்கல்பட்டு
33: திருப்போரூர் 34: செய்யூர்(தனி) 35: மதுராந்தகம்(தனி) 36: உத்திரமேரூர்
37: காஞ்சிபுரம் 38: அரக்கோணம் (தனி) 39: சோழிங்கூர் 40: காட்பாடி
41: இராணிப்பேட்டை 42: ஆர்காடு 43: வேலூர் 44: அணைக்கட்டு
45: கீழ்வைத்தினங் குப்பம்(தனி) 46: குடியாத்தம்(தனி) 47: வாணியம்பாடி 48: ஆம்பூர்
49: ஜோலார்பேட்டை 50: திருப்பத்தூர் 51: ஊத்தங்கரை(தனி) 52: பர்கூர்
53: கிருஷ்ணகிரி 54: வேப்பனஹள்ளி 55: ஓசூர் 56: தளி
57: பாலக்கோடு 58: பென்னாகரம் 59: தர்மபுரி 60: பாப்பிரெட்டிப்பட்டி
61: அரூர் 62: செங்கம்(தனி) 63: திருவண்ணாமலை 64: கீழ்பெண்ணத்தூர்
65: கலசப்பாக்கம் 66: போளூர் 67: ஆரணி 68: செய்யார்
69: வந்தவாசி(தனி) 70: செஞ்சி 71: மைலம் 72: திண்டிவனம்
73: வானூர்(தனி) 74: விழுப்புரம் 75: விக்கிரவாண்டி 76: திருக்கோவிலூர்
77: உளுந்தூர்பேட்டை 78: ரிஷிவந்தியம் 79: சங்கராபுரம் 80: கள்ளக்குறிச்சி (தனி)
81: கங்காவள்ளி (தனி) 82: ஆத்தூர்(தனி) 83: ஏற்காடு(தனி) 84: ஓமலூர்
85: மேட்டூர் 86: எடப்பாடி 87: சங்கரி 88: சேலம்(மேற்கு)
89: சேலம்(வடக்கு) 90: சேலம்(தெற்கு) 91: வீரபாண்டி 92: ராசிபுரம்(தனி)
93: சேந்தமங்கலம்(தனி) 94: நாமக்கல் 95: பரமத்தி வேலூர் 96: திருச்செங்கோடு
97: குமாரபாளையம் 98: ஈரோடு கிழக்கு 99: ஈரோடு மேற்கு 100: மொடக்குறிச்சி
101: தாராபுரம்(தனி) 102: காங்கேயம் 103: பெருந்துறை 104: பவானி
105: அந்தியூர் 106: கோபிச்செட்டிப் பாளையம் 107: பவானிசாகர் (தனி) 108: உதகமண்டலம்
109: கூடலூர் 110: குன்னூர் 111: மேட்டுப்பாளையம் 112: அவினாசி(தனி)
113: திருப்பூர் வடக்கு 114: திருப்பூர் தெற்கு 115: பல்லடம் 116: சூலூர்
117: கவுண்டம்பாளையம் 118: கோயம்புத்தூர் வடக்கு 119: தொண்டாமுத்தூர் 120: கோயம்புத்தூர் தெற்கு
121: சிங்கநல்லூர் 122: கிணத்துக்கடவு 123: பொள்ளாச்சி
124: வால்ப்பாறை (தனி) 125: உடுமலைப் பேட்டை 126: மடத்துக்குளம் 127: பழநி
128: ஒட்டன்சத்திரம் 129: ஆத்தூர் 130: நிலக்கோட்டை 131: நத்தம்
132: திண்டுக்கல் 133: வேடசந்தூர் 134: அரவாக்குறிச்சி 135: கரூர்
136: கிருஷ்ணராயபுரம் (தனி) 137: குளித்தலை 138: மணப்பாறை 139: ஸ்ரீரங்கம்
140: திருச்சிராப்பள்ளி மேற்கு 141: திருச்சிராப்பள்ளி கிழக்கு 142: திருவெறும்பூர் 143: லால்குடி
144: மணச்சநல்லூர் 145: முசிறி 146: துறையூர்(தனி) 147: பெரம்பலூர்(தனி)
148: குண்ணம் 149: அரியலூர் 150: ஜெயம்கொண்டான் 151: திட்டக்குடி(தனி)
152: விருத்தாச்சலம் 153: நெய்வேலி 154: பண்ருட்டி 155: கடலூர்
156: குறிஞ்சிப்பாடி 157: புவனகிரி 158: சிதம்பரம் 159: காட்டுமன்னார் கோயில்(தனி)
160: சீர்காழி 161: மயிலாடுதுறை 162: பூம்புகார் 163: நாகப்பட்டினம்
164: கீழ்வேளூர் (தனி) 165: வேதாரண்யம் 166: திருத்துறைப்பூண்டி (தனி) 167: மன்னார்குடி
168: திருவாரூர் 169: நன்னிலம் 170: திருவிடை மருதூர்(தனி) 171: கும்பகோணம்
172: பாபநாசம் 173: திருவையாறு 174: தஞ்சாவூர் 175: ஒரத்தநாடு
176: பட்டுக்கோட்டை 177: பேராவூரணி 178: கந்தவர்வக்கோட்டை (தனி) 179: விராலிமலை
180: புதுக்கோட்டை 181: திருமயம் 182: ஆலங்குடி 183: அறந்தாங்கி
184: காரைக்குடி 185: திருப்பத்தூர் 186: சிவகங்கை 187: மானாமதுரை (தனி)
188: மேலூர் 189: மதுரை கிழக்கு 190: சோழவந்தான் (தனி) 191: மதுரை வடக்கு
192: மதுரை தெற்கு 193: மதுரை மத்தி 194: மதுரை மேற்கு 195: திருப்பரங்குன்றம்
196: திருமங்கலம் 197: உசிலம்பட்டி 198: ஆண்டிப்பட்டி 199: பெரியகுளம் (தனி)
200: போடி நாயக்கனூர் 201: கம்பம் 202: ராஜபாளையம் 203: ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)
204: சாத்தூர் 205: சிவகாசி 206: விருதுநகர்
207: அருப்புக்கோட்டை 208: திருச்சுழி 209: பரமக்குடி (தனி) 210: திருவாடானை
211: ராமநாதபுரம் 212: முதுகுளத்தூர் 213: விளாத்திக்குளம் 214: தூத்துக்குடி
215: திருச்செந்தூர் 216: ஸ்ரீவைகுண்டம் 217: ஒட்டப்பிடாரம் (தனி) 218: கோவில்பட்டி
219: சங்கரன்கோவில் (தனி) 220: வாசுதேவநல்லூர் (தனி) 221: கடையநல்லூர் 222: தென்காசி
223: ஆலங்குளம் 224: திருநெல்வேலி 225: அம்பாசமுத்திரம் 226: பாளையங்கோட்டை
227: நாங்குநேரி 228: ராதாபுரம் 229: கன்னியாகுமரி 230: நாகர்கோவில்
231: குளச்சல் 232: பத்மநாபபுரம் 233: விளவங்கோடு 234: கிள்ளியூர்