நண்பர்களே கவனியுங்கள்
தமிழகம் சென்று வந்த டென்மார்க் தமிழரின் மனக்குழுறல் !
March 20, 2011
தமிழகமும் அதன் கோலமும் பரடைசியா ம. ரமேசுவின் மடல்
(தமிழகம் சென்று திரும்பிய எனது மனவோட்டம்)
படித்தவர்கள்முதல் பாமராகள்வரை து}ய்மை துப்புரவுபற்றி யாரும் பொருட்படுத்துபவர்களாக காணோம் தமது தேவை முடிந்தால் போதுமென்று போய்க்கொண்டே இருக்கின்றனர்.
வீதிகளில் வண்டிகளை தமது விருப்பப்படி ஓட்டுகின்றனர் சுதந்திர இந்தியர்களாக வீதிக்கட்டுப்பாடுகளை விதிமுறைகளைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே கிடையாது போலும். சென்னையின் வீதிகளில் வாகனம் செலுத்துவதென்பது மகா வேலை அதற்கு விமானமே ஓட்டிவிடலாம்.
மலசல கூடங்கள் மிகுந்த அசுத்தமாகவே இருத்தல் வேண்டும் என்பது தமிழர்கள் விருப்போ என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது இது பற்றி தெளிவு ஏற்படுத்த கமலும் ரசனியும் விசையும் வருவார்களா திரையில்? பராமரிப்பாளர்களை கவனிப்பதற்கும் ஆள் தேவைப்படுகின்றது சமயங்களில் பரா மறைவு.
மொத்தத்தில்; எங்கும் ஒழுங்கு கடைப்பிடிப்பவர்களாக தமிழர்கள் இல்லை பாடசாலையிலிருந்து கற்றுவந்திருக்கவேண்டிய விடயம் முந்தி வினாயகர்களாக ஒழுங்கின்றி மொய்க்கும் தமிழர்கள் வாழ்வே தமிழகத்தில் அசுத்தம். இராமேசுவரம் என்னும் புனிதத்துவம் வாய்ந்த ஊருக்கு சென்றேன் மிகுந்த வேதனையடைந்தேன் புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாரோ இந்தியர்கள் என நினைக்க வைத்தது கோயில் சுற்றாடலே மிகுந்த அசுத்தம் நிறைந்திருந்தது பராமரிப்பு என்பது சுத்தமாய் இருக்காது போலும்.
அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க சென்றோம் அங்கும் தெருக்கள் அலங்கோலமே சேறும் சௌ;ளலும் நட்பு கொண்டிருந்தது கலாம் பிறந்த ஊரே இப்படியென்றால் மற்றைய ஊர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்;;;;. கன்னியாகுமரி சென்றேன் கடலலை தாலாட்டியது விவேகானந்தர் பாறை சென்றேன் வியப்புடன் மலைக்குன்றிலில் நின்றேன் வள்ளுவதாத்தா சிலை சிங்கமாய்
சிறப்புடன் நிமிர்ந்து நிற்பதை கண்டு உள்ளம் உவகையடைந்தது அந்தோ திரும்பிப்பார்த்தேன் ஈழத்து அன்னை மகனே என இருகரம் நீட்டி அழைப்பது போலிருந்தது அக்கரையிலிருந்து. சற்றே கண்களும் இதயமும் கனத்தது ஆறுதல் சொல்ல யாருமின்றி மீண்டும் இந்தியக்கரை தொட்டது பாதங்கள்.
உணர்வும் வடிப்பும்
அராலியூர் ம.இரமேசு நன்றி:அலைகள்
பரடேசியா,
இக்கடிதம் நம் தமிழர்களின் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறையப்பற்றி புலங்கடந்த மற்றொரு தமிழரின் கருத்துக் கடிதம்.
நம் வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அவ்வாறு பொது இடங்களையும் வைத்திருக்க மறந்து விடுகிறோம்,.நாம் மற்றவர்கள் போக்குவரத்திலும்,சுகாதார விடயங்களிலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறோமோ,அவ்வாறு முதலில் நாம் பொது இடங்களில், பொது நிகழ்வுகளில் நடந்து கொள்ளாததே இது போன்ற நிகழ்வுகளுக்குக்காரணம்.
இனி பொது இடங்களில் சுத்தம், சுகாதாரம்,கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள நாம் முடிவெடுப்போம்.அது மற்றவர்களுக்கும் தானே பரவி விடும்.“சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்”