இலவசத்தால் வீணாகும் தமிழகம்’’’’’’’’’2’’
அதிமுக[ தேர்தல்]இலவசங்கள் அறிக்கை |
தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார். பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும். அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும். நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் .குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது அனைத்து தீர்வு காணப்படும். இவைகளைப்படிக்கும் போதே கண்ணைக்கட்டுகிறது. அய்யா கலஞர்தான் இலவசத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பவர் என்றால், அம்மா ஜெ,யோ வாரிக்கொடுப்பதில் பொம்பளை பாரி யாகிவிட்டார். தி.மு.க ,தேர்தல் அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் தான் அ.தி.மு.க ,வின் தேர்தல் அறிக்கை. வாக்களர்களுக்கு பணம் ,அன்பளிப்பு கொடுக்கக்கூடாது என்று தெருவில் போகிறவன் கோமணத்தில் உள்ள பத்து ரூபாய்க்கும் கணக்கு க்கேட்கும் தேர்தல் ஆணையம் இது போன்ற இலவசங்கள் அறிக்கைக்கும் கடிவாளம் போடாதது ஏன்.? இலவசங்கள் அனைத்துமே மக்கள் வரிப்பணத்தில்தானே கொடுக்கப்போகிறார்கள். திராட்சைத்தோட்ட ,கொடநாடு தேயிலை விற்றப்பணத்திலும்_-அலைக்கற்றை விற்றப்பணத்திலுமா தரப் போகிறார்கள். இந்தப்பணதில் சில தொழிற்சாலைகள் அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தால் அவர்கள் உழைத்தக்காசில் எல்லாம் வாங்கிவிட்டுப்போகிறார்கள்.[ஆனால் அதில் டெண்டர் விட்டு காசுப்பார்க்க முடியாதே] ஒரு சமுதாயத்தையே தேர்தலுக்குத் தேர்தல் இலவசங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உழைப்பைமறந்துவிடும் பிச்சைக்காரர்களாக்கும் அரசியல் வியாபாரிகள் தமிழ்நாட்டில் மையம் கொண்டிருப்பது நமது தமிழகத்தின் கேடு காலம். இதற்கானப்பணத்தில் விவசாய மானியம் வழங்கி வேளாண்மையைப் பெருக்கலாம்,பெட்ரோல்-சமையல் வாயுக்கான வரிகளைக்குறைத்து விலைவாசிகளை கட்டுப்படுத்தலாம், மின் உற்பத்தியைப் பெருக்கலாம். நம் நாட்டில் வஞ்சமின்றி கிடைக்கும் சூரியசக்தியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் மின்கலங்களை கிராமம் தோரும் அரசு அமைத்து சேமித்து மின்தட்டுப்பாட்டையே போக்கலாம். இலவச மின்சாரத்தை விவசாயப் பணிகளுக்கு வழங்கலாம் இப்படி எத்தனையோலாம் கள் செய்யலாம். என்ன சொல்லி என்னசெய்ய நம் மக்கள் என்று இது போன்ற இலவசங்களுக்கு எதிராக வாக்களிக்கப்போகிறார்களோ அன்றுதான் தமிழகம் முன்னேறும் மாநிலமாகும். ஆனால் இருப்பதில் நல்ல கொள்ளி எது என்று எடுத்து தலையைச் சொரியும் நிலையில் அல்லவா நம் மக்கள் இருக்கிறார்கள்.அம்மா-அய்யாவைவிட்டால் அண்ணன் கேப்டன் வீடு,வீடாக வந்து இலவசமாக சோறு பொங்கித்தரும் திட்டத்தை சொல்லியல்லவா ஓட்டுக்கேட்டுவிடுவார். இப்போதைக்கு வேறு வழியே நம் முன் இல்லையே,,,, |