தன் மானச்[அ] சிங்கம்


மதிமுக பொதுச் செயலர் வைகோ

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது.
’கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை மதிமுகவுக்கு இல்லை’ என்றும் மதிமுக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
     இந்த தீர்மானதிற்கு ‘தேர்தல் பங்கிடு நெருக்கடியில் சரியான இடம் ஒதுக்கமுடியவில்லை.நான் உங்கள் அன்பு சகோதரிதான்.” என்று ஜெயலலிதா வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகக்கேள்வி.
பாவம்.வைகோ.இவர் தூக்கு தூக்கி என்ற பழைய சிவாஜி படத்தைப் பார்த்திருப்பார்.அதில் வரும்’கொண்டுவந்தால் தந்தை......என்ற பிரபல வசனத்தை மறந்திருக்க மாட்டார்,அவர் கதையிலும் அன்பு சகோதரியே இப்படி சொல்வார் என்று கனவிலும் எண்ணியிருக்கமாட்டார். பொடா,,வையும் மறந்து போயஸ் தோட்டதில் காத்துக்கிடந்த அவருக்கு இப்படியொரு பரிசா?
     தேர்தல் பங்கீடு நெருக்கடியில் இடம் ஒதுக்க முடியவில்லையாம்.இன்று வந்த தே.மு.தி.க,வுக்கு 41இடம் ஒதுக்க முடிந்தது.சரத் குமாருக்கு 2.ஆனால் காலம்காலமாக தன்னைத்தொடர்ந்துவரும் பொடா வீரர்வைகோவை  தொகுதி ஒதுக்கிடு விடயமாக இதுவரை கூப்பிடவே இல்லையே.
 நெருக்கடியில் ம.தி.மு.க,கட்சியையே மறந்து விட்டீர்களா?அல்லது அவர்கள் அனைவரும் அ.தி.மு.க, கட்சியினர் என்ற நினைப்பில் விட்டுவிட்டீர்களா?
   வைகோ பாவம் சற்று உணர்ச்சிவசப்பட்டாலே கண்களில் நீரைக்கோர்த்துக்கொள்ளும் தன்மையுள்ளவர்,அவரைப்பார்த்து அவர்கட்சியினர் கலங்குவது வேதனை தருகிறது.
 கொஞ்சம் முன்னதாகத்தெரிந்தால் மூன்றாவது அணி அல்லது.பாசமிகு அண்ணன் கலைஞரிடமாவது  சென்றிருக்கலாம்.
 ஜெ,யின் குணம் மாறவில்லை என்பதை இப்பாடு பட்டுதான் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.நாங்கள் எப்போதுமே சொல்லிவருகிறோமே. இடதுசாரிகளையும் ,உங்களையும் வைத்துக்கொண்டே காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகவும் ராசாவை நீக்குங்கள் என்றாரே அப்போதுஅவர் உண்மைக்குணத்தை உங்களால் உணர முடியவில்லை என்பது உங்களின் தவறு.
 சரி கவலையை விடுங்கள் .உங்கள் அன்பொழுகும் சகோதரி சட்டப்பேரவைத்தேர்தலில் இடம் ஒதுக்காவிட்டாலும் அவரின் பாசமிக்க இதயத்தில் இடம் ஒதுக்கியிருக்கிறாரே.அதை வைத்து இப்போதுக்கு சமாளித்துக் கொள்ளுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?