இதுவும் ஒரு அரசியல்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.
காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல். கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும். ராமதாஸ், கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.
மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது. ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.
"தினமலர்' இதழில் வெளியான செய்திபடி, நான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோ, அதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன்’என்றார்..
இவர் சிவன் போல் மனைவிக்கு சரி பாதி கொடுப்பாராம்,ஆனால் கருனாநிதி சரிபாதி கொடுத்தால் தப்பா?என்ன அவர் கட்சி ஆரம் பித்து நாளாகி முதல்வரும் ஆனதால் அதிகாரம்,வருமானம் எல்லாத்திலும் சமஉரிமை கொடுக்க வேண்டியதாகிற்று,
மக்களுடன் கூட்டணி,கடவுளுடன் கூட்டணி அப்பால மக்களை சிரிக்கவைபவர்களுடன் கூட்டணி[அப்படி என்றால் இவர் வடிவேலுடன் தானே கூட்டணி வைக்க வேண்டும்] என்றெல்லாம் கூறி விட்டு தனது தேர்தல் அறிக்கை மூலம் இலவசமாக ஆடு,மாடு,மிக்ஸி,கிரைண்டர்,பேன்,தாலி,தருவதாகக்கூறி மக்களை சிரிக்கவைத்துள்ள ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துவிட்டார்.இவரையும் ஒரு தலைவராக,அரசியல்வாதியாக எண்ணி ஒட்டு போட அதுவும் தி.மு.க,அ.தி.மு.க,வுக்கு மாற்றாக எண்ணியுள்ளவர்கள் இப்போதே தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வது நல்லது.இவர் அவர்களைவிட நல்லது செய்வார் என்று நினைத்தால் உங்களுக்கு இன்னும் உலக அனுபவம் காணாது அல்லது நடிகர்களைத்தலைவர்களாக்கும் வியாதி உங்களையும்பாதித்துள்ளது என்றுதான் கொள்ளவேண்டும்.
விருத்தாச்சலம் தொகுதிக்கு 5ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாரே சட்டமன்றத்துக்கு ஜெ,யை விட இரு நாட்கள்தான் கூடப்போய்யுள்ளார்.அங்கு பேசியது உண்டா?தொகுதிக்கு என்ன செய்தார்.அரசு செய்யாவிட்டால் போராடி எதை பெற்றுத்தந்தார்.ஏன் இப்போது அதேத்தொகுதியில் போட்டியிடவில்லை?
ரிசிவந்தத்தை குசிவந்தமாக்கப்போகிறாராம்.தொகுதி பக்கமே போகாமல் அதை பசிவந்தமாக்காமல் இருந்தால் சரி. ஆட்சி அதிகாரம் கேட்கவில்லையாம்[கேட்டாலும் ஜெ, கொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்] தன் மக்கள் நலனுக்காகவே இக்கூட்டணி வைத்துள்ளாராம்.அது ஒன்றுதான் உண்மை. இரு மக்களுக்காக என்று சொல்ல மறந்துவிட்டார்.
எப்படியோ குடித்துவிட்டு பேசுபவரும்,பக்கத்தில் இருந்து ஊத்திக்கொடு[த்தாரா?]த்தவரும் கூட்டணி வைத்து விட்டார்கள்.மக்களுக்கு நல்ல பொழுது போக்குத்தான் .இப்போதைவிட வென்று விட்டால் கிளைமாக்ஸ் சண்டை தூள் பறக்கும்.காத்திருப்போம்.வேறு வழி.அதுதானே தமிழகத்தின் தலைவிதி.