இந்தியத் திருநாட்டில் இமய மலை யையே விழுங்கும் அளவிற்கு ஊழலின் உச் சம் உயர்ந்துவிட்டது. இந்திய மக்கள் அதிர்ந்து போய்க்கிடக்கிறார்கள்.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் 100 பேரிடம் உள்ள மொத்த சொத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகி தம் ஆகும். அந்த அளவற்ற பணக்குவியலுக் கும், அளவற்ற ஊழல் தொகைக்கும் சம்பந்த முண்டு.
நவீன தாராளமயக் கொள்கைதான் இதற் கெல்லாம் முக்கிய காரணம். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்ப்பந்தத் தாலும், இவைகளின் பின்னால் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தளர்த் தப்படுகிறது. தாராளமயமாக்கப்படுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரால் அந்நிய மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் நாட்டை சூறையாட வழிவகுக்கப்படுகிறது. வாய்க்கல் வெட்டித்தரப்படுகிறது. அரசாங் கமே இந்த வாய்ப்பை வலிய உருவாக்கித் தருகிறது. அரசு மூலதனம் என்பது தனியார் மூலதனமாக ஆக்கப்படுகிறது.
உதாரணமாக, 1956ஆம் ஆண்டின்படி இந்திய அரசின் கொள்கை இரும்பு, நிலக்கரி, பாக்சைட், மாங்கனீசு, கிரானைட், சிலிகான், புளோரைட் போன்ற முக்கிய கனிமங்களை பொதுத்துறை நிர்வகித்தது. அதன் லாபமும் அரசாங்கத்துக்குச் சென்றது. நாட்டின் வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.
ஆனால் 1991ஆம் ஆண்டு புதிய பொரு ளாதாரக் கொள்கையின் ஓர் அங்கமான தாராள மயக் கொள்கை அமலாக்கப்பட்டதால் 1993 ஆம் ஆண்டு தேசிய கனிம வளங்கள் தனி யாருக்கு தாரைவார்த்துத் தரப்பட்டது. அந்நிய முதலீடு நுழைய இந்திய அரசு அனுமதித்தது. இதன் மறுபொருள் தனியார் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் லாபம் சுருட்ட லாம். அதற்குக் கட்டுப்பாடு ஏதும் இல்லை. தனியார் எல்லை இல்லா லாபம் குவிக்கலாம் என்று வந்த பிறகு, அரசின் உத்தரவுகள், கட்டுப்பாடுகள், எல்லைகள், புறச்சூழல் கட்டுப்பாடு என்பவையெல்லாம் மீறப்பட்டன. அதிகாரிகளை வளைத்துப் போட, ஆட்சியா ளர்களைக் கட்டிப்போட, எல்லை இல்லா லாபம் சுருட்ட, எல்லை இல்லா லஞ்சமும் கொடுக்கப்பட்டது. அதனால்தான் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்க முடிந்தது. கர்நாடக அர சையே ஆட்டிப் படைக்க முடிந்தது. இரண்டே வருடம் முதலமைச்சராக இருந்த மதுகோடா ரூ. 4000 கோடி ஊழல் செய்ய முடிந்தது. ஒரிசா சுரங்க ஊழல் ரூ. 7000 கோடிக்கு விஞ்சியது, ஸ்கார் பென் சப்மைரின் ஊழல் ரூ.18,979 கோடி யைத் தாண்டியது, ராணுவ ரேசன் ஊழல் ரூ. 5000 கோடிக்கு மேல் போனது, பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ரூ.50,000 கோடிக்கும் அதிகம். தேக்குமர வளர்ப்பு ஊழல் ரூ. 8000 கோடியை எட்டியது, பிரபென்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடியாகும். அதேபோல் ரூ. 100 கோடி ஊழல், ரூ. 200 கோடி ஊழல், ரூ. 500 கோடி ஊழல், ரூ. 1000 கோடி ஊழல் எனப் பட்டியல் இட்டால் அது மேலும் அனுமான் வாலாக நீளும்.
இப்போது அண்மையில் வெளிவந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ரூ.1,76,000 கோடி ஊழல் எனவும், காமன்வெல்த் விளையாட்டுக்கு செலவு செய்த மக்கள் பணம் 9 லட்சம் கோடி டாலரில் முறைகேடுகள் நடந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் விழுங்கப்பட்டு விட்டதாகச் சொல்லி அதுவும் விசாரணையில் இருக்கி றது. இதற்கு மேல் ஒரு மெகா ஊழல், பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள விண் வெளித் துறையில் ஓர் ஊழல்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நிலங் களை மாநில அரசுகளே முன்வந்து அடி மாட்டு விலைக்கு பகாசுர கம்பெனிகளுக்கு தாரைவார்க்கின்றன. விளைநிலமெல்லாம் கூட விலை பேசப்பட்டு விட்டன. மும்பை நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டதில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக ளுக்கு இடையில் கடுமையான போட்டியேற் றப்பட்டு ரூ. 4000 கோடிக்கு விலை போயிற்று! இது அமெரிக்காவில் போகும் விலையை விட அதிகமாம்.
இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையி னால் ஒரு சிலரிடம் ஏராளமான பணம் குவிந்து கிடக்கின்றன. உலகப் பணக்காரர் களின் பட்டியலில் ஒரு சில இந்திய முத லாளிகளும் முன்நிற்கிறார்கள். அந்நிய நாட்டு மூலதனமும் இந்திய நாட்டில் தாராளமாக நுழைய அனுமதிக்கப்பட்டு விட்டன. அந்நிய முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்நிய மூலதனம் நுழைய நுழைய ஊழலும் அதிகமாகும் என் பது ஒரு சித்தாந்தம். அந்நிய மூலதனத்தின் வீச்சும், உள்நாட்டு மூலதனத்தின் வீச்சும் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை. “விவசாய நாடு இந்தியா” என்பது அடுத்த முப்பதாண்டுகளில் விவசாய நாடு என்பது மறைந்து போகும் போலும். தாராளமயக் கொள் கை கொண்டு வந்த “சீதனம்” இது. மூல தனத்தின் சக்தி எதுவரை பாயும் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம்.
சத்தீஸ்கார் மாநிலத்தில் 23.6 கிலோ மீட்டர் கொண்ட ஆற்றை அரசு 22 வருடங் களுக்கு தனியார் கம்பெனி ஒன்றுக்கு குத்த கைக்கு எழுதிக் கொடுத்து விட்டது. கம்பெனி இரு கரை ஓரமும் முள்வேலி போட்டு விட்டது.
மருத்துவத்தை, கல்வியை லாப நோக்கத் தோடு பார்க்கக் கூடாது என்பது மரபு. ஆனால் தாராளமயம், தனியார்மயம் எனும் கொள்கை இந்தியாவில் அவைகளையும் லாபம் கொழிக்கும் ஸ்தலங்களாக மாற்றி விட்டது. அதற்குப் பெயர் ஊடிசயீடிசயவந ழடிளயீவையட, ழடிளயீவையட ஐனேரளவசல என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் தனியாரின் ஆதிக்கம் வெள்ளிடை மலையெனத் தெரிகிறது. திட்ட மிட்டு பொது மருத்துவமனை சீரழிக்கப்படு கிறது. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனை கள் ஆண்டுக்கு ரூ. 1,62,906 கோடி ஈட்டு கின்றன.
கல்வி விஷயத்திலும் இதே நிலை தான். தனியார் மருத்துவக் கல்லூரிகள், என்ஜினிய ரிங் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழ கங்கள் எனக் காளான்களாக வளர்ந்து, கை யூட்டு கொடுத்து சீட்டுகள் வாங்கப்படுகின் றன. மாணவர்களும் கல்லூரிகளில் அப்பட்ட மாக சுரண்டப்படுகிறார்கள். வருடத்துக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு மேல் லாபம் கொட்டு கிறது. கல்வியையும் வியாபாரமாக்கிவிட்ட பெருமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
இப்படியாக மில்லியனர்களை, டிரில்லிய னர்களை உருவாக்கி விட, அந்த கார்ப்பரேட் அதிபதிகள் இப்போது ஆதிக்கம் செலுத்து வது எங்கு என்றால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் யார் எந்தெந்தத் துறைக்கு அமைச்சர்களாக வர வேண்டும் என்கிற முடிவையும் தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள், வளர்ந்து விட்டார்கள்,
அமெரிக்க தேர்தலும் இப்படித்தான் நடக் கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என அமெரிக்காவில் உள்ள பெட்ரோல் வியாபாரி களும், ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்கிற முதலாளிகளும்தான் தீர்மானிக்கிறார் கள். அதற்காக பல மில்லியன் டாலர்களும் செலவு செய்கிறார்கள். அதே நிலை இந்தியா விலும் உருவாகிறது. நாடாளுமன்றத்தில் நம் பிக்கைக் கோரும் தீர்மானம் கொண்டு வந்த போது, மன்மோகனை தப்பிக்க வழி செய்த தும், பணம் செலவு செய்ததும், ஓர் இந்திய கார்ப்பரேட் செக்டார் தான். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதும் அம்பலமானது.
ஆகவேதான் பொதுத் தேர்தலிலும் கோடி கோடியாக செலவு செய்கிற கட்டாயமும் உருவாக்கப்பட்டு விட்டது. காசு கொடுத்து காய்கறி வாங்குவது போல பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தையும் உருவாக்கி விட்டார்கள். ஓட்டு வாங்கவும் பல கோடிகள் செலவழிக்கப்படுகின்றன.
மூலதனத்தை மேலும் மேலும் குவிக்க எல்லாம் வணிக மயம் ஆக்கப்பட்டு வருகின் றன. அடிப்படை தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதாரம் முதற்கொண்டு நுகர்வுக் கலாச்சாரம் வரை காசே கடவுளாக்கப்பட்டு விட்டது. வறுமையும், வேலையின்மையும் விலைவாசி உயர்வும் ஒருபக்கம் பெருகிவர, மறுபக்கம் ஜனநாயக உரிமைகளும், அடிப் படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கை கள் சுருக்கப்படுகின்றன. அவற்றின் தேர்தல் களும் கேலிக்கூத்தாக ஆக்கப்படுகின்றன. நீதிமன்றமும், சில நேரங்களில் நில நடுக்கம் கொள்கின்றது. |