”ஜன”நாயகம்,,,,,,,,,,
இந்நிலையில், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதல் கட்ட பணிகள் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கின. அதைத் தொடர்ந்து 2&ம் கட்ட கணக்கெடுப்பு பணி, கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 640 மாவட்டங்கள் மற்றும் 5,924 துணை மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ரூ.2,200 கோடி செலவிடப்பட்டது.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் சந்திர மவுலி ஆகியோர் 2011 சென்சஸ் முதல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டனர். அதன்படி, இந்திய மக்கள் தொகை 121 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பைவிட 18 கோடி அதிகமாகும். ஆண்கள் 62.37 கோடி பேரும், பெண்கள் 58.65 கோடி பேரும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர். கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் 66.84&ல் இருந்து 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதமாக உள்ளது. கடந்த முறை 21.15 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமாகும். உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா இரு மாநில மக்கள் தொகை, அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகம். உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17 சதவீதமாகும்.
மாநில அளவில் உத்தரபிரதேசம் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. அங்கு மக்கள் தொகை 19.9 கோடி. மக்கள் நெருக்கம் உள்ள மாநிலம் டெல்லி. அதற்கு அடுத்த இடத்தில் சண்டிகர் உள்ளது. டெல்லி வடகிழக்கு மாவட்டம் மிக அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு சதுர கி.மீட்டருக்கு 37,346 பேர் உள்ளனர். மிக குறைந்த மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு ஒரு சதுர கி.மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து அனைவருக்கும் 12 இலக்க தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மக்கள் தொகை18 கோடி கூடிய போதும் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது சற்று ஆறுதலான ஒன்றாக உள்ளது.இந்த விகிதத்தினை அதிகரித்து மக்கள்தொகையினை அடுத்த கணக்கெடுப்பில் வெரும் 8 கோடியினைக்காண்பிக்க நாம் என்ன செய்யலாம். ஒன்றும் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தால் போதும் .
---------------------------------------------------------------------------------------------------------------
மகராசனாக குறுக்கு வழி.........
‘அடிபட்ட வேட்பாளர் ”எங்கத்தலைவர் டார்ச்லைட்டைத்தான் ரிப்பேர் பார்த்தார் “ என்று சமாளிக்கிறார்.அடித்த கருப்பு எம்.ஜி.யாரோ “ஆமாய்யா அடித்தேன் என் ஆளைத்தானே அடித்தேன்.என்கிட்டே அடிவாங்கினால் மகராசனாகி,நல்வாழ்வு வாழ்வான் என்கிறார்.தேர்தல் முடிந்த பின் அவர் கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்வாழ்வு வாழ,மகராசனாக வாழ அவர் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்வோம். பின்னே மத்தத்தொண்டர்கள் என்ன இளிச்ச வாயர்களா? அவர்களுக்கும் மகராசனாக வாழ ஆசை இருக்காதா?
==================================================================================
இலவச அனுமதி.....
எல்லாக்கட்சித்தலைவர்களும் மக்கள் மேல் கரிசனையுடன் இலவசங்களை அள்ளித்தெளித்துள்ளனர். ஆனால் அம்மையார் அறிவிப்பைப்பார்க்கும் போது
கொஞ்சம் பயமாக உள்ளது. அவர் கலைஞரை நக்கல் செய்யவே இப்படி இலவசமாக அறிக்கையை வெளியிட்டுள்ளாரோ? என்றுதான்.
மிக்சி கிரைண்டரை ஒப்பந்தப்புள்ளியிட்டு செய்து வாங்கி கொடுத்திடலாம் .கலர் டி.வி.மாதிரி. இந்த நான்கு ஆடுகளுக்கு என்ன செய்யப்போகிறார்[வென்று விட்டால் தான்] .ஒரு வேளை இப்பவே தயாரக்கிட கால்நடை வளர்ப்பவர்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டாரோ?
இவர் இலவசமாகக் கொடுக்கும் 4ஆடுகள்,ஒரு மாடு,5கோழிகள்[சொன்னாரா]இவைகளை வளர்க்க நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் அனுமதியையும் அம்மாதான் இலவசமாக வாங்கித்தர்வேண்டும்.
===========================================================================