செவ்வாய், 31 மே, 2011
எரியும் செய்தி
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, ஏற்கனவே அரசு வசம் இருந்தது. இந்த நடைமுறை, கடந்தாண்டு நீக்கப்பட்டது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோலின் விலை, தற்போது அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு, அரசு சார்பில் தொடர்ந்து மானியம் அளிக்கப்படுவதால், அவற்றின் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மானிய விலையில் இவற்றை விற்பனை செய்வதால், தங்களுக்கு 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை, சரிக்கட்ட வேண்டுமானால், சமையல் காஸ் மற்றும் கெரசினுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான புதிய திட்டமும் தயாராகியுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, முற்றிலும் ரத்து செய்யப்படும்.
இந்த மானிய ரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு, எரிபொருள் வாங்குவதற்காக, குறிப்பிட்ட அளவு, உதவித் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவித் தொகையாக எவ்வளவு அளிப்பது என்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மானியம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, தற்போதுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, 1,000 ரூபாயை தொட்டு விடும். அதேபோல், கெரசின் விலை, தற்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்த புதிய திட்டம், எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்ததும், அமல் படுத்தப்படும். இந்த குழுவின் கூட்டம், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும்போது, இந்த புதிய திட்டம் குறித்து, விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கெரசினின் விலை, மாதம் தோறும் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .பொதுமக்களுக்கான அரசாக காங்கிரஸ் அரசு தெரியவில்லை.ஏதோ வணிக நிறுவனம் நடத்தும் எண்னம்தான் சோனியா-மன்மோகன் அரசுக்கு இருக்கிறது.
அம்பானி,மற்றும் எண்ணை நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டு அதற்கு இருப்பதும்.வாக்களித்த மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாமல் குடும்பம் நடத்த வேண்டுமே எனவும் மக்கள் நலன் பற்றிய கவலை கொஞ்சமும் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மாதாமாதம் பெட்ரொல் விலை உயர்வால் வாகன ஒட்டுனர்கள் மட்டுமா பாதிக்கப் படுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் மறைமுகமாக விலைவாசியும் கடுமையாக ஏறிவருகிறது .அதைப்பற்றியும் பொருளாதரப் புலி கண்டுகொள்ள வில்லையே.
இப்போது நமது கோரிக்கை பெட்ரொல் நிறுவனங்களின் வரவு-செலவு பற்றிய வெள்ளை அறிக்கை மத்திய அரசு நிறுவனங்கள் கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
அப்போதுதான் எண்ணை நிறுவனங்களின் நடவடிக்கைகள்,லாபம் மற்றும் மக்களிடம் அது கூறிவரும் நட்டக் கணக்கு பற்றி தெரியவரும் .இது போன்ற கொள்ளைக்கு யார் காரணம்.இவ் விலையேற்றம் தவிர்க்க முடியாதா? என்பது போன்றவை எல்லாரும் புரிந்து கொள்ள இயலும். பெட்ரொல் நிறுவனக் கொள்ளைகளுக்கும் முடிவு கட்ட இயலும்.
மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோல் விலை இந்தியாவில் மட்டும் மாதா-மாதம் உயர்வது ஏன் என்றும் தெரிந்து கொள்ள இயலும்.
சென்ற மாதம் கச்சா எண்ணை உலக அளவில் குறைந்த போது இந்தியாவில் விலையை ஏன் குறைக்கவில்லை எனவும் புரியும்.
==========================================================================
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை பலியாக காரணமான லாரியை, மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் தனிப்படை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். லாரியை, பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
, தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்தேகப்பட்டியலில் கொண்டு வந்தனர்.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று, ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரிந்தது. அதைப்பிடிக்க, ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர்.
நேற்று காலை, குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து, தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர்.
காட்டிக்கொடுத்தது
யார்?
அம்பானி,மற்றும் எண்ணை நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டு அதற்கு இருப்பதும்.வாக்களித்த மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாமல் குடும்பம் நடத்த வேண்டுமே எனவும் மக்கள் நலன் பற்றிய கவலை கொஞ்சமும் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மாதாமாதம் பெட்ரொல் விலை உயர்வால் வாகன ஒட்டுனர்கள் மட்டுமா பாதிக்கப் படுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் மறைமுகமாக விலைவாசியும் கடுமையாக ஏறிவருகிறது .அதைப்பற்றியும் பொருளாதரப் புலி கண்டுகொள்ள வில்லையே.
இப்போது நமது கோரிக்கை பெட்ரொல் நிறுவனங்களின் வரவு-செலவு பற்றிய வெள்ளை அறிக்கை மத்திய அரசு நிறுவனங்கள் கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
அப்போதுதான் எண்ணை நிறுவனங்களின் நடவடிக்கைகள்,லாபம் மற்றும் மக்களிடம் அது கூறிவரும் நட்டக் கணக்கு பற்றி தெரியவரும் .இது போன்ற கொள்ளைக்கு யார் காரணம்.இவ் விலையேற்றம் தவிர்க்க முடியாதா? என்பது போன்றவை எல்லாரும் புரிந்து கொள்ள இயலும். பெட்ரொல் நிறுவனக் கொள்ளைகளுக்கும் முடிவு கட்ட இயலும்.
மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோல் விலை இந்தியாவில் மட்டும் மாதா-மாதம் உயர்வது ஏன் என்றும் தெரிந்து கொள்ள இயலும்.
சென்ற மாதம் கச்சா எண்ணை உலக அளவில் குறைந்த போது இந்தியாவில் விலையை ஏன் குறைக்கவில்லை எனவும் புரியும்.
==========================================================================
அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
, தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்தேகப்பட்டியலில் கொண்டு வந்தனர்.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று, ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரிந்தது. அதைப்பிடிக்க, ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர்.
நேற்று காலை, குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து, தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர்.
விஜயவாடாவைச் சேர்ந்த அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் காசிம் ரகமதுல்லா என்பதும் தெரிந்தது. அவரே லாரியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் இருந்து வருகிறார்.தூத்துக்குடியிலிருந்து, விஜயவாடாவுக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்றபோது தான் பாடாலூர் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும், ஏதும் பிரச்னை ஏற்படுமோ என நினைத்த லாரி உரிமையாளர் காசிம் ரகமதுல்லா, அதை, சாமர்த்தியமாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு ஓட்டிச் சென்றுவிட்டார். அங்கு ஜிப்சத்தை இறக்கிவிட்டு, லாரியை மறைத்து வைக்க, கோல்கட்டா செல்லும் வழியில், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில், மேற்கு வங்க போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார், டாரஸ் லாரியை கண்டுபிடித்தனர்.பிடிபட்ட லாரியை, பெரம்பலூர் கொண்டு வரவும், லாரியின் உரிமையாளரும், டிரைவருமான காசிம் ரகமதுல்லாவையும் கைது செய்து, பெரம்பலூர் கொண்டு வர, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஆந்திரா விரைந்துள்ளனர்.
அமைச்சர் மரியம்பிச்சையின் சாவுக்கு காரணமான லாரி பிடிபடாமல் இருந்ததால், விபத்தில் சதி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. தற்போது லாரி பிடிபட்டுள்ளதால், அந்த சந்தேகத்துக்கான விடை விரைவில் தெரியவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.==========================================================================
காட்டிக்கொடுத்தது
யார்?
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லா பராதர் தலிபான் அமைப்பைத் தொடங்கியவரில் ஒருவர்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். .தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
===============================================================================================================
கணிணி:பராமரிப்பு ஆலோசனைகள்
உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஃப்யர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.
டீஃப்ராக் செய்யவும்: டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கணினியின் ஹார்ட் டிஸ்கை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணினியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம், அல்லது இன்ஸ்டால் செய்தவற்றை ரத்து செய்கிறோம், கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.
டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை டவுன்லோடு செய்வோம். இதிலெல்லாம் கணினியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.
கணினியை சுத்தம் செய்யவும்: கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.
==========================================================================
==========================================================================
திங்கள், 30 மே, 2011
காங்கிரசாரின் கனவுகள்’’’’’’’’’’’
"திமுகவினரின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசியுள்ளார். சட்டசபை தேர்தலில், எங்கள் கருத்துக்கள் டில்லியில் எடுபடவில்லை. இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று, வெற்றி பெற்று இருப்போம். கட்சியில் தற்போது ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வரும் காலங்களில் 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட வேண்டும்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ஆளும் திமுகவினரின் ஊழல் தான் காரணம். முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அமைச்சர் முதல் வார்டுகளில் உள்ளவர்களின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக்கப்பட்டது.இனி வரும் தேர்தலில்களில் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும் என்றார்.
காங்கிரசில் ஒன்பது லட்சம் உறுப்பினர்கள்தான் உள்ளனரா? யுவராஜா இளைஞர் காங்கிரசை சொல்லுகிறார் என்று எண்ணுகிறோம்.
இவ்வளவு பேரும் ஒழுங்காக வேளை பார்த்திருந்தாலும்-வாக்களித்திருந்தாலும் அதிகமாக சில தொகுதிகளை வென்றிருக்கலாமே?
வாய்ப்பே இல்லாமல் 63 தொகுதிகளை ,அதுவும் தி.மு.க,வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டத் தொகுதிகளை வாங்கி தானும் ஜெயிக்காமல்,தி.மு.க.வையும் வெல்ல விடாமல் கோஷ்டி தகராறிலேயே
எதிர் வேட்பாளர் களை வெல்ல வைத்து விட்டு இது என்ன அரைவேக்கடு பேச்சு.கொஞ்சமாவது நடப்பது என்ன என்று பாருங்கள்.”.டான் குவிக்சோட்’ வீரம் ஏன்?
அலைவரிசையாய் ஊழல் குற்றசாட்டில் மூழ்கிக் கொண்டிருப்பது காங்கிரசு மத்திய அரசு தான்.அந்த அலைவரிசையில் 2ஜி ஒரு அலைதான்.காமன்வெல்த்.ஆதர்ஷ்,3ஜி, என்று பல அலைகள் இருக்கிறது.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது 2ஜ்இ யில் மட்டும்தான்.
ஈழப்போரில் தமிழர்கள் கூட்டம் ,கூட்டமாகக் கொலை செய்து குவிக்கப்பட்டதும் அதற்கு சோனியாவின் இந்திய அரசு ஒத்துழைத்ததும் தான் தமிழக மக்கள் வாக்குகள் மாற முக்கிய காரணக்களில் ஒன்றாக இருந்துள்ளது.இது ’ரா’போன்ற மத்திய உளவுத்துறைகளின் அறிக்கைகளில் வெளியாகியுள்ளது.
சோனியா-பக்சே படுகொலைகளைத் தட்டிக் கேட்காமல், கண்ணீர் கவிதை எழுதியதும்.கடற்கரையில் வந்து உண்ணாவிரதம் என படுத்து சென்றதும் தமிழக மக்களை கருணாநிதி யின் மீது கோவம் கொள்ள வைத்தது.அதன் வெளிப்பாடே தேர்தலிலும் வெடித்தது.மின் தடையும் ஒரு காரணம்.
முக்கிய காரணம் காங்கிரசுடனான கூட்டணிதான்.
இடையில் கூட்டணி முறிவு நாடகத்தை தி.மு.க.உண்மையிலே தனது முடிவாக்கியிருந்தால் ,தி.மு.க.இந்த அளவு[ சோகமான] இடங்களை விட அதிகமான இடங்களைப் பெற்றிருக்கும்.
2ஜி யும் கனிமொழியும் தி.மு.க,த்தலைமையைக் கட்டிப்போட்டு விட்டது.
அதுதான் காங்கிரசுக்கு 5இடங்களையாவது பெற்றுத்தந்துள்ளது.
முதலில் காங்கிரசுக் காரர்கள் கனவில் இருந்து வெளியே வாருங்கள்.உங்களால்தான் தி.மு.க.விற்கு தோல்வியே தவிர அவர்களால் காங்கிரசுக்கு தோல்வி அல்ல.
யுவராஜா அவர்களே தாங்கள் கூறியபடி அடுத்த முறை தனியே நின்று உங்கள் பலத்தை சோதித்துக் கொள்வது தான் வருங்கால அரசியலுக்கு நல்லது.
தமிழகத்திற்கும் நல்லது.உங்களை சேர்த்துக் கொள்ள ஆசிப்படும் தி.மு.க.-அ.தி.மு.க,விற்கு உங்கள் உண்மையான பலமும் தெரியும்.
மத்திய அரசின் இரண்டாண்டு-ஒரு பார்வை
ஞாயிறு, 29 மே, 2011
30லட்சமும்-3000 கோடியும்
அன்னா கசாரேவைக் கொல்ல 30லட்சம்
""என்னை கொல்வதற்கு 30 லட்சம் ரூபாய் பேசி, வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர், என்னை கொல்ல மறுத்துவிட்டார்,' ' என, ஊழலை எதிர்த்து[?] போராடி வரும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
பெங்களூரு பசவனகுடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அன்னா ஹசாரே பேசியதாவது:” ஏப்ரல் 5ம் தேதி, டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பெங்களூரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். என் உண்ணாவிரதத்திற்கு பெரும் ஆதரவாகச் செயல்பட்டனர். அவர்களின் எழுச்சி பாராட்டத்தக்கதாக உள்ளது. இளைஞர்கள் நினைத்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம். என்னை கொல்வதற்கு, 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர் என்னை கொல்ல மறுத்துவிட்டார்”. இவ்வாறு அன்னா ஹசாரேபேசியுள்ளார்.
நம்ம ஊரு அரசியல்வாதிகள் இவரின் பேச்சு முன் தோற்றுப் போவார்கள்.
இவரை 30 லட்சம் கொடுத்து கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபமோ?
இப்பேச்சினால் அன்னா ஹசாரேக்கு மட்டும் லாபம்.அவருக்கு ஒரு பெயர் அதாவது இமேஜ் கிடைக்குமே.அத்துடன் அவர் விடவில்லை.மேலும்
அவர் பேசுகையில்;” நாட்டில் ஊழல் செய்வோரை விசாரிக்கும் லோக்பால் மசோதா வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் இல்லையேல் நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன், எனது போராட்டம் காரணமாக ஊழல் புரிந்த 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் என்னை பழிவாங்க துடிக்கின்றனர். ஆனால் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் நான் கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன். பிரதமர் நல்லவர் தான் அவர் மோசமானவர் அல்ல. அவரை இயக்கி வரும் ரிமோட்கன்ட்ரோல் ( சோனியா ) சரியில்லையே, அது தான் பிரச்னையை உருவாக்குகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.சும்மா கொஞ்ச காலம் திடீரென லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக உதித்த மாவீரர் அன்னா மீது சந்தேகமாகவே இருக்கிறது.அவரின் நோக்கம் நல்லதுதான்.ஆனால் ஆள் யாராலோ முகமூடியாக முன்நிறுத்தப்படுவது தெரிகிறது.
தனது அறக்கட்டளை கணக்கில் லட்சம்,லட்சமாக செலவிட்டு பிறந்த நாளைக் கொண்டாடியவர் இவர்.30 லட்சம் தனது உண்ணாவிரதத்திற்காக செலவிட்டுள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார்.விருந்துக்கு சரி உண்ணாமல் இருக்க இவ்வளவு செலவா? இந்தபணம் யார் தந்தது.?
உண்ணாவிரத மேடையில் ஆட்களை ஏற்றுவதிலும் சில முறைகள் கடை பிடிக்கப்பட்டனவே.இடதுசாரி நோக்குள்ளவர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. பா.ஜ.க, பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிரன் பேடி கூட ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்.அவர் அதன் பின் இவருடன் பேசுவதையே தவிர்த்து விட்டார். மேடையிலேயே நரேந்திர மோடி புகழ் பாடி தன்னை கசாரே வெளிப்படுத்திக்கொண்டார்.
அறக்கட்டளை கணக்கில் வரி செலுத்திய விபரம் கேட்ட அதிகாரி யை வழக்கு தொடரப் போவதாக மிரட்டியுள்ளார். இதைவிட மிகக் கொடுரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய -நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவரையும் ,அவர் மகனையும் லஞ்ச ஒழிப்புக் குழுவில் சேர்த்துக் கொண்டது.
அண்ணே ,,,அன்னா கசாரே உங்கள் மேல் உள்ள அழுக்குகளை கழுவிவிட்டு வந்து மற்றவர் அழுக்கைப் போக்க வழி கூறினால் நல்லா இருக்கும்.
நீங்கள் கூறிய ரிமோட் ,உண்மையிலே சரியான உவமானம்தான்.அதற்கு தனியாக ஒரு பாராட்டு .
ஆனால் 30லட்சம்-,கொலை-,கொலை செய்ய மறுப்பு-, நம்பும் படி இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணடிப்பு தேவையா?
ஜெயலலிதாவே முன்பு முதல்வராக இருந்தபோது கோட்டையில் உள்ள தலைமைச்செயலகம் பழுதாகிவிட்டது எனக் கூறி,ராணி மேரிக் கல்லூரியை இடித்து கட்டிடம் கட்ட முயன்றார்.அப்போது மக்களின்,மாணவர்களின் எதிர்ப்பால் முடங்கிப்போனது அத்திட்டம்.
உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி விளையாட்டில் வீணாவது மக்கள் வரிப்பணம்.அதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்னும் இருக்கிறது,,,,
எத்தியோப்பியா [உல்லாச]பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் மண்மோகன் சிங் கிடம் செய்தியாளர்கள் 2ஜி,-தி.மு.க, கூட்டணி பற்றி கேட்டபோது ”தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்கிறது.2ஜி அலைவரிசை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கூற இயலாது.இல்லை என்றாலும் எனக்கு ஒன்றும் அது பற்றி தெரியாது.தி.மு.க.வில் இன்னும் சிலரை சிறையில் தள்ள வேண்டியதுள்ளது. அதுவரை கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்.முடிப்பது பற்றி ராகுலும்,சோனியாவும் கலந்து முடிவெடுத்தபின் நானே அறிவிப்பேன் ‘ என்று கூறினார்.
[ என்னங்க குழம்பிட்டீங்களா? அடர்த்தி சிகப்பு எழுத்து எல்லாம் அவர் மனசுல நினைச்சதுங்க. ’சுரன்’க்கு மட்டும் தனியே கேட்டதுங்க.]
============================================================================
பத்பனாபன் வாக்குமூலம் என்ற பெயரில் உருவாக்கும் குழப்பங்களுக்கு விடுதலைப்புலிகள் பெயரில் வெளியான அறிக்கை
சிங்கள அரசு கே.பி மூலம் செய்யும் சதிமுயற்சி முறியடிக்கபடும் - விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம்
சனி, 28 மே, 2011
2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.
எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
==========================================================================
சனி, 28 மே, 2011
வருகிறது புதிய ஆபத்து
வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநில கல்வித்திட்டம், மெட்ரிக் கல்விமுறை, ஆங்கிலோ இந்தியன் கல்விமுறை, கீழ்த்திசை கல்விமுறை என நான்கு வகையாக பள்ளிக்கல்வி இருந்தது.
நான்கிலும் உள்ள சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி, சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு எடுத்தது. இதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அது சில ஆலோசனைகள் வழங்கியது. அதிகாரிகளை கொண்ட கல்வியாளர் குழு ஒன்று, பிற மாநிலங்களின் பாடத்திட்டங்கள், தேர்வு முறைகளை ஆய்வு செய்து தன் பரிந்தரையை வழங்கியது.
அவற்றின் அடிப்படையில் சமச்சீர் கல்வித் திட்டம் தயாரானது. அதை நடைமுறைப் படுத்த அவசர சட்டம் போடப்பட்டது. பின்னர் சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
சமச்சீர் கல்வி சட்டத்தை தள்ளுபடி செய்யக் கோரி சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசு இயற்றிய இச்சட்டம் செல்லும் என உறுதி செய்யப்பட்டது. முதல் கட்டமாக 2010 & 11 கல்வியாண்டில் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாட புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, முதலாம் வகுப்புக்கு 61 லட்சம் புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்கு 84 லட்சம் புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.
எஞ்சிய 2,3,4,5,7,8,9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஸீ200 கோடி செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவித்து, ஸீ200 கோடிக்கு மேல் செல்வழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் ரூ.200 கோடி செலவழித்து புதிய புத்தகங்களை அவசரமாக தயாரித்து, அச்சடித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறை தானா என்பதை அரசு எண்ணிப் பார்க்கவேண்டும்.
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்திய கல்வி திட்டம், ஓ.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் போட்டியிட முடியாமல் இருந்ததை போக்குவதற்காகத்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது.
இது குறித்து அதிமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ‘சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ஸீ200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் முழுமையாக கை விடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள்&கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
மற்றொரு தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ‘சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வி துறையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
அதிமுக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், ‘‘சமச்சீர் கல்வி சட்டத்தின் நோக்கம் தெளிவானது. அதை எளிதாக புறக்கணித்து விட முடியாது. ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை & இந்த நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை & அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு அரசு விரிவாக பதில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் இந்த அரசின் அறிவிப்புக்கு காரணம் என்றால் அதை புரிந்து கொள்ள முடியும். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’’ என்று தொடங்கும் பாடலில் ‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்’’ என்ற வரியை நீக்கிவிட்டுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு சார்பில் அங்கீகரித்தேன். அந்தப் பாடல் தற்போது சமச்சீர் கல்வி புத்தகங்களில் இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே எதிர்த்திட முனையுமா?
உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப் பாடல் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதுதான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப் பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
===========================================================================
ஈ-கோலி பாக்டீரியா
பறவை காய்ச்சல்,கோழிக் காய்ச்சல்[சிக்கன் குனியா] இப்போது ஈ-கோலி இரண்டும் சேர்ந்த பாக்டீரியாவா,,,,
உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஈ – கோலி பாக்டீரியா தற்போது ஐரோப்பாவை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். ஜெர்மனியில் ஆறு பேர்கள் இதுவரை இக்கிருமி பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். டென்மார்க்கில் மூன்றுபேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈ -கோலி பாக்டீரியா மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மையுடையது என்பதால் விரைவாக இந்நோய் பரவி விடும் அபாயம் உள்ளது. இந்நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் வயிற்று நோய் ஏற்படும். சிறு நீரகங்கள் பாதிக்கப்படும். மலத்துடன் இரத்தப்போக்கும் காணப்படும். நீண்ட கால உடல் நலமின்மையை[காய்ச்சலை]ஏற்படுத்தும். அதைவிட முக்கியம். மரணத்தையும் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. சிறு நீரகங்களையும் செயற்படாமல் முடக்கி வைக்கும் அபாயம் நிறைந்த பாக்டீரியாவாக இது.
இதுவரை இறைச்சியில்காணப்பட்ட இக்கிருமி தற்போது காய்கறிகளிலும் உருவாகி பரவ ஆரம்பித்துள்ளது. பறவைக் காய்ச்சலுக்குப் பிறகு இந்த ஈ-கோலி கிருமிகள் உலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இந்தக் கிருமி வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதாரநிறுவனம் எச்சரித்துள்ளது. ஜெர்மனியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பெண்கள்தான். ஜெர்மனி, டென்மார்க், ஹாலந்து, சுவீடன், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளில் இது இப்போது வேகமாக பரவி வருகிறது.இந்தியாவுக்கு எப்போது இறக்குமதியாகிறது என தெரியவில்லை. =
========================================================================
==================================================================================================
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)