எரியும் செய்தி




ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
            அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, 1,000 ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களின் நலன் கருதி, மானியத்துக்கு பதிலாக, அவர்களுக்கு மாதம் தோறும் எரிபொருள் பயன்பாட்டுக்காக உதவித் தொகை அளிக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.
 பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, ஏற்கனவே அரசு வசம் இருந்தது. இந்த நடைமுறை, கடந்தாண்டு நீக்கப்பட்டது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோலின் விலை, தற்போது அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு, அரசு சார்பில் தொடர்ந்து மானியம் அளிக்கப்படுவதால், அவற்றின் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மானிய விலையில் இவற்றை விற்பனை செய்வதால், தங்களுக்கு 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை, சரிக்கட்ட வேண்டுமானால், சமையல் காஸ் மற்றும் கெரசினுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான புதிய திட்டமும் தயாராகியுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, முற்றிலும் ரத்து செய்யப்படும்.

இந்த மானிய ரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு, எரிபொருள் வாங்குவதற்காக, குறிப்பிட்ட அளவு, உதவித் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவித் தொகையாக எவ்வளவு அளிப்பது என்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மானியம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, தற்போதுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, 1,000 ரூபாயை தொட்டு விடும். அதேபோல், கெரசின் விலை, தற்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்த புதிய திட்டம், எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்ததும், அமல் படுத்தப்படும். இந்த குழுவின் கூட்டம், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும்போது, இந்த புதிய திட்டம் குறித்து, விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கெரசினின் விலை, மாதம் தோறும் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .பொதுமக்களுக்கான அரசாக காங்கிரஸ் அரசு தெரியவில்லை.ஏதோ வணிக நிறுவனம் நடத்தும் எண்னம்தான் சோனியா-மன்மோகன் அரசுக்கு இருக்கிறது.
அம்பானி,மற்றும் எண்ணை நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டு அதற்கு இருப்பதும்.வாக்களித்த மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாமல் குடும்பம் நடத்த வேண்டுமே எனவும் மக்கள் நலன் பற்றிய கவலை கொஞ்சமும் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
                 மாதாமாதம் பெட்ரொல் விலை உயர்வால் வாகன ஒட்டுனர்கள் மட்டுமா பாதிக்கப் படுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் மறைமுகமாக விலைவாசியும் கடுமையாக ஏறிவருகிறது .அதைப்பற்றியும் பொருளாதரப் புலி கண்டுகொள்ள வில்லையே.
                 இப்போது நமது கோரிக்கை பெட்ரொல் நிறுவனங்களின் வரவு-செலவு பற்றிய வெள்ளை அறிக்கை மத்திய அரசு நிறுவனங்கள் கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
                 அப்போதுதான் எண்ணை நிறுவனங்களின் நடவடிக்கைகள்,லாபம் மற்றும் மக்களிடம் அது கூறிவரும் நட்டக் கணக்கு பற்றி தெரியவரும் .இது போன்ற கொள்ளைக்கு யார் காரணம்.இவ் விலையேற்றம் தவிர்க்க முடியாதா? என்பது போன்றவை எல்லாரும் புரிந்து கொள்ள இயலும். பெட்ரொல் நிறுவனக் கொள்ளைகளுக்கும் முடிவு கட்ட இயலும்.
              மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோல் விலை இந்தியாவில் மட்டும் மாதா-மாதம் உயர்வது ஏன் என்றும் தெரிந்து கொள்ள இயலும்.
           சென்ற மாதம் கச்சா எண்ணை உலக அளவில் குறைந்த போது இந்தியாவில் விலையை ஏன் குறைக்கவில்லை எனவும் புரியும்.
==========================================================================
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை பலியாக காரணமான லாரியை, மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் தனிப்படை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். லாரியை, பெரம்பலூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  அமைச்சர் காருடன் மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரியை பிடிக்க, 18 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
, தாங்கள் தேடும் வகையான லாரிகளை தேர்வு செய்ததில், 49 லாரிகள் தேறின. அந்த, 49 லாரிகளில், சில அடையாளங்களை வைத்து துறையூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த ஆறு லாரிகளை போலீசார் சந்தேகப்பட்டியலில் கொண்டு வந்தனர்.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த லாரிகளில் ஒன்று, ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தது என்று தெரிந்தது. அதைப்பிடிக்க, ஐ.ஜி.,யால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசாரும் விஜயவாடா சென்று தேடுதல் நடத்தினர்.
நேற்று காலை, குறிப்பிட்ட அந்த லாரியை தனிப்படை போலீசாரும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். சந்தேக பட்டியலில் இருந்த அந்த லாரி தான் (எண்: ஏ.பி-16-டி.பி.9744) அமைச்சர் மரியம்பிச்சை காருடன் மோதியது என்பதையும் விசாரித்து, தனிப்படை போலீசார் உறுதிப்படுத்தினர்.
விஜயவாடாவைச் சேர்ந்த அந்த டாரஸ் லாரியின் உரிமையாளர் காசிம் ரகமதுல்லா என்பதும் தெரிந்தது. அவரே லாரியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் இருந்து வருகிறார்.தூத்துக்குடியிலிருந்து, விஜயவாடாவுக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்றபோது தான் பாடாலூர் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும், ஏதும் பிரச்னை ஏற்படுமோ என நினைத்த லாரி உரிமையாளர் காசிம் ரகமதுல்லா, அதை, சாமர்த்தியமாக, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு ஓட்டிச் சென்றுவிட்டார். அங்கு ஜிப்சத்தை இறக்கிவிட்டு, லாரியை மறைத்து வைக்க, கோல்கட்டா செல்லும் வழியில், மேற்கு வங்க மாநிலம் காடக்பூரில், மேற்கு வங்க போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார், டாரஸ் லாரியை கண்டுபிடித்தனர்.
பிடிபட்ட லாரியை, பெரம்பலூர் கொண்டு வரவும், லாரியின் உரிமையாளரும், டிரைவருமான காசிம் ரகமதுல்லாவையும் கைது செய்து, பெரம்பலூர் கொண்டு வர, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஆந்திரா விரைந்துள்ளனர்.
அமைச்சர் மரியம்பிச்சையின் சாவுக்கு காரணமான லாரி பிடிபடாமல் இருந்ததால், விபத்தில் சதி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. தற்போது லாரி பிடிபட்டுள்ளதால், அந்த சந்தேகத்துக்கான விடை விரைவில் தெரியவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
==========================================================================
 காட்டிக்கொடுத்தது
யார்?
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து  அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லா பராதர் தலிபான் அமைப்பைத் தொடங்கியவரில் ஒருவர்.முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் இடம் பெற்றிருந்ததோடு முல்லா உமருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார் என்று பாதுகாப்பு நிபுணரான நெய்ல் டோய்ல் தெரிவித்துள்ளார். .தற்போது ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் குறைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதும் ஒஸாமா கொல்லப்பட்டு விட்டதால் இங்கிலாந்து படைகளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என இங்கிலாந்து அதிபர் கேமரூன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்களை மிர்ரர் என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது
===============================================================================================================

 

  கணிணி:பராமரிப்பு ஆலோசனைகள்     

உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஃப்யர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.
டீஃப்ராக் செய்யவும்: டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கணினியின் ஹார்ட் டிஸ்கை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணினியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம், அல்லது இன்ஸ்டால் செய்தவற்றை ரத்து செய்கிறோம், கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.
டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை டவுன்லோடு செய்வோம். இதிலெல்லாம் கணினியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.
கணினியை சுத்தம் செய்யவும்: கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?