30லட்சமும்-3000 கோடியும்





அன்னா கசாரேவைக் கொல்ல 30லட்சம்
  ""என்னை கொல்வதற்கு 30 லட்சம் ரூபாய் பேசி, வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர், என்னை கொல்ல மறுத்துவிட்டார்,' ' என, ஊழலை எதிர்த்து[?] போராடி வரும் அன்னா ஹசாரே   கூறியுள்ளார்.

பெங்களூரு பசவனகுடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அன்னா ஹசாரே பேசியதாவது:” ஏப்ரல் 5ம் தேதி, டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பெங்களூரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். என் உண்ணாவிரதத்திற்கு பெரும் ஆதரவாகச் செயல்பட்டனர். அவர்களின் எழுச்சி பாராட்டத்தக்கதாக உள்ளது. இளைஞர்கள் நினைத்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம். என்னை கொல்வதற்கு, 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர் என்னை கொல்ல மறுத்துவிட்டார்”. இவ்வாறு அன்னா ஹசாரேபேசியுள்ளார்.
       நம்ம ஊரு அரசியல்வாதிகள் இவரின் பேச்சு முன் தோற்றுப் போவார்கள்.
இவரை 30 லட்சம் கொடுத்து  கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபமோ?
 இப்பேச்சினால் அன்னா ஹசாரேக்கு மட்டும் லாபம்.அவருக்கு ஒரு  பெயர் அதாவது இமேஜ் கிடைக்குமே.அத்துடன் அவர் விடவில்லை.மேலும்
 அவர் பேசுகையில்;” நாட்டில் ஊழல் செய்வோரை விசாரிக்கும் லோக்பால் மசோதா வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் இல்லையேல் நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன், எனது போராட்டம் காரணமாக ஊழல் புரிந்த 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் என்னை பழிவாங்க துடிக்கின்றனர். ஆனால் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் நான் கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.                        பிரதமர் நல்லவர் தான் அவர் மோசமானவர் அல்ல. அவரை இயக்கி வரும் ரிமோட்கன்ட்ரோல் ( சோனியா ) சரியில்லையே, அது தான் பிரச்னையை உருவாக்குகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.
 சும்மா கொஞ்ச காலம் திடீரென லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக உதித்த மாவீரர் அன்னா மீது சந்தேகமாகவே இருக்கிறது.அவரின் நோக்கம் நல்லதுதான்.ஆனால் ஆள் யாராலோ முகமூடியாக முன்நிறுத்தப்படுவது தெரிகிறது.
   தனது அறக்கட்டளை கணக்கில் லட்சம்,லட்சமாக செலவிட்டு பிறந்த நாளைக் கொண்டாடியவர் இவர்.30 லட்சம் தனது உண்ணாவிரதத்திற்காக செலவிட்டுள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார்.விருந்துக்கு சரி உண்ணாமல் இருக்க இவ்வளவு செலவா? இந்தபணம் யார் தந்தது.?
 உண்ணாவிரத மேடையில் ஆட்களை ஏற்றுவதிலும் சில முறைகள் கடை பிடிக்கப்பட்டனவே.இடதுசாரி நோக்குள்ளவர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. பா.ஜ.க, பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிரன் பேடி கூட ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்.அவர் அதன் பின் இவருடன் பேசுவதையே தவிர்த்து விட்டார். மேடையிலேயே நரேந்திர மோடி புகழ் பாடி தன்னை கசாரே வெளிப்படுத்திக்கொண்டார்.
                    அறக்கட்டளை கணக்கில் வரி செலுத்திய விபரம் கேட்ட அதிகாரி யை வழக்கு தொடரப் போவதாக மிரட்டியுள்ளார். இதைவிட மிகக் கொடுரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய -நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவரையும் ,அவர் மகனையும் லஞ்ச ஒழிப்புக் குழுவில் சேர்த்துக் கொண்டது.
 அண்ணே  ,,,அன்னா கசாரே உங்கள் மேல் உள்ள அழுக்குகளை கழுவிவிட்டு வந்து மற்றவர் அழுக்கைப் போக்க வழி கூறினால் நல்லா இருக்கும்.
 நீங்கள் கூறிய ரிமோட் ,உண்மையிலே சரியான உவமானம்தான்.அதற்கு தனியாக ஒரு பாராட்டு .
 ஆனால் 30லட்சம்-,கொலை-,கொலை செய்ய மறுப்பு-, நம்பும் படி இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணடிப்பு தேவையா?
கருணாநிதி  ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் அரசினர் தோட்டம் பகுதியில் ரூ1000 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டு அங்கு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள்,சட்டமன்ற செயலகம் போன்றவை மாற்றம் செய்யப்பட்டு செயல் படத்துவங்கிவிட்டன,
ஈ.வே.ரா., சிலைக்கும், அண்ணாதுரை சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் புதிய கட்டடம் வானுயர எழுப்பப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த ஆண்டு நடந்தது. பிரதமர் மன்மோகன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா விழாவில் பங்கேற்றனர். ஒன்பது லட்சத்து 30 ஆயிரத்து 297 சதுர அடி பரப்பில், நான்கு வட்டங்களாக புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் பசுமை பாதுகாப்பு கட்டட சான்று பெற்று அதன்படி திட்டம் தீட்டப்பட்டது. கீழ்ப்பகுதியில் மூன்று ஹால்கள் உள்ளன. இதில் ஒன்று சட்டசபையாகவும், மற்றொன்று சட்டமேலவைக்கும், இன்னொன்று சட்டசபை நூலகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சபாநாயகர் மற்றும் சட்டசபை துறைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆறு மாடிகளில், ஆறாவது மாடியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் துறை செயலர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. கடைசி வட்டம் பொதுமக்கள் வளாகமாக மீன்தொட்டி அமைத்து திறந்த வெளி மண்டபம் போல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டட பணிகள் முடிவடையாத நிலையில், கடந்த ஆட்சியில் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரை கூட்டம் போன்றவை நிகழ்த்தப்பட்டன. இதற்காக அவ்வப்போது ஜார்ஜ் கோட்டையிலிருந்து சட்டசபை பொருட்கள் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டு மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டன. முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் முதற்கட்டமாக புதுக்கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டன.
 ஜெயலலிதாவே முன்பு முதல்வராக இருந்தபோது கோட்டையில் உள்ள தலைமைச்செயலகம் பழுதாகிவிட்டது எனக் கூறி,ராணி மேரிக் கல்லூரியை இடித்து கட்டிடம் கட்ட முயன்றார்.அப்போது மக்களின்,மாணவர்களின் எதிர்ப்பால் முடங்கிப்போனது அத்திட்டம்.
 அதுமட்டுமல்ல, சமச்சீர் கல்வி கைவிடப்பட்டதால் அச்சிட்ட புத்தகங்கள் வகைக்கு ரூ500 கோடி,மேலவை கொண்டுவர திட்டம்,ஆரம்பச்செலவுகள்.,கலைஞர் காப்பீடு திட்டம் பெயர் மாற்றம்.பெயரை அரசு காப்பீடு என மாற்றம் செய்யலாம்.மேலும் ஒரு தலைவர் பெயர் தேவையா?அதுவும் திட்டத்திற்கு முன்னே போய் செர்ந்து விட்டவர்.ஆனால் எம்.ஜி.ஆர்.சத்துணவுத்திட்டம் பெயர் கருணாநிதி காலத்தில் மாற்றப் படவில்லை என்பதையும் ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.
                 உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி விளையாட்டில் வீணாவது மக்கள் வரிப்பணம்.அதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?