காங்கிரசாரின் கனவுகள்’’’’’’’’’’’
"திமுகவினரின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசியுள்ளார். சட்டசபை தேர்தலில், எங்கள் கருத்துக்கள் டில்லியில் எடுபடவில்லை. இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று, வெற்றி பெற்று இருப்போம். கட்சியில் தற்போது ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வரும் காலங்களில் 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட வேண்டும்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ஆளும் திமுகவினரின் ஊழல் தான் காரணம். முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அமைச்சர் முதல் வார்டுகளில் உள்ளவர்களின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக்கப்பட்டது.இனி வரும் தேர்தலில்களில் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும் என்றார்.
காங்கிரசில் ஒன்பது லட்சம் உறுப்பினர்கள்தான் உள்ளனரா? யுவராஜா இளைஞர் காங்கிரசை சொல்லுகிறார் என்று எண்ணுகிறோம்.
இவ்வளவு பேரும் ஒழுங்காக வேளை பார்த்திருந்தாலும்-வாக்களித்திருந்தாலும் அதிகமாக சில தொகுதிகளை வென்றிருக்கலாமே?
வாய்ப்பே இல்லாமல் 63 தொகுதிகளை ,அதுவும் தி.மு.க,வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டத் தொகுதிகளை வாங்கி தானும் ஜெயிக்காமல்,தி.மு.க.வையும் வெல்ல விடாமல் கோஷ்டி தகராறிலேயே
எதிர் வேட்பாளர் களை வெல்ல வைத்து விட்டு இது என்ன அரைவேக்கடு பேச்சு.கொஞ்சமாவது நடப்பது என்ன என்று பாருங்கள்.”.டான் குவிக்சோட்’ வீரம் ஏன்?
அலைவரிசையாய் ஊழல் குற்றசாட்டில் மூழ்கிக் கொண்டிருப்பது காங்கிரசு மத்திய அரசு தான்.அந்த அலைவரிசையில் 2ஜி ஒரு அலைதான்.காமன்வெல்த்.ஆதர்ஷ்,3ஜி, என்று பல அலைகள் இருக்கிறது.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது 2ஜ்இ யில் மட்டும்தான்.
ஈழப்போரில் தமிழர்கள் கூட்டம் ,கூட்டமாகக் கொலை செய்து குவிக்கப்பட்டதும் அதற்கு சோனியாவின் இந்திய அரசு ஒத்துழைத்ததும் தான் தமிழக மக்கள் வாக்குகள் மாற முக்கிய காரணக்களில் ஒன்றாக இருந்துள்ளது.இது ’ரா’போன்ற மத்திய உளவுத்துறைகளின் அறிக்கைகளில் வெளியாகியுள்ளது.
சோனியா-பக்சே படுகொலைகளைத் தட்டிக் கேட்காமல், கண்ணீர் கவிதை எழுதியதும்.கடற்கரையில் வந்து உண்ணாவிரதம் என படுத்து சென்றதும் தமிழக மக்களை கருணாநிதி யின் மீது கோவம் கொள்ள வைத்தது.அதன் வெளிப்பாடே தேர்தலிலும் வெடித்தது.மின் தடையும் ஒரு காரணம்.
முக்கிய காரணம் காங்கிரசுடனான கூட்டணிதான்.
இடையில் கூட்டணி முறிவு நாடகத்தை தி.மு.க.உண்மையிலே தனது முடிவாக்கியிருந்தால் ,தி.மு.க.இந்த அளவு[ சோகமான] இடங்களை விட அதிகமான இடங்களைப் பெற்றிருக்கும்.
2ஜி யும் கனிமொழியும் தி.மு.க,த்தலைமையைக் கட்டிப்போட்டு விட்டது.
அதுதான் காங்கிரசுக்கு 5இடங்களையாவது பெற்றுத்தந்துள்ளது.
முதலில் காங்கிரசுக் காரர்கள் கனவில் இருந்து வெளியே வாருங்கள்.உங்களால்தான் தி.மு.க.விற்கு தோல்வியே தவிர அவர்களால் காங்கிரசுக்கு தோல்வி அல்ல.
யுவராஜா அவர்களே தாங்கள் கூறியபடி அடுத்த முறை தனியே நின்று உங்கள் பலத்தை சோதித்துக் கொள்வது தான் வருங்கால அரசியலுக்கு நல்லது.
தமிழகத்திற்கும் நல்லது.உங்களை சேர்த்துக் கொள்ள ஆசிப்படும் தி.மு.க.-அ.தி.மு.க,விற்கு உங்கள் உண்மையான பலமும் தெரியும்.