ஓன்றிய அரசின் ஏமாற்று
அல்லது மோடி மஸ்தான் வேலை. கடந்த புதன் கிழமை அன்று மோடியின் தலைமையில் ஒன்றிய அரசு முதலமைச்சர்களோடு ஒரு வீடியோ கான்பரன்ஸை நடத்தியது. அந்தக் கூட்டம் கோவிட் கூட்டம் பற்றி பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் மோடி சம்பந்தமே இல்லாமல் பெட்ரோல், டீசல் விலைக்கான வரியை பாஜக ஆளும் மாநிலங்கள் குறைத்திருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த சில முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், இது குறித்த வினாவை காங்கிரசுக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் "இதனை ஒருவரியில் சொல்ல வேண்டுமெனில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற கருத்தை பிரதமர் சொல்லியிருக்கிறார்" என்றார். இது போன்ற பல மாநில எதிர்க்கட்சி முதல்வர்களும் கடுமையாக கண்டனங்களை கூறியிருக்கின்றனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங்