இதுவும் கடந்து போகும்

 முதல் பல் பிடுங்கப்பட்டது

பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

துணை வேந்தர்களை மாநில ஆளுனர் மட்டுமே நியமனம் செய்ய அதிகாரம் இருக்கும் நிலையில், அவரது அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.

-----------------------------------------------------------------------------

இதுவும் கடந்து போகும் 

கடந்த புதன்கிழமையன்று மத்திய மின்தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு திடீரென்று வரவில்லை. 

இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை 15 நிமிடத்திற்குள் சரி செய்ததாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இரவு 11.27 க்கு டிவிட்டரில் தெரிவித்தார். ஆனால் இந்தப் பிரச்சினை காரணமாக கடலூர், கோயம்புத்தூர், கரூர், விருதுநகர் மற்றும் திண்டுக்கல்லில் இரண்டு முதல் மூன்று மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது.



தமிழகத்தின் தினசரி மின்தேவை என்பது வருட சராசரியாக 15,500 மெகாவாட்டாக இருக்கிறது. இது கோடை காலத்தில் 18,000 மெகாவாட்டாகவும், மற்ற காலத்தில் 14,000த்திற்கும் குறைவான மெகாவாட்டாகவும் இருக்கிறது. இதில் அன்றாடம் மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 5,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. 

இதில் திடீரென்று 750 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை பரமாரிப்பிற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தால் அதை முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.

தமிழக அரசின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( Tangedco ) வட சென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல் மின்சார நிலையங்களில் 4,320 மெகாவாட் மின்சாரத்தை நிலக்கரி மூலம் உற்பத்தி செய்கிறது.

இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய தினசரி 72,000 டன்கள் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒன்றிய அரசிடமிருந்து 50,000 டன்கள் மட்டுமே நிலக்கரி வருகிறது. 

கூடவே கோடை காலம் ஆரம்பத்திருப்பதால் தமிழ்நாட்டின் மின்தேவையும் வரும் நாட்களில் அதிகரிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பொது முடக்கம் காரணமாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தற்போது பொருளாதாரம் சீராகி அனைத்து துறைகளும் இயங்குவதால் மின்தேவை அதிகரித்து வருகிறது.

இந்தப் பிரச்சினை தமிழகத்திற்கு மட்டுமல்ல. டெல்லி, உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, அரியாணா, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தை விட அதிக மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஒட்டு மொத்த மின்தேவையில் 53% அனல் மின்நிலையங்களே பங்களிப்பு செய்யும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. 

இரு மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் 40 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு வாரம் இரு நாட்கள் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

120 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்திலேயே தலைநகர் டெல்லியில் 42.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் இதைவிட வெயில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் மின்தேவையும் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

கடந்த செப்டம்பரில் பெய்த மழையால் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. கூடவே கோடை கால மின் தேவை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதால் விலை உயர்கிறது, 

கூடுதல் செலவாகிறது. பருவ மழை காலத்தில் நிலக்கரியை சேமிக்கத் தவறியிருக்கிறது ஒன்றிய அரசு. மேலும் உற்பத்தியாகும் நிலக்கரியை ரயில்கள் மூலம் அனல் மின்நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டிய அலட்சியத்தின் காரணமாகவும் தட்டுப்பாடு அதிகரிக்கிறது.


சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இருப்பினும் மொத்த நிலக்கரி தேவையில் 30% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

1973 இல் இந்திரா காந்தி காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தேசிய உடமையாக்கப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்களும் ஏலத்தின் மூலம் பங்கெடுக்கலாம் என்று 2018இல் மோடி அரசு தனியார் மயப்படுத்தியது.

உலகில் அதிக நிலக்கரி இருப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் 352 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு இருக்கிறது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இந்தியாவின் மின்சாரத் தேவை வருடந்தோறும் அதிக நுகர்வைக் கொண்டிருக்கும். 

இக்காலத்தில் இந்தியாவின் அன்றாடத் தேவை என்பது கிட்டத்தட்ட 4,00,000 மெகா வாட்ஸாக இருக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை தோராயமாக ரூ.4.4 ஆக இருக்கிறது. பல மாநிலங்களில் நிலக்கரி இருப்பு என்பது 10 நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. 

ஏப்ரல் 13 நிலவரப்படி இந்தியாவின் 173 அனல் மின்நிலையங்களில் 23.17 டன்கள் நிலக்கரியே இருப்பில் உள்ளது. ஆனால் இந்த நிலையங்களின் அன்றாட உற்பத்திக்கு தோராயமாக 3 டன்கள் நிலக்கரி தேவைப்படும். இதன்படி பார்த்தால் ஒன்பது நாட்களுக்கும் குறைவான இருப்பே உள்ளது

கடந்த செப்டம்பரில் பெய்த மழையால் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. கூடவே கோடை கால மின் தேவை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதால் விலை உயர்கிறது, 

கூடுதல் செலவாகிறது. பருவ மழை காலத்தில் நிலக்கரியை சேமிக்கத் தவறியிருக்கிறது ஒன்றிய அரசு. மேலும் உற்பத்தியாகும் நிலக்கரியை ரயில்கள் மூலம் அனல் மின்நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டிய அலட்சியத்தின் காரணமாகவும் தட்டுப்பாடு அதிகரிக்கிறது.



சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இருப்பினும் மொத்த நிலக்கரி தேவையில் 30% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

 1973 இல் இந்திரா காந்தி காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தேசிய உடமையாக்கப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்களும் ஏலத்தின் மூலம் பங்கெடுக்கலாம் என்று 2018இல் மோடி அரசு தனியார் மயப்படுத்தியது.

உலகில் அதிக நிலக்கரி இருப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் 352 பில்லியன் டன்கள் நிலக்கரி இருப்பு இருக்கிறது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இந்தியாவின் மின்சாரத் தேவை வருடந்தோறும் அதிக நுகர்வைக் கொண்டிருக்கும். 

இக்காலத்தில் இந்தியாவின் அன்றாடத் தேவை என்பது கிட்டத்தட்ட 4,00,000 மெகா வாட்ஸாக இருக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை தோராயமாக ரூ.4.4 ஆக இருக்கிறது. பல மாநிலங்களில்நி லக்கரி இருப்பு என்பது 10 நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. 

ஏப்ரல் 13 நிலவரப்படி இந்தியாவின் 173 அனல் மின்நிலையங்களில் 23.17 டன்கள் நிலக்கரியே இருப்பில் உள்ளது. ஆனால் இந்த நிலையங்களின் அன்றாட உற்பத்திக்கு தோராயமாக 3 டன்கள் நிலக்கரி தேவைப்படும். இதன்படி பார்த்தால் ஒன்பது நாட்களுக்கும் குறைவான இருப்பே உள்ளது.


மின்வெட்டு

இந்த பிரச்சினை ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டாலும் அரசு அதைத் தீர்ப்பதற்கு முன் யோசனையுடன் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில்லை. உத்தரப்பிரதசத்தில் அன்றாடம் 21,000 மெகாவாட்ஸ் மின்சாரம் தேவைப்படும் நிலையில் மின்சாரத்தின் அளிப்பு 19,000 மெகா வாட்ஸாக மட்டுமே இருக்கிறது. நிலக்கரி போக்குவரத்திற்காக 453 ரயில்கள் தேவைப்பட்டாலும் தற்போது தினசரி 379 சரக்கு ரயில்களே ஓடுகின்றன.


மின் தட்டுப்பாடு காரணமாக குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய இருக்கின்றன. அதே போன்று மற்ற மாநிலங்களும் இறக்குமதி செய்யப் போகின்றன. ஒன்றிய அரசின் மின்சார உற்பத்திக் கழகமும் இறக்குமதி செய்ய இருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக சர்வதேசச்சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்திருக்கிறது. டன் ஒன்றுக்கு 60 முதல் 70 டாலர்களாக இருந்த விலை இன்று 140 டாலர்களாக அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே கடன் சுமையில் சிக்கியிருக்கும் மாநிலங்களுக்கு இது கூடுதல் சுமையாகும். வேறு வழியின்றி மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் அந்தச்சுமை மக்களுக்கு போய்ச் சேரலாம்.

அதானி நிறுவனத்திற்கு இந்தோனேஷியா, ஆஸதிரேலியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்கள் இருக்கின்றன. மேலும் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் தனியார் நிறுவனங்களும் கணிசமாக இருக்கின்றன. அதானி நிறுவம் 15,000 மெகா வாட்ஸ், டாடா பவர் 12,742 மெகா வாட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி 4,559 மெகாவாட்ஸ், டொரண்ட் பவர் 3,879 மெகா வாட்ஸ் மின்சாரத்தை அன்றாடம் உற்பத்தி செய்கின்றன.

இந்தியாவில் தோராயமாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் தலா 1,00,000 மெகாவாட்ஸ், தனியார் நிறுவனங்கள் 2,00,000 மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் அனல் மின்சாரம் பாதி அளவிற்கும், மீதி காற்றாலை, சூரிய சக்தி, அணுமின்நிலையம், தாவர எரிப்பு போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்கின்றன.


1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தேசிய உடமையாக்கப்பட்டன. இதை 2015 ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலை மின் பயன்பாட்டு தேவைக்காக நிலக்கரியை தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றும், 2018 ஆம் ஆண்டு வணிக நோக்கில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் ஏலம் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் இந்திய மின் உற்பத்தியில் பாதியைக் கட்டுப்படுத்துகின்றன.

அவசர தேவைகள் அதிகரிக்கும் போது தனியார் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 12 முதல் ரூ. 20 வரை விற்கின்றன. ஒன்றிய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதை முறைப்படுத்தவில்லை. இதனால் மாநிலங்கள் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதானி போன்ற நிறுவனங்கள் சுரங்கங்கள், அனல் மின்சார உற்பத்தி மூலம் தனியார் சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன. ஒன்றிய அரசு, மாநில அரசுகள் உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட் விலை ரூ.4 க்குள்தான் வருகின்றன.

கோவிட் இரண்டாவது அலை வந்த போது மேற்கு வங்கத் தேர்தலில் மூழ்கியிருந்த ஒன்றிய அரசு கொரானா தாக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக பரவலான விமர்சனங்கள் எழுந்தன. 

ஆக்சிஜன் தேவைக்காக சமூகவலைத்தளங்களில் மக்கள் கோரிக்கை வைப்பதும், மருத்துவமனையில் படுக்கை இன்றி தவித்த காட்சிகளும் வெளியாகின. அது போன்று மின்சார பற்றாக்குறையை போக்கிட ஒன்றிய அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் திமுக வேண்டுமென்றே மின் பற்றாக்குறையை உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 ஆனால் கோடை கால மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உ.பி உள்ளிட்டு பல மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை. காற்றாலை உற்பத்தி நின்று போன நிலையில் அனல் மின்சாரத்தை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் நிலக்கரி பற்றாக்குறை எல்லா மாநிலங்களையும் அச்சுறுத்துகிறது.

எப்படியும் இந்த கோடை காலத்தை வெயிலோடு மட்டுமல்ல மின் பற்றாக்குறையோடும் கடந்து போக வேண்டிய நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்.

மோடி ஆட்சியின் தனியார்மயமாக்கல்,பொதுநிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வெறித்தனமான மக்கள் ,தேச விரோத செயல்களே இந்நிலைக்கு முக்கிய காரணம்.

இன்னும் நாம் எவ்வளவோ துன்பங்களை பா.ஜ.க ஆட்சியில் சந்திக்கவும்,கடந்து போகவும் வேண்டியதுள்ளது.

இன்று கோவிட் தடுப்பூசிகள் 259 ரூபாய் என விற்கும் நிலை. இதையே கோவிட் பரவல்காலத்தில் 1250,900,700 என்று. தனியார்,ஒன்றிய அரசு,மாநில அரசு என்ற அளவில் விற்கப் பட்டது.கொரொனா குறைவதை மக்களால் வரவேற்கப் பட்டாலும் ஒன்றிய அரசு முதலாளிகளுக்கான கொள்ளை வருமானமும் அதனால் தன் கட்சிக்கு கோடிகளில் கிடைக்க வேண்டிய நன் கொடையும்  போச்சே என்ற கவலைதான்.

அந்த கவலைக்கு மாற்றுதான் இந்த நிலக்கரி விவகாரம் வந்துள்ளது.

இதுவும் கடந்து போகும் என எண்ணுவோம்.

மின்வெட்டும்,இந்த முதலாளிகள் ஆட்சியும்.

-------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?