புதன், 30 செப்டம்பர், 2015

அப்பாக்களுக்கு டாஸ்மாக்-அம்மாக்களுக்கு அலைபேசி?மகளிர் சுய உதவிக் குழுவினர்களுகெல்லாம் அம்மா அலை பேசியாம் .
தமிழ் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது.
இரண்டு நாள் முதலீட்டாளர் மாநாட்டில் 2 .5 லட்சம் கோடி முதலீடு.
தமிழ் நாட்டில் மின் மிகை மாநிலமாகி மூன்று ஆண்டுகளாகி விட்டது.
 பிள்ளைகளுக்கு மடிக்கணினி கொடுத்தாகி விட்டது.
அம்மாக்களுக்கு  பாலூட்ட தனி இடம்.
இப்போது அலை  பேசி  ஏற்கனவே அப்பாக்களுக்கு டாஸ்மாக் அரசு  உற்சாகப் பானம் கொடுத்தாகி விட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு சுழல் நிதியோ ,வங்கிக்கடனோ கொடுக்காத  அம்மா அரசு இப்போது அலைபேசி கொடுக்க காரணம்?

அப்போது இல்லாத பணம் 13000கோடிகளில் அலை பேசி கொடுக்க எங்கிருந்து வருகிறது?
சுய உதவிக் குழு பெண்கள் எல்லோரும் அலை பேசியில் தன்னிடம் குறைகளை உடனுக்குடன் சொல்லவா?
தமிழகத்தை வாட்டும் மின் வெட்டை நீக்க  இதுவரை 100 கூட செலவிடாத ஜெயலலிதா அரசு கோடிகளில் இலவசம் கொடுக்க பணம் உள்ளது.
அமைச்சர்களும்,அதிகாரிகளும் கால்கடுக்க போயஸ் தோட்டத்தில் தவம் இருந்த பின்னர் இன்டர்காம் மூலம் மட்டுமே பேசும் முதல்வரை அவர்கள் அப்படி எளிதாக தொடர்பு கொள்ள முடியுமா?
ஸ்டாலின் ஊர்,ஊராக போய் மகளிர் குழுவினர்களை சந்திப்பதை அதை வாக்குகளாக மாற்றி விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்தான் அம்மாவின் மனதில் இந்த அலைபேசி திட்டம் உதித்திருக்க வேண்டும்.
அல்லது திமுக தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில் இந்த அலைபேசி இலவசம் என்று இருப்பதாக காதில் விழுந்திருக்க வேண்டும்.
அரசுக்கு வருமானம் தருவதாலும்,அதன் வருமானம் மூலம்தான் இலவசங்கள் அல்லது விலை இல்லா பொருட்களை கொடுக்கிறோம்.அதானால் மதுக்கடைகளை மூடுவது இயலாத காரியம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.

இவர் இதில் உண்மையை கூறியுள்ளார்.அதானால் தமிழ் நாட்டில் மின்வெட்டே இல்லை என்று இவர் சட்டப்பேரவையில் கூறியது உண்மையாகி விடாது.
அந்த மதுக்கடை வருமானத்தில்  வரும் அம்மா அரசு இலவசமாக தரும்  அலைபேசியை   மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிக் கொண்டால் மதுக்  கடைகளை டாஸ்மாக்கை மூடு என்று சொல்லுவது,அதானால் தங்கள் குடும்பம் சீரழிகிறது என்று சொல்வதற்கே அவர்களுக்கு தகுதியோ,உரிமையோ இல்லாமல் போய் விடும்.
இலவசத்துக்கு  ஒடி போய் வரிசையில் நின்றால் அந்த இலவசம் வரும் வழியையும் நாம் ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.
மக்களின் மன நிலையை நன்கு தெரிந்து கொண்ட  வாக்குகளைப்பெற எதையும்செய்யத்துணிந்த அரசுதான்,கட்சிதான் ம்மா திமுக.
இப்பொது ஸ்டாலின் எவ்வாள்வுதான் ஊர்,ஊராக போய்,தெருத்தெருவாகப் போய் ஜெயலலிதா அரசின் அவலங்களை ,ஊழல்களை சொன்னாலும் தேர்தலில் பணத்தைக்கொடுத்தும்,தேர்தல் ஆணையம்,அலுவலர்கள்,காவல்துறையினர் உதவியுடன் வெற்றிப்பெற்று விடலாம் என்பதுதான் ஜெயலலிதாவின் கணக்கு.
அவருக்கு கூட்டணி கட்சிகள் எல்லாம் தேவை இல்லை.வானத்தில் பறந்து கீழே இறங்காமல் பரப்புரை செய்தாலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.
அந்த நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கு தந்தது சென்ற மக்களவை தேர்தல்தான்.
அதிமுக வைத்திருக்கும் கூட்டணி அந்த அளவு வலிமையானது.
ஆர்.கே.நகரில் மொத்தம்  3200 வாக்குகள் உள்ள தொகுதியில் 4100 வாக்குகளை பெற்று அமோகமான வெற்றியை ஜெயலலிதாவுக்கு அக்கூட்டணி பெற்று தந்தது.[இந்த சரித்திரம் படைத்த வாக்குப் பதிவுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை?]
அதிமுக+காவல்துறை+தேர்தல் ஆணையம் = வெற்றி.
இதுதான் இன்றைய வெற்றிக்கான சூத்திரம்.இது இருக்கும் வரை ஸ்டாலின்  என்ன கருணாநிதியே சக்கர நாற்காலியில் வளம் வந்தால் கூட வெற்றி சந்தேகம்தான்.
மதுக்கடை வருமானத்தில் வரும் அலைபேசியை வாங்கும் ஒவ்வொரு மகளிரும் மதுக்கடைகளை மூட வேண்டாம் ,யார் குடும்பம் குடித்து சீரழிந்தாலும் பரவாயில்லை எமக்கு தேவை விலையில்லா,இலவசங்கள் என்று உறுதி கூறுபவர்கள்தானே?
அம்மா திட்டம்,அம்மா குடிநீர்,அம்மா உப்பு,அம்மா உணவகம்,அம்மா அலைபேசி,அம்மா விருது என்று தனது புன்னகை ததும்பும்  படத்துடன் எல்லாவற்றிற்கும் அம்மா என்று தனது பெயர் வைக்கும் ஜெயலலிதா ஏன் தனது வருமான வழியான டாஸ்மாக்கிற்கு அம்மா பெயரை சூட்டவில்லை?
மகளிர் சுய உதவிக்குழுவினர் சிந்திப்பார்களா?
========================================================================================
இன்று,
செப்டம்பர்-30.
  • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
  • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
  • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
  • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)

========================================================================================

கலப்பட பெரிய நிறுவனங்கள்.

கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது’ என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய் என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை சோதனை செய்தனர். 
தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. 
ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. 
ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. 
ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.
சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. 
ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. 
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். 
ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. 
ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.
ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க 2.5 கிலோ கடலை தேவை. ஒரு கிலோ கடலை விலை ரூ.100 முதல் ரூ.110 வரை. 
எனவே, கலப்படமின்றி சுத்தமாக ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க குறைந்தபட்சம் ரூ.250 ஆகும். 
இதனால், செக்குகளில் ஆட்டப்படும் கடலை எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. 
மேலும், செக்கில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயில்தான் உடலுக்கு நன்மை தரும் புரதம், நல்ல கொழுப்புச் சத்துகள் ஆகியவை சிதையாமல் கிடைக்கும். பாக்கெட்களில் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று தரமற்ற எண்ணெயை மக்கள் வாங்கத் தொடங்கியதால், வருமானமின்றி செக்குகள் மூடப்பட்டுவிட்டன. 
நம் கண் முன்பாகவே கடலையைப் போட்டு எண்ணெய் எடுத்து தரும் செக்குகள் இப்போது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நடக்கிற இயந்திர சுத்திகரிப்பு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்தே, கலப்படமும் தொடங்கிவிட்டது.
பிரபல நிறுவனங்களும் மக்களை இப்படி ஏமாற்றினால்?
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய உணவுத்துறை ஆய்வு அரசு அலுவலர்கள் அப்படி என்னதான் முக்கிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்?