புதன், 29 பிப்ரவரி, 2012

பண பரிமாற்றம்.


2 ஜி வழக்கின் பெரும்பாலான பணபரிமாற்றம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மூலம் நடைபெற்றதாக பரபரப்பு குற்றம் சாட்டிய சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் சுப்பிரமணியசாமி கூறியதாவது 2 ஜி வழக்கு விசாரணையில் தி.மு.க வை சேர்ந்த அமைச்சர்  பழனி மாணிக்கம் தலையிடுகிறார். இவர் தலையீடு குறித்து சிபிஐ மத்திய விஜிலன்ஸ் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளது.2 ஜி சம்பந்தமாக தமிழ்நாடு குற்றவாளிகளின் சொத்து பற்றி கணக்கெடுப்பு பற்றி திருச்சியை சேர்ந்த ஆல்பர்ட் மனோகரன் என்பவரை நியமித்துள்ளனர்.ஆனால் இதுபற்றி எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை இதுபற்றி விசாரணைக்கு இடையூராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தை நீக்க வேண்டும் அல்லது வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.மேலும் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் உதவி வருகின்றனர் என்றும் இதுபற்றி தான் கூறிய கருத்தையே பிரதமர் மன்மோகன் சிங்கும் தற்போது கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படாததால் கூடுதல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய முதன்மை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ரூ2100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார். மேலும் 2 ஜி வழக்கில்  சிதம்பரத்தை தாம் விடப்போவதில்லை என்றும் மேலும் பல ஆதாரங்களை வரும் மார்ச் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.டில்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி தனது தீர்ப்பில் 70 பத்திகளில் 68 பத்திகளை தனக்கு ஆதரவாக எழுதிவிட்டு 2 பத்திகளை சிதம்பரத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளார்.என்னுடைய வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிதம்பரம் 2ஜி வழக்கில் ராசாவுடன் ஈடுபாடு உண்டு நான் கூறிய ஆதாரங்களை நீதிபதி  உண்மை என்று கூறிவிட்டு சிதம்பரம் கிரிமினல் மனப்பான்மையோடு செயல்படவில்லை என்று கூறி ரத்து செய்தது ஏற்புடையதல்ல.

ஊழல் விவகாரத்தில் பதவியை துஷ்பிரயோகம் செய்தால் மட்டும் போதாது கிரிமினல் மனப்பானமையோடு செயல்பட்டாரா இல்லையா என்பதை வழக்கு விசாரணை தான் முடிவு செய்ய வேண்டும்.சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் மூலம் தான் எல்லா பணப் பரிமாற்றங்களும் நடந்தது 12 கம்பெனி மூலமாக அவர் எல்லா பணத்தையும் முதலீடு செய்துள்ளார். சிதம்பரம் கர்நாடகத்தில் உள்ள 25 சதவிகித இடங்களுக்கு முதலாளி. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும் குற்றவாளிகளை சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.என்று கூறி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகளின் பெயர் பட்டியலையும் சுப்பிரமணியசாமி வெளியிட்டார்.12 கம்பெனிகளுக்கும் கார்த்தி சிதம்பரம் சேர்மனாக இருப்பதாக கூறினார். அதில் 2 கம்பெனிகளுக்கு 2ஜி பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பற்றி விரைவில் ஆதாரத்தோடு வெளியிடுவேன் என்று கூறினார். 
காய்மக்கடு எஸ்டேட் லிமிடெட், கபாலீஸ்வரர் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை கார்த்தியின் சில கம்பெனிகள் ஆகும்.
========================================================================
இவர்களுக்கு எதற்கு இவை எல்லாம்?
====================================

இந்தியாவின் மூன்றாம் நிலை அணுமின் நிலையத் திட்டத்தை முறியடிக்கவே கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என இந்திய உயர் அணுமின் திட்ட நிபுணர்கூறியுள்ளார்.


ஹைதராபாத்தில் அணு எரிபொருள் தரக்கட்டுப் பாடு வகை குறித்த மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் கழக நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி ஆணையத் தலைவர் (ஏஇசி) ஸ்ரீகுமார் பானர்ஜி செய்தியாளர்களி டம் கூறுகையில், அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு, தரம், சுகாதா ரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போதும் எரி பொருள் மறுசுழற்சி குறித்து கேள்வி எழுப்பு கிறார்கள் என்றனர்.

டாக்டர் ஜெயின் பேசும்போது", கூடங்குளம் அணு மின்நிலையக் கட்டுமானம் 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் ஒற்றுமையுடன், சுமூகமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகு ஷிமா (ஜப்பான்) அணுமின் நிலைய விபத்து குறித்து எழுந்த அச்சம் குறித்து கூடங்குளம் மக்களுக்கு விளக்கப்பட்டு சுமூகநிலை ஏற்பட்டது. ஆறு மாதத் திற்கு பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் புகுஷிமாபற்றிய பய உண்ரவு யாரால்அங்கு மக்களிடையேபுகுத்தப்பட்டு தலைதூக் கியது எப்படி?


அணுமின்நிலைய பாது காப்பு குறித்து துவங்கிய போராட்டம், தற்போது அணு மின்நிலையமே தேவை யில்லை என்கிற தீவிரவாதத் துடன் நடக்கிறது .

இப்போது போராட்டக்காரர்கள் அணுமின் நிலைய பாது காப்பு குறித்து கேட்கப்பட வில்லை. அணுமின் திட்டத் தில் மறுசுழற்சி மற்றும் இரண்டாவது நிலை குறித்தே உள்ள. அதிவேக ஈனூலைக்கு புளூட்டோனி யம் எங்கே தயாரிக்கப்ப டும்? என கேள்விக் கேட் கிறார்கள்.அணு உலை இயக்க,அணு உலை கட்டமைப்பு வரைபடங்கள் கேட்கிறார்கள்.இது அணு உலை பற்றி தெரியாத நிபுணர்களுக்கே குளப்பம்தரும் வரைபடங்கள்.நாட்டின் ரகசிய ஆவண்ங்கள்.அது இவர்களுக்கு எதற்கு?
இது இந்திய அணுமின் திட்டத்தின் மீதான தாக்குதல்.சாதாரண மக்கள் இப்படி அறிவியல் பூர்வமாகக் கேட்கமாட்டார்கள்.உள்நாட்டு ரகசியங்களை இப்படிகேட்பது எதற்காக யாருக்காக என்ற கேள்விகள் எழும்புகிறது.அதனால்தான் அந்நிய நாட்டின் கைகள் இந்த போராட்டத்தின் ப்ன்னணியில் இருப்பதாக உணரப்படுகிறது. அணு தொழில்நுட்பத்தில் உலகின் தலைமையாக, தோரியம் அணு உலை திட்டத்திற்குச் செல்ல விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மறு சுழற்சி ஆலை இல்லை. இந்த நிலையில், மறுசுழற்சி பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2032ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணுமின் உற்பத்தியை 63 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு உள்ளது. இதில் இறக்குமதி செய்யப் படும் அணு உலைகள் மூலம் 35 ஆயிரம் - 40 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது என ஜெயின் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பிடிபட்ட அந்நிய முதலீட்டாளர்.


 கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் பிரமாண்ட அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.13,615 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. 


இப்போது அப்பகுதி மக்களை உதயகுமார்,புஷ்பராயன் ,கிருத்துவ பாதிரியார்கள் தூண்டி அணுவுலைக்கு எதிராக போராடவைப்பதாகவும் அதற்கு அந்நிய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா,ஜெர்மனி,பிரான்ஸ் நாடுகளில் இருந்து பணம் வழ்ங்குவதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்தது.அந்தபணம் தூத்துக்குடி,மற்றும் கேரளாவில் இருந்து நாகர்கோவில் மூலமாக தன்னார்வக்குழுக்கள் மூலம் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வெளி நாட்டவர்கள் சிலர் நாகர்கோவிலில் ஊடுருவி, போராட்டக்காரர்களுக்கு உதவுவதை மத்திய உளவு துறை கண்டுபிடித்தது. இப்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த சோன்டக் ரெய்னர் ஹெர்மான் என்பவர் பண உதவி செய்வதில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஜெர்மன் நாட்டைச்சார்ந்த ஹெர்மானைதமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெ‌ர்ம‌னி  ரெ‌ய்னரு‌க்கு‌ம், தம‌க்கு‌ம் எ‌‌வ்‌வித‌த் தொட‌ர்பு‌ம் இ‌ல்லை என்று  போர‌ா‌ட்ட‌க்குழு அமை‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் கூ‌றி‌யுள்ளார்.


ரெ‌ய்ன‌ரு‌ட‌ன் தொட‌ர்‌பு உ‌ள்ளதாக வெ‌ளியான தகவலை மறு‌த்து‌ள்ள உதயகுமா‌ர், கட‌ந்த ஓரா‌ண்டாக ரெ‌ய்னரை ச‌ந்‌தி‌க்கவோ, போ‌னி‌ல் பேசவோ இ‌ல்லை ஜெ‌ர்ம‌‌ணிநாட்டவர் ரெ‌ய்ன‌ர் தம‌க்கு ஏ‌ற்கனவே அ‌றிமுகமானவ‌ர்தா‌ன்.ஆனால் ரெ‌ய்னருட‌ன் எ‌ந்த பண‌ப்ப‌ரிவ‌ர்‌த்தனையு‌ம் செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று‌ உதயகுமார் கூ‌றினார். 
 குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் தங்கி இருந்த ஜெர்மான் நாட்டை சேர்ந்த சான்டெங்ரெய்னர் ஹெர்மான் என்பவர் தங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கியூ பிரிவு போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இவரிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டது. 

ஜெர்மனி ரெய்னர் பிடிப்பட்டது தொடர்பாக சில தகவல்கள் தரப்பட்டுள்ளது.
 நாகர்கோவில் விடுதி ஒன்றில் தான் சுற்றுலாபயணி என்றுஜெர்மனியைச்சேர்ந்தவர் தங்கிஇருப்பதாகவும்,அவரை போராட்டக்காரர்கள் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் மத்திய உளவு பிரிவு படையினர் விசாரணையில் தெரியவந்தது.சென்னையில் உள்ள கியூ., பிரிவு போலீஸ் உயர் அதிகாரிக்கு இத்தகவலை அவர்கள் தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து அவரது நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. இவர் கூடங்குளம் போராட்டக்காரர்களை சந்திப்பதும், இவர்களுடன் தொலை பேசியில் பல மணி நேரம் பேசுவதுமாக இருந்துள்ளார். இந்த விடுதியில் கடந்த 12 ம் தேதி முதல் தங்கியிருந்துள்ளார்.

 உளவுப்பிரிவினர் பல நாட்கள் கண்காணித்துபோராட்டக்காரர்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்தனர். இதனையடுத்து விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லுமாறு நாடு கடத்தினர். இனிமேல் இந்தியாவில் தங்க கூடாது என எச்சரித்து அனுப்பினர். போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதற்கான சில ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக உதயக்குமார் மற்றும் லால்மோகன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
======================================================================

======================================================================

------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நாவிற்கு எதிராக இலங்கை ஆர்ப்பாட்டம் நடத்திப் பயனில்லை,

_________________________________________________________________________
அரசாங்கம் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துகொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அந்த வால் நுனியை பிடித்து தொங்குகிறார்கள். அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதால் வெளிநாட்டில் ஒன்றும் ஆக போவதில்லை. வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு உள்நாட்டில் மக்கள் விலைவாசியை மறந்து இருப்பர்கள்.

உலக நாடுகள் இன்று, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல் செய்ய சொல்கிறார்கள். அதற்கான காலவரையறையுடன்கூடிய வேலைத்திட்டம் அவசியம் என சொல்கிறார்கள். இந்த அறிக்கையில் பொறுப்பு கூறல் தொடர்பில் எதுவும் கிடையாது. மிகவும் மெத்தனமாக சில சிபாரிசுகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிபாரிசுகளைகூட அமுலாக்க அரசாங்கம் தயங்குகிறது. அதற்கான காலவரையறையுடன் கூடிய உத்தரவாதத்தை சர்வதேசத்திற்கு தருவதற்கு அரசாங்கம் தயார் இல்லை

இன்று எம்முன்னே இருக்கும் சிக்கல் இதுதான். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நீர்கொழும்பு கார்டினால் குரே நிலையத்தில் சுதந்திரத்திற்கான அரங்கம் நேற்று நடத்திய கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
இடதுசாரிமுன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மற்றும் ஐதேக எம்பீக்கள் ஜோசப் மைக்கல், ஜெயலத் ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கை ஒன்றும் பான் கி மூன் அறிக்கை இல்லை. இதை எதிர்கட்சிகள் தயாரிக்கவில்லை. ஊடகங்கள் தயாரிக்கவில்லை. அரசாங்கம் நியமித்த சி.ஆர்.டி. சில்வா அவர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் தயாரித்துள்ளார்கள். தமது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கை சொல்லும் சிபாரிசுகளை அமுல் செய்வதாக காலவரையரையுடன்கூடிய உத்தரவாதம் தர முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கிறது. இந்த நிலையில் இருந்துகொண்டுதான் இன்று சர்வதேசத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் ஆறு வாரங்களுக்குள் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை அமுல் செய்யப்போவதாக குறிப்பிட்டார். அதன்பிறகு அதுபற்றி இன்று எந்த ஒரு பேச்சையும் காணோம். ஆனால் இன்று அமெரிக்காவும் ஏறக்குறைய இதைதான் சொல்கிறது. அப்படியானால் இன்றைய ஆர்ப்பாட்டத்தை அரசாங்கத்திற்குள் இருக்கும் தீவிரவாத குழுவினர், தமது ஜனாதிபதிக்கு எதிராகவே செய்கிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இந்நாட்டில் இன்று இனப்பிரச்சினையே இல்லை. இருந்தது பயங்கரவாத பிரச்சினைதான். அதை நாம் ராணுவத்தின் மூலம் தீர்த்து வைத்து விட்டோம். எனவே அதிகாரப்பரவலாக்கள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு, தமது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கையே இனப்பிரச்சினை பற்றியும், அரசியல் தீர்வு பற்றியும் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.
செனல் நான்கு தொலைக்காட்சி காண்பித்த ஒளிநாடாவை பார்க்காமலேயே அது முற்றிலும் பொய் என்று சொன்னவர்களுக்கு, அதுபற்றி சுதந்திர விசாரணை தேவை என ஆணைக்குழு சொல்லி இருப்பது கஷ்டமாக இருக்கிறது.

அனைத்து ஆயுத துணைக்குழுக்களும் கலைக்கப்படவேண்டும் என சொல்லப்பட்டு இருப்பது கஷ்டமாக இருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களினதும் பெயர்விபர பட்டியல் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கிறது.
சரணடைந்தோருக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும், பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பிலான ராணுவத்தின் மீதான சில குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், திருகோணமலை மாணவர் படுகொலைகள் மற்றும் மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலைகள் ஆகியவை பற்றியும் விசாரணைகள் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருப்பது இவர்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது.
உள்ளூர் தமிழ் கட்சிகளுடன், ஒப்பந்தம் செய்து கிழித்து வீசிவிடுவதை போல் ஐநாவுடன் செய்ய முடியாது. இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அந்த அடிப்படையில், தமது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஜனாதிபதியே குறிப்பிட்ட ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என ஐநா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உத்தரவாதம் வழங்குங்கள் என அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன். இதையே அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும், இடதுசாரி தலைவர்களும் தமது அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும்.
நன்றி:இனியொரு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
___________________________________________________________________________________________________________________________________ரூ. 6300 கோடி கடனில் கிங்பிஷர்
-----------------------------------------------------------

சாராய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனம் ரூ.6300 கோடி கடனில் தவிக் கிறது. இந்த நிறுவனம் கடனி லிருந்து மீண்டுவர 2 அயல்நாட்டு விமான நிறுவனங்களுடன், விஜய் மல்லையா பேச்சு வார்த்தை நடத்துகிறார். பிரிட் டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உரிமையாளரான இண்டர்நேஷ னல் ஏர்லைன்ஸ் குரூப் (ஐஏசி) உள்பட இரண்டு நிறுவனங்க ளுடன் பேச்சுவார்த்தை நடக் கிறது.


கிங்பிஷர் விமான நிறுவனத் தில் மல்லையாவிற்கு 58 சதவீதம் பங்குகள் உள்ளன. அயல்நாட்டு நிறுவனத்திற்கு பங்குகளை மாற்றித்தருவது குறித்து, ‘தி டைம்ஸ்’ இதழுக்கு விஜய் மல் லையா கூறுகையில், அயல் நாட்டு நிறுவன உரிமையாளர் பங்குகளை வாங்குவது தொடர் பான கட்டுப்பாடுகளை நீக்கு வதற்கு, மத்திய அரசிடம் தற் காலிக அனுமதியைப் பெற்றுள் ளேன் என தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள் மாற்றம் வெளி யானதும், சில நாட்களில் அயல் நாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனத்தில் முதலீடு செய்யும் என அவர் தெரிவித்தார்.

விதிமுறை தளர்வின் மூலம் இந்திய விமான நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகளை, அயல் நாட்டு நிறுவனம் பெறும். ஐக் கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த எடிஹாட் விமான நிறு வனமும், கிங்பிஷருடன் கூட்டுச் சேர விரும்புகிறது. கடனில் உள்ள கிங்பிஷர் மீண்டுவர உட னடித் தேவையாக 1600 லட்சம் டாலர் முதலீடு தேவைப்படு கிறது.

கிங் பிஷர் நிறுவனம் 64 விமானங்களை இயக்கிவந்தது. தற்போது 28 விமானங்களை மட்டுமே இயக்குகிறது. இந்நிறு வனத்தில் இருந்த விமானிகள் பெருமளவு விலகிவிட்டனர். கிங்பிஷர் தற்போது வெறிச்சோடி இருக் கிறது.
________________________________________________________________________
திங்கள், 27 பிப்ரவரி, 2012

தண்ணீர்,,,,

---------------------
பொலிவியா தரும் படிப்பினை 
 ---------------------------------------------------------------                                                                                                                                                   -தே. இலட்சுமணன்
தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், மத்திய அரசு தன் பொறுப்பு அல்ல என்று தட் டிக்கழித்துவிடவும் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரத் தயாராகி விட்டது. இதுபற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
பொலிவிய ஏரி ஒன்றின் அழகு.


தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை. உயிர் வாழ்வதற்கான ஆதாரம் அது. அரசு, மனிதர்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டியது, அதற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் அடிப் படை கடமை. ஆனால் இப்போதைய மத்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தின் காரண மாக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட் டத்தை தனியார் கையில் தாரைவார்க்க ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சதி நிறை வேறினால், அடுத்து இயற்கை தந்த வரமான காற்றையும் ஒரு பண்டம் என்று கூறி அதன் மீதும் தனியார் கம்பெனிகள் பாத்தியதைத் கொண்டாட தனியாருக்கு சொந்தமாகச் சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

மக்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகப் பயன்படும் வகையில் இயற்கை தந்துள்ள வளங்களை - குறிப்பாகத் தண்ணீரை சந்தைச் சரக்காக ஆக்க ஐந் தாண்டுகளுக்கு முன்னாலேயே உலக வங்கி ஆணையிட்டுள்ளதைத்தான் இந்திய அரசும் அகமகிழ்வோடு அமல்படுத்திட விழைகிறது. இது இயற்கை நீதிக்கே எதிரானது.
டிடிகாகா வில்மூடி ஏரி[பொலிவியா]


மாளிகையில் வாழ முடியாத மனிதன் மண்குடிசையில் வாழ முடியும், உடல் நலம் கெட்டவன் கார்ப்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் பச்சை இலை மருந்தையாவது தின்று நோய் குண மாக்க முடியும். ஆனால் வறியவனிடமிருந்து குடிக்கும் தண்ணீரையும் பறித்து விட்டால், தண்ணீருக்கு மாற்றாக அவன் எதை நாடமுடியும்?

மக்களுக்கு எதிரான இந்த அரசை மாற் றுவதைத் தவிர மக்களுக்கு வேறு மாற்றே இல்லை. இதற்கு உதாரணம், நம் முன்பாக பொலிவியா நாட்டில் நடந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல பாடமாக உள்ளன.

பொலிவியாவில் எல்லா பொது நிறுவனங் களும், மின்சாரம், ஆகாயப் போக்குவரத்து, சுரங்கம், காடுகளில் கிடைக்கும் எல்லா வளங்களும் மற்றும் செய்தித் தொடர்புகள், ஹைட்ரோ கார்பன் இப்படி - அனைத்தும் முழுக்க, முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டன. அந்த நாட்டில் மிச்சமிருந்த தண்ணீர் ஒன்று தான் தனியார்மயமாகாமல் இருந்தது. அதைப் பொறுக்காத உலக வங்கி தண்ணீரையும், தனி யாருக்குத் தாரை வார்க்க பொலிவியா அரசை நிர்ப்பந்தித்தது. ஆசை வார்த்தைகள் பல வற்றை அள்ளி வீசியது. பொலிவியா அரசும் மயங்கி பேரம் பேசி ஒப்பியது. பொலிவியாவின் நீர் வளங்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்து விட்டால், பொலிவியா அரசு உலக வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் 600 மில்லியன் டாலரை ரத்து செய்து விடுவதாக தாஜா செய்தது. அர சும் ஏற்றது. குழியில் வீழ்ந்தது. ஆம். ஆண்டு கள் பலவாக, பல தலைமுறைகளாக சமூகத் தின் ஆளுமையின் கீழ் சொந்தம் கொண்டா டப்பட்ட நீர் “சரக்கு - பண்டம்” என நாமகரணம் சூட்டப்பட்டு, தனியார் கம்பெனிகளின் ஆளு கையின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது.மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு ஜீவாதாரத் தோடு பொலிவியா எதேச்சதிகார அரசு விபரீத விளையாட்டைத் துவக்கி விட்டது. குடிநீர் மட்டுமல்ல, விவசாயத்துக்குப் பயன்படும் பாசன நீரும் அளவின் அடிப்படையில் விலைக்கு விற்கப்பட்டது.

மனித வாழ்க்கையோடு இணைந்து இருந்த தண்ணீர் இப்போது அந்நியப்படுத்தப் பட்டு விட்டது. பொலிவியாவின் ஜனாதிபதி யாக இருந்த ஒரு சர்வாதிகாரி - ‘யூகோ பேன் சர்’ என்ற தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியவர் தான் இந்தக் கொடுமையைச் செய்தவர்.


லண்டனை இருப்பிடமாகக் கொண்ட அந்நிய கம்பெனிகளான இண்டர்நேஷனல் வாட்டர் லிமிடெட், அதோடு இணைந்து செயல்படும் இத்தாலியன் யுடிலிட்டி எடிசன் மேலும் அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்ட பாச்டட் எண்டர்பிரைசஸ் - பொலி வியாவுக்கு சொந்தமான தண்ணீரை மொத்த மாக குத்தகைக்கு எடுத்து விட்டன. எடுத்த எடுப்பில் சாதாரண மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். மாதம் உணவுக்கு ஆகும் செலவை விட தண்ணீருக்கு ஆகும் செலவு அதிகரித்தது. நீரின் விலை திடீரென 35 சத விகிதம் ஏற்றப்பட்டு விட்டது.

உதாரணமாக ஒரு குடும்பம் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வந் ததால், வருமானத்தில் 10 நாளைக்கு உண வுக்குச் செலவாகும் தொகைக்கு ஈடாக தண் ணீருக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. சென்ற மாத செலவை விட இந்த மாதச் செலவு 300 சதவிகிதம் உயர்ந்து விட்டது.


இந்தக் கொடுமையை ஏழை, எளிய மக் கள் எப்படி சமாளிக்க முடியும்? விவசாயி களின் வேதனை சொல்லி மாளாது. எனவே, எரிமலை வெடித்தது.

2000 ஜனவரி மாதம் கொதித்தெழுந்த மக் கள், வேலைநிறுத்தம் செய்தார்கள். சாலை கள் மறிக்கப்பட்டன. நான்கு நாட்கள் கோச்ச பாம்பினாஸ் நகரம் ஸ்தம்பித்தது. வேலை நிறுத்தத்தின் வீச்சு, மேலும் சாலை மறியல் அரசை அதிர வைத்தது. உடனே தண்ணீர் விலையைக் குறைப்பதாக அரசு செய்தி வெளி யிட்டது. ஆனால் வாக்குறுதி அமல்படுத்தப் படவில்லை.

மறுபடியும் பிப்ரவரி 4ம் தேதி ஆயிரக் கணக்கான மாக்கள் திரண்டு அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள். இதைப் பொறுக்க மாட்டாத சர்வாதிகாரி பேன்சர் போலீசை ஏவினார். இரண்டு நாட்கள் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் மக்களில் 175 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு பேர் பார்வை இழந்தனர்.

கிராமப்புற மக்கள் எழுப்பிய சாலை தடை களால் நகரங்களுக்குப் போய்ச் சேர வேண் டிய உணவுப்பொருட்கள் தடுக்கப்பட்டன. போக்குவரத்து முற்றாக முடங்கின. சினம் கொண்ட மக்கள் தடி கொண்டு போலீசை தாக்கினர். கற்களையும் சரமாரியாக வீசினர். போராட்ட வீச்சு கொழுந்து விட்டு எரியவே ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

மக்களும் போராட்டக்குழுவை உரு வாக்கி விட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொருளாதார விற்பன்னர்கள், வழக்கறிஞர் கள், தொழிற்சங்கங்கள், குடியிருப்போர் சங் கங்கள், இளைஞர்கள், பண்ணை விவசாயி கள், கோகோ பயிரீட்டாளர்கள் என பெரிய கூட்டணி உருவாகிவிட்டது.


உருவாகி விட்ட பலமான கூட்டணியை முறியடிக்க ஜனாதிபதி ராணுவ சட்டத்தைப் பிரகடனப் படுத்தினார். விளைவு, இது உள் நாட்டுப்போராக மாறி விட்டது. இதற்கு வாட் டர் வார் எனப்பெயர் சூட்டப்பட்டது. இந்தச் சொல் உலகம் முழுவதும் ஒலித்தது.

ராணுவ சட்டம் அமலுக்கு வந்து விட்ட தால் எல்லா சிவில் உரிமைகளும் ரத்தாகி விட்டன. வீதியில் நான்கு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட் டது. வானொலி நிலையம் ராணுவ அதிகாரத் தின் கீழ் வந்து விட்டது. பத்திரிகை நிருபர்கள் கூட கைது செய்யப்பட்டார்கள். வீடுகள் சோதனையிடப்பட்டன.

அவசரகால அட்டூழியங்களை அட்டி யின்றி அமல்படுத்திட அரசு மூன்று பேர்களைக் கொண்ட ஓர் அதிகாரமையத்தை உருவாக்கியது.

ஜனாதிபதி யுகோ பேன்சர், ஆளுநர் (இவர் போலீஸ் தலைமை அதிகாரி, ஆளுநராக பதவி உயர்த்தப்பட்டவர்), மேயர் மேன்பிரட் ரோயல் வில்லா. இந்த மூவரின் பூர்வீக வர லாறு என்பது ஜார்ஜீயாவில் உள்ள அமெரிக்க கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்த நிறுவனம் வெளிநாட்டு ராணுவ அதி காரிகளுக்கு சதி செய்து கொலை செய்வது எப்படி, சதி செய்து கலவரங்களை உருவாக்கு வது எப்படி என பயிற்சி கொடுக்கும் இடமாகும்.


மனிதநேயமற்ற இந்த மூவர் கொண்ட அதிகார மையத்தாலோ, ராணுவத்தாலோ, போலீஸ் அடக்குமுறையாலோ மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

செப்டம்பர் 2000ம் ஆண்டில் பொலி வியாவின் மற்றொரு நகரமான ‘லா பாஸ்’ என்ற இடத்திலும் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 20 நாட்கள் முற்றுகைப் போராட் டம் நடந்தது. அரசாங்க அடக்குமுறையால் அங்கும் போராட்டத்தை அடக்கவே முடிய வில்லை. போராட்டத்தால் - சிவில் வார் நடந் ததின் விளைவால் அரசுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டது. மக்கள் நடத்திய சாலை முற்று கைப் போராட்டத்தில் நெடுஞ்சாலைகள் சேதாரம் செய்யப்பட்டன. அதனால் ஏற்பட்ட இழப்பு 90 மில்லியன் டாலர். விற்பனைக்கான பொருள்கள் போக்குவரத்து இன்றி தேங்கி விட்ட தால் ஏற்பட்ட நஷ்டம் 70 மில்லியன் டாலர்.

உலக வங்கி இயக்குநர் தண்ணீர் யுத்தம் பற்றி எதிர்த்து குரல் கொடுக்கிறார், சர்வதேச நிதி நிறுவன இயக்குநர் கர்ஜிக்கிறார். அத னால் எந்தப்பயனும் ஏற்படவில்லை. 2000ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய தண்ணீர் யுத்தத்தின் வீச்சால் ஒப்பந்தம் நான்கு மாதத் திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. ஆட் சியை பணியவைத்துவிட்டது. அந்நிய நாட்டு கம்பெனிகளுடன் போட்ட ஒப்பந்த ஷரத் துக் களை அரசு ரத்து செய்ய வேண்டியதாயிற்று.


அந்நிய நாட்டு கம்பெனிகள் கடையை மூடிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. வங்கியில் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை மொத்தமாக சுற்றிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. குறிப்பாக அமெரிக்க கம் பெனி பாச்டட் பொலிவிய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை 1,50,000 டாலரை பட்டுவாடா செய்யாமலேயே பறந்து போய் விட்டது. மாறாக இந்த கம்பெனி தனக்கு நஷ்ட ஈடாக 12 மில்லியன் டாலர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. நஷ்ட ஈடாவது, மண்ணாவது, அடித்த கொள்ளை போதாதா? ஒரு வாய் தண்ணீருக்கும் காசு கேட்ட கம் பெனியை ஓட ஓட விரட்டி வெளியேற்றியதும் ஒன்றுதிரண்ட மக்கள் எழுச்சியே. அமெரிக் காவிற்கு தாசானு தாசானாக நடந்து கொண்ட பொலிவியாவின் சர்வாதிகாரியை பணிய வைத்ததும் மக்கள் எழுச்சியே. நடந்த போராட் டமோ 7 நாட்கள்தான். இது ஓர் அற்புதம், அதி சயம். அடுத்து அந்த மக்கள் தண்ணீர் யுத்தத் தில் கண்டு கொண்ட மற்றொரு அனுபவம் -

‘நாங்கள் பெற்ற இந்த வெற்றி உறுதிப்பட வேண்டுமென்றால், தாராளமயத்தை, தனியார் மயத்தை அமல்படுத்தும் ஆட்சியை மாற்ற வேண்டும், இந்த நாசகர கொள்கையை எதிர்க்கும் ஒரு மற்றொரு ஆட்சியை உரு வாக்கிட வேண்டும். இதில் நாங்கள் தெளி வாக உள்ளோம்’ என்றார்கள்.

ஆம், ஆட்சி மாற்றப்பட்டது.அங்கு இடது சாரி ஆட்சி பீடம் ஏறியுள்ளது.

பொலிவியா, இந்திய மக்களுக்கு தெரி விக்கும் படிப்பினையும் இதுதான்.
இது தண்ணீரை வைத்து அரசியல் நடத்த தயாராகும் காங்கிரசுக்கும் நல்ல படிப்பினையைத்தரும்.
                                                                                                                                                        கட்டுரை உதவி:நன்றி;தீக்கதிர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறு மில்லியன் தீக்குச்சி


16 ஆண்டுகள் உழைப்பு......


matches years
matches years


matches years

matches years
பல்கேரியாவைச்சேர்ந்த பிளாமன் இக்னொடவ் 16 ஆண்டூகள் 6 மில்லியன் தீக்குச்சிகள்,சிறிய மரத்துண்டுகள்,சிறு கற்களால் கட்டிய ரிப்லிகா ரிலா மானெஸ்டெரி என்ற பல்கேரிய கோவிலின் வடிவம் இது.இப்போது பல்கேரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
matches years
_____________________________________________________________________________முறைகேடுகளே முறையாகக் கொண்டு.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களில் தங்கள் நிறுவனத்தை மொரிசியஸ்நாட்டில் பதிவு செய்துள்ளதை முறைகேடாக பயன்படுத்தி ரூ.1,500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்திருப்பதாகத் தெரியவருகிறது.


வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி வருமான வரி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்துக்கு ஆதரவாக""வெளிநாடுகளில் நடந்த பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்துள்ளதால், இந்த 1,500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடிக்கு எப்படி தண்டிப்பது, வரியை எப்படி வாங்குவது என்று வருமானவரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் தொழில் செய்யும் "டெலிகாம்' நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் லாபத்தை, மூலதன ஆதாயமாகக் கருதித்தான் வருமான வரித்துறை வரி விதிக்கிறது.
ஆனால் இந்த வரி விதிப்பையே கேள்விகேட்டிருப்பதால் இந்த வரி ஏய்ப்பை எப்படித் தடுப்பது என்று சட்ட நிபுணர்களுடன் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க, மொரிசியஸ் நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளை வேறு சிலரும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் இந்திய அரசுக்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரி வருவாய் வராமலேயே போய்விடுகிறது.
இதற்கு அரசு உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் உடந்தையாக இருப்பதால் வருமான வரித்துறை போன்ற அரசு அமைப்புகள் ஏதும் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இந்த வரிச்சலுகையை மத்திய அரசு ஆய்வு செய்யுமா, திருத்துமா, திரும்பப் பெறுமா என்பதற்கெல்லாம் இப்போதைக்கு விடை இல்லை.


வீட்டு மனை, அடுக்ககம் ஆகியவற்றைக் கட்டித்தரும் ஒரு நிறுவனமும் 2 ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்று தொழில் செய்துவருகிறது.
அந்த நிறுவனம் மட்டுமே மூலதன ஆதாய வரியாக ரூ.80 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நிறுவனம் அதை சட்டை செய்யவே இல்லை. மேற்கொண்டு என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று வருமான வரித்துறை ஆய்வு செய்துவருகிறது.
2ஜி சேவை அளிக்க உரிமம் பெற்றுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் அவற்றின் பணப் பரிமாற்றங்கள் வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. அவை மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு இந்திய அரசின் வரிவிதிப்பு எல்லையைத் தவிர்க்கின்றன.
வோடஃபோன் வருமான வரி பாக்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அளித்துள்ள தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வருமான வரித்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த நிறுவனங்களின் உத்தியை விளக்க முடிவு செய்துள்ளது துறை. சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் இதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி ரூபாய் வருமான வரி கிடைக்காமல் போனதல்லாமல், பிற நிறுவனங்களும் அதே வகையில் சொல்லி வரி செலுத்தாமல் தப்பித்துவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டும் அல்லாமல், மோரிஷஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை இந்த நிறுவனங்கள் குயுக்தியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
பங்குகளின் உரிமையை மாற்றிக் கொண்டும், பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பதாகக் கணக்கு காட்டியும், ஏற்கெனவே வாங்கிய கடன் மீது மேலும் கடன் வாங்கியதைப்போல கணக்கு கொடுத்தும், அடித்தளக் கட்டமைப்புக்குச் செலவிட்டதைப்போல கணக்கு எழுதியும் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றன.
ஏற்கனவே 2-ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு.இப்போது அதில் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி ஏய்ப்பு.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை இது போன்ற முறைகேடுகளை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். 


அத்துடன் இந்தியாவில் தொழில் நடத்துபவர்கள் இந்திய வருமான வரி சட்டத்துக்குட்பட்டவர்கள் என்றவிதியைக்கொண்டுவர வேண்டும்.பிற நாடுகளில் பதிவு செய்து இந்தியாவில் சலுகை பெறலாம் என்ற விதியையும் நீக்க வேண்டும்.இங்குள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் வரியைக்கட்டிக்கொண்டிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் பில்லியன் டாலர் தொழில் கொள்ளைக்கு சலுகைகள் வழங்குவது தேவையா?அப்படி நம் நாட்டுக்கு எந்த நன்மையும்-வருமானமும் இல்லாமல் மேற்கொண்டு தொல்லை தந்து கொண்டிக்கும் பன்னாட்டு தொழிலதிபர்களை இங்கு தொழில் துவக்க அழைப்பது சரியல்ல.இந்தியர்களே பல நாடுகளில் தொழில் துவக்கும் நிலையில் உள்ளோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா.
______________________________________

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்டபோது அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்காக  இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடித்தது.

இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால்  இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா நம்புவதாக இலங்கை கருதுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் தனது தூதுவர்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளதாக ஜெனீவாவிலிருந்து ஆபிரிக்காவுக்கு நேற்று புறப்பட்ட அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவாக சீனாவும் ,ரஷ்யாவும் பேசி வருவதால் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.மற்றபடி கொல்லப்பட்ட தமிழ் மக்களின் மீதான அனுதாபம் காரணம் கிடையாது.ஆனால் ரஷ்யா,சீனாவிடம் வீட்டோ அதிகாரம் இருக்கிறது.எந்த தீர்மானத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஓளி மயமான வாழ்த்துக்கள்....


தமிழ்நாடு இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வாரியாக வார மின்விடுமுறை நாட்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு திங்கட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிகளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமையும் தொழிற்சாலை வார மின்விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 4 மணிநேரமாக மின்வெட்டு இருக்கும். மாநிலத்தில், நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தினந்தோறும் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு மின்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், மின்வெட்டு 10 சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு முடிந்தவரை தடையின்றி மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காற்றாலை மின்உற்பத்தி ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அது துவங்கினால் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு, 40 சதவீத மின்வெட்டு.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, 2 மணி நேர மின் தடை.
* நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு, 4 மணி நேர மின் தடை.
* வணிக பயனீட்டாளர்களுக்கு, மாலை 6 மணி முதல், 10 மணி வரை மின் பயனீட்டு கட்டுப்பாடு.
* தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை.
இதில், தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை, வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மின்சார வார விடுமுறை விபரம்:--------------------------------------------------
திங்கள் ஈரோடு மண்டலம் (ஈரோடு, நாமக்கல், கோபி, சேலம், ஓமலூர், ராசிபுரம், வாழப்பாடி மற்றும் மேட்டூர்)
செவ்வாய் சென்னை தெற்கு மண்டலம் (அடையார், கே.கே., நகர், போரூர், கிண்டி, தாம்பரம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி), திருப்பத்தூர் பகிர்மான வட்டம் (திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பூர்,
புதன் சென்னை வடக்கு மண்டலம் (அண்ணா சாலை, மயிலாப்பூர், எழும்பூர், தி.நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், பொன்னேரி) மற்றும் மதுரை மண்டலம் (மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, பழநி, காரைக்குடி, சிவகங்கை)
வியாழன் கோவை மண்டலத்தில், திருப்பூர் மற்றும் நீலகிரி மின்பகிர்மான வட்டம் நீங்கலாக
வெள்ளி திருநெல்வேலி மண்டலம் (திருநெல்வேலி, வள்ளியூர், சேரன்மகாதேவி, திசையன்விளை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில், கலிங்கப்பட்டி) மற்றும் திருப்பூர், நீலகிரி பகிர்மான வட்டம்
சனி திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலத்தில் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் நீங்கலாக
இந்த அடிப்படையில், மின்சார வார விடுமுறை அமலாகும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமையைக்காணோமே .அன்று எல்லா பக்கமும் விடுமுறையா?
இதில் அதாவது மின் தட்டுப்பாடு மற்றும் 10 மணி நேர மின் தடை தமிழ் நாட்டை உலுக்கி இருளாக்கிக்கொண்டிருக்கும்போதும் யாரவது அதிலும் குறிப்பாக பத்திரிகைகள் -ஊடகங்கள் முதல்வர் ஜெயலலிதா,மின் துறை அமைச்சரை குறை கூறி கண்டித்திருக்கிறார்களா?இல்லையே?

அதுவே கருணாநிதி ஆட்சிகாலத்தில் கருணாநிதியையும்,ஆற்காடு வீராசாமியையும் எப்படி எல்லாம் திட்டினார்கள்-நக்கலடித்து செய்திகள் வெளியிட்டார்கள்?அப்போதுஆங்காங்கே தலைகாட்டி இப்போது தலைவிரித்து ஆடும் மின் தடைக்கு அப்போது முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே துவக்க வில்லை அதனால்தான் தட்டுப்பாடு என்று கருணாநிதி கூப்பாடு போட்டார்.புதிதாக மின் உற்பத்தி திட்டங்களும் துவக்கப்பட்டன.
இன்று ஜெயலலிதா கூறும் உடன்குடி திட்டமும் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம்பிக்கப் பட்டு .அய்யா வைகுண்டராஜன் மறைமுக எதிர்ப்பு வேலையால் ஆமைவேகத்தில் பணிகள் நடந்தன.இப்போது இவர் ஆள வந்து ஓராண்டு ஆகிறதே .அந்த திட்டத்தை ஏன் விரைவு படுத்த வில்லை? இன்னமும் கருணாநிதியை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்?

கருணாநிதிதான் மின் தடையால் பதவியை இழந்து வீட்டில் இருக்கிறாரே?அவரை இன்னமும் மைனாரிட்டி என்று சொல்லிக்கொண்டிருக்காமல் ஆக வேண்டிய வேலையை பாருங்கள் அம்மையாரே.உங்களுக்[காவது]கு ஒளி மயமான எதிர்காலம் பிறக்க பிறந்தநாள்[தாமதமான] வாழ்த்துக்கள்.!நூற்றாண்டு விபத்துக்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்துக்கள்.
-----------------------------------------------------------------------------------
old accidents

old accidents

old accidentsold accidents

old accidents

பலூன் விமானம் வெடித்து மனிதர்கள் கீழே விழும் போது பிடித்தது[காமிராவால்]
old accidents

old accidents
------------------------------------------------------------------------------------------------------------

எங்கே போயின குதிரைகள்?.எப்படி வந்தனர் அம்மா-பிள்ளைகள்.?
-------------------------------------------------------------------------------------------------------------