வரிசை இத்துடன் முற்று பெறுமா?
கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், 51, ஏப்., 23ம் தேதி அதிகாலை, இரு வாகனங்களில் வந்த மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். உடனிருந்த மற்றொரு காவலாளி, கிருஷ்ண பகதுாரை தாக்கி, கை, கால்களை கட்டிப் போட்டு, எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றது. முக்கிய ஆவணங்களை தேடியே இக்கும்பல் கொடூர கொலையை நிகழ்த்தியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளிகள் தப்பிய வாகனங்களின் விபரங்களை, முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் திரட்டிய போலீசார், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த, சதீஷன், ஷிபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். யாரும் எளிதில் புகை முடியாத மர்மக்கோட்டையான ஜெயலலிதா கோடநாடு பங்களாவில் அடிக்கொரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொள்ளை சம்பவம் நடக்கும் வேளையில் எல்லா கண்காணிப்பு கேமராக்களும் முடங்கிப்போய...