தினகரன் ஓட்டம் ஏன்?
கட்சியில் இருந்து தினகரன், சசிகலா ஆகியோரோடு, அவர்களது குடும்பத்தினரும் ஒதுங்க வேண்டும் என்று, தமிழக அமைச்சர்கள், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடி முடிவெடுத்தனர்.
அதனால் தினகரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக முதல்வரின் மனைவி கனவில் இருந்த தினகரனின் மனைவி அனுராதா ரொம்பவே அதிர்ச்சி அடைந்தார்.
அதனால் தினகரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக முதல்வரின் மனைவி கனவில் இருந்த தினகரனின் மனைவி அனுராதா ரொம்பவே அதிர்ச்சி அடைந்தார்.
நேற்றுவரை தினகரன் நிழலைக்கண்டாலே குனிந்து கும்பிட்ட அமைச்சர்கள் திடீரென தினகரனை விலகச்சொல்லி கூட்டங்கள் போடுவதை அவரால் செரித்துக்கொள்ளவில்லை.
இதற்கிடையில், தினகரன் இல்லத்துக்கு, தங்கதமிழ்ச் செலவன், வெற்றிவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் மட்டும் சென்றனர். அவர்கள்" இனியும் நாம் சும்மா இருக்க வேண்டாம்; நம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
இனிமேல் ஒரு நாள் கூட பழனிச்சாமி ஆட்சி தொடரக் கூடாது. அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இளிச்சவாயர்களா? இவர்கள் சொல்வது படியெல்லாம் கேட்பதற்கு நாம் தலையாட்டி பொம்மைகள் அல்ல என்று சீற்றத்துடன் கருத்துச் சொல்லியிருக்கின்றனர்.
தங்கத் தமிழ்ச் செல்வனும், வெற்றிவேல் மட்டும்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது.
அதையடுத்தே, தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும்; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என, நடு இரவில் தெரிவித்தார் தினகரன்.
ஆனால் ஒட்டுமொத்த சம்பவங்களையும் அவதானித்துக் கொண்டிருக்கும் தினகரன் மனைவி அனுராதா, "இதெல்லாம் தேவையில்லாத வேலை" என்று, கணவரிடம் சொல்லியிருக்கிறார்.அத்துடன் உளவுத்துறையில் இருந்து சசிகலா ஆதரவு அலுவலர் அளித்த அறிக்கையை காட்டி விளக்கியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்தே, தினகரன் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டு, அமைச்சர்கள் விருப்பப்படி ஒதுங்கி இருக்கிறேன் என தினகரன் அறிவித்து விட்டார்.
அமைச்சர்கள், முதல்வர் வீட்டில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இரவிலும் கூடி, விவாதித்த அத்தனை விஷயங்களையும், தனது தொடர்புகள் மூலமாக தனியாக திரட்டினார் தினகரன் மனைவி அனுராதா. அதில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக திரண்டிருப்பதாகவும், அதிலும் சிலர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விடக் கூடும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.
இதற்கிடையில், தினகரன் கூடவே இருந்து, மத்திய அரசை பகைத்துக் கொள்வதில் இருந்து, அமைச்சர்களையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் பகைத்துக் கொள்வது வரையில், எல்லா விஷயங்களுக்கும் காரணமாக இருந்த தளவாய் சுந்தரத்தின் மீது, அடுக்கடுக்கான புகார்கள், அனுராதாவுக்கு வந்து கொண்டே இருந்தன.
தினகரன் அதிகம் நம்பிய தளவாய் சுந்தரத்தின் தவறான வழிகாட்டுதல்தான் பிரசினைகள் முற்றிட காரணம் என்பதை உளவுத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உடனே அனுராதா தினகரன் தனக்கு வேண்டிய , தொடர்பில் இருக்கும் சில அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு, உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் பலரும், தினகரன் சமீப நாட்களில் நடந்து கொண்ட அத்தனை விதங்களைக் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தில் சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு சிக்கல் வந்தது, தினகரன் மீதான பெரா வழக்கு திடீர் என உயிர் பெற்றது, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னையில் சிக்கியிருப்பது என பல்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் தினகரன் கழுத்தை நெரிப்பதற்குக் காரணம், பாஜக மோடி அரசை நிலைமை புரியாமல் எதிர்த்து தினகரன் நடந்து கொண்டதுதான் என்பதையும் அதற்கு வழிகாட்டி உசுப்பேத்தியது முதலில் தம்பித்துரையும், பின்னர் தளவாய் சுந்தரமும்தான் என்பதையும் அறிந்து தினகரனிடம் கூறி புரியவைத்தார்.
விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனையின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு போனால் சோதனையை நீற்றுப்போக செய்து விடலாம் .சில அமைசர்களுடன் அவரை அங்கு போகக்கூறுங்கள் என்று தினகரனிடம் தளவாய் சுந்தரம் போட்டுக்கொடுத்ததால்தான் முதல்வர் மறுத்துவிட இரண்டு அமைசசர்கள் அங்கு போய் வருமானவரி துறையினர் வழக்குகளில் மாட்டிக்கொண்டனர் .ஆவணங்களை கடத்தியதாக தளவாயும் மாட்டிக்கொண்டார்.
ஒரு தளவாய் சுந்தரம் போன்ற வழக்குரைஞருக்கு இது போன்ற விபரங்கள் கூடவா தெரியாது.
தினகரனுக்கு எதிராக அணி திரளும் அத்தனை எம்.எல்.ஏ.,க்களும் சசிகலா குடும்பத்தால் சில சமயங்களில் தரக்குறைவாக நடத்தப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஆத்திரத்தையெல்லாம், தினகரனுக்கு எதிராக காட்டினர். அதெல்லாம் கூட, தினகரனுக்கு எதிரான பிரச்னை தலைக்கு மேல் செல்வதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
அதுமட்டுமல்ல நேற்று வரை, தினகரன் அணியில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, தங்கமணி, வீரமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், தினகரனை மத்திய பாஜக அரசு இலக்காக கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதைக்கண்டு பதவிகளை பாதுகாத்துக்கொள்ள அப்படி அப்படியே தினகரனை கழட்டி விட்டு விட்டு, எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அணி திரண்டு, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி மொத்த விவரங்களையும் திரட்டிய அனுராதா, தினகரனிடம் நிறைய பேசியுள்ளார்.
அப்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தினகரனிடம் கூறி, அமைதியாக, அமைச்சர்கள் விருப்பம் போல ஒதுங்கி விடுங்கள்.
இல்லையென்றால், அவர்கள் தொண்டர்களை திரட்டி உங்களை விரட்டி அடிக்கக் கூடும். அது, அவமானத்தை ஏற்படுத்தி விடும்.
இனி, எக்காரணம் கொண்டும் போயஸ் தோட்டம் பக்கமோ, தலைமைக் கழகம் பக்கமோ போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; ஒட்டுமொத்த நம் குடும்பத்தினரின் கருத்தும்தான்.
மன்னார்குடி குடும்பம் மாபியா குடும்பம் என்று எல்லா மட்டங்களிலும் சொல்லப்படுகிறது. இந்த மன்னார்குடி குடும்பத்தின் ஒட்டுமொத்த கருத்தும் கூட, சசிகலாவும், தினகரனும் கட்சி ஆட்சியில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான்.
குடும்பமும் கைவிட்ட பின்னால், யாரை நம்பி நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களை ஆதரிப்பதாக கூறும் ஆறு எம்.எல்.ஏ.,க்களும் கூட, நாளையே கூட, அந்தப் பக்கம் போய் விடுவர். அதனால், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம்.
குடும்பமும் கைவிட்ட பின்னால், யாரை நம்பி நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களை ஆதரிப்பதாக கூறும் ஆறு எம்.எல்.ஏ.,க்களும் கூட, நாளையே கூட, அந்தப் பக்கம் போய் விடுவர். அதனால், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம்.
பெரும் ஆபத்தில் முடியும்.
எனவே, அமைதியாக, ஒதுங்கி விடலாம். அதுதான், நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது. இதுவரை சம்பாதித்ததையாவது காப்பாற்றலாம்.இப்போதைக்கு ஒதுங்குங்கள். இல்லாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.
அதிமுக கடசி தொண்டர்களுக்கு சசிகலா மீது பாசம்,மரியாதை இல்லை.கோபம்தான் உள்ளது.அதேதான் சசிகலா குடும்பத்தினர் மீதும். ஒதுங்கி வழக்கு போக்குகள் எப்படி போகிறது என பார்த்துவிட்டு, அதன்படி செயல்படலாம் என்றுட கூறியிருக்கிறார் .
நடப்புகளை பற்றி தினகரன் யோசித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்தே, அவர், அமைச்சர்கள் விருப்பப்படி, கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும் ஆனால் துணைப்பொதுசெயலாளர் பதவியை விட மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.