இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 12 ஏப்ரல், 2017

மோடி வழிகாட்டல்

இப்போது நடப்பவைகளைப்பார்க்கையில் இவை எல்லாம் தினகரன் ரா.கி.நகர் தேர்தலில் பணத்தை வரை இறைத்ததற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக மட்டும் இல்ல.

இதே ரா.கி.நகர் இடைத்தர்தலிலும்,2016 பொதுத்தேர்தலில் அதிமுக தலைவி ஜெயலலிதா திருமங்கலம்,தினகரன் பாணி  தேர்தல் நடவடிக்கைகளைத்தானே கடைபிடித்தார்.

அப்போதும் காவல்துறை,தேர்தல் அலுவலர்கள் பிரவீன்குமார் முதல் ராஜேஷ் லக்கானி வரை ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தானே நடந்து கொண்டனர்.

அப்போது எடுக்காத பணம் வாரி இரைப்பு நடவடிக்கை இப்போது முழுவீச்சில் நடக்க காரணம்.
தமிழகம் முழுக்க எல்லாத்தொகுதிகளிலும் அதிமுகவின் பணம் கொடுக்கையில் தஞ்சாவூர்,அரவக்குறிச்சியில் மட்டுமே தேர்தல் நிறுத்தப்பட்டது.
காரணம் அங்கு பணம் கொடுத்தாலும் திமுக வெல்லும் நிலை.

ராதாபுரத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வென்ற பின்னர் அவருக்கு கிடைத்த தபால் வாக்குகளை செல்லாது என்று தேர்தல் அலுவலர் சொல்லி அதிமுகவை வெற்றி பெறவைக்கையில் இந்த தேர்தல் ஆணையம் முறையாக நடந்து கொண்டதா?

அதிமுகவுக்கு ஆதரவாகத்தானே நடந்து கொண்டது.அதற்காக விதியையே தலைமை ஆசிரியர் கையெழுத்திருந்தால் செல்லும் என்பதை அப்படி இல்லை என திருத்தம் பழைய தேதியில்  போட்டு40 வாக்குகள் மயிரிழையில்  இன்பத்துரையை ச.ம.உ.ஆக்கியதே.

அப்படி பட்ட திமுக எதிரியான தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கைகளை தூள் பரப்பாக காரணம்.

மத்திய பாஜக மோடி அரசு வழிகாட்டல்தான்.
பாஜக ஆதரவாக ஓ.பன்னிர்செல்வம் இருக்கையில் சசிகலா அணி வெல்ல எப்படி ஒத்துக்கொள்ளமுடியும்.
பணம்கொடுப்பது வாக்கு கொடுப்பது பிரசனையே இல்லை.
நம் தமிழக மக்கள் தேர்தல் நெருங்கையில் யாருக்கு ஆதரவாக இருந்தாலும் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்கும்  நாணயவான்கள்.

அதிலும் சத்தியம் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கையில் மாற்றிப்போட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று அதீத பயம் உள்ளவர்கள்.

இதை ஜெயலலிதா 2016தேர்தலில் பயன் படுத்தி தன மீது உள்ள வெறுப்புகளையெல்லாம் தாண்டி வென்றதை கண்டு வாழ்த்து தெரிவித்தவர்தானே மோடி.
எனவேதான் பணம் புகுந்து விளையாடுகையில் அதை வைத்தே தினகரன் கண்ணைக்குத்த சசிகலா கொம்பை ஒடிக்க மோடியின் பாஜக திட்டமிட்டது.

ஆயிரக்கணக்கில் தேர்தற்ப்பார்வையாளர்கள் இருக்கையில் மத்திய காவல் படையினர் அலையும் போது பயமே இல்லாமல் தினகரன் பணம் கொடுக்க வாய்ப்பை உண்டாக்கி கொடுத்தது தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் புலம்பியதற்கும் அதுவே காரணம்.
வசமாக கையும்களவுமாக தினகரனை பிடித்து ஆணியடிக்க வாய்ப்பைத்தான் எதிர்பார்த்தது.
பணம் வரும் இடத்தையும் கண்டுகொண்டு மெத்தனமாக இருக்கவைத்து விஜய பாஸ்கரை பொறியில் மாட்டி சோதனை செய்து தேர்தலையே நிறுத்தி விட்டது.

தேர்தல் ஆணைய விதிகளின் படி பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு குற்றசாட்டு வந்தவுடனே குற்றசாட்டு குறிப்பாணை கொடுத்து அவரை விசாரணை செய்து பணம் கொடுத்தது உண்மையென ஆதாரங்கள் வலுவாக இருந்தால் தேர்தலில் நிற்க தடையும்,4முதல் 6 ஆண்டுகள் சிறையும் வழங்கலாம்.

ஆனால் ஒரு தொகுதியின் தேர்தலையே நிறுத்துவது அனைத்து வேட்பாளர்களும் பணம் கொடுத்தார்கள் என்ற ஆதாரம் இருந்தால் மட்டுமே நடக்கும் அசாதாரணம்.
நன்றாக படித்து வந்து பல மாணவர்கள் தேர்வெழுதுகையில் ஒரு மாணவன் மறைவாக புத்தகத்தை பார்த்து எழுதினான் என்றால் எடுக்கும் நடவடிக்கை தேர்வையா நிறுத்துவார்கள்?
அல்லது அந்த திருட்டு மாணவனை மட்டும் வெளியேற்றுவார்களா?

ஒட்டு மொத்தமாக கேள்வித்தாள் வெளியாகி விட்டால் மட்டுமே தேர்வை ஒத்தி வைப்பார்கள்.!

தேர்தல் ஆணையத்துக்கு 1.10 கோடிகள் செலவாம்.
அது மக்களின் வரிப்பணம்.

மற்ற வேட்பாளர்கள் செலவிட்ட தொகையை தேர்தல் ஆணையம் திருப்பி தருமா?அவர்கள் கணக்கில் காட்டிய பணத்தைத்தான்.

ஆக தேர்தலை நிறுத்துவது தேர்தல் ஆணையத்தின் முழுமனது முடிவல்ல.

பாஜக மத்திய அரசின் வெளிப்பாடு.

இந்த பாஜக அரசின் குறிக்கோள்.விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசசாமி முதல் 8 அமைசர்கள்,ச.ம.உ.க்கள் ,மக்களவை உறுப்பினர்கள்  பெயர்கள் உள்ளது.
அவர்கள் மீதெல்லாம் நடவடிககி எடுக்கையில் ஆட்சியே ஆட்டம் காணும்,ஏற்கனவே கூவத்தூர் ,3 கோடிகள்,3கிலோ நகைகள் தொடர்பாக ஆதாரங்களும் ஆளுநர் மூலம் மோடி கைகளில்  உள்ளது.

அதிமுக ஆட்சி ஜெயலலிதா சமாதிக்கருகில் ஆணியடிக்கப்பட்டு விடும் என்றுதான் தெரிகிறது.
இதற்குத்தான் அமித் ஷா கோடிட்டு கொடுத்திருக்கிறார்.

வருமான வரி துறை,தேர்தல் ஆணையம் ,ஆளுநர் (பொறுப்பு)அதில் சாலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிர்க்கட் சிகள் ஆளுநரிடம் கொடுக்கும் ஆடசிக்கவிழ்ப்பு மனுக்களே கிரியா ஊக்கிகள் .
ஆனால் இதனால் எல்லாம் பாஜக தமிழ் நாட்டில் வளர்ந்து விடுமென்றோ ஆட்சியை கைப்பற்றி விடுமென்றோ எண்ணினால் அது கானல் நீர் கனவுதான்.

=========================================================================================
ன்று,
ஏப்ரல்-12.
  • அனைத்துலக  விண்வெளி பயண தினம்

  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)

  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)

  • ஜிம்பாப்வே டாலர், ஜிம்பாப்வேவின் நாணயமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது(2009)
=========================================================================================