நீர் மறுசுழற்சி

மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் மறுசுழற்சி செய்யும் அமைப்பை தொழிற்சாலைகளில் அமைத்து, சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும். 
இந்த அமைப்புகளை ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், வல்லம், ஒரகடம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைந்து உள்ளது.
 இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகம் மட்டு மின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் இங்கு பணியாற்றுகின்றனர்.
ஒவ்வொரு சிப்காட் பகுதி யிலும் சிப்காட் திட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இவை, சிப்காட் பகுதியின் சாலை, மின்விளக்கு, தொழிற்சாலைகளுக்கு குடிநீர் வினியோகம்உள்ளிட்ட, பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றன. 
தொழிற்சாலைகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் மற்றும் சிப்காட் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தவில்லை. 
இதனால், மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் சேகரித்து வைக்கப்படாமல் வீணாக வெளியேறி விடுகிறது. அரசு அலுவலகங்களில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றை அதிகாரிகளும் கண்டு கொள்வதே இல்லை.
இதே போல, தொழிற்சாலைகளில் வீணாகும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் அமைப்பும் இங்கு இல்லை. சிக்கனமின்றி பயன்படுத்தப்படும் நீர், அதிக அளவில் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. 

கோடைக்காலத்தில் கடுமை யான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் குடிநீர் மறுசுழற்சி அமைப்புகளை அமைக்காத தொழிற்சாலைகளை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தொலைநோக்கு சிந்தனையுடன், நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.

==========================================================================================
ன்று,
ஏப்ரல்-21.
  • பிரேசீலியா, பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது(1960)
  • பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது (1944)
  • பாவேந்தர் பாரதிதாசன் இறந்த தினம்(1964)
  • ரோம் நகரம் அமைக்கப்பட்டது(கிமு 753)
============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?