இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 5 ஏப்ரல், 2017

மாரடைப்பிலிருந்து பாதுகாக்கமாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் மருந்தாக வேர்கடலை உள்ளது. பல்வேறு உடல் பிரச்னைக்கு எளிதான தீர்வாக இந்த வேர்கடலை உள்ளது.
உடலுக்கு தேவையான பல உயிர் சத்துக்களான புரதம், கார்போஹைட்ரேட், நார் சத்து, உடலுக்கு தேவையான கொழுப்பு ஆகியவற்றை கொண்டது.
அதேபோல் அனைத்து வகையான விட்டமின்களும், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க்,காப்பர்,மாங்கனீசு,செலினியம் போன்ற கனிமங்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.


இந்த வேர்கடலையை உணவாக கொண்டால் உடல் எடையை சீராக்கும் (உடல் எடை குறைக்கும்), இதயக்கோளாருகளை நீக்குவதோடு, மாரடைப்பு ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். அதே போல் பித்தப்பை கல் ஏற்படாமல் தடுக்கும்.

மனிதனுக்கு முக்கிய சத்துக்கள் அளிக்கக் கூடிய வேர்கடலையை, மக்களிடமிருந்து பிரித்து, வெளிநாட்டு பொருட்களை புகுத்தும் நோக்கில், கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மேற்கத்திய  வெளிநாட்டு நிறுவனங்கள், வேர்கடலை மனித உடலுக்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என பொய்யான தகவலை பரப்பி, மக்களிடம் அதன் பயன்பாடுகளை குறைத்தனர்.

அதே வேளையில், கிழக்கிந்திய கம்பெனி,அமெரிக்கா இந்தியாவில் விளைந்து விலையில்லாமல் போன வேர்கடலையை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி, வேர்கடலை சாக்லெட்டாக விற்பனை செய்து கொள்ளை  லாபம் சம்பாதித்தது.
=============================================================================

கோடையை சமாளிக்க இயற்கை தரும் கொடையே நுங்கு. 
இதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய நவீன யுகத்தில் பலருக்கும் நுங்கு என்றால் எதோ போதை வஸ்தைப் போல பார்க்கிறார்கள்..உண்மையில், நுங்கு மிகவும் பாரம்பரியமான, சத்தான, இயற்கை உணவாகும்.

இயற்கை தரும் எத்தனையோ அளப்பரிய கொடைகளில், நுங்குவும் ஒன்று. குறிப்பாக, கோடைகாலத்தில்தான் நுங்கு சீசன் இருக்கும். காரணம், கோடை வெப்பத்தை சமாளிக்க, நுங்கு உதவுகிறது.

ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ற பொருட்களையே இயற்கை விளைவிக்கிறது. அந்த வரிசையில் கோடைக்கு உகந்த நுங்கு, நமக்குப் பலவித நன்மைகளை தருகிறது.
பனை மரத்தில், ஆண், பெண் என 2 வகைகள் உண்டு. இதில், நுங்கு, பெண் பனையில் இருந்து உருவாகிறது.

நுங்குவை தோலோடு சாப்பிட வேண்டும். இதில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், தையமின், வைட்டமின் சி ஆகியன நிரம்பியுள்ளன. 

அம்மை நோய் தாக்கியவர்கள் நுங்கு சாப்பிட்டால் உடல் குளிர்ச்சிபெறும். பனை மரங்கள் வட மாநிலங்களில் கிடையாது. இது தென்னிந்திய மாநிலங்களுக்கே உரிய தனித்துவமான மரமாகும். 
 பனை மரத்தைக் காப்பாற்ற முயற்சிப்போம்.
======================================================================================
ன்று,
ஏப்ரல்-05.
  • இந்திய தேசிய கடல்சார் தினம்
  • பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
  • அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1782)
  • மகாத்மா காந்தி, தண்டி யாத்திரையை நிறைவு செய்தார்(1930)
  • ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)


ஜெகஜீவன்ராம், 
பீஹார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில், சோபிராம் - வசந்திதேவி தம்பதிக்கு மகனாக1908 ஏப்ரல் 5ல் பிறந்தார். 
அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், 1931ல் காங்கிரசில் 
 இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறை சென்றவர், 
1936 முதல் 1986 வரை, 50 ஆண்டுகள், எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக இருந்தவர்.
மத்திய அரசில், பல்வேறு துறைகளில், கேபினட் அமைச்சராகவும் பணியாற்றியவர். 
பீஹார் மாநிலம், சசாராம் லோக்சபா தொகுதியில், 1952 முதல், 1984 வரை, எட்டு முறை தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்தவர். 
மத்திய அரசில், 1977 - 1979 வரை, பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், துணைப் பிரதமராக இருந்தார். 
இவரது மகள் மீராகுமார், லோக்சபா சபாநாயகராக பணியாற்றியவர். 
======================================================================================