மீ திப்பணம் 8.5 கோடிகள் எங்கே ?

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணைய  அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க,நீதிமன்றம்  அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர். 
தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான, இரட்டை இலை முடக்கப்பட்டது.சின்னத்தை பெறுவதற்காக, சசிகலா அணியைச் சேர்ந்த, அவரது உறவினர் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலமாக தேர்தல்  ஆணைய அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்தார்.
அதற்கான தொகையில் முன்பணமாக 10 கோடிகள் ஹவாலா மூலம் இடைத்தரகர் சுகேஷ் சந்தருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் இடைத்தரகர் சுகேஷ் சந்தரை  காவல்துறையினர் கைது செய்யும் போது 1.5 கோடிகள் மட்டுமே அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
மீ திப்பணம் 8.5 கோடிகள் சின்னம் வகைக்கு யாருக்கோ பட்டுவாடா ஆகியுள்ளது. 

டில்லி ஓட்டல் ஒன்றில், 1.5 கோடி ரூபாயுடன் சிக்கிய, சுகேஷ் சந்தரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தகவல் அம்பலம் ஆனது. 

இதையடுத்து, தினகரன் - சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு ஆதாரம் அடிப்படையில், 'விசாரணைக்கு நேரில் வர கூறி  டில்லி போலீஸ், தினகரனுக்கு  கடுதாசி  அனுப்பியது. 
அதன்படி, டில்லி சென்ற தினகரன், அவர் உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லி கார்ஜுனா ஆகியோரிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். நான்கு நாட்கள் நடந்த விசாரணையில்  முதலில் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று மறுத்து வந்த தினகரன் காவல்துறையினர் பல்வேறு ஆதாரங்களை முன் வைத்து கேட்ட, கிடுக்கிப்பிடி கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, தினகரனை, நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் கைது செய்தனர். பின், 
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி பூனம் சவுத்ரி முன்,தினகரனை டில்லி போலீசார், நேற்று, முன்னிலைப்படுத்தினர் .

 டில்லி போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தினகரன் வழக்கறிஞர் வாதங் களை கேட்ட நீதிபதி, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, தினகரனை விசாரிக்க அனுமதி வழங்கினார். 

தினகரனுடன் கைது செய்யப்பட்ட, அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவையும், ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி வழங்கினார். 
இதையடுத்து, வரும், மே, 1ம் தேதி வரை, தினகரனிடம், மல்லிகார்ஜுனாவிடமும், போலீசார், அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர். சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்க ளுக்கு, தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த தினகரன், 70 நாட்களுக்கு முன், அவரது சித்தி, சசிகலா வால், துணைப் பொதுச் செயலராக நியமிக்கப் பட்டார். டில்லிபோலீசாரின் அதிரடியால், அவரது அரசியல் ஆட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
டில்லி சிறப்பு நீதிமன்றத்தில்  தினகரன் நிறுத்தப் படுத்தப்பட்டபோது, போலீஸ் தரப்பில்  அரசு வழக்கறிஞர் சிங், வாதிடும்போது 

இடைத்தரகர் சுகேஷ் சந்தருடன், தினகரன் பேசிய மொபைல் போனை கைப்பற்ற வேண்டிய அவசியம் போலீசுக்கு உள்ளது. அதை தினகரன் எங்கேயோ பத்திரப்படுத்தி மறைத்து வைத்துள்ளார்.அதில் முழு விபரங்களும் பதிவாகியுள்ளது.பணப்பரிமாற்றம் நடந்த விதம் குறித்து, மேல் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. எனவே, ஏழு நாட்கள், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். என்றார் 

தினகரன் தரப்பில்  மூத்த வழக்கறி ஞர், விகாஷ் பக்வா, தன் வாதத்தில் கூறியதாவது: தினகரனிடம், நான்கு நாட்களாக விசாரணை நடத்திய போலீசார், ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எந்த சாட்சிய மும் இல்லாத நிலையில், பொய்யான விசாரணை நடக்கிறது. 

மிக அவசியமான சந்தர்ப்பத்தில் மட்டுமே, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
தேர்தல் கமிஷனுக்கு,60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக, தினகரன் கைது செய்யப்ப ட்டதை தொடர்ந்து, அந்த வருமானம் வந்த விதம் தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. 
தினகரனும், அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவும், சிறப்பு கோர்ட் நீதிபதி முன் நிறுத்தப் படுத்தப்பட்டனர். 
தினகரனை முன்னிலையாக்கம்  செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்நீதிமன்ற  வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களை, அங்கிருந்து வெளியேறும்படி, நீதிபதி உத்தரவிட்டார். 
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்கள், 45 நிமிடம் நடந்தது. முன்னதாக, 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், தினகரனை நெருங்க முடியாதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 
முன்னதாக, டில்லி கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில், தினகரனை, அவரது மனைவி சந்தித்ததாகவும் தெரிகிறது.
தினகரனிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தும் நிலையில், இந்த பணப் பரிவர்த்தனை விஷயத்தில், அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் யாரேனும் உதவி யுள்ளனரா என்ற விபரம் தெரிய வரும். 
இத்துடன் விசாரணையை நிறுத்தி விடக்கூடாது.கையூட்டு கொடுக்க அவர்கள் அணுகிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டறியப்பட்டு அவர்களையும் தண்டனை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். 
அவர் கள் பெயரையும், வாக்குமூலத்தில், தினகரன் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால் அதன் பேரிலும் விசாரணையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கனவே, வருமான வரித்துறை கண்காணிப் பில் இருக்கும் அமைச்சர்களின் பெயரை, தினகரன் சொல்லும் பட்சத்தில், அவர்களை நோக்கி, வருமான வரித்துறை திரும்பும் என தெரிகிறது. மேலும், தினகரனின் உறவினர் களும், தங்கள் மோசடிகளும்,சொத்துக்குவிப்புகளும் வெளியாகி தாங்களும் உள்ளே போகவேண்டுமோ என்ற திகிலில் மாரடைப்பு உண்டாகும் நிலைவரை பதட்டமாக உள்ளனர்.

"தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் சிறைக்குப் போக நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன்" 
- நாஞ்சில் சம்பத்

என்ன தற்கொலையாகலையா?

இப்போ விசாரிக்க தான் 5 நாட்கள் உள்ளே இருக்கிறார்.உள்ளே நிரந்தரமாக போகட்டும்னு.காத்திருக்கேன்.


=========================================================================================
ன்று,
ஏப்ரல்-27.
  • டோகோ விடுதலை நாள்(1960)
  • சியேரா லியோனி விடுதலை நாள்(1961)
  • தென்ஆப்ரிக்கா விடுதலை தினம்
  • ==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?