இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 6 ஏப்ரல், 2017

மக்களின் சேமிப்பில் கொள்ளை

"ஒரு மாணவி, சில ஆண்டுகளுக்கு முன், 500 ரூபாய் செலுத்தி இருந்தார். அந்த கணக்கை அவர் முடிக்க வந்த போது, அபராதத் தொகையை கழித்து விட்டு, 20 ரூபாய் மட்டும் கொடுத்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது' என்றார் எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி ஒருவர். 

இந்திய  ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம் 
வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை கடுமையாக அதிர வைத்துள்ளது. 
பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், இந்திய  ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.

இதன்படி, மாநகரங்களில், 5,000; 
நகரங்களில், 3,000; 
சிறிய நகரங்களில், 2,000, 
கிராமங்களில், 1,000 ரூபாய் என, இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இது குறையும்பட்சத்தில், தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படவுள்ளது. 

இதனால், இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் வங்கிக் கணக்கை மூட விரும்புகின்றனர். இதற்காக, வங்கியை அணுகினால் சேமிப்பு கணக்குக்கு 575 ரூபாய்
 நடப்புக் கணக்கை மூடுவதாக இருந்தால், 1,000 ரூபாய்க்கு மேலாகவே அபராதம் என்று சேமிப்பு பணம்   வசூலிக்கப்படுகிறது. 

மக்களிடம் சேமிப்பு பழக்கம் வர வேண்டும் என்பதற்காகத்தான் வங்கிகள்,தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகள் துவக்கப்பட்டது.

மக்கள் சேமிப்புக்கு ஆண்டுக்கு 12% வட்டி வழங்கப்பட்ட காலம் போய் கழுதை கட்டெறும்பாக தேய்ந்தது போல்.இன்று 4.5% மாக வந்துள்ளது.

அப்படி மக்கள் பணம் வங்கியில் இருப்பதற்கு தற்போது வங்கிகள் வேட்டையை விட  வங்கியில் மக்கள் பணம் வைத்திருப்பதற்கு  தண்டம் செலுத்தும்  நிலையை மோடி அரசு உண்டாக்கி விட்டது.
குறைந்த பட்ச  இருப்புத் தொகை என்று குறிப்பிட்டு அதற்கும் அபராதம்,சேவை கட்டணம் என்று மக்களின் சேமிப்பு கொள்ளையடிக்கப்படுகிறது.

இதற்கு தனியார் நிதி  நிறுவனங்களே பரவாயில்லை என்றும்,பழையபடி கடுகு டப்பாவிலும் பணத்தை மக்கள் வைக்கும் நிலைக்கு வங்கிகள் மூலம் அரசு கொண்டு செல்கிறது.

பின் அந்த பணத்தையே கறுப்புப்பணம் என்று மக்களை உள்ளே தள்ளவும் வழி செய்கிறது.
அம்பானி,அதனை,விஜய் மல்லையா என்று ஆயிரம் கோடிகளில் பணத்தை வராக்கடனாக கொடுத்து விட்டு அதை சரிக்கட்ட அப்பாவி மக்களின் சேமிப்பில் கொள்ளையடிக்கும் இந்த வங்கிக்கொள்ளையர்களை ரிசர்வ் வங்கியும்,மத்திய நிதித்துறையும் ,நீதித்துறையும் தான் நேர் செய்ய வேண்டும்.
ஆனால் அது மோடி போன்ற ஏழைப் பணக்கார பங்காளன் ஆடசியில் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
"விவசாய கடனை தள்ளுபடி செய்வது, நேர்மையான கடன் கொள்கையை பாதிக்கும்"
- ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்

விவசாய கடன்களைத்தள்ளுபடி செய்தால் விவசாயம் முன்னேறி விடும் பின் அம்பானி அதானி,விஜய் மல்லையா க்கள் எப்படி கொள்ளைலாபம் சம்பாதிக்கமுடியும்.அவர்களுக்கு நேர்மையான கடன் கொள்கை மூலம் மூவாயிரம் ,நாலாயிரம் கோடிகளில் கடனை தள்ளுபடி செய்யமுடியும்?கண்டிப்பாக ஏழைகள்,விவசாயிகள்,மாணவர்கள் கடன்களை தள்ளுபடி செய்ய கூடாது.
========================================================================================
ன்று ,
ஏப்ரல்--06.
  • ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது(கிமு 648)
  • செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது(1869)
  • 1500 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின(1896)
  • திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்டது(1947)
========================================================================================