ஊழல் பேர்வழிக்கு மீண்டும் பணி

நாடு முழுவதும் பரபரப்புக்குள் ளான வருமான வரித்துறை ரெய்டுக் குள்ளாகி, காத்திருப்புப் பட்டியலில் ஏறக்குறைய மூன்று மாதங்களாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இது அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையிலேயே வருமான வரித்துறை சோதனை 21.12.2016 அன்று நடந்தது. மேற்படி சோதனைக்குப் பிறகும் மாற்றப்படாமல் இருந்தார். 
அது மட்டுமல்ல, “நான் இன்னமும் தலைமைச் செயலாளர்தான். என்னை யாரும் மாற்ற முடியாது” என்று சவால் விடுத்துப் பேட்டியளித்தார். 
தனது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கே அவப்பெயரைத் தேடித் தந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், தமிழக அரசு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வருமான வரி சோதனைக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளால் வேறு வழியின்றி ராம மோகனராவ் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து டிசம்பர் 22 அன்று மாற்றப்பட்டார். ஆனால்முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தவரை அவர் மீது வேறு எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. 
சோதனை நடைபெற்ற போது முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் அது பற்றிகருத்தும் கூறவில்லை. 
சட்டமன்றத்தில் கூட இந்த சோதனை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ. 30 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
ராம மோகன ராவின் உறவினர் வீடுகளிலிருந்து, 42 முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் கைப்பற்றப்பட்டதுடன், வருமான வரித்துறையினரிடம் சிக்கிய சேகர் ரெட்டியிடமிருந்து, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகனுக்கு ரூ. 17 கோடி கைமாறி இருப்பதற்கான ஆதாரங்களும், ராமமோகன ராவின் மகன் விவேக், ரூ. 5 கோடிக்கான வருமான விவரங்களை மறைத்ததற்கான ஆதாரங்களும் சிக்கி இருப்பதாக, வருமான வரித்துறையின் புலனாய்வு வட்டாரங்கள் கூறின.
ராம மோகன ராவ் வீடு மட்டுமன்றி, திருவான்மியூர் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வரும் அவரது மகன் விவேக் வீடு, இதேபோல ஆந்திரா மாநிலம் சித்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள ராமமோகன ராவின் உறவினர் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத் தப்பட்டது.





தமிழக அரசின் நிர்வாக அமைப்பின் மிக உயர்ந்த பொறு ப்பில் உள்ள அதிகாரி வீட்டிலும், அவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது தமிழகத்திற்கே தலைகுனிவாக அமைந்தது. 

வருமான வரித்துறையின் அதிரடி சோதனைக்கு தலைமைச்செயலாளர் உள்ளாக்கப்பட்ட தன் மூலம் அந்த பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்து விட்டார். 
இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப் பட்டார்.இதனிடையே, ராம மோகனராவுடன் தொடர்புடைய வரான மணல் மாபியா கும்பல் தலைவன் சேகர ரெட்டி, இரண்டாவது முறையாகவும் கைது செய்யப்பட்டார். 
இதுதொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன. இவர்களுக்கு இடையில் இருக்கும் தொடர்புகள், இவர்களது நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றியெல்லாம் இன்னும் விசாரணைகள் நடந்து கொண்டிருக் கின்றன.
இத்தகைய சூழலில் அர சியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற் படுத்தும் விதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ராம மோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியுள்ளது.
ராம மோகனராவ் - சேகர் ரெட்டி தொடர்புகளும், சேகர் ரெட்டி - ஓ.பன்னீர்செல்வம் தொடர்புகளும் தமிழகத்தையே உலுக்கிய விவகாரங்கள்; அதிமுக இரண்டாக உடைந்து பன்னீர்செல்வம் கோஷ்டியும், சசிகலா கோஷ்டியும் ஒருபுறம்தீவிரமாக மோதிக் கொண்டிரு க்கின்றன; 
மறுபுறம் பன்னீர்செ ல்வத்திற்கு தொடர்புடைய சேகர் ரெட்டியுடன் மிக நெருங்கிய ஊழல் பேர்வழி ராமமோகன ராவுக்கு சசிகலா கோஷ்டியின் அரசு மீண்டும் பதவி வழங்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
=======================================================================================
ன்று,
ஏப்ரல்-01.
325: சீனாவில் 4 வயதான ஜின் செங்டி தனது மன்னராக நியமிக்கப்பட்டார். 
1867: சிங்கப்பூர் பிரிட்டனின் காலனியாகியது. 
1873: பிரித்தானிய கப்பலொன்று  மூழ்கியதால் 547 பேர் பலி. 
1918: பிரித்தனரிய விமானப்படை உருவாக்ப்பட்டது. 
1924: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர் கிளர்சியில் பங்கேற்றமைக்காக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 
1946: ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் 159 பேர் பலி. 
1949: அயர்லாந்து குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. 
1957: சுவிட்ஸர்லாந்தில் 'நூடில்ஸ் பயிராகவே வளர்க்கப்படுவதாக ' பிபிசியில் ஒளிபரப்பான ஏப்ரல் முட்டாள் தின   காணொளி பலரை முட்டாளாக்கியது. 
1979: ஈரானை இஸ்லாமிய குடியரசாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் 98 சதவீதமானோர் ஆதரவளித்து வாக்களித்தனர். 
1992: பொஸ்னிய  யுத்தம் ஆரம்பமானது. 
2001: யுத்த குற்றச்சாட்டுக்குள்ளான யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் சரணடைந்தார். 
2001: ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடாக நெதர்லாந்து அறிமுகமாகியது. 
========================================================================================
சுண்டைக்காய்

சுண்டைக்காயில் பால் சுண்டை மற்றும் மலை அல்லது காட்டு சுண்டை என இரண்டு வகை உள்ளது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. 
சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது. 

குடல் புழுக்களை அகற்றி செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. குறிப்பாக ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. 
வயிறு வீக்கம் காண்பது, வயிறு உப்புசம், வயிறு பொருமல், அஜீரண கோளாறுகளுக்கு சுண்டை வற்றல் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. 
பல சத்துக்களை உள்ளடக்கிய டானிக்காகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. 
சுண்டைக்காயை பயன்படுத்தி வயிற்று புழுக்களை அகற்றும் துவையல் செய்யலாம். 

சுண்டைக்காய் துவையல்: 

சுண்டைக்காய்(நசுக்கி தண்ணீரில் போட்டது), சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், புளி, வரமிளகாய், தேங்காய் துண்டு, பெருங்காயப்பொடி, உப்பு, சீரகம். வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்க்கவும். 
இதனுடன் சுண்டைக்காய், தேங்காய் துண்டு சேர்த்து வதக்கவும். இந்த கலவையுடன் பெருங்காயப்பொடி, புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து கொள்ளவும். 

சுண்டைக்காயின் கசப்பு தன்மையை மறைத்து உணவுக்கு சுவை ஊட்டுவதற்கென, வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயப்பொடி, சீரகம் சேர்த்து பொரிய விடவும். 
இதனுடன் துவையலை சேர்த்து வதக்கி எடுப்பதால் நல்ல சுவை கிடைக்கும். 
சுண்டைக்காயை மைய அரைத்து துவையலாக பயன்படுத்துவதால் வயிற்று கோளாறுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது. 

இதில் உள்ள கார்பனேட்டிவ் தன்மை வயிற்றில் சேரும் காற்றினை அகற்றுகிறது. 
தினமும் எடுத்துக்கொள்வதால் வயிற்று கிருமிகளை வெளித்தள்ளுகிறது. 

இருமலை சரிசெய்யும் சுண்டை வற்றல்: 

 சுண்டைக்காய், புளி, மோர், தயிர். 
சுண்டைக்காயை நசுக்கி தயிர் அல்லது புளி கரைசலில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின் 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயவைத்து எடுப்பதால் சுண்டை வற்றலாக பல நாட்கள் கெடாமல் சேர்த்து வைக்கலாம். 

வற்றலை பொடி செய்து இருமலுக்கு மருந்தாகவும், வயிற்று வலி, உப்புசம் கோளாறுக்கு சிறந்த பானமாகவும் பயன்படுத்தலாம். வயிற்று கோளாறின் போது சுண்டை வற்றல் பொடியை, மோரில் உப்புடன் கலந்து குடிக்கலாம். 

அதேபோல் இருமல் வேளைகளில் சுண்டை வற்றல் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். 
நெஞ்சக சளியை வேர் அறுக்கும் சுண்டை வற்றலை தினமும் பயன்படுத்துதல் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரவல்லதாய் இருக்கிறது. 

மரங்களை அழித்து மழையை தடுப்போம்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?