யாருக்கு (தமிழ்ப்) புத்தாண்டு.?


இன்று சிலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கு வழங்கினர்.

எனக்கான தமிழ்ப் புத்தாண்டு "தை"முதல் நாளிலேயே துவங்கி விட்டது. உலகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்கும் ஓராண்டு கணக்கான அறிவியல் ரீதியலும் ,தமிழர் பண்பாட்டு படியும் தை யே சரி.


“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! இது பாவேந்தர் பாடல்.

ராஜராஜ சோழன் காலத்துக்குப்பின்னர்தான் களப்பிரர் ஆட்சியில் கானாமலாக்கப் பட்டிருந்த பிராமணர்கள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை ராஜக் குருக்களாகி தமிழர்கள் மீது செலுத்தினர்.அப்போதுதான் வர்ணங்கள் அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்து சாதி வேறுபாடுகளை ராஜராஜன் தூக்கிப்பிடித்தான்.

கீழ்ச்சாதியினராக்கப்பட்டவர்கள் மேட்டுக்குடியினர் தெருக்களை நடக்க கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன.
அதேபோல்தான் சித்திரை தமிழர்களுக்கு புத்தாண்டு பிறப்பாக்கப்பட்டது.12 தமிழ் மாதங்களில் தமிழ் பெயர்கள் இல்லை.

அதை விடக் கொடுமை தமிழர் ஆண்டுகள் 60இல் ஒன்று கூட மருந்துக்கும் தமிழ் இல்லை.அனைத்தும் செத்துப்போன கடவுள் மொழியான சமஸ்கிருதம்தான்.

அதை விட அசிங்கம்' பரந்தாமன் நாரதரை பெண் உரு கொள்ள செய்து புணர்ந்து அதில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களைத் தாம் நம் 60 தமிழ் ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் பெருந்தன்மையுடன் இட்டுள்ளார்கள். !

இப்போது சொல்லுங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பிராமணர்களுக்கு.தமிழர்களுக்கு அல்ல.
இன்று பிறப்பதாக சொல்லப்படும் ஹே... விளம்பி..ஆண்டு பிறந்த கதை கீழே 
=================================================================================================

ன்று,
ஏப்ரல்-14.

  • நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார்(1828)
  • அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.(1865)
  •   தாமஸ் ஆல்வா எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.(1894)
  • பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.(1912)
  •  பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.(1944 )
  • ==================================================================================================
  • ஹே... விளம்பி..ஆண்டு வந்த கதை?
    ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம்.
    அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார்.
    ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
    கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் .
    பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள்.
    இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு சொல்கிறது.
    அப்படியாகக் கிருஷ்ணர் நாரதரை 31 வது ஆண்டில் கூடிப் பெற்ற பிள்ளைதான் ஹேவிளம்பி...
    என்ன விளம்புனது வௌங்குச்சா?
    • அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் இந்த புராணக்கதை உள்ளது.

  • -------------------------






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?