சோதனை மேல் சோதனை

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் தினகரன் பனமழையை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்து விட்டது.
ஆனால் இதற்கு பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலை ஒத்தி வைத்து மீண்டும் தேர்தலை நடத்தினால் இப்போது பனமழை பொழிந்த தினகரன்தான் வெற்றி பெறுவார்.
அதற்கு இதற்கு முன்னர் இதே போல் நடந்த தஞ்சாவூர்,அரவக்குறிச்சி தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்த அதிமுகவினர்களே வெற்றி பெற்றதை உதாரணமாக சொல்லுகின்றனர்.
தேர்தல் ஆணையம் தேர்தல்களில் பணம் கொடுப்பதை தடுக்க முடியாத அளவு பலவீனமாக உள்ளது.அதற்கு அதன் நடைமுறைகளும் மாவட்ட தேர்தல் அலுவலர்களும்,காவல் துறையும்தான் காரணம்.
இப்போது தேர்தல் நிறுத்தம் செய்யப்பட நிலையில் அங்கு பனி புரிந்த தேர்தல் அலுவலர்கள்,பணப்பட்டுவாடாவுக்கு உதவிய காவல்துறையினர் மீது விசாரணை,நடவடிக்கை எடுப்பதுதான் சரியான நடவடிக்கை.ஆனால் இதுவரை பணம் இறைக்கப்பட்ட குற்றசாட்டுகள் உள்ள தொகுதிகளில் உள்ள அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறே இல்லை.அதுதான் ஆளுங்கட்சி ஜால்ரா அலுவர்கள்,காவலர்களுக்கு .
இவர்கள் மீது எதிர்  பல  குற்ற சாட்டுகளை புகார் செய்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே போதும்.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பணம் அள்ளிக்கொடுத்த வேட்பாளரே மீண்டும் அங்கு தேர்தல் நடக்கையில் போட்டி போடுவதை தடுக்க அவரை தகுதி நீக்கம் செய்வதுதான் இது போன்று பணம் கொடுத்து வெல்ல எண்ணுபவர்களுக்கு ஒரு பாடமாக,பயமாக அமையும்.
இது போன்ற எண்ணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் குவிய தேர்தல் ஆணையம் சுதாரித்து தினகரன் தகுதி நீக்கம் பற்றி ஆலோசிக்கிறது.
சட்டசபை தொகுதியில், ஒரு வேட்பாளர், 28 லட்சம் ரூபாய்க்கு மேல், செலவு செய்யக்கூடாது. தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு வழங்கிய பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தொகையை, அவர் கணக்கில் சேர்த்தால், கோடிக்கணக்கான ரூபாய் வருகிறது.
எனவே, வரம்புக்கு மீறி செலவு செய்ததன் அடிப்படையில், அவரை தகுதி நீக்கம் செய்து, மூன்று ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும். 
அதற்கு முன், செலவு கணக்கு தொடர்பாக, 'நோட்டீஸ்' அனுப்பி, அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.விளக்கம் ஏற்க முடியாததாக இருந்தால், நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். அதன்பின்னரே, தகுதி நீக்கம் செய்ய முடியும். 
தேர்தல் செலவு, பணம் பட்டுவாடா தொடர்பாக, விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.
தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். 
வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. எதிர்ப்பை குறைத்து, மக்களை தங்கள் பக்கம் இழுக்க, வீடு வீடாக பணம் கொடுக்க, தினகரன் அணியினர் முடிவு செய்தனர். 
அதன்படி, 5ம் தேதி இரவு, வீடு வீடாக சென்று, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் என, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தனர்.இது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 74 பேர் கைது செய்யப்பட்டனர்; 32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கின. மேலும், தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட, தொப்பி சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக, வாக்காளர்கள் அனைவருக்கும், தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
தினகரன் தரப்பில், ஒரு முறை மட்டும், 1,000 தொப்பிகள், 30 ஆயிரம் ரூபாய்க்குவாங்கப்பட்டதாக, தேர்தல் செலவு கணக்கில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு வியாபாரி ஒருவர், தினமும், 10 ஆயிரம் தொப்பிகளை, மூன்று லட்சம் ரூபாய்க்கு வழங்கியுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.இத்தொகை விபரம், தேர்தல் பார்வையாளர்கள் பராமரித்து வந்த, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில், வாக்காளர்களுக்குவழங்கப்பட்ட பணத்தையும், தொப்பி செலவையும், தினகரனின் செலவு கணக்கில் சேர்த்து, அவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. 
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தால், தினகரன் பட்டுவாடாவுக்கு உதவிய,தொழிலதிபர்கள் தவிப்பில் உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகரில் போட்டியிட்ட, அ.தி.மு.க., - சசிகலா அணியை சேர்ந்த தினகரன் தரப்பு, ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கியது. அதற்காக, 89 கோடி ரூபாய் வரை செலவு செய்ததற்கான ஆவணத்தை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தினகரன் தரப்புக்கு பணம் சப்ளை செய்து உதவிய, தொழிலதிபர்கள் தவிப்பில் உள்ளனர்.
தினகரன் அணியினர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தை, மொத்தமாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு வரவில்லை. 
ஆர்.கே.நகரில், சசிகலா அ.தி.மு.க.,வுக்கு வேண்டிய, பைனான்சியர், நகை கடை உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என, பல தொழிலதிபர்கள் உள்ளனர். 
அவர்களிடம் இருந்து, தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கும்படியும், அதை வேறு வழியில் திரும்ப தருவதாகவும் உதவி கேட்கப்பட்டது. அவர்களும், ஆளுங்கட்சியை பகைத்து கொள்ள விரும்பாமல், உதவி செய்வதாக தெரிவித்தனர். 

அதன்படி, தலா, ஒருவரிடம் இருந்து, தினசரி, 20 லட்சம் ரூபாய் வரை ரொக்க பணத்தை பெற்று, 500 பேருக்கு வழங்கப்பட்டது. 
அப்படியே, தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் இருந்து மட்டும், 10 கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது. 
தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், பணம் கொடுத்தவர்கள் தினகரன் தரப்பு  
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது போல், நம் வீடுகளிலும் நடக்குமா என்ற பீதியில் உள்ளனர். 

========================================================================================
ன்று,
ஏப்ரல்-11.
  • ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)
  •  உலக தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது(1919)
  • விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)
  • ========================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?