குடியரசுத்தலைவர் தேர்தல். பா.ஜ.,வுக்கு எதிராக

தற்போதைய குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், ஜூலை, 25 உடன் முடிவடைவதை தொடர்ந்து, புதிய குடியரசுத்தலைவர்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அதற்குள் நடத்தப்பட வேண்டும். 
எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்து, புதிய  குடியரசுத்தலைவரரை தேர்ந்தெடுப்பர். 
மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ.,வுக்கு, மக்களவையில்  பெரும்பான்மை உள்ளபோதும் மாநிலங்கவையில்எம்.பி.,க்கள் போதிய எண்ணிக் கையில் இல்லை.
அதே நேரத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. 
குறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான, உ.பி.,யில், பெரும் பான்மை பலத்துடன், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. 
எனவே, குடியரசுத்தலைவர்   தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், பஞ்சாப், கர்நாடகம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங் களில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கி றது. 
திரிபுரா ,கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்;
 பீஹாரில், ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த முதல் வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.

விரைவில் நடக்கவுள்ள குடியரசுத்தலைவர்   தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டு உள்ளனர். 
 இது குறித்த பேச்சை எதிர்க்கட்சி தலைவர்கள் துவக்கியுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், காங்., தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து பேசினார்.


குடியரசுத்தலைவர்  தேர்தலில், மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, முக்கிய தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் மதவாத,கார்ப்பரேட் ஆதரவு,ஏழைகளுக்கு எதிரான  போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். 

சோனியாவை சந்தித்த நிதிஷ் குமார், இதே கருத்தை முன்வைத்தார்.
மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும். 

இந்த கூட்டணியின் சார்பில் இது குறித்த பேச்சை  தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். 

இதே போல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் பில், தன்னிச்சையாக செயல்பட்டதுடன், மக்களின் சிரமத்தை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத,மேலும் மக்களுக்கு கொடுமைப்படுத்தும் நோக்கில் தினசரி  உயர்வு,வங்கிகள் இருப்புத்தொகைக்கு கட்டணம் ,விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ,பன்னாட்டு -உள்நாட்டு முதலாளிகளுக்கு 1.50 ஆயிரம் கோடிகள் வரி தள்ளுபடி ஆனால் விவசாயிகளின் 100 கோடிகள் அளவிலான கடனைத்தள்ளுபடி செய்யாமல் விவாசாயத்தையே நசுக்கும் செயல்கள்,மானியங்கள் நீக்கம் போன்ற மக்கள் விரோத செயல்களில் செய்யும்  பாஜக  மத்திய அரசை கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்துவது குறித்தும் சோனியாவுடன் நிதிஷ் விவாதித்தார்.

பீஹாரில் ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், காங்., கட்சியும் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து செயல்படுவது குறித்து, நிதிஷ் குமார் ஏற்கனவே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். 

இடதுசாரிகளும், தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்ட ணிக்கு, சோனியா தலைமை ஏற்க வேண்டும் எனவும், நிதிஷ் குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.


இந்த கூட்டணியுடன், டில்லியில் ஆளும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும்,திரிணாமுல் காங்கிரசு  இணைந் தால், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாள ருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் .


=======================================================================================
ன்று,
ஏப்ரல்-22.


  • உலக  புவி நாள்

  • ரஷ்ய புரட்சியாளர்  லெனின் பிறந்த தினம்(1870)

  • பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது(2006)

  •  போர்ச்சுகீசியரான பேதுரோ கப்ரால் முதன் முறையாக பிரேசிலை கண்டார்(1500)
========================================================================================
 செல்லூர் ராஜூவின் ‘புதிய தொழில்நுட்பம்!
வைகை அணைக்கு வந்த சோதனை?

கடும் வெயிலின் காரணமாக வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக புதியதொழில்நுட்பம் ஒன்றை சோதனைமுறையில் தமிழக அரசு செயல் பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.வைகை அணையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவெள்ளிக்கிழமையன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: முதற்கட்டமாக 200 சதுரஅடியில் இச்சோதனையை ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளவிருக்கிறோம்.இதன் மூலம் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சியாகவும், குறிப்பிட்ட அளவு தண்ணீரைப் பாதுகாக்கும் வகையிலும் இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.இதுபோன்ற தொழில்நுட்பம் பல்வேறு வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகள் வைகை அணைத் தண் ணீரையே பெரிதும் நம்பியுள்ளன. தேனி மாவட்டத்திலும் சில பகுதிகளில்வைகை அணையின் நீர் பயன்படுத் தப்பட்டு வருகிறது.தற்போது 142 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் வறட்சி நிலையையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் தமிழகம் எதிர்கொண்டுள்ள இச் சூழ்நிலையில் இது போன்ற தொழில்நுட்பம் அவசியமானதாக உள்ளது. வறட்சியின் பாதிப்பு மக்களுக்குத் தெரியாத வண்ணம் தமிழக அரசு பல்வேறு துரித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
“இதனால் இயற்கை பாதிக்கப்படாதா? தண்ணீர் மாசு ஏற்படும். மீன்களும்,பறவைகளும் பாதிக்கப் படாதா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். 
இதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது சோதனைதான் மேற்கொள்ளப்படுகிறது என்றார். வைகை அணையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி, தேனி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமன், மதுரை மாநகராட்சி பொறியாளர் மதுரம் ஆகியோர் உடனிருந்தனர். “என்னதான் சோதனை முயற்சியாக இருந்தாலும் தெர்மாகோல் அட்டை தண்ணீரில் போட்டவுடன் காற்றுக்கு பறந்து கரைக்கு வந்து விடும்.
 மேலும் இவை உடைந்து தண்ணீரில் மிதக்கும் போது கண்டிப்பாக மீன்களும் பறவைகளும் உண்ணக்கூடும்; அதனால் அவைகள் உயிரிழக்க நேரிடும் ஆபத்து உள்ளது.வைகை அணையை தூர்வாரக்கோரி பல ஆண்டுகள் ஆகின்றது. 
இதனை செய்வதற்கு அரசு இன்னும் முன்வரவில்லை.அணையை தூர்வாரி இருந்தாலே போதிய அளவு தண்ணீர் வைகை அணையில் இருந்தி ருக்கும். 
தற்போது விவசாயிகள் தாங்களாக முன்வந்து, அரசிடம் வைகை அணையினை தூர்வாரும் பணியினை நாங்கள் செய்கின்றோம்; அதில் வரும்மண்ணை எங்களது வயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். அதற்குரிய பணத்தை அரசுக்கு தருகிறோம் என்று கூறுகிறார்கள்.
 இதற்கும் அரசு எந்தவொருமுயற்சியும் எடுக்கவில்லை.”
 இப்போது தண்ணீர் ஆவியாவதால் அதை தடுக்க ‘புதிய தொழில்நுட்பத்தை’ அறிமுகப்படுத்துகிறார்களாம். 
கரையிலிருந்து வீசப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அடுத்த நொடியே கரை க்கு வந்துசேருகின்றன. 
தெர்மாகோல் திட்டம் தோல்வியடைந்ததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ரப்பர் பந்துகளை மிதக்க விட திட்டமிட்டுள்ளதாக  செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பதால் நீர் ஆவியாவதை தடுக்க சோதனை முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவின் பல மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

அட்டைகள் கிழிந்து கரை ஒதுங்கியதால் மரக்கட்டைகளுடன் இணைத்து மிதக்க விடும் முயற்சி எடுக்கப்படும் என்றார். 

ஆனால் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகூல் மிதக்க செய்வதற்காக ரூ.10 லட்சம் அரசு நிதி செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது ஏற்கக்கூடியது அல்ல. தெர்மாகூல் அட்டை 3 நாட்களில் தண்ணீரில் ஊறி முட்டை போன்று உதிர்ந்து விடும். அதனை மீன்கள் மற்றும் பறவைகள் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். மேலும் அட்டைகள் தண்ணீரில் ஊறி நச்சுத்தன்மைக்கு ஆளாகும். 

இது தவிர தெர்மாகூல் அட்டையில் இருக்கும் ரசாயன கலவை நீரில் கலந்து மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும். நிலத்தடி நீரும் பாதிக்கும் எனவே இந்த முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் திட்டத்தினால் உண்டான பள்ளத்தை அமைசசர் ஜெயக்குமார் "மண்ணில் ஈரப்பதம் அதிகரிப்பினால் பள்ளம் உண்டாகியுள்ளது என்று கண்டு பிடித்தார்.
இப்போது செல்லூர் ராஜு முறை.
உலக மகா விஞ்ஞானிகளை விட  அதிமுகவினர் அதிபுத்திசாலிகள் இவர்களை உண்டாக்கிய ஜெக்கு ஒரு ஜெ.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?