பெட்ரோலை ஓரங்கட்ட ஹீலியம் - 3?
இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சந்திரனி லிருந்து,அதிக சக்தியுடைய எரிபொருளான, 'ஹீலியம் - 3' வாயுவை கொண்டு வர, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது. 2030க்குள் இந்த திட்டம் நிறைவேறும்' என, 'இஸ்ரோ' நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'இஸ்ரோ' என்கிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி ஆய்வில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.
சர்வதேச அளவில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு போட்டியாக விண்வெளி ஆய்வில், இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
சந்திரனுக்கு, 2008, அக்டோபரில், 'சந்திராயன் 1' விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், சந்திரனை வெற்றிகரமாக அடைந்து, சந்திரன் பற்றி பல்வேறு தகவல்களை, இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. இதனால், சந்திரனில், கனிம வளம், நீர்வளம் அதிகம் இருப்பது தெரிந்தது.
குறிப்பாக, சந்திரனில், 'ஹீலியம் - 3' வாயு அதிகம் இருப்பது தெரிந்தது. இது, 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும்.
இதனால், சந்திரனிலிருந்து ஹீலியம் - 3 வாயுவை கொண்டு வருவது பற்றி, இஸ்ரோ ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது, இந்தியா, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு, எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறது.
2030ல், இது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2015 - 16ம் ஆண்டில், இந்தியா, 2,020 லட்சம் டன், பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இதனால், எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 2022க்குள், கச்சா எண்ணெய் இறக்குமதியை, 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள் ளது.
இந்த நிலையில், சந்திரனில் உள்ள ஹீலியம் - 3 வாயுவை, பூமிக்கு கொண்டு வந்து, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் தினசரி தங்கத்தைப்போல் விலை பெட்ரோலுக்கும் முடிவு செய்யும் துயரக்கட்டம் மாறும் எனலாம்.
சந்திரனில் உள்ள ஹீலியம் - 3 வாயுவை, பூமிக்கு கொண்டு வருவது தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு. அதிக சக்தி கொண்ட ஹீலியம் வாயுவை கொண்டு தயாரிக்கப்படும் எரிசக்தியை பயன்படுத்து வதால், காற்று மாசுகுறையும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறையும். 2030க்குள், இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என, நம்பிக்கை உள்ளது.
இஸ்ரோ, கடந்த பிப்ரவரி மாதம் ஒரே ராக்கெட்டில், 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றி கரமாக அனுப்பியது. இதுவரை, 225 செயற்கைக் கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியுள் ளது. அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக்கு இணையாக, இஸ்ரோவும் சாதனை படைத்து வருகிறது.
சந்திரனில் ஹீலியம் - -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் கொண்டது.அதேநேரம், சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது; கதிர்வீச்சு இருக்காது. 21ம் நுாற்றாண்டுக்கான எரிபொருள் இது .
சந்திராயன் -- 2 திட்டத்தின் கீழ், சந்திரனில் தரை யிறங்கும் விண்கலமும், ரோபோவும் அனுப்பப் படும். இவை, பல கி.மீ., துாரம் பயணம் செய்து, சந்திரனின் புறப்பரப்பில் இருக்கும், கனிமங்கள் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும்.
சந்திரனில் இருக்கும் கனிம வளங்களை கண்டறிந்து, அவற்றை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும், அங்கு நீர்வளம் உள்ளதா என, கண்டறிவதும் தான், இந்ததிட்டத்தின் நோக்கம்.
எரிசக்தி உற்பத்தியில், ஹீலியம் -3 வாயு, எதிர் காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.யுரேனியம், தோரியம் போன்ற பொருட்களால், பூமியின் வளிமண்டலம் மாசுபடுகிறது. ஆனால், ஹீலியம் வாயுவில், இதுபோன்ற பிரச்னை இல்லை.
நம் தொழில் துறை, ஹீலியம்- - 3 வாயுவை பயன்படுத்தும் அளவுக்கு முன்னேறி வருகிறது. இன்னும், 15 ஆண்டுகளுக்குள், ஹீலியம் -- 3 வாயுவை பயன்படுத்தும் உலைகள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.சந்திரனின் இரு துருவங்களிலும் தண்ணீர் இருப்பதாக நம்பப்படுகிறது.
அது உண்மையானால், எதிர்காலத்தில், அங்கு, மனிதனால் நீண்ட காலம் தங்க இயலும்.
மேலும், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனை, விண்கலங்களுக்கு எரிபொரு ளாக பயன்படுத்தலாம்.அதன்பின், விண்கலங் களை ஏவுவதற்கான ஒரு அண்டை வீடு போல, சந்திரன் ஆகி விடும்.
இது, இந்தியாவில், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வழி வகுக்கும், என, எதிர்பார்க்கப்படுகிறது.
எப்ரல் -23.

பூமியில் இருந்து விண் வெளிக்கு விண்கலங்களை ஏவுவதைக் காட்டி லும் சந்திரனில் இருந்து ஏவினால், செலவு கணிசமாக மிச்சம் ஆகும்.
ஏனெனில், பூமி யுடன் ஒப்பிடும் போது, சந்திரனில் புவியீர்ப்பு விசை ஆறில் ஒரு பங்குதான் இருக்கிறது.
விக்ரம்சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய லித்தியம் அயன் பேட்டரிகளை, மின்சார வாகனங்களில், பயன்படுத்த முடியும் என்பது, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
தற்போது அலைபேசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற " லித்தியம் அயன்" பேட்டரிகளை, வாகனங்களில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசு குறையும் .
இது, இந்தியாவில், மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வழி வகுக்கும், என, எதிர்பார்க்கப்படுகிறது.
லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கி, எரி பொருள் தேவையை குறைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது சுற்றுசூழல் பிரசனைக்களுக்கு முடிவு காட்டும் .
00000000000000000000000000000000000000000000000000000000
கிரேக்கர்கள் தங்களின் சூரிய கடவுளுக்கு வைத்தப்பெயர் ஹிலியோசு .அதுதான் ஹீலியம் தனிமத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
868 ல் பிரான்சு நாட்டின் வானவியலாரான பியர் இழோன்சன் (Pierre Jonsson ) என்பார் பிரித்தானிய இந்தியாவில் குண்டூர் பகுதியில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ந்த போது எதிர்பாராத விதமாக ஒளியுமிழ் நிறமாலை வரிசையில் மஞ்சள் பகுதியில் ஒரு புதிய வரியைக் கண்டார்.
அது அப்போது கண்டறியப்பட்ட எந்தத் தனிமத்திற்கும் அக்கோடு ஒத்துப் போகவில்லை என்பதால் அவ்வரி புதிய ஒரு தனிமத்தாலோ மூலக்கூறாலோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
அப்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளி வந்த இயற்கை என்ற அறிவியல் இதழின் ஆசிரியரான லாக்கியர் என்பாரும் பிராங் லாண்டு என்பாரும், இதற்கு ஹீ லியம் எனப் பெயரிட்டனர்.
000000000000000000000000000000000000000000000000000000000
===========================================================================================
இன்று,எப்ரல் -23.
- உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்.
- ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)
- புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)
- எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)
- உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இறந்த தினம்(1992)
- ============================================================================================