செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

முடியப் போகும் வெறியாட்டம்.

 கொரோனாவைப் பற்றி மேலும் பேச வேண்டியதாகி விட்டது.

2வது அலை,3வது அலை என பலமுறை கொரோனா வரும்போது நாமும் பல முறை  பேசியாகத்தான் வேண்டிய கட்டாயம்.

இந்தியாவில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரையிலான கணக்குப்படி சுமார் 63.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. 14.6 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது."இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் இதயத் தசை வீக்கம் வந்ததாக இதுவரை கண்டறியப்படவில்லை. அது தொடர்பான கண்காணிப்பும் ஆய்வும் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்."

"மையோகார்டிட்டிஸ் என்பது இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறிப்பிடுகிறோம். இதற்குப் பலவகையான காரணங்கள் இருக்கலாம். பொதுவான காரணம் தொற்றுதான். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகள் காரணமாக இதயத்தில் வீக்கம் ஏற்படலாம். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்போது இது உருவாகலாம்"
ஃபைசர், மாடனா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிகளால் மிக அரிதான மையோகார்டிட்டிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுவதாக ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறுகிறது. இவை இளம் வயது ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.உலகின் ஒருபுறத்தில் கோவிட் தடுப்பூசியே இன்னும் போட்டுக்கொள்ளாதபோது போட்டுக்கொண்டவர்கள் மேலும் மேலும் அதிக தடுப்பூசி டோஸ்களைப் போட்டுக்கொள்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம். 

இந்தியாவில் இதுவரை 6 வகையான கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தொடக்கத்தில் இருந்தே போடப்பட்டு வருகின்றன. இதன் பிறகு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடனா, ஜான்சன் &ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி, ஸைடஸ்-கேடில்லா ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இப்போதைக்கு கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன. இவை மூன்றுமே இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

மாடனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் இதுவரை இல்லை. அதனால் அமெரிக்காவில் இருந்தே அதை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசிக்கு இந்தியாவில் இதுவரை பயன்பாட்டு அனுமதி கோரவில்லை.

கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிப் படைத்து மனித உயிர்களைப் பலி கொள்வது இது முதல் முறையல்ல.

காலரா,மலேரியா,பெரியம்மை,எய்ட்ஸ் என பல வந்து சூறையாடியுள்ளன.

காலரா ஆசிய,ஆப்ரிக்க,ஐரோப்பிய கண்டங்களில்  கோடிக்கணக்கில் கொலை வெறித்தாக்குதல் நடத்தி மறைந்துள்ளது.

கரோனா வைரஸ் போல் எளிதில் தொற்றக்கூடியது இல்லையென்றாலும், எய்ட்ஸ் நோயும் ஒரு நோய்த் தொற்றுதான். அமெரிக்காவில் முதன்முதலில் எய்ட்ஸ் தொற்று 1981-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. அடுத்த 6 ஆண்டுகளில் எண்ணிக்கை 30,000-ஐத் தொட்டது. இதே வேகத்தில் ஏறி 1991-ல் 2,70,000 தொற்று ஏற்பட்டு, 1,79,000 பேர் பலியாகியிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. 

அந்த எண்ணிக் கையைப் பார்த்து, அமெரிக்க சுகாதாரத் துறை அலறியது. ஆனால், நடந்ததோ வேறு. ஃபார் சொன்னதுபோல் ஒரு வேகத்தில் ஏறி, 1988-க்குப் பின்னர் நோய் அதே வேகத்தில் சரியத் தொடங்கியது. 1990-ன் மத்தியில் கட்டுப்பாடான எண்ணிக்கையை வந்தடைந்தது. 

வேறு பல நோய்த்தொற்றுகளிலும் இதே உருமாதிரியை இன்றுவரை பார்க்க முடிகிறது.

அதே போல் கொரோனாவும் நாளடைவில் தனது சக்தியை இழந்து சார் சளித்தொல்லை வகையில் சேர்ந்து விடும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு காரணம்  ஆரம்பித்த எதும் முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

 மனிதர்களிடம் அதை எதிர்க்கும் சக்தி உருவாகி விடும்.மற்றொன்று கொரோனா ஒழிப்பு மருந்து கண்டு பிடிக்கப் பட்டு விடும்.

போதுமான பணம் குவிந்து,மனிதர்கறிடம் நோய் எதிர்ப்பும் அதிகரித்த பின்னர் தற்போது தடுப்பூசி,பூஸ்டர் ஊசி என்று தயாரிக்கும் மருந்து தயாரிப்பு பகாசுர நிறுவனங்கள் வேறு வழியின்றி கொரோனா 

ஒழிப்பு மருந்தை தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

-----------------------------------+-----------------------


திங்கள், 30 ஆகஸ்ட், 2021

மூளையைப்பற்றிய சில உண்மைகள்

 நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது. நமது நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துகிறது மூளை.


 

organ


1.   நமது  மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.
 

cant feel pain


2.   மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.


3.   நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.
 

brain surgery


4.   25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும். 
 

creates energy


5.   எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது. 
 

vision

6.   மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. 
 

size of brain


7.   மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன. 
 

large amount of axons


8.   20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும். 
 

brain


9.   வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையதுதான் நமது மூளை என்கிறார்கள். 
 

brain


10. நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம். 
 

many thoughts


11. நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 

speed of information


12. நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.
 

during sleeping


13. மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது. 
 

mass


14. மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நமக்குள் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது. மேலே உள்ள படத்தில் உள்ள ஏ மற்றும் பி கட்டங்கள் வெவ்வேறு வண்ணங்கள் என்று நினைப்பீர்கள். உண்மையில் அவை இரண்டும் ஒரே வண்ணம்தான். 
 

mind tricks


15. நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.
 

brain


16. மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங்கும் செய்ய முடியும்.
 

chemical reaction


17. நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம். 
 

brain cell as toddler


18. கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.
 

pregnancy


19. நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…
 

tons of information


20. நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.

----------------------------------------------------------


--------------------------------------------------------------


மனப் பதற்றம்

(ANXIETY) 

என்பது என்ன?

எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் வரும். சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டும் பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் நோயாக மாறுகிறது என மனநோய் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

"மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். சிலருக்கு பயம் அதிகமாகி . எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள் . வருங்காலத்தைப் பற்றியோ, அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதை நோயாகக் கருத வேண்டும். இதுதான் மனப் பதற்றக் கோளாறு"'

நண்பர்களுடன் பழகுவதற்குத் தயங்குவது, வகுப்பறையில் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு அச்சம், நேர்காணல்களின் போது ஏற்படும் பயம் போன்றவையெல்லாம் அன்றாட வாழ்கையை நடத்துவதிலேயே சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தால் அது மனப் பதற்றக் கோளாறின் அறிகுறிகளாகவே பட்டியலிடப்படுகின்றன. அதாவது சாதாரண பயம், பீதியாக மாறி இயல்பு வாழ்க்கையை சிதைக்க முற்படும்போது அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

OCD என்று கூறப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயும் இதன் மனப் பதற்றத்தின் ஒரு பிரிவாகவே வரையறுக்கப்படுகிறது.

"கொரோனா காலத்தில் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய் அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தாலும். சிலருக்கு இது அதிகமாகி அடிக்கடி கைகழுவுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஓசியிடின் அறிகுறி.

மனப் பதற்றத்தின் அறிகுறிகள்

ஆன்சைட்டி என்பது பெரும்பாலும் மனதளவிலானது. ஆனால் இதன் அறிகுறிகள் அனைத்தும் உடல் வழியாகவே தெரிகின்றன. உடல் உறுப்புகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பது போன்ற மாயை ஏற்படுகிறது. இதனால் பலர் மன நல மருத்துவர்களை அணுகுவதற்குப் பதிலாக வேறு உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவர்களை நாடுகிறார்கள்.

"உச்சி முதல் பாதம் வரைக்கும் பல்வேறு வகையான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படுகின்றன. இதயம் படபடப்பாக அடித்துக் கொள்கிறது என்று பெரும்பாலும் கூறுவார்கள். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் ஜில்லெனக் குளிர்ச்சியாகி விடுவது, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, அதிகபட்ச உடல் சோர்வு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படும். ஆனால் இதயப் படபடப்புக்கு இதய நிபுணரையும், வயிற்றுப் பிரச்னைக்கு அதற்கான மருத்துவரையும் பார்க்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் சரியாகவில்லை என்ற பிறகுதான் மனநல மருத்துவரை அணுகுகிறார்கள்."

அதிகப்படியான தகவல்கள் கிடைப்பதும் மனப் பதற்றம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதயக் கோளாறு என்று கருதி அடிக்கடி தீவிரச் சிகிச்சைப் பிரிவை நாடிய குமாரும் இதையேதான் செய்திருக்கிறார்.

இதயம் படபடப்பதை உணர்ந்த பிறகு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது, இதயத் துடிப்பை அளக்கும் உபகரணங்களை வாங்குவது என எண்ணம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

கூகுளில் இதைப் பற்றியே தேடியிருக்கிறார். கோளாறு ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் தாமாகவே சில இதயப் பரிசோதனைகளையும் செய்து பார்த்திருக்கிறார்.

மனநலம்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

"தனக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்று இணையத்தில் தேடி தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுதால், அதுவே அவர்களைப் பீதியடையச் செய்கிறது. மாரடைப்புக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் தமக்கு இருப்பதாகவே அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பின்னர் அவர்களே அதற்கான சிகிச்சையை முடிவு செய்து கொண்டு அதை மருத்துவர்களிடமும் வலியுறுத்துகின்றனர்" என்கிறார் யாமினி கண்ணப்பன்.

மனப் பதற்றம் ஏன் வருகிறது?

குமாரைப் பொறுத்தவரை அவருக்கு திருமணமாகி புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் வயது. இதயக் கோளாறால் உறவினர் இறந்ததை சமீபத்தில் பார்த்திருக்கிறார். அதனால் தமக்கும் அதுபோன்ற நிலைமை தமக்கும் வந்துவிடக்கூடாது என்ற அதிகப்படியான உடல்நல அக்கறையும் கவனமும்தான் அவருக்கு மனப் பதற்றக் கோளாறை ஏற்படுத்தியிருக்கிறது.

"மனப் பதற்றம் என்பது உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஏனென்றால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால் அவை மனப் பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்." என்கிறார் யாமினி கண்ணப்பன்.

எல்லா வயதினருக்கும் மனப் பதற்றக் கோளாறு வருகிறது. ஆனால் வயதானோருக்கு இதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிகிச்சை என்ன?

மனப் பதற்றக் கோளாறால் பாதிக்கப்படுவோருக்கு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் ஆகிய இரண்டுமே வழங்கப்படுகின்றன."மன நோய்க்கு மருந்துகள் ஏன் தேவைப்படுகிறது என்றால் மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களைச் சமன் படுத்துவதற்காகத்தான். இவற்றை மருந்துகள் மூலமாகவே சரி செய்ய முடியும்"

"எல்லோருக்குமே மனப் பதற்றம் இருக்கும். முக்கியமான அல்லது புதிய நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது இது ஏற்படும். ஆனால் சிறிது நேரத்துக்குள் சரியாகிவிடும். சிலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமானது எப்போதும் இயல்பைவிட அதிமாக இருக்கும். அவருக்கு உரிய சிகிச்சை தேவைப்படுகிறது"

மனப் பதற்றம் அதிகமாக இருந்தால் அது பல்வேறு உடல் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

"பதற்றத்தின்போது உருவாகும் கார்டிசால் என்ற ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக இருப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக இதைக் கவனிக்காமல் விட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுக் கோளாறு என பலவகையான சிக்கல் ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பையே குலைத்துவிடும் ஆபத்தும் உண்டு" என்கிறார் யாமினி கண்ணப்பன். மனப் பதற்றம் வேலையிலும், குடும்ப வாழ்க்கையும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயங்குவார்கள். தங்களது உறவுகளைத் தவிரித்து உலகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள் என்கிறார் அவர்.

பதற்றத்தைக் குறைக்க எளிய வழி

மனப் பதற்றம் அதிகரிப்பதாக உணர்ந்த மாத்திரத்தில் அதை உடனடியாகக் கையாளுவதற்கு சில எளிமையான வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் யாமினி கண்ணப்பன். இதன் மூலம் பதற்றத்தின்போது ஏற்படும் விபரீதச் சிந்தனைகளை உடைக்க முடியும் என்கிறார் அவர்.

மனநலம்

பட மூலாதா

"இதை Grounding Technique கூறுவோம். 5 4 3 2 1 என்றும் கூறலாம். அதாவது இயல்பு நிலைக்குத் திரும்புவது. இதில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்களை சுற்றியுள்ள 5 பொருள்களைப் பார்க்க வேண்டும். அது எதிரேயுள்ள தொலைக்காட்சியாகவோ, சட்டப் பையில் உள்ள பேனாவாகவோ இருக்கலாம். அடுத்து அருகேயுள்ள நான்கு பொருள்களை தொட வேண்டும். அது காலுக்கு அடியில் இருக்கும் தரையாகவோ, அருகேயுள்ள மேஜையாகவோ இருக்கலாம். அடுத்து மூன்று ஒலிகளைக் கேட்ட வேண்டும். பின்னர் இரு வாசனைகளை நுகர வேண்டும். ஐந்தாவதாக ஒரு சுவையை உணர வேண்டும். அது நீங்கள் அப்போதுதான் குடித்து முடித்திருந்த தேநீரின் சுவையாகவும் இருக்கலாம். இப்போது நீங்கள் பதற்றம் தணிந்து ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள்"

இன்னும் எளிமையாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அதிலேயே மனதைக் குவிப்பதன் மூலமாகவும் மனப் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்கிறார் மருத்துவர் யாமினி கண்ணப்பன்.

சில வகையான மனப் பயிற்சிகள், உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றையும் அவர் பரிந்துரைக்கிறார்.

மதுக்குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்வற்றின் மூலம் மனம் லேசாகிறது என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அவை அனைத்தும் போலியானவை, உடலிலும் மனதிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்கிறார் மருத்துவர்.

"மதுவும் புகையும் முதலில் மனதை சாந்தப்படுத்துவது போலத் தோன்றும். ஆனால் அது மாயை"


ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

வந்துட்டாரய்யா,வந்துட்டார்...வடிவேலு.....!

 

எங்கேயிருந்து கிளம்பியது?

கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என, அமெரிக்காவின் 18 உளவு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் அலுவலகம் தீர்மானமாக தன் முடிவை குறிப்பிட்டிருக்கிறது.

நிபுணர்களோ, கொரோனா வைரஸின் தோற்றத்துக்கான ஆதாரங்களை சேமிப்பதற்கான காலம் கரைந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறார்கள்.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரோ அந்த அறிக்கை அறிவியலுக்கு எதிரானது என அதை நிராகரித்துள்ளார்.

தேசிய உளவு அமைப்பு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கை, அமெரிக்க உளவு முகமைகள் கொரோனா நோய் தொற்றின் தோற்றுவாய் விவகாரத்தில் பிரிந்து கிடப்பதாகக் கூறுகிறது.

"அனைத்து உளவு அமைப்புகளும் இரு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறார்கள். அதில் ஒன்று இயற்கையாக பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டது, மற்றொன்று ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்கள்."

பல பெயர் குறிப்பிடாத உளவு அமைப்புகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அல்லது அதற்கு முன்னோடி வைரஸிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என கருதுகின்றன. ஆனால் அவர்களுக்கும் இந்த முடிவில் அதிக நம்பிக்கை இல்லை.

மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று, வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்களால் ஏற்பட்டிருக்கலாம், அந்த ஆய்வகம்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளவால்களில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தது என மற்றொரு உளவு முகமை ஓரளவுக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கைகள் வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டார். அதில் சீனா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என விமர்சித்து இருந்தார்.

"கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பதற்கான தகவல்கள் சீனாவில் இருக்கின்றன. ஆனால் ஆரம்பத்திலிருந்தே சீன அதிகாரிகள், சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் உலக பொது சுகாதார சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அத்தகவல்களைப் பெறாமல் தடுக்க வேலை பார்த்தனர்" என பைடன் கூறினார்.

"உலகத்துக்கு விடை வேண்டும், அது கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன்" என கூறியுள்ளார் பைடன்.

கடந்த டிசம்பர் 2019-ல் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுநாள் வரை உலகம் முழுக்க சுமார் 45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட விலங்கிடம் இருந்து பரவி இருக்கலாம் என கூறியது. அந்த ஆய்வு முடிவுகளை சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

கொரோனாவின் தோற்றம் குறித்து ஒரு முடிவுக்கு வர, தரவுகளை மதிப்பீடு செய்து ஓர் அறிக்கையை தயார் செய்யுமாறு, அமெரிக்க உளவு முகமைகளை கடந்த மே மாதம் கேட்டுக் கொண்டார் அதிபர் பைடன்.

இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் இருக்கும் ஃபோர்ட் டெட்ரிக் பகுதியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியது எனக் கூறியது சீனா.

கூடிய விரைவில், உயிரியல் ரீதியாக கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை சேகரிப்பது சிரமமாகிவிடும் என இந்த வார தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

"இந்த முக்கியமான விசாரணையை நடத்துவதற்கான கால அவகாசம் அதிவேகமாக குறைந்து கொண்டே வருகிறது" எனவும் எச்சரித்துள்ளது.

-------------------------------------------------------------------------

வந்துட்டாரய்யா,வந்துட்டார்...வடிவேலு.....!

நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு  பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ல் வெளியான படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள கதையில் நாயகனாக, இம்சை அரசன், உக்கிரபுத்திரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதன் இரண்டாம் பாகத்திற்குமான எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில்தான் இதன் இரண்டாம் பாகம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த பிரச்னை மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நடிகர் வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. மேலும் நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, 'Vadivelu Returns', 'Vadivelu For Life' என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகளின் வாழ்த்து செய்திகளால் பரபரப்பாக இருந்த வடிவேலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்.

"ரொம்ப சந்தோசமா இருக்கேன். முதல் முறையாக படங்களில் நடிக்க வந்தபோது இருந்த மகிழ்ச்சியை விட தற்போதுதான் அதிகம் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா குடும்பமும் என்னுடையதுதான். ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம்தான். இவர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் உற்சாகமாக.

இவ்வளவு நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தபோது மனநிலை எப்படி இருந்தது?

"இவ்வளவு நாட்கள் நடிக்காமல் இருந்தால் கூட, மீம் கிரியேட்டர்ஸ் என்னை தொடர்ந்து நடிப்பது போலவே, மக்களோடு மீம்கள் மூலம் இருக்க வைத்தார்கள். என்னுடைய எல்லா ரியாக்‌ஷனும் போட்டு, என்னை படங்களில் இருப்பது போல உயிரோட்டமாக வைத்திருந்தார்கள். மீம் கிரியேட்டர்கள் எனக்கு பெரிய கடவுள் மாதிரி. அவர்கள்தான் மக்களுக்கு என்னை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் யாரென்று தெரியாது. அவர்களுக்கு எனது நன்றி".

அடுத்து என்ன மாதிரியான படங்களில் நடிக்க திட்டம்?

"'லைகா புரொடக்‌ஷன்' தயாரிப்பில் முதல் படம் நடிக்க இருக்கிறேன். அதோடு சேர்த்து அடுத்து ஐந்து படங்களும் அவர்கள் தயாரிப்புதான். மக்கள் ஆசையை நிறைவேற்றிய சுபாஷ்கரன் தற்போது 'சபாஷ்கரன்' ஆகிவிட்டார். படத்தின் பெயர் 'நாய் சேகர்'. இயக்குநர் சுராஜ்.

ஜூலை மாதம் நடிகர் வடிவேலு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாயை அளித்தார்.

கதையின் நாயகனாகவும், காமெடி நாயகனாகவும் இந்த கதையில் நடிக்க இருக்கிறேன். கதாநாயகன் என்றால் ராஜா வேடம் எல்லாம் இல்லை. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யை தவிர்த்து விட்டேன். இனி எனக்கும் 'எஸ் பிக்சர்ஸ்'-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த படம் நடிக்க போவதில்லை. அதுமட்டுமல்ல, இனி வரலாற்று படங்கள் எதிலுமே நடிப்பதாகவே இல்லை. அந்த படத்தை ஒத்து கொண்டதுதான் என்னுடைய கெட்ட நேரம். அதை விட்டு விலகியதுதான் என்னுடைய நல்ல நேரம்.

தமிழக முதல்வரை சந்தித்த நேரம் நன்றாக இருக்கிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொல்வேன்".

திரையுலகில் இருந்து வாழ்த்துகள் வந்ததா?

"காலையில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தபடியே இருக்கின்றன. நிறைய படங்கள் இனி வரும். தொடர்ந்து நடிப்பேன். மக்களை சிரிக்க வைப்பேன். முன்னணி கதாநாயகர்கள் கூட வாய்ப்பு வந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்பேன்."


--------------------------------------------------------------------------சனி, 28 ஆகஸ்ட், 2021

பென்னி குயிக்கும்,கலைஞரும்.

 

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் , எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று அஇஅதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
பெரியார்-வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.அதில், "கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லம் உள்ளதால் அதனை அகற்றிவிட்டு நூலகத்தைக் கட்டக் கூடாது' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், "விவசாயிகளின் துயரைத் துடைத்த பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றிவிட்டு நூலகம் கட்டும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்," எனத் தெரிவித்திருந்தனர்.

தமிழக சட்டமன்றத்திலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் பேசினார்.

அப்பொழுது தலையிட்டுப் பேசிய தமிழக முதல்வர் “ அந்த கட்டிடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். நாங்கள் அதனை பரிசீலிக்கிறோம். அதை விடுத்து ஆதாரமில்லாமல் தவறான பிரச்சாரத்தை செய்யாதீர்கள்” என்று கூறினார்.இப்பொழுது வரை செல்லூர் ராஜுவோ அவரது கட்சியோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களால் எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியாது. ஏனென்றால் அதில் துளியும் உண்மையில்லை.

பென்னிகுயிக்கின் வாழ்வையும், முல்லை பெரியாறு அணை உருவான விதத்தையும் பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டு, அதனை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதியுள்ள இடதுசாரி எழுத்தாளரும்,மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் தனது கருத்துகளை மின் வருமாறு பதிவிட்டுள்ளார்.

1. கர்னல் பென்னிகுயிக் மதுரையில் வாழ்ந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை எந்த ஒரு ஆய்வாளராலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நூலையோ, ஆவணத்தையோ அதிமுக வெளியிட வேண்டும்.

2. 1895 ஆம் ஆண்டு அணை கட்டும் பணி முடிவுற்ற அடுத்த ஆண்டே பென்னிகுயிக் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்புகிறார். மனைவி மற்றும் ஐந்து பெண் குழந்தைகளுடன் இங்கிலாந்து திரும்பும் அவருக்கு சென்னை கிரிக்கெட் கிளப்பின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டு வழியனுப்பப்படுகிறது. ஏனென்றால் பென்னிகுயிக் சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.

1896 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசிக்கத்துவங்கிய பென்னிகுயிக் ராயல் இந்தியன் பொறியியற் கல்லூரியின் தலைவராகிறார். மூன்றாண்டுகளுக்குப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிறார். பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கை கையாள்வதற்கான ஆலோசனை பெறுவதற்காக அழைக்கப்படுகிறார்.ஆஸ்திரேலியா சென்று மீண்டும் இங்கிலாந்து திரும்பும் அவர் 1911 ஆம் ஆண்டு கேம்பெர்லி நகரில் மரணமடைகிறார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்.

அவர் இந்தியாவை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அவர் வசித்தார் என்று சொல்லுவது ஏதாவது பொருத்தப்பாடு உடையதா? கற்பனைக்கும் எட்டாத பொய் அல்லவா?

இடர்மிகு சூழலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்து லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாமனிதனாகப் போற்றப்படும் பென்னிகுயிக் அவர்களின் புகழை குறுகிய அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்துவது என்ன நியாயம்?

மதுரைக்கும், தென் தமிழகத்து மாணவர்களுக்கும் மிகப்பெரும் பயன்பாட்டினை அளிக்கும் நூலகத்தை பொய்யைச்சொல்லி தடுக்க நினைப்பது என்ன வகை அரசியல்?

மூன்று ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் அதிமுக அரசு (2017-2018)கல்வி மானியக் கோரிக்கையின் போது மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் 6 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைப்போம் என்று அறிவித்தது.ஆனால் அந்த அறிவிப்பு காற்றோடு போயிற்று.எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.
2 லட்சம் சதுரடி, 70 கோடி ரூபாய் செலவில்8 மாடி கட்டிடமாக கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த கையோடு அதனை நடைமுறைப்படுத்த துரிதமான ஆய்வினை பல முறை மேற்கொண்டு இடத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு.அன்று நூலகத்தை அமைக்காமல் மதுரைக்கு துரோகம் செய்த அதிமுக, இப்பொழுதோ அமையவிருக்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்கு செய்ய நினைக்கிறது.
மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.
பென்னி குக் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்.அதில், "எனக்கு தெரிந்து அந்த கட்டிடம் எங்கள் குடும்ப நிதியில் இருந்து கட்டப்படவில்லை. அங்கு பென்னி குக் வசிக்கவில்லை. அந்த கட்டிடம் பொது நிதியில் இருந்து கட்டப்பட்டிருந்தால் அது தொடர்பான முடிவுகளை அரசு எடுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

தனது சொத்துக்களை விற்று அணை கட்டிய மாமனிதர் பென்னி குயிக்.அவரை வைத்து அதிமுகவினரும்,விவசாயிகள் எனக் கூறிக் கொள்வோரும் காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல்.

--------------------------------------------------------------வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தங்கப் போராட்டம்.

 

இந்தியாவில் தங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் களையும் வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.

 அதன்படி, தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட HUID (hallmark unique identity code) எனப்படும் `ஹால்மார்க் அடையாள எண் அவசியம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 16-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்றும், இந்த விதிமுறைகளின்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றும் பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
புதிய விதிமுறைகளின் அடிப்படையில் 14, 18, 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் பி.ஐ.எஸ் தெரிவித்திருந்தது.
முதல்கட்டமாக 256 மாவட்டங்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

`இதனால் தங்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் ஹால்மார்க் அடையாள எண்ணைக் கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம். புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும், இனி ஹால்மார்க் அடையாள எண்ணை தங்க நகைகளில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தர முத்திரை வழங்கும் மையங்களில் அதற்கான போதிய வசதியும், சாதனங்களும் இல்லை. இதனால், ஹால்மார்க் மையங்களில் கோடிக்கணக்கான நகைகள் முடங்கியுள்ளன. சுமார்12 நாட்கள் தேவைப்படும்.


இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து, விற்பனைக்கு வராமல் உள்ளன.' என தங்க நகை வணிகர்கள் குமுறுகின்றனர்.
இந்திய தர நிர்ணய அமைப்பு` இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் 50 நாள்களில் ஒரு கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பதிவு செய்த நகைக் கடைக்காரர்களின் எண்ணிக்கையும் 91 ஆயிரமாக உயர்ந்துள்ளது' என்கிது.
அகில இந்திய அளவில் நகைக்கடை உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். 

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 35,000 கடைகள் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 சுமார் இரண்டரை மணி நேரம் மட்டும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.நகையின் தயாரிப்பாளர் மொத்த விற்பனைக்கு கொடுக்கும்போது என்ன விலைக்கு விற்கிறேன் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதை நுகர்வோருக்கு விற்கும்போதும் என்ன விலை எனக் குறிப்பிட்டு இந்திய தர நிர்ணய (BIS) அமைப்பின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைக்காரர் அந்த நகையை நுகர்வோரிடம் விற்கும்போது பி.ஐ.எஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது ஒரு நகை


 உற்பத்தியாகி சென்று சேரும் வரையில் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். எங்களின் வியாபாரத்துக்கு முதுகெலும்பாக இருப்பது நுகர்வோர்கள்தான். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தங்கத்தை வாங்குவோர் குறித்த தரவுகள் எல்லாம் பி.ஐ.எஸ் தளத்தில் இருந்து திருட்டுபோனால் யார் வேண்டுமானாலும் நுகர்வோரை வளைத்துவிடலாம். இதன்மூலம் நுகர்வோர்களும் எங்களைவிட்டு மாறிவிடுவார்கள். ஒரு நெக்லஸுக்கு என்ன விலை என்பது தெரிந்துபோனால் சேதாரத்தை கணக்கில் வைத்து கூடுதல் விலை வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தங்க நகையை உற்பத்தி செய்து ஹால்மார்க் முத்திரைக்காக அனுப்பும்போது எங்களைப் போல பத்து பேர் அங்கே காத்து இருப்பார்கள். நாங்கள் பொருளைக் கொடுத்தாலும் முத்திரை பதிப்பதற்கு 5 முதல் 7 நாள்களை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கேற்ற பாதுகாப்பு வசதிகள் பி.ஐ.எஸ்ஸில் இருப்பதில்லை. எதாவது திருடு போனால்கூட காப்பீடு வசதிகள் செய்து தரப்படவில்லை" என்கிறார்கள் நகை வியாபாரிகள்.

15 வருடங்களுக்கு முன்பு வரைமுறையில்லாமல் செயல்பட்ட நகைக்கடைகளை ஒரு வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டனர். ஜி.எஸ்.டி வந்த பிறகு அனைத்தும் சரியாகிவிட்டது. நகைக்கடைகள் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வருவாய் வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஜூலை மாதம் 20 சதவிகிதம் இது அதிகரித்துள்ளது. அனைவருக்கும் நேரம் கொடுத்து முறையாக புதிய விதிகளைக் கொண்டு வந்தால் நல்லது.

இதில் வேதனை என்னவென்றால், அடையாள எண் பதிக்காத நகைகளை பறிமுதல் செய்வது, கடைக்கு சீல் வைப்பது அல்லது எந்த நகைக்கு அடையாள இலக்கம் கொடுக்கவில்லையோ அந்த நகைக்கு ஈடாக 5 மடங்கு அபராதம் விதிக்கலாம் என்பன போன்ற பல அதிகாரங்களை பி.ஐ.எஸ்ஸிடம் கொடுத்துள்ளனர். வருமான வரித்துறையால்கூட நகைகயை பறிமுதல் செய்ய முடியாது. அதைவிட கூடுதல் அதிகாரத்தை தர நிர்ணய அமைப்புக்குக் கொடுத்துள்ளனர். எந்த நுகர்வோரும் 22 கேரட் சீல் மற்றும் ஹால்மார்க் முத்திரை ஆகியவற்றைத்தான் கேட்பார்கள். அடையாள எண் போடுங்கள் என யாரும் கேட்டதில்லை" என்கின்றனர்.

`` . மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளில் பெரும் நகை வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்கிறனர்.


``தங்க நகை வணிகர்களின் எதிர்ப்பு சரியானதுதானா?" 

 பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளின்படி ரூபாய் 40 லட்சம் வரையில் தங்க நகை வியாபாரம் செய்பவர்களுக்கு விலக்கு கொடுத்துள்ளனர். அதனை ரூபாய் ஒரு கோடியாகவோ, ரூபாய் 2 கோடியாகவோ உயர்த்திக் கேட்பதில் தவறு இல்லை. 

விருதுநகர் போன்ற ஊர்களில்கூட சிறு வியாபாரிகள் வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்கின்றனர். இந்தத் தொகையை நீட்டிப்பது தொடர்பான கோரிக்கையை அவர்கள் வைவைக்கலாம்.இந்தியாவில் உள்ள மொத்த நிலங்களுக்கும் பட்டா உள்பட அனைத்து விவரங்களும் அரசு ஆவணங்களில் தெளிவாக உள்ளன. அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு ஆயிரம் டன் தங்கம் வருகிறது என்றால் அதில் 900 டன் தங்கத்தைப் பணக்காரர்கள்தான் வாங்குகின்றனர். 

இங்கு தங்கம் என்பது ஏழைகளுக்கு ஆடம்பரமான ஒன்றுதான். இதனை மறைப்பதற்காக இந்த விவகாரத்தில் ஏழை, எளியவர்கள் பக்கம் இவர்கள் கைகளை காண்பிக்கின்றனர். 

இவ்வாறு பேசுகிறவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர்கள்தான். இதன்மூலம் அரசாங்கத்துக்கு என்ன அஜெண்டா உள்ளது எனத் தெரியவில்லை.

தவிர, பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளால் சிறு தொழில் செய்கிறவர்கள் அதிகம் பாதிக்கப் போவதில்லை. ஒரு கோடி வைத்திருந்தால் என்ன செய்வது எனத் தெரியாத நிலை வரும்போது பணத்தை வெள்ளையாக வாங்கத் தொடங்குவார்கள். 

கறுப்புப் பணம் செல்லும் இடங்களில் ரியல் எஸ்டேட் மிக முக்கியமான இடமாக உள்ளது. அந்தத் தொழிலுக்கும் அடையாள எண்ணைக் கொண்டு வரும் வேலைகளையும் செய்வார்கள்.

அதேபோல், தங்கத்தையும் கொண்டு வர நினைக்கிறார்கள். 

இந்தியாவுக்குள் ஆயிரம் டன் தங்கம் வந்தால் வடமாநிலங்களுக்கு 200 டன், தென் மாநிலங்களுக்கு 200 டன் எனச் செல்வதாகப் பார்த்தால் அது எங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை கடைசி வரையில் கண்காணிக்க உள்ளனர். அடையாள எண் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளிலும் கண்காணிக்கிறார்கள். எங்கேயும் தப்பிக்க முடியாத சூழலை உருவாக்குகிறார்கள். இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளை சிறு, குறு வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். தங்க நகையை லாபம் இல்லாமல் விற்க முடியாது. லாபத்தைக் கேள்வி கேட்பதால் கூலி, சேதாரம் போட்டு விற்கிறார்கள். சிறிது காலத்துக்காவது 40 லட்சம் ரூபாய் என்ற உச்ச வரம்பில் இருந்து சிறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்".வியாழன், 26 ஆகஸ்ட், 2021

இந்தியா விற்பனைக்கு

 

இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.National Monetisation Pipeline என்ற (தேசிய பணமாக்கல் குழாய்)திட்டத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமையன்று டெல்லியில் வெளியிட்டார்.
அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத் துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இதில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் வழித்தடங்கள், குழாய் வழித்தடங்கள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

தனியாரிடம் அளிக்கப்படவுள்ள சொத்துகளில் 66 சதவீதம் சாலைகள், ரயில்வே, மின்சாரத் துறையைச் சேர்ந்ததாக இருக்கும்.
மீதமுள்ள 34 சதவீதம், விமான நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், துறைமுகங்கள் போன்றவையாக இருக்கும்.

சாலைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் 2025ஆம் நிதியாண்டிற்குள் 1.6 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 26,700 கி.மீ. தூரமுள்ள சாலைகள் இதற்குப் பயன்படுத்தப்படும். இது, இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 22 சதவீதமாகும்.

முதல் கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களில் உள்ள 586 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
சில ரயில் நிலையங்கள், சில வழித்தடங்கள், பயணிகள் ரயில்கள், கொங்கண் ரயில்வே பிரிவு ஆகியவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 1,52,496 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்த நிதியாண்டில் 17,810 கோடி ரூபாய் திரட்டப்படும். அடுத்த நிதியாண்டில் 57,222 கோடி ரூபாய் திரட்டப்படும்.

மொத்தமாக 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், கொங்கண் ரயில்வேயின் 741 கி.மீ. நீளமுள்ள வழித்தடம், 15 ரயில்வே ஸ்டேடியங்கள், சில ரயில்வே குடியிருப்புகள், ரயில்வேவுக்குச் சொந்தமான 265 சேமிப்புக் கிடங்குகள், 4 மலை ரயில்கள் ஆகியவை குத்தகைக்குவிடப்படவுள்ளன. இப்படி குத்தகைக்கு விடப்படும் மலை ரயிலில் நீலகிரி மலை ரயிலும் அடங்கும்.

விமானப் போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை, இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்குவிடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்குவிடப்படும். இதன் மூலம் 20,782 கோடி திரட்டப்படும்.இதுதவிர, மும்பை,டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் போன்ற ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும். மும்பை, தில்லி விமான நிலையங்களில் 26 சதவீத பங்குகளும் ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களில் 13 சதவீத பங்குகளும் தற்போது விமான நிலைய ஆணையத்திற்கு உள்ளன.

மொத்தமாகப் பார்த்தால், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள சொத்துகளில் 18 சதவீதம் தற்போது விற்கப்படுகிறது. முதல் கட்டமாக திருச்சி விமான நிலையம் 2022லும் கோயம்புத்தூர், மதுரை விமான நிலையங்கள் 2023லும் சென்னை விமான நிலையம் 2024லும் தனியாருக்கு விடப்படும்.

அதேபோல மின்துறையைப் பொருத்தவரை, 2025க்குள் 45,200 கோடி ரூபாயைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான மின்தொடரமைப்புச் சொத்துகளில் 400 கிலோ வாட்டுக்கு மேம்பட்ட சொத்துகள் தனியார்மயமாக்கப்படும். ஒட்டுமொத்தமாக 28,608 சர்க்யூட் கிலோமீட்டர் நீளமுள்ள மின் தொடரமைப்பு தனியார்மயமாக்கப்படும்.

சுரங்கங்களைப் பொருத்தவரை, 28,747 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 நிலக்கரி சுரங்கங்கள் 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விடப்படும். தொலைத்தொடர்புத் துறையைப் பொருத்தவரை 2024ஆம் ஆண்டிற்குள் 35,100 கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் கீழ் போடப்பட்ட 2.86 லட்சம் கி.மீ. நீளமுள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களும் இதில் அடங்கும். அதேபோல பிஎஸ்என்எல்லுக்குச் சொந்தமான 13,567 மொபைல் டவர்களும் எம்டிஎன்எல்லுக்குச் சொந்தமாந 1,350 மொபைல் டவர்களும் இதில் தனியார் மயமாக்கப்படவுள்ளன. இதன் மூலம் 8,800 கோடி ரூபாய் திரட்டப்படும். ஒட்டுமொத்தமாக இந்திய அரசு திரட்ட நினைத்திருக்கும் 6 லட்சம் கோடி ரூபாயில் 6 சதவீதம் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து திரட்டப்படும்.

கப்பல் போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை அடுத்த நான்கு ஆண்டுகளில் 12,828 கோடி ரூபாய் திரட்டப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள 12 மிகப் பெரிய துறைமுகங்களில் 9 துறைமுகங்கல் தனியார்மயமாக்கப்படும்.

இந்திய உணவுக் கழகம், இந்திய சேமிப்புக்கிடங்குக் கழகங்களுக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளைத் தனியார்மயமாக்குவதன் மூலம் 28,900 கோடி ரூபாய் திரட்டப்படும்.

இவைதவிர, தில்லியில் உள்ள பல குடியிருப்புகள், எட்டு ஐடிடிசி ஹோட்டல்கள் ஆகியவற்றையும் குத்தகைக்குவிடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 15,000 கோடி ரூபாய் திரட்டப்படும். புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் பாண்டிச்சேரி, புவனேஸ்வரில் உள்ள ஹோட்டல் கலிங்கா, ராஞ்சியில் உள்ள ஹோட்டல் ராஞ்சி, பூரியில் உள்ள ஹோட்டல் நிலாச்சல், ரூப்நகரில் உள்ள ஹோட்டல் அனந்த்பூர் சாஹிப், புதுதில்லியில் உள்ள ஹோட்டல் சாம்ராட், ஹோட்டல் அசோக், ஜம்முவில் உள்ள ஹோட்டல் ஜம்மு அசோக் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் தனியார்மயமாக்கப்படும்.டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவாஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தேசிய விளையாட்டு அரங்கமும் பிராந்திய விளையாட்டு அரங்கங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தனியார்மயமாக்கப்படும். இதன் மூலம் 11,450 கோடி ரூபாய் திரட்டப்படும்.

குத்தகைக்கு விட என்ன காரணம்?

முக்கியமான காரணம், அரசின் வருவாய் மிகவும் குறைந்து போயிருப்பது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், கொரானாவின் தாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துபோயிருப்பது ஆகியவற்றால் நாட்டின் வருவாய் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இதனால் வரி வருவாயை அதிகரிக்க பெட்ரோலியப் பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு அதனால், நுகர்வு குறைய ஆரம்பித்தது. இதனால், வரிவருவாய் மேலும் குறைய ஆரம்பித்தது. இதனால், அரசு தனது தினசரிச் செலவுகளுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2020ல் அரசின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு குத்தகைக்கு விடுவதாகச் சொல்லும் சொத்துகள் எதுவும் அரசின் சொத்துகள் கிடையாது.
பொதுத்துறை நிறுவனங்களினுடையது. உதாரணமாக கெய்லை எடுத்துக்கொள்வோம். இதில் தனியாரும் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். அப்படியானால், இதன் சொத்துகள் குறித்து முடிவெடுக்க இயக்குநர் குழுவை கூட்டி இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படியே சொத்துகள் விற்கப்பட்டாலும், அவை அந்தப் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்குதாரர்களுக்கும்தான் சேரும். அரசுக்கு அதன் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் பணம் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் முழுமையாக அரசு நிறுவனம். ஆனால், அந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கே நிறைய பாக்கி வைத்திருக்கிறது. ஓய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்ல.

சப்ளையர்களுக்கு பணம் பாக்கி இருக்கிறது. பிஎஸ்என்எல் டவரை வாடகைக்கு விட்டு பணம் கிடைத்தால் அது எப்படி அரசுக்குச் செல்லும்? ஏற்கனவே பாக்கி உள்ளவர்களுக்கு யார் பணம் கொடுப்பார்கள்.

ரயில்வேயைப் பொருத்தவரை, புதிய ரயில்களை விடுவதற்கு தனியாரை அழைத்தும் யாரும் வரவில்லை. மத்திய அரசின் ஐஆர்டிசியே ரயிலை விடச் செய்தார்கள். அதில் யாரும் பயணம் செய்யவில்லை. முடிவாக சரக்கு வேகன்கள் மட்டும்தான் குத்தகைக்குச் செல்லும். அதை குத்தகைக்கு விடுவதற்கு பதிலாக அரசே, வாடகைக்கு விட்டு பணம் திரட்டலாம்.

பணம் திரட்டுவதைத் தவிர, இதில் மத்திய அரசுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன . அதாவது அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அரசின் சொத்துகளைத் தாரைவார்க்கவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படப்பட்டுள்ளது.
"மோடி பிரதமராகவதற்கு முன்பாக அதானி நிறுவனத்திடம் எந்த விமான நிலையமும் கிடையாது. இப்போது 51 விமான நிலையங்கள் அவர் பொறுப்பில் இருக்கின்றன. மீதமுள்ள விமான நிலையங்களையும் அதானியிடம் கொடுக்கத்தான் இதைச் செய்கிறார்கள்"இந்த திட்டத்தின் மூலம் பெரிய அளவில் நிதியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும், சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்ட பிறகு எந்த அளவுக்கு தனியார் இந்த சொத்துகளை மேம்படுத்துவார்களா?
காரணம், இந்தத் தனியார்மயமாக்கத் திட்டத்தின் கீழ், சொத்துகளின் உரிமை தனியாருக்குத் தரப்படமாட்டாது. பயன்படுத்தும் உரிமை மட்டுமே தரப்படும். ஆகவே, அந்த சொத்துகளில் தனியார் எந்த அளவுக்கு முதலீடு செய்து அவற்றை மேம்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறிதான்.

இந்த அளவுக்கு இந்தச் சொத்துகளில் முதலீடு செய்ய தனியார் முன்வந்தாலும், அவர்கள் அந்தத் தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்றே முதலீடுசெய்யலாம்.அக்கடனைக் கொடுக்க வங்கிகளை அரசு கட்டாயப் படுத்தும்.
இந்த இடங்களைக் குத்தகைக்குப் பெறுவதன் மூலம் கிடைக்கும் லாபம், இந்தக் கடனுக்கான வட்டியைவிட அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் முதலீடு செய்ய தனியார் ஆர்வம் காட்டுவார்கள். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிதான் தெரியவரும்.

இதெல்லாம் தவிர, இந்தப் பணத்தைவைத்து மத்திய அரசு என்ன திட்டங்களைச் செயல்படுத்தப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தனது கடன்களைத் திரும்பச் செலுத்தப்போகிறதா, புதிய கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுசெய்யப் போகிறதா என்பதெல்லாம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்ல.புதன், 25 ஆகஸ்ட், 2021

தேசப்பற்றும்- அறிவியாளர்களும்

 ரயில் பெட்டி எஞ்சின்களை உருவாக்கும் நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஐ.சி.எஃப் நிறுவனம் தயாரித்த டிரெய்ன் – 18 (T-18) என்ற அதிநவீன – மணிக்கு 160 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய அதிவேக ரயில் உற்பத்தியானது முடக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பையும், அழகையும், செயல்பாடுகளையும் குறித்து நியூஸ்-18, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் விவரிப்பதில் இருந்தே பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் உழைப்பின் வண்ணமும், சீரிய சிந்தனையையும் உணர முடியும்.

அவ்வளவு நேர்த்தியான அதிவேக – அதிநவீன ரயில் எஞ்சின் ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் முனைப்போடு, அந்நிய நாட்டு தொழிற்நுட்பம் இல்லாமல், சொந்த நாட்டு தொழிற்நுட்பத்துடன் மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 80% அளவில் உள்நாட்டு உதிரி பாகங்களுடன் வெறும் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இந்த தொகையைவிட பல மடங்கு விலை அதிகரிக்கும்.

T-18 என்ற அதிவேக ரயிலை குறைந்த செலவில் அதிநவீன ரயிலாக உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஐ.சி.எஃப் நிறுவன தலைவர், இயந்திரவியல் பொறியாளர் சுதான்சு உட்பட 11 அதிகாரிகள் மீது முறைகேடு குற்றம்சாட்டப்பட்டு, இந்தத் திட்டம் மூன்றாண்டுகளுக்கு முன்னரே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆராய்ச்சி – வடிவமைப்பு ஆகியற்றை உரிய தர நிர்ணயக் கழகத்திடம் அனுமதி பெறாதது; ரயில் தயாரிப்பிற்கு டெண்டர் விட்டதில் முறைக்கேடு என்று குற்றம் சாட்டப்பட்டதோடு; இது தொடர்பான ஆவணங்களையும் ரயில்வே வாரியத்தின் உத்திரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி விசாரணையையும் தொடங்கியது. அதனடிப்படையில் T-18 உற்பத்தியும், மேற்கண்ட 11 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சுதான்சு உள்ளிட்ட 11 பேரும் குற்றமற்றவர்கள் என தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். சரி, இவர்கள் மீது இப்படி ஒரு தவறான / போலி வழக்குப் பதிவு செய்ய என்ன அவசியம் ?


ரயில் பெட்டிக்கான எலெக்ட்ரிக் வேலைகளுக்கான டெண்டரை ஐ.சி.எஃப் நிர்வாகம் கோரியது. இதனடிப்படையில் பல நிறுவனங்கள் டெண்டரில் கலந்துக் கொண்டன. அதில் குறைவான தொகையுள்ள மேதா என்ற இந்திய நிறுவனத்தின் டெண்டரை அங்கீகரித்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துக் கொள்ளப்பட்டது. அதே வேலையில், அதிகமான தொகையுள்ள மற்ற நிறுவனங்களின் டெண்டர்களை [அதாவது, கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் டெண்டரையும், ஜெர்மனியைச் சேர்ந்த சீமன்ஸ் நிறுவனத்தின் டெண்டரையும்] நிராகரித்துவிட்டது.


மேலும் அந்த சமயத்தில், T-18 வகையைச் சார்ந்த 60 அதிவேக ரயில்களை வாங்க, ரயில்வே வாரியம் சர்வதேச டெண்டர்களை கோரப்போவதாகவும், அதில் ஐ.சி.எஃப் நிறுவனம் கலந்து கொள்ளாத வகையில் நிபந்தனைகள் இருப்பதாகவும், ரூ.25,000 கோடியில் வெளிநாட்டில் இருந்து ரயில்களை இறக்குமதி செய்யப்போவதாகவும் செய்திகள் – தகவல்கள் வந்துள்ளதாக ரயில்வே தலைவர் Y.K.யாதவ்-விற்கு சுதான்சு கடிதம் எழுதியுள்ளார்.

BSNL நிறுவனத்தையும் HAL நிறுவனத்தையும் இதே போலவே முடக்கியதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுக்களுக்கு களவுக் கொடுத்ததோடு இதனை ஒப்பிடலாம்.

இதைப் போலவே ஐ.சி.எஃப் நிறுவனமும் T-18 திட்டமும் கார்ப்பரேட்களால் களவாடப் பட்டுவருகின்றன என்பது திண்ணம். ஆனால், சுருட்டப்போவதும், சூறையாடப் போவதும் எவ்வளவு மில்லியன் டாலர் என்பது கார்ப்பரேட்டுகளுக்குத் தான் வெளிச்சம்.


T-18-ஐ உருவாக்கியவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, இந்திய தொழில்நுட்ப சாதனைகளை – சந்திராயன் விண்கல வடிவமைப்பு போன்ற பெருமிதங்களை –  சாதித்த விஞ்ஞானிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இணையானது என்கிறார் சுதான்சு.

மேக்-இன்-இந்தியா என்ற மோடியின் கனவுத் திட்டத்தைக் கூட அந்நிய – உள்நாட்டு கார்ப்பரேட்கள் தான் தீர்மானிக்கின்றனர் என்பதோடு டி-18 திட்டம் முடக்கப்பட்டதன் மூலம், ஆளும் வர்க்கம், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோரியின் கள்ளக் கூட்டை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களில்ர சாதனை செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது என்ன புதிய விவகாரமா ?இதை ஏற்கெனவே இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் செய்து காட்டியிருக்கிறார்களே !

நம்பி நாராயணன் மீது விசாரணை மட்டும் நடத்தப்படவில்லை. கைது நடவடிக்கையும், 50 நாட்கள் சிறை வாசத்தையும் சந்தித்தார் அவர்.  அது மட்டுமா ? ‘தேச துரோகி’ என்ற பட்டம் வேறு. இவர் மாநகராட்சிப் பள்ளியில் படித்து விஞ்ஞானியாகி, பின்பு இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுடன் இணைந்து T-1 என்ற ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டவர். உலகில் முதல் திரவ எரிப்பொருளில் இயங்கும் ராக்கெட் எஞ்சினை அறிமுகப்படுத்தியவர்.

உலகம் போற்றிய இஸ்ரோவின் ‘க்ரையோஜினிக்’ எஞ்சின் ஆராய்ச்சியின் இயக்குனரான நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள், க்ரையோஜினிக் எஞ்சின் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவருடன் இணை இயக்குநர் சசிக்குமார், ரஷ்ய விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திர போஸ் போன்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணைக்குப் பிறகு, இது புனையப்பட்ட [ஜோடிக்கப்பட்ட] வழக்கு என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதை உலகமே அறியும்.

மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தனது சுயசரிதையான OF MEMORIES” என்ற நூலில் “இந்தியா கிரயோகெனின் எஞ்சின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்கு தடை ஏற்படுத்த முயல்கிறது. சிஐஏ-வை ஏவிவிட்டு, அடுத்தவர்களை அழிப்பதில் வலிமைப் படைத்த அமெரிக்கா, தனக்கு மசிந்த இந்த போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய் குற்றச்சாட்டுகளை போட வைத்து என்னைக் கைது செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தொழிற்நுட்பத்தை இந்தியாவுக்கு ரஷ்யா தரக்கூடாது என்று ஜெர்மனியும், பிரான்சும் ரஷ்யாவை மிரட்டின.

இவ்வளவு கொடுமைகளை நிகழ்த்திய கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலைவைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் அம்பலப்படுத்தியுள்ளார் .

இந்தியா இந்த தொழிற்நுட்பத்தி வளரக் கூடாது என கங்கனம் கட்டி வேலை செய்யும் இந்திய நாட்டின் – மக்களின் எதிரியான அமெரிக்க, ஜெர்மனி, பிரான்சு போன்ற ஏகாதிபத்திங்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைக் கூட இல்லையே ஏன்?

இதுதான் RSS,BJP பாசிச கும்பலின் இந்திய அதிகாரவர்க்கதின் ஏகாதிபத்திய தேசபக்தி ! வர்க்க புத்தி. ஆனால், உண்மையான நாட்டுப்பற்றாளர்களை – போராளிகளை, பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை தேச துரோகியாக சித்தரித்து சுட்டுக்கொள்ளுகிறது இந்த அரசு.

இத்தகைய பொதுத்துறை அழிப்பு நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத  செயல்பாடுகளையும் அம்பலப்படுத்திய ஆனந்த் தெல்ட்தும்டே, வரவர ராவ், சாய்பாபா, சுதா பரத்வாஜ் போன்ற செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சல்கள் என முத்திரை குத்தி, பொய் வழக்கில் கைது செய்து,  ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிணை வழங்காமல் இன்றளவும் சிறையில் அடைத்திருக்கிறது பாஜக.

நீதித்துறை முதல் உளவுத் துறை வரை அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் பெகாசஸ் போன்ற செயலிகள் மூலம் வேவு பார்ப்பது, அவர்களை மிரட்டியோ, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டோ அவர்களை முடக்குவது இதன் மூலம் தனது காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது பாஜக.இன்று பொதுத்துறையை பாதுகாத்த ‘குற்றத்திற்காக’ தேசதுரோக முத்திரை குத்தி ஐசிஎஃப் அதிகாரிகள், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோரைத் தண்டித்தது போல, நாளை நமக்கும் நடக்கலாம். கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் தமது அயோக்கியத்தனங்களை மறைக்க போடும் வெளி வேசம் தான்  தேசபக்தி, தேச துரோகி எனும் முத்திரைகள் அனைத்துமே.

1994-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 6 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு கேரள காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனை விசாரித்த சிபிஐ அந்த வழக்கு புனையப்பட்டது எனவும், நம்பி நாராயணன் உள்ளிட்டோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் காவல்துறையினா் இழைத்த தவறுகள் குறித்து கண்டறிவதற்கு நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.


அந்தக் குழு நடத்திய விசாரணையில் உளவு பாா்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், சசிகுமாரன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஆதாரமின்றி கைது செய்யப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது நம்பி நாராயணனுக்கும், சந்திரசேகரனுக்கும் காவல்துறையினா் உடலளவிலும், மனதளவிலும் அளித்த துன்புறுத்தல் தொடா்பாக விரிவாக விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தனது மேலதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தவும் நம்பி நாராயணனுக்கு காவல்துறையினா் அழுத்தம் அளித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான உளவு வழக்கில் தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக அண்மையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ, அதுதொடா்பாக திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையுடன் டி.கே.ஜெயின் கமிஷன் அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.