வந்துட்டாரய்யா,வந்துட்டார்...வடிவேலு.....!

 

எங்கேயிருந்து கிளம்பியது?

கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என, அமெரிக்காவின் 18 உளவு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் அலுவலகம் தீர்மானமாக தன் முடிவை குறிப்பிட்டிருக்கிறது.

நிபுணர்களோ, கொரோனா வைரஸின் தோற்றத்துக்கான ஆதாரங்களை சேமிப்பதற்கான காலம் கரைந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறார்கள்.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரோ அந்த அறிக்கை அறிவியலுக்கு எதிரானது என அதை நிராகரித்துள்ளார்.

தேசிய உளவு அமைப்பு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கை, அமெரிக்க உளவு முகமைகள் கொரோனா நோய் தொற்றின் தோற்றுவாய் விவகாரத்தில் பிரிந்து கிடப்பதாகக் கூறுகிறது.

"அனைத்து உளவு அமைப்புகளும் இரு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறார்கள். அதில் ஒன்று இயற்கையாக பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டது, மற்றொன்று ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்கள்."

பல பெயர் குறிப்பிடாத உளவு அமைப்புகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அல்லது அதற்கு முன்னோடி வைரஸிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என கருதுகின்றன. ஆனால் அவர்களுக்கும் இந்த முடிவில் அதிக நம்பிக்கை இல்லை.

மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று, வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்களால் ஏற்பட்டிருக்கலாம், அந்த ஆய்வகம்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளவால்களில் இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டிருந்தது என மற்றொரு உளவு முகமை ஓரளவுக்கு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கைகள் வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டார். அதில் சீனா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என விமர்சித்து இருந்தார்.

"கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பதற்கான தகவல்கள் சீனாவில் இருக்கின்றன. ஆனால் ஆரம்பத்திலிருந்தே சீன அதிகாரிகள், சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் உலக பொது சுகாதார சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அத்தகவல்களைப் பெறாமல் தடுக்க வேலை பார்த்தனர்" என பைடன் கூறினார்.

"உலகத்துக்கு விடை வேண்டும், அது கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன்" என கூறியுள்ளார் பைடன்.

கடந்த டிசம்பர் 2019-ல் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுநாள் வரை உலகம் முழுக்க சுமார் 45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட விலங்கிடம் இருந்து பரவி இருக்கலாம் என கூறியது. அந்த ஆய்வு முடிவுகளை சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

கொரோனாவின் தோற்றம் குறித்து ஒரு முடிவுக்கு வர, தரவுகளை மதிப்பீடு செய்து ஓர் அறிக்கையை தயார் செய்யுமாறு, அமெரிக்க உளவு முகமைகளை கடந்த மே மாதம் கேட்டுக் கொண்டார் அதிபர் பைடன்.

இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் இருக்கும் ஃபோர்ட் டெட்ரிக் பகுதியில் இருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியது எனக் கூறியது சீனா.

கூடிய விரைவில், உயிரியல் ரீதியாக கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பதற்கான ஆதாரங்களை சேகரிப்பது சிரமமாகிவிடும் என இந்த வார தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

"இந்த முக்கியமான விசாரணையை நடத்துவதற்கான கால அவகாசம் அதிவேகமாக குறைந்து கொண்டே வருகிறது" எனவும் எச்சரித்துள்ளது.

-------------------------------------------------------------------------

வந்துட்டாரய்யா,வந்துட்டார்...வடிவேலு.....!

நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு  பகிர்ந்திருக்கிறார்.





நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ல் வெளியான படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள கதையில் நாயகனாக, இம்சை அரசன், உக்கிரபுத்திரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதன் இரண்டாம் பாகத்திற்குமான எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில்தான் இதன் இரண்டாம் பாகம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த பிரச்னை மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நடிகர் வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. மேலும் நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, 'Vadivelu Returns', 'Vadivelu For Life' என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகளின் வாழ்த்து செய்திகளால் பரபரப்பாக இருந்த வடிவேலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்.

"ரொம்ப சந்தோசமா இருக்கேன். முதல் முறையாக படங்களில் நடிக்க வந்தபோது இருந்த மகிழ்ச்சியை விட தற்போதுதான் அதிகம் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா குடும்பமும் என்னுடையதுதான். ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம்தான். இவர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் உற்சாகமாக.

இவ்வளவு நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தபோது மனநிலை எப்படி இருந்தது?

"இவ்வளவு நாட்கள் நடிக்காமல் இருந்தால் கூட, மீம் கிரியேட்டர்ஸ் என்னை தொடர்ந்து நடிப்பது போலவே, மக்களோடு மீம்கள் மூலம் இருக்க வைத்தார்கள். என்னுடைய எல்லா ரியாக்‌ஷனும் போட்டு, என்னை படங்களில் இருப்பது போல உயிரோட்டமாக வைத்திருந்தார்கள். மீம் கிரியேட்டர்கள் எனக்கு பெரிய கடவுள் மாதிரி. அவர்கள்தான் மக்களுக்கு என்னை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் யாரென்று தெரியாது. அவர்களுக்கு எனது நன்றி".

அடுத்து என்ன மாதிரியான படங்களில் நடிக்க திட்டம்?

"'லைகா புரொடக்‌ஷன்' தயாரிப்பில் முதல் படம் நடிக்க இருக்கிறேன். அதோடு சேர்த்து அடுத்து ஐந்து படங்களும் அவர்கள் தயாரிப்புதான். மக்கள் ஆசையை நிறைவேற்றிய சுபாஷ்கரன் தற்போது 'சபாஷ்கரன்' ஆகிவிட்டார். படத்தின் பெயர் 'நாய் சேகர்'. இயக்குநர் சுராஜ்.

ஜூலை மாதம் நடிகர் வடிவேலு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாயை அளித்தார்.

கதையின் நாயகனாகவும், காமெடி நாயகனாகவும் இந்த கதையில் நடிக்க இருக்கிறேன். கதாநாயகன் என்றால் ராஜா வேடம் எல்லாம் இல்லை. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யை தவிர்த்து விட்டேன். இனி எனக்கும் 'எஸ் பிக்சர்ஸ்'-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த படம் நடிக்க போவதில்லை. அதுமட்டுமல்ல, இனி வரலாற்று படங்கள் எதிலுமே நடிப்பதாகவே இல்லை. அந்த படத்தை ஒத்து கொண்டதுதான் என்னுடைய கெட்ட நேரம். அதை விட்டு விலகியதுதான் என்னுடைய நல்ல நேரம்.

தமிழக முதல்வரை சந்தித்த நேரம் நன்றாக இருக்கிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொல்வேன்".

திரையுலகில் இருந்து வாழ்த்துகள் வந்ததா?

"காலையில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தபடியே இருக்கின்றன. நிறைய படங்கள் இனி வரும். தொடர்ந்து நடிப்பேன். மக்களை சிரிக்க வைப்பேன். முன்னணி கதாநாயகர்கள் கூட வாய்ப்பு வந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்பேன்."


--------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?