முடியப் போகும் வெறியாட்டம்.

 கொரோனாவைப் பற்றி மேலும் பேச வேண்டியதாகி விட்டது.

2வது அலை,3வது அலை என பலமுறை கொரோனா வரும்போது நாமும் பல முறை  பேசியாகத்தான் வேண்டிய கட்டாயம்.

இந்தியாவில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரையிலான கணக்குப்படி சுமார் 63.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. 14.6 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



"இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் இதயத் தசை வீக்கம் வந்ததாக இதுவரை கண்டறியப்படவில்லை. அது தொடர்பான கண்காணிப்பும் ஆய்வும் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்."

"மையோகார்டிட்டிஸ் என்பது இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறிப்பிடுகிறோம். இதற்குப் பலவகையான காரணங்கள் இருக்கலாம். பொதுவான காரணம் தொற்றுதான். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகள் காரணமாக இதயத்தில் வீக்கம் ஏற்படலாம். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்போது இது உருவாகலாம்"
ஃபைசர், மாடனா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிகளால் மிக அரிதான மையோகார்டிட்டிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுவதாக ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறுகிறது. இவை இளம் வயது ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.உலகின் ஒருபுறத்தில் கோவிட் தடுப்பூசியே இன்னும் போட்டுக்கொள்ளாதபோது போட்டுக்கொண்டவர்கள் மேலும் மேலும் அதிக தடுப்பூசி டோஸ்களைப் போட்டுக்கொள்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம். 

இந்தியாவில் இதுவரை 6 வகையான கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தொடக்கத்தில் இருந்தே போடப்பட்டு வருகின்றன. இதன் பிறகு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடனா, ஜான்சன் &ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி, ஸைடஸ்-கேடில்லா ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இப்போதைக்கு கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன. இவை மூன்றுமே இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

மாடனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் இதுவரை இல்லை. அதனால் அமெரிக்காவில் இருந்தே அதை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசிக்கு இந்தியாவில் இதுவரை பயன்பாட்டு அனுமதி கோரவில்லை.

கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் உலகை ஆட்டிப் படைத்து மனித உயிர்களைப் பலி கொள்வது இது முதல் முறையல்ல.

காலரா,மலேரியா,பெரியம்மை,எய்ட்ஸ் என பல வந்து சூறையாடியுள்ளன.

காலரா ஆசிய,ஆப்ரிக்க,ஐரோப்பிய கண்டங்களில்  கோடிக்கணக்கில் கொலை வெறித்தாக்குதல் நடத்தி மறைந்துள்ளது.

கரோனா வைரஸ் போல் எளிதில் தொற்றக்கூடியது இல்லையென்றாலும், எய்ட்ஸ் நோயும் ஒரு நோய்த் தொற்றுதான். அமெரிக்காவில் முதன்முதலில் எய்ட்ஸ் தொற்று 1981-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. அடுத்த 6 ஆண்டுகளில் எண்ணிக்கை 30,000-ஐத் தொட்டது. 



இதே வேகத்தில் ஏறி 1991-ல் 2,70,000 தொற்று ஏற்பட்டு, 1,79,000 பேர் பலியாகியிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. 

அந்த எண்ணிக் கையைப் பார்த்து, அமெரிக்க சுகாதாரத் துறை அலறியது. ஆனால், நடந்ததோ வேறு. ஃபார் சொன்னதுபோல் ஒரு வேகத்தில் ஏறி, 1988-க்குப் பின்னர் நோய் அதே வேகத்தில் சரியத் தொடங்கியது. 1990-ன் மத்தியில் கட்டுப்பாடான எண்ணிக்கையை வந்தடைந்தது. 

வேறு பல நோய்த்தொற்றுகளிலும் இதே உருமாதிரியை இன்றுவரை பார்க்க முடிகிறது.

அதே போல் கொரோனாவும் நாளடைவில் தனது சக்தியை இழந்து சார் சளித்தொல்லை வகையில் சேர்ந்து விடும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு காரணம்  ஆரம்பித்த எதும் முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

 மனிதர்களிடம் அதை எதிர்க்கும் சக்தி உருவாகி விடும்.மற்றொன்று கொரோனா ஒழிப்பு மருந்து கண்டு பிடிக்கப் பட்டு விடும்.

போதுமான பணம் குவிந்து,மனிதர்கறிடம் நோய் எதிர்ப்பும் அதிகரித்த பின்னர் தற்போது தடுப்பூசி,பூஸ்டர் ஊசி என்று தயாரிக்கும் மருந்து தயாரிப்பு பகாசுர நிறுவனங்கள் வேறு வழியின்றி கொரோனா 

ஒழிப்பு மருந்தை தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

-----------------------------------+-----------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?