‘ரிலையன்ஸ் வழியில் குறுக்கிடாதே’
தனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமத்துக்கான பணத்தைப்பெற்றக்கொண்ட பின்னரும் அரசு வழங்கவில்லை என்பதும் அதற்கு மோடியின் அலுவலகம்தான் கரணம் என்பதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால் வழக்கம் போல் மோடி வாயை முட்டிக்கொண்டுள்ளார் . தனியார் நிறுவங்கள் தொலைதொடர்பில் தூள் பரத்திக்கொண்டிருக்கையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மந்தமாக இயங்குவதாக மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அது ன்மைதான் . ஆனால் அதற்கு காரணம் மோடியின் பாஜக அரசுதான் என்ற உண்மை தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது.பி எஸ் என் எல் நிறுவனம் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதில் மோடியின் அரசு 100% பங்கை வகிக்கிறது. அம்பானியின் ஜியோவுக்கு மாடலாக நின்றவர்தான் மோடி. பிரதமர் படத்தை தனியார் நிறூவனம் தனது விளம்பரத்திற்கு பயன் படுத்துவது அரசியல் இறையான்மைப்படி தவறு என்றாலும் அதை அம்பானியோ ,மோடியோ கண்டுகொள்ளவில்லை.அவர்தான் மக்க...