‘ரிலையன்ஸ் வழியில் குறுக்கிடாதே’

 
தனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமத்துக்கான பணத்தைப்பெற்றக்கொண்ட பின்னரும்   அரசு வழங்கவில்லை என்பதும் அதற்கு மோடியின் அலுவலகம்தான் கரணம் என்பதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
 
ஆனால் வழக்கம் போல் மோடி வாயை முட்டிக்கொண்டுள்ளார் .
தனியார் நிறுவங்கள் தொலைதொடர்பில் தூள் பரத்திக்கொண்டிருக்கையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மந்தமாக இயங்குவதாக மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அது ன்மைதான் .
ஆனால் அதற்கு காரணம் மோடியின் பாஜக அரசுதான் என்ற உண்மை தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது.பி எஸ் என் எல் நிறுவனம் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதில் மோடியின் அரசு 100% பங்கை வகிக்கிறது.
அம்பானியின் ஜியோவுக்கு மாடலாக நின்றவர்தான் மோடி.
பிரதமர் படத்தை தனியார் நிறூவனம் தனது விளம்பரத்திற்கு பயன் படுத்துவது அரசியல் இறையான்மைப்படி தவறு என்றாலும் அதை அம்பானியோ ,மோடியோ கண்டுகொள்ளவில்லை.அவர்தான் மக்களுக்கான பிரதமர் இல்லையே.கார்பரேட்களின் பிரதமர்தானே.

இந்திய டெலிகாம் துறையின் இந்த மோசமான நிலைக்கு ரிலையன்ஸ் ஜியோவே காரணம் என்றும் அரசு அவர்களுக்குச் சாதமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 
காங்கிரஸ் ஆடசியில் வாங்கப்பட்ட அதி நவீன தொலைத்தொடர்பு இயந்திரங்கள் ஜியோ அப்பனையே தூக்கிசாப்பிடும் அள்வு செயல்திறன் மிக்கவை.
 
ஆனால் அதை மோடி அரசு பயன்படுத்தாவிட்டால் முடக்கி வைத்துள்ளது என்பது அரசாங்க ரகசியம் அல்ல.அதை செயல்படுத்த அனுமதிக்கக்கோரி பி எஸ் என் எல் பல முறை வேண்டிய பொது மோடி அரசு அமைதிக்காததால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர் .
 
அதனால் கோபமான மோடி 4ஜி அலைக்கற்றை உரிமத்துக்கு  பி எஸ் என் எல் 2000 கோடிகள்வரை பணம் செலுத்திய பின்னரும் வழங்காமல் உள்ளது.
 
இதனால் 3ஜியுடன் முடங்கி,4ஜி வழக்கமுடியாமலும் நவீன கருவிகளை செயல்படுத்தகமுடியாமலும் பி.எஸ்.என்.எல் திணறி வருகிறது.
 
இவை எல்லாமே பிரதமர் மோடியின் அப்பட்டமான ஜியோ ஆதரவு செயல்.அரசு பொதுத்துறை நிறுவனத்தை முடக்கி அழிக்கும் கேவலமான செயல் .
 
ஒரு கார்ப்பரேட் கைக்கூலி பிரதமரிடம் வேறு என்னதான் மக்கள் எதிர்பார்க்கமுடியம்.

 
பிரதமர் அலுவலகத்திடம் இருந்தும் இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கிடைக்கவில்லை. 
 
ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாகப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் காதில் விழவே இல்லை.
 
 மோடியின் இந்த அழித்தொழிப்பு வேலைகளை எதிர்த்து 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
 
ஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலினார் நிறுவனங்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை திட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. 
 
போட்டி குறைந்ததும் ரிலையன்ஸ் ஜியோ கண்டிப்பாகக் கால் மற்றும் தரவு கட்டணங்களை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 
 
இதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நேரடியாக ,வெளிப்படையாகவே  உதவி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

4ஜி அலைக்கற்றை வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றவும் அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே 4ஜி அலைக்கற்றைத் தங்களுக்கு ஒதுக்கவே இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ள இந்தப் புகார்களுக்கு இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 
 
ரிலையன்ஸ்ச் ஜியோ வணிக ரீதியாகத் தங்களது சேவையினை வழங்கத் தொடங்கியதில் இருந்தே இந்திய டெலிகாம் துறை மோசமான நிலைக்குக் சென்று விட்டது.
போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம், அதில் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் என்றும் ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பெஷன் திட்டம் மாற்றம், ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு போன்ற கோரிக்கைகளும் அடங்கும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு விதிகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் தங்களது பென்ஷன் பங்களிப்பில் இருந்து பெறும் தொகையினை அளிக்காமல் வருவதாகவும் இது நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சியில் பெறும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.செப்டம்பர் 2016ல் தனது சேவைகளை துவங்கிய முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் கழுத்தறுப்பு விலை குறைப்பு காரணமாகவே இவை அனைத்தும் நிகழ்ந்துள்ளன. 

 தன்னுடைய வலுவான பொருளாதார பலத்தை பயன்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடக்க விலைக்கு குறைவாக தனது சேவைகளை வழங்குகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களையும் அழிப்பதே ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம். 

தனது இந்த இலக்கை ரிலையன்ஸ் ஜியோ அடைந்தவுடன் தனது உண்மை சொரூபத்தை அது காட்டும். குரல் அழைப்புகள் மற்றும்இணையதள கட்டணங்களை கடுமையாக உயர்த்துவதன் மூலம் அது மக்களை கொள்ளையடிக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு நரேந்திர மோடி அரசாங்கம் வெளிப்படையாக ஆதரவளிப்பது என்பதுதான் மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம். 


ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை துவக்கிய2016 செப்டம்பர் அன்று நாட்டின் அனைத்துமுக்கிய தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில், ரிலையன்ஸ் ஜியோவின் சேவை பயன்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி, கூப்பிய கரங்களோடுவேண்டுகோள் கொடுத்தார். 

 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிறுவனம், எனவே அதன் இலக்கை அடைவதற்கான வழியில்யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற ‘தெளிவான’செய்தியை இந்த விளம்பரம் ஒட்டு மொத்த நாட்டுமக்களுக்கும் கொண்டு சென்றது. ரிலையன்ஸ் ஜியோவின் பாதையில் குறுக்கிட்டஒரு நபர் அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.

அன்றைக்கு தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக் அவர்கள்தான் அது. 

 ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்த காரணத்தால், அரசிற்கு வரவேண்டிய வருமானம் குறைந்துள்ளதை அவர் தைரியமாக சுட்டிக்காட்டினார்.

 (தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் வருவாயின் அடிப்படையிலேயே தான் அரசிற்கு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்களை செலுத்தி வருகின்றன)

. ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் இத்தகைய கழுத்தறுப்பு விலையினை அமலாக்கி வருவதால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வெண்டுமென இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) மூத்த ஐஏஎஸ் அதிகாரிஜே.எஸ்.தீபக்  கடிதம் எழுதினார். 
 இதன் விளைவாக தீபக் அவர்கள் தொலைத் தொடர்பு துறையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு வணிகத் துறையில் சேர்க்கப்பட்டார். 

இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராகபேசுபவர்களுக்கு இதுதான் கதி என்பதை நரேந்திரமோடி அரசாங்கம் தெளிவாங்கியது .

இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களை அழித்தொழிக்க வேண்டும் என்கிற ரிலையன்ஸ் ஜியோவின் இலக்கை அடைவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறகுகளை வெட்டும் திருப்பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
 பிஎஸ்என்எல் நிறுவனம்100 சதவிகிதம் அரசுக்கு சொந்தமானது.
 தனியார்நிறுவனங்கள் 4ஜி சேவையை கொடுக்க ஆரம்பித்து4 ஆண்டுகள் கழிந்துவிட்டன.அரசாங்கம் 4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல்-க்கு வழங்காத காரணத்தால், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னமும் தனது 4ஜிசேவையை துவங்கவில்லை.

 பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் (ஏயுஏபி) கடந்த ஒருவருட காலமாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

ஆனால், 
"ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஒரு பொதுத்துறை நிறுவனம் தரும் கடுமையான போட்டியை தடுப்பதற்காகவே மத்திய ஆட்சியாளர்கள் இந்தக் கோரிக்கையின் மீது கேளாக்காதினராய் உள்ளனர்"
என்பதே பி.எஸ்.என்.எல், ஊழியர்களின் குற்றசாட்டு.
உண்மையும் அதுதானே?


========================================================
ன்று,
நவம்பர்-30.

ஸ்காட்லாந்து தேசிய தினம்.

இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)

பார்போடஸ் விடுதலை தினம்(1966)

வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
========================================================


ஜகதீஷ் சந்திர போஸ் 
 வாழ்க்கை இணையில்லாத உழைப்பு,அளவில்லாத தன்னம்பிக்கை,கூடவே மார்க்கோனியின் துரோகம் ஆகியவற்றால் இணைந்து உருவானது. அந்த வலி தரும் கதையை தெரிந்து கொள்வோம்
ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும்,வித்தியாசமான நபர். 
ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுகிற காரியங்களை செய்து கொண்டிருந்தார் ; மக்களுக்கு உதவ தன் சொத்துக்களை பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. ஆங்கிலப்பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில் எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார். 
இயற்பியலில் போஸ் பட்டம் பெற்றதும் அவரின் பிள்ளையை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்ப முடிவு செய்தார். கண்டிப்பாக சிவில் சர்வீஸ் வேலைக்கு தன் மகன் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். காரணம் அது எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கை அவரிடம் இருந்தது. மக்களுக்கு சேவை செய்யப்பயன்படும் மருத்துவம் படிக்ககொடுமையான வறுமைக்கு நடுவிலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அனுப்பினார். 
அங்கே போய் பிணவறைகளின் நாற்றம் பொறுக்காமல் இயற்கை அறிவியல் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று போஸ் திரும்பினார்.

ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். இந்தியர்களை மனிதர்களாக நடத்தியவர் அவர். மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் ஆகியிருந்தார். 
அவருக்கு முழுச்சம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் இவர். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம்
தந்தார்கள்.இந்திய கல்வித்துறை பணிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்தார் ரிப்பன். கடும் போராட்டத்துக்கு பின் அவரை அப்பதவிக்கு கொண்டு வந்தார் ரிப்பன்.

முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது.
 மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் ; அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ,வழிகாட்டியோ இல்லாமல் இதுசார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார். கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார் அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். 
ஆனால்,அந்தக்கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. 
அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார் .
இன்னமும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றியமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார்.
கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறைகடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து,மீண்டும் அதை திரும்பப்பெறுகிற மாயத்தை செய்தது. 
அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன. 
மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். 
கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. 
இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.

ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். 
அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் U வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். S என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார்.
 அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடன்ட் செய்ய மறுத்தார் ; “என் தந்தையைப்போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். 

அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் போஸ் செய்த உதவி அளவில்லாதது என்று ஒன்றரை பக்கம் எழுதிவைத்த மார்க்கோனிதான் திருடியதை பற்றி ஒரு வரி கூட மறந்தும் சொல்லவில்லை. 
இந்த பாதரச கொஹரர் என்று யாரேனும் கேள்வி கேட்டாலே பேய் முழி முழித்தார் அவர். ஒரு காலத்துக்கு பிறகு அப்படியே ரேடியோவை தான் தான் கண்டுபிடித்தேன் என்று உலகம் ஏற்றுக்கொண்டு நோபல் பரிசு கொடுத்த பிறகு இரும்பு கொஹரர் என்று மாற்றிக்கொண்டு கச்சிதமாக சமாளித்தார். 
உண்மையில் அவருக்கு மின்காந்த அலைகளை பற்றி தெரிந்தே இருக்கவில்லை என்று அவரே ஒரு நேர்முகத்தில் ஒப்புக்கொண்டார். அறிவியல் அறிவே இல்லாமல் இருபத்தி இரண்டு வயதில் போஸின் படைப்பை அப்படியே திருடி அவர் ரேடியோவை உருவாக்கியதாக சொன்னார் . போஸ் பெயரை மறந்தும் கூட வெளியே விடவில்லை அவர்கள்,
போஸ் தான் அதைக்கண்டுபிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மார்க்கோனி ஏமாற்றியது ஊர்ஜிதமானது. 
உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார் என்று இனிமேல் யாரவது சொன்னால் தலையில் கொட்டி அதை கண்டுபிடித்தது இந்தியன் போஸ் என்று சொல்லுங்க..

                                                                                                                                          -                                                                                      - பூ.கொ.சரவணன்
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.