கூகுளால் அபாயம்?.
சுதாரிக்கும் உலக நாடுகள்
கேள்வி கேட்கவோ அல்லது தவறுகளை சுட்டிக் காட்டவோ இணையான அதிகாரம் பெற்றவர் எவரும்இல்லையென்றால் தன் மனம் போன போக்கில் செயல் களைச் செய்யத் தொடங்குவதுதான் எதேச்சதிகாரம்.
தான்மட்டுமே பெரியவன் என்ற நிலையில் தனக்கு கீழே இருப்பவர்களை அடிமைகளாகக் கருதி அவர்கள் மீதுதன் விருப்பங்களைச் செலுத்தும் இம்மனநிலை எல்லாத்துறைகளிலும், எல்லா இடங்களிலும் இருந்தே வருகிறது.
அதற்கு எதிரான போராட்டங்கள் காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நிகழ்ந்ததை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
இன்றைய நிலையில் அமெரிக்கா மற்ற நாடுகளுடன்எதேச்சதிகார மனோபாவத்துடன் செயல்படுவது போலவே, அந்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின் றன.
இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இருந்துவரும் நிலை.
வர்த்தகமே அரசியலைத் தீர்மானிக்கும் அமெரிக்க சூழலில் நிகழும் மாற்றம், உலகம் முழுவதுக்குமான மாற்றம் போன்ற மாயத் தோற்றத்தை நம்மனங்களில் விதைக்க இந்த நிறுவனங்களே காரணம்.
யாகூ மெயிலில் 100 எம்பி அளவு இடத்தை பயன்படுத்தி வந்த நம்மிடம் கூகுள் அதிரடியாக களம் இறங்கி1 ஜிபி அளவு மின்னஞ்சல் என்ற வலையை விரித்தது.
அதில் சிக்கினோம்.
இன்றுவரை மீள முடியவில்லை.
இணையத்தில் நாம் செலவிடும் டேட்டாவின் விலை மட்டுமே நமக்குத் தெரியும்.
நம்முடைய டேட்டாவின் மதிப்பு என்ன என்பது நமக்குத் தெரியாது.
கூகுள்,ஃபேஸ்புக் முதல் நம்ம ஊர் ஜியோ வரை நமது தகவல்களை (டேட்டா) வர்த்தகம் செய்யத் தெரிந்தவர்கள் முதலிடம் பிடிக்கிறார்கள்.இந்நிலையில், ஜியோ நிறுவனத்தை அம்பானி தொடங்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது.
பெட்ரோலில் சம்பாதித்ததை ஜியோவில் முதலீடு செய்வதாகவும், வருங்காலத்தில் டேட்டா என்பது பெட்ரோலைப்போல என்று கூறினார்.
“இவரைப்போல யாரு” என்று ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயனர்கள் பலரும் மீம்ஸ் போட்டு ஆனந்தக்கூத்தாடினர்.
உண்மையில் அதன் அர்த்தம், இந்தியர்களுக்கு குறைந்த விலையில் இணையத்தைத் தருவதுஎன்பதல்ல.
பெட்ரோலுக்கு இருக்கும் உலக சந்தை போல நம்முடைய தனிப்பட்ட தகவல்களான பெயர்,இருப்பிடம், பிடித்தது, பிடிக்காதது போன்ற பொதுவானதகவல்கள் தொடங்கி தற்போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்ற நிலைத்தகவல் (ஸ்டேட்டஸ்) வரை அனைத்துமே டேட்டாதான்.
இந்தத் தகவல்களுக்கு உலக அளவில் மதிப்புமிக்க சந்தை இருக்கிறது. இதைஎளிதாக சேகரிக்கும் வழிமுறையும் தொழில்நுட்பத்தையும் கட்டமைத்துக் கொண்டால் வர்த்தகத்தில் கொடி நாட்டலாம் என்பதை கூகுள்,ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே செய்து காட்டியிருக்கின்றன.
கூகுள் பயனர் ஒருவர் தன்னுடைய ஐடி மூலம் 60க்கும் மேற்பட்ட சேவைகளை இலவசமாக பெறமுடியும். அனைத்து சேவைகளுக்கும் ஒரே பயனர் பெயர்,ஒரே பாஸ்வேர்ட்தான். எளிதாக இருக்கிறதே என்று நாம் நம்புகிறோம்.
உண்மையில் அதன் மூலம் ஒருவரின் அன்றாடத் தேவைகளை, தனிப்பட்ட மனநிலைஉள்ளிட்ட பல தகவல்களை கூகுள் அறிந்து கொள்கிறது.
கூகுள் மின்னஞ்சல், டிரைவ் உள்ளிட்ட சேவைகளுக்கு இலவசமாக 15 ஜிபி அளவு இடம் தருகிறது. உண்மையில்கூகுள் தேடல், மின்னஞ்சல், டிரைவ், யுடியூப், காலண்டர், பிளாக்கர், ஆண்ட்ராய்ட், பிளே ஸ்டோர் எனப் பல சேவைகளிலும் நீங்கள் பயன்படுத்திய, பகிர்ந்த, பதிவேற்றிய தகவல்களை குறிப்பிட்ட காலம்வரை தன்னுடைய சர்வரில் பதிந்து வைத்துக் கொள்கிறது.
உங்கள் ஒருவரின் தகவல் மட்டும் டெராபைட் களைத் தாண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்போது ஐரோபிய நாடுகளில் தங்கள் அந்தரங்கங்களை ,ரகசியங்களை எட்டிப்பார்க்கும்,பதிவு செய்யும் கூகுளுக்கு எதிரான விழிப்புணர்வு பரவி வருகின்றன.அரசுகளும் தங்கள் அலுவல்களை மாற்றுத்தேடிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
தனி மனித சுதந்திரம், தகவல் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய நாடுகள் எப்போதும் முதலிடம் தருபவை. கடந்த மே 25ஆம் தேதி முதல் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளில் அமலாகியுள்ளபொது தகவல் பாதுகாப்பு ஒழுங்காற்று சட்டம் (General
Data Protection Regulation (GDPR) கூகுள்,ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய
பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில்,ஆண்ட்ராய்ட் போன் வாங்கும் போது குரோம்பிரௌசரை பயனரின் விருப்பமின்றி பதிந்து தருவதுகுற்றம் என்று கூறி அபராதமும் விதிக்கப்பட்டது. GDPRசட்டப்படி பயனரின் அனுமதியின்றி அவரது மின்னஞ்சல்முகவரியை சேமித்து வைப்பதுகூடக் குற்றமாகும்.
கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அடிமைத்தனம் போன்றது என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூகுளுக்கு மாற்றாகமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing) தேடுபொறியும்,
ரஷ்ய இணையதளமான யான்டெக்ஸ் (Yandex) போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், சிசெக்குடியரசின் செஸ்னம் (Seznam) தேடல்பொறி,
ஜெர்மன்மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கன்டூட் (Conduit) மற்றும்டீஆன்லைன் (T-Online),
நெதர்லாந்து நாட்டில் வின்டென் (Vinden.nl),
பின்லாந்தில் ஓநெட் (Onet.pl),
இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஆரஞ்சு (Orange) போன்ற உள்ளூர் இணையதளங்களையும் மாற்றாக முன்வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
நம்முடைய சுதந்திரத்தைப் பாதுகாக்க, நாமும்மாற்று இணையதளங்களை பயன்பாட்டில் வைத்திருப்பது நல்லதே.
=====================================================
இன்று,
நவம்பர்-28
பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது(1821)
நியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)
அல்பேனியா விடுதலை தினம்(1912)
நாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)
செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.

இந்த மரைனர் திட்டத்தின் கீழ் 10 விண்கலங்கள் அனுப்பப்பட்டன.
அதில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்ற மூன்றும் தொலைந்து போயின.

கூகுள் பிளேயில் மால்வேர் நிறைந்த செயலிகள்.

கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் நிறைந்து இருந்ததாக சுமார் 13 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 13 செயலிகள் நீக்கப்பட்டு
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலிகள் பயனர்களின்
ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்ட நிலையில்,
இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்து இருக்கிறது.
பிளே
ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார்
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல
கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி
கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர செயலிகள் இடம்பெற்று இருந்தன.
இசெட்
(ESET) பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு
ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர்
பரப்பிய 13 செயலிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த செயலிகள்
பிளே ஸ்டோரின் டிரென்டிங் பகுதியில் இடம்பெற்று இருந்ததாகவும் அவர்
தெரிவித்திருக்கிறார்.
எனினும், மால்வேர் நிறைந்த செயலிகள் தற்சமயம் பிளே ஸ்டோரில் இருந்து
நீக்கப்பட்டு விட்டன. கூகுள் இவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த செயலிகள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர்
உருவாக்கியதாகும். கேமினை திறந்து விளையாட முற்படும் போது செயலி கிராஷ்
ஆனது.
மேலும் இந்த செயலிகள் பயனர்களை கேம்
சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது.
இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருக்கிறது.
கடந்த
ஆண்டு கிட்டத்தட்ட 3.6 கோடி மொபைல் சாதனங்களை ஆட்வேர் மூலம் பாதிப்பில்
ஆழ்த்த கூகுள் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.