வைகோவின் "நாதஸ்வரமும்.நாற்காலியும் ....".
தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை, அக்கட்சி
தலைமை தெரிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, ஸ்டாலின் தரப்பு
கண்டுகொள்ளாததால், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ வரும் தேர்தல் காலத்தை எண்ணி விரக்தி அடைந்துள்ளார்.
சமீபத்தில், தனியார், 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்த, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., கூட்டணியில் இல்லை; காங்கிரஸ், முஸ்லிம் லீக் மட்டுமே உள்ளன. நட்பு கட்சிகள் வேறு; கூட்டணி கட்சிகள் வேறு' என்றார்.
ஸ்டாலினை முதல்வராக்க விரும்பிய வைகோவை, கூட்டணியில் இருந்து, தி.மு.க., கழற்றி விட்டதால், கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
துரைமுருகனின் பேட்டி, வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவனை அதிருப்தி அடையச் செய்தது.'தி.மு.க., கூட்டணியில், நீடிக்கவே விரும்புகிறோம்' என, திருமாவளவன், நேற்று முன்தினம் அறிவித்தார்.
வைகோவும், 'தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவு படுத்த வேண்டும்' என்றார்.
ஆனால் திமுக தொண்டர்கள்,தலைவர்கள் மனதில் கடந்த கால நிகழ்வுகள் தெளிவாகத்தெரிகிறது.
முன்பு திமுக மாநாட்டில் கலைஞரும் பிற கூட்டணித்தலைவர்களும் வைகோவுக்காக காத்திருக்கையில் மாநாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாககூறிக்கொண்டே போயஸில் ஜெயலலிதாவுடன் கூட்டணி இட ஒதுக்கீடு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்தான் வைகோ.
சென்றத்தேர்தலில் 89 இடங்களைப்பெற்ற திமுக முழுமையாக ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை தனது மக்கள் நலக் கூட்டணி மூலம் தடுத்தவர் வைகோ.அதை தனது சாணக்கியத்தனம் என்று பேட்டிகொடுத்தவர் அவர்.விஜயகாந்தை உருத்தெரியாமல் ஒய்த்தவர் அவர்தானே.
திமுக வெறும் 49 வாக்குகள் முதல் 3000 வாக்குகள் வரை மட்டுமே குறைவாக்கப்பெற்று தோல்வியைத்தழுவிய தொகுதிகள் 34.
இன்று ஸ்டாலினை முதல்வராக்கியேத் தீர்வேன் எனும் வைகோ அன்று பெட்டியை வாங்கிக்கொண்டு சகுனித்தனம் செய்யாமலிருந்தால் ,விஜயகாந்த்,திருமாவளவன் ஆகியோர் கலைஞர் எண்ணப்படி திமுகவுடன் கூட்டணி கண்டிருந்தால் இன்று ஸ்டாலின்தான் முதல்வர்.
இவை எல்லாம் திமுகவினர் அறியாத உண்மையா?
ஸ்டாலின் வைகோவை கூட்டணியில் சேர்த்தாலும் திமுக தொண்டர்கள் அதை தலைமை க்கட்டளைக்காக வெறுப்புடன்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
வைகோ ஸ்டாலினை திட்டியதை எல்லாம் மறக்கவில்லை.தனது தாயாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க வீட்டிற்கு வந்த ஸ்டாலின்,கனிமொழி ஆகியோரை அவர்கள் வந்து சென்றபின் வைகோ கூறிய அவதூறு வார்த்தைகள் வைகோவின் அசிங்கமான அரசியலை அம்பலப்படுத்தியது.
இன்று ஸ்டாலின் முதல்வராக பக்கப்பாட்டுப் பாடும் வைகோதான் ம.ந.கூ மேடையில்"கலைஞரை பரம்பரைத்தொழில் செய்யப்போ,கலைஞர் நன்றாக ஊதுவார் "என்று அசிங்கமாக மேடையில் முழங்கியவர் .
அதை சுயமரியாதை வழியில்வந்த திமுக கடை மட்டத் தொண்டன் கூட மனதில் வடுவாக ஏற்றிருக்கிறான்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வைகோகூறியிருப்பதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேரையும், விடுதலை செய் யாமல், காலம் தாழ்த்தும் கவர்னரை கண்டித்து, டிச., 3ல், ம.தி.மு.க., போராட்டம் அறிவித்து உள்ளது.
சென்னையில் நடக்கும், கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு, தி.மு.க., ஆதரவுஅளிக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
அதற்கு, ஸ்டாலின் எழுதியுள்ள பதில் கடிதம்:ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள, ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நிலைப்பாடு. எனவே, ம.தி.மு.க., அறிவித்துள்ள, கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வரவேற்கிறேன். டிச., 3ல் நடக்கும் போராட்டத்திற்கு, தி.மு.க., முழு ஆதரவு அளிக்கும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வியை, வைகோ எழுப்பியதற்கு, ஸ்டாலின், எந்தபதிலும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறார்.
'முதல்வர் நாற்காலியில், ஸ்டாலினை அமர்த்தி, அழகு பார்ப்பேன்' என, அறிவித்த வைகோ, இதனால் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.
அதற்கு காரணம், வைகோவின் சமீபத்திய அறிக்கைகள் தான் என்கிறது, தி.மு.க., வட்டாரம். புயல் நிவாரண பணிகளில், ஆளும் அரசும், அமைச்சர்களும் ஈடுபட்டுஉள்ளதை, வைகோ வெகுவாக பாராட்டியிருந்தார். தி.மு.க., கூட்டணியில் சேர துடிக்கும் வைகோ, ஆளும் கட்சியை பாராட்டியதை, ஸ்டாலின் ரசிக்கவில்லை.அதன் காரணமாகவே, வைகோவை, 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் வைத்து விட்டார்.
அதன் வெளிப்பாடு தான், துரைமுருகனின் பேட்டி. இதை அறிந்து, விரக்தி அடைந்துள்ள வைகோ, திருமாவளவனை அழைத்துக் கொண்டு, ஆளும் கட்சி பக்கம் போய் விடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அதை தடுக்கும் தந்திரமாகவே, ம.தி.மு.க., அறிவித்துள்ள போராட்டத்திற்கு, தி.மு.க., தற்காலிக ஆதரவு அளித்துள்ளது என கூறப்படுகிறது.
ஆனால் 'போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் வாயிலாக, இரு கட்சிகளுக்கு இடையே நட்பு நீடிக்கிறது. 'தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், கடைசி நேரத்தில் சேரலாம். எந்தெந்த கட்சி சேருகிறது என்பது தெரிந்த பின், எங்களிடம் பேச வாய்ப்பு இருக்கிறது' என, ம.தி.மு.க., தரப்பு நம்புகிறது.
=========================================================
இன்று ,
நவம்பர்-27.
போலந்து அரசியலைப்பு பெறப்பட்டது(1815)
பாரிசில் ஆல்பிரட் நோபல், நோபல் பரிசு திட்டத்தை தெரிவித்தார்(1895)
முதலாவது விமானம் மதராசில் இருந்து ரத்மலானை விமான நிலையத்திற்கு வந்திறங்கியது(1935)
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ரொஸ் மாக்வேர்ட்டர் இறந்த தினம்(1975)

அமெரிக்கப் படைப்புழுவால்
தமிழக விவசாயத்திற்கு பேரபாயம். 2லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் நாசம்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமெரிக்கப் படைப்புழுத் தாக்குதலால் விவசாயத்திற்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
2லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் நாசமடைந்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை :
"தமிழ்நாட்டில் பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
அமெரிக்க கம்பெனியிடமிருந்து பெறப்பட்ட மக்காச்சோள விதையை கூட்டுறவு மற்றும் தனியார் வியாபாரிகள் மூலம் விவசாயிகள் பெற்று பயிரிட்டுள்ளனர்.
கதிர் வரும் பருவத்தில் புழுக்கள் உருவாகி கதிரை முழுமையாக அழித்துவிடுகிறது.
மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள அனைத்து நிலங்களிலும் படைப்புழு தாக்கி உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மூன்று முறை மருந்து அடித்த பிறகும் புழுக்களை அழிக்க முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
மிகப்பெரிய அளவுக்கு புழுக்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதற்கு முன்பு இப்படிப்பட்ட புழுதாக்குதல் ஏற்பட்டதில்லை.
அமெரிக்க துணை கண்டத்தின் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதியை பிறப்பிடமாக கொண்டது இந்த புதிய வகை படைப்புழு.
இப்படைப்புழு முதன் முதலாக, அதன் தாயகத்தை கடந்து நைஜீரியாவில் கடந்த 2016ல் மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது.
அமெரிக்கா திட்டமிட்டே மக்காச்சோள உற்பத்தியை அழிக்கும் வகையில் படைப்புழு முட்டைகளை மக்காச்சோள விதையுடன் கலந்து அனுப்பியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
காரணம் அமேரிக்கா தன்னுடைய மன்சட்டோ பூசிக்கொல்லிகள்,வீரிய விதைகளை உலக நாடுகளிடம்,குறிப்பாக வளர்கின்ற,ஆசிய நாடுகளிடம் விற்பனை செய்ய எத்தனை கீழ்த்தரமான செயலிலும் இறங்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது 44 ஆப்ரிக்க நாடுகளில் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் படைப்புழுவின் தாக்குதல் கடந்த மே 18 ல் கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்டது.
இப்பூச்சிக்கு இயற்கை எதிரிகள் இல்லாமல் இருப்பது மற்றும் சாதகமான சூழ்நிலை அமைந்திருப்பது இதன் பாதிப்பு அதிகமாக காரணமாக உள்ளது.
இப்பூச்சி, மக்காசோளம், நெல், சோளம், சிறுதானிய பயிர்கள், கரும்பு, காய்கறி பயிர்கள், பருத்தி போன்ற 80 வகை பயிர்களை தாக்கும். வளர்ந்த தாய் அந்து பூச்சிகள் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 கி.மீ முதல் 480 கி.மீ வரை பறந்து செல்லும் திறன் கொண்டது.
படைப்புழு தாக்குதல் சம்பந்தமாக ஆய்வு செய்து விதை வழங்கிய அமெரிக்க கம்பெனி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படைப்புழுத் தாக்குதலால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூ.25000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் "
என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------