ரூ.2400 கோடி லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள்
யார்,,,,,, யார்........?
பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் அதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2400 கோடி லஞ்சம் தொடர்பான தகவல் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கிறிஸ்டி பிரைட் கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, சேலம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கிறிஸ்டி நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிடிக்கள், பென் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முறைகேடாக கொடுத்த பண விவரம் அந்த பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தன.
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்து மாதம் தோறும் லஞ்சப்பணம் கைமாறிய விவரம் அதில் இருந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக சுமார் 2400 கோடி ரூபாய் வரை பணம் லஞ்சமாக கைமாறியதற்கான தகவல்கள் அந்த ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பென் டிரைவ்களில் இருந்துள்ளன.
அதாவது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு தயாரிக்க தேவைப்படும் பருப்பு, எண்ணெய், முட்டை போன்றவற்றை சப்ளை செய்வது தான் கிறிஸ்டி நிறுவனத்தின் பணி. இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒப்பந்ததை பெறுவதற்கு அமைச்சர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் கோடிகளில் லஞ்சம் கொடுத்துள்ளது.
மேலும் பொருட்களை கூறிய தரத்திலும், எண்ணிக்கையிலும் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபடவும் லஞ்சம் கைமாறியுள்ளது.
இந்த விவரங்களை மோப்பம் பிடித்துள்ள வருமான வரித்துறை கிறிஸ்டி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை விரைவில் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
====================================================
ஊரே அழிஞ்சு கிடக்கு;
யாருக்கு ஆறுதல் சொல்ல...?
நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. கடந்த காலங்களில் புயல்அறிவிப்புகள் வரும்போதெல்லாம் கடைசியில் அது எங்கேயாவது கரையைக் கடந்து விட்டது என்ற செய்தி புதுக்கோட்டை மாவட்ட மக்களை எட்டும். அப்படித்தான் இப்போதும் நினைத்திருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால் புயல் வந்தால் நல்ல மழை பெய்யும்என்ற மகிழ்ச்சியில் கூட இருந்தோம். அந்த அளவுக்கு தண்ணீர் மீதான தீராததாகம். சில நேரங்களில் காற்று பலமாகவீசினாலும் வாழை, முருங்கை போன்ற இலகுவான மரங்களே பாதிப்புக்கு உள்ளாகும். வாழை ஒடிந்த விவசாயியைப் பார்த்து ஊரே கூடி துக்கம்விசாரிக்கும்.
ஆனால், ஊரே கூடி ஒப்பாரி வைக்கும் நாள் வரும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.கடந்த 50, 60 ஆண்டுகளில் ஒன்றிரண்டு புயல் புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கியிருக்கிறது.
அப்போது கூட இப்படியொரு பாதிப்பு இல்லையென இங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்.
நவ.15 அன்று புயல் பலமாக வீசும்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும்; குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நவ.15-ஆம் தேதி காலை முதல் மாலை வரை புயல் அடிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
காற்று இல்லை. மேகமூட்டம் இல்லை. வெயில் வெளுத்து வாங்கியது. அன்று இரவு தான் லேசான காற்றும், கொஞ்சம் தூறலும் எட்டிப் பார்த்தது. அப்போதும் கூட விவசாயிகள் சந்தோச மடைந்தோம்.
மழை பெய்யட்டும். குளம் நிறையட்டும். கிணற்றில் தண்ணீர் வரட்டும்.
பூமி குளிரட்டும் எனக் காத்துக் கிடந்தோம்.மறுநாள் அதிகாலை பெரும் ஊளையிட்டு வந்த காற்றைக் கண்டதும்திகைத்துப் போனோம். காங்கிரீட் வீடுகளின் சன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. வீடுகளின் ஓடுகளை நொறுக்கிப் போட்டது.
கூரை வீடுகளை தரைமட்டமாக்கிச் சென்றது. ஆஸ்பெட்டஸ் சீட்டுகளை தொலை தூரங்களில் வீசி விட்டுச் சென்றது. சீற்றம் தணிந்த பின் சந்துபொந்துகளில் பதுங்கிக் கிடந்த நாங்கள் தலையை நீட்டிய போது தான் கஜாவின் கோரத் தாண்டவத்தை உணர்ந்தோம்.
வீடுகளைச் சுற்றி நின்ற மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, பாதியில்முறிக்கப்பட்டு சாலை மீதும் வீடுகள் மீதும் கிடந்தன. அடுத்தவர் நிலை என்ன என்று கூட பார்க்க முடியவில்லை. மின்சாரம். தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
உதவிக்கு அழைக்க ஆள் இல்லை. வெளியூர் உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு அரை மணி நேரத்துக்குள்இந்த உலகத்தில் இருந்து முற்றிலும் பிடுங்கி தூக்கி வீசப்பட்டவர்களானோம்.
சாலைகள் முழுவதும் சாய்ந்து கிடக்கும் மரங்கள். மின்கம்பங்களை ஒரு அடி கூட நகர்த்தி வைக்க முடியாது.கட்டுத்தறியில் கட்டிக் கிடந்த ஆடு, மாடுகளின் மீது மரங்கள் விழுந்து மாண்டு கிடந்தன. மரத்திலும் கூடைகளிலும் அடைந்த கோழிகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
பாத்திரம்பண்டங்கள் எங்கெங்கோ சிதறிக் கிடந்தன. பிள்ளைகளின் புத்தகங்கள் கிழிந்தும், நனைந்தும் நாசமாகின. குடிசை வீடுகளில் உள்ள ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், பத்திரம், பட்டா என எதுவும் மிச்சமில்லை. ஒருசில மணித்துளிகளில் 20, 30 வருட வாழ்க்கையை மொத்தமாக வாரி சுருட்டிக் கொண்டு போய்விட்டது கஜா. வாழை, கரும்பு, சோளம், சவுக்கு என அனைத்து சாகுபடிகளும் தரையில் புரண்டு கிடந்தன.
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட தென்னை மரங்கள் எல்லாம் வெட்டுண்டு சிதறிக் கிடந்தன. குழந்தைகள், காவ்யா வீட்டு புளியமரம் சாய்ந்துவிட்டது. பிரபாகரன் வீட்டு வேப்ப மரமும் விழுந்துவிட்டது; எனக் கணக்கெடுத்து அதிர்ச்சியும் மழலையும் மாறாமல் கிடந்தார்கள்.
இரண்டு மாதத்துக்கு முன்பு பக்கத்து வீட்டு மரத்தின் சருகு தனது வீட்டில் கொட்டிக் கிடந்ததற்குக் கூட சண்டைப் போட்டுக் கொண்டவர்கள் அடித்து வரப்பட்ட கூரைகள், பிளாஸ்டிக் குடங்கள், மரக்கிளைகள் தனது வீட்டின் முன்பாக தாறுமாறாகக் கிடந்தும்சிலைகளாய் சமைந்து நின்றனர்.
ஊரே அழிஞ்சு கிடக்குது!
நமக்கு மட்டுமா?
யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.
இந்தப் புயல் பகலில் அடித்திருந்தால் கடைகளுக்குச் சென்றவர்கள், ஆடு, மாடு மேய்த்தவர்கள், தோட்டத்தில்நின்றவர்கள், மரத்தரடியில் ஒதுங்கி யவர்களின் நிலை என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கும் போதே உடல் நடுங்கியது.
அடுத்தடுத்து பிரச்சனைகள் புதிது புதிதாக வெடித்தன. குடிக்க தண்ணீர் இல்லை. சமைக்க எதுவுமே இல்லை. படுக்கப் பாய் இல்லை. பலருக்கு வீடுகள் இல்லை. குழந்தைகள் பெற்றோரின் முகத்தைப் பார்த்தனர். பெற்றோர் வானத்தை வெறித்தனர். மக்கள் தவித்தனர். அல்லாடினர்.
“நிவாரணப் பணிகள் துரிதமடைந்து வருகின்றன; மக்கள் இயல்பு நிலைக்குத்திரும்பி வருகின்றனர்” என ஆட்சியாளர்களின் அறிவிப்புகள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தன.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஹெலிகாப்டரில் பறந்து வந்தனர். புதுக்கோட்டையில் ஒரு இடத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் புயல் களவாடிய கனவை தூரப் பார்வை பார்த்துச் சென்றனர்.
10 நாள் ஆகியும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. அதற்கான வழிகளும் இல்லை.
சாலை ஓரங்களில் யாராவது உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வருகிறார்களா என குழந்தைகள் தவம் கிடந்தனர். சிறிது நிவாரணம் கொண்டு வந்தவர்கள் ஊரே அழிந்து கிடப்பதை பார்த்து திகைத்தனர். சில இடங்களில் தன்னார்வ அமைப்புகள் கொடுக்கும் நிவாரணம் மக்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை.
வேறு கதியும் இல்லை.
ஆனால் இதில் அரசின் நிவாரணப் பொருட்கள் ஒன்று கூட பல குக்கிராமங்களை எட்டிப் பார்க்கவில்லை.பகலைத் தொலைத்த எங்களுக்கு இரவுப் பொழுது பெரும் கொடுமை யானது.
எங்களுக்கு எமனாக விரிந்து கிடக்கிறது. படுப்பதற்கு, ஒதுங்கு வதற்கு இடம் இல்லை.
மின்சாரம் இல்லை.
மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் இல்லை.
மீண்டும் கற்கால மனிதர்கள் ஆனோம்.
எதுவும் இல்லை எஞ்சிய உயிரைத் தவிர. சொல்லி மாளாது துயரை.பச்சிளம் குழந்தைகள் உணவுக்கு ஏங்கு வதை பார்க்க நெஞ்சு வெடிக்கிறது. சில இடங்களில் மட்டும் அமைச்சர்கள் வருகிறார்கள். அதிகாரிகள் வருகிறார்கள். நிலைமை சீரடைந்து வரு கிறது எனப் பேட்டி கொடுக்கிறார்கள்.
மின்வாரியத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்கிராமப் பகுதிகளுக்கு மின் இணைப்புக் கிடைப்பதற்கு இன்னும் ஒருமாதம் கூட நீடிக்கலாம்.
மக்கள் கொதிக்கிறார்கள், அரசின் அலட்சியம் தொடர்ந்தால் நிலைமை எல்லை மீறிச் சென்று விடும். இப்பொழுது தான் மத்தியக்குழு ஆய்வைத் தொடங்கி இருக்கிறது.
இவர்கள் அறிக்கை கொடுத்து மத்திய அரசு நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்து சேருவதற்குள் நிலைமை இன்னும் படுமோசமாகி விடும்.
அறிக்கைகள் விடுவதை அரசு நிறுத்தி விட்டு நாங்கள் சாவதற்குள் ளாவது ஆக்கப்பூர்வமான வேலை களில் இறங்கட்டும். அடிச்ச புயல் அரசாங்கத்துக்கு தென்றல் காத்தோ, முறிச்சு கிடக்கிறது மரங்கள் இல்ல எங்க வாழ்க்க, எங்க பொழுது விடிய இன்னும் சில ஆண்டு ஆகுமே, ஊருக்கே சோறு போட்ட கை,மக்கா இன்று கையேந்துது விசாரிக்கக் கூட ஆள் இல்லாம நாதி அத்து கிடக்குது!
நன்றி:தீக்கதிர். புதுக்கோட்டையிலிருந்து சு.மதியழகன்
========================================================
உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
மாவீரன் பிரபாகரன் பிறந்த தினம் (1954)
நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)

ஐராவதம் மகாதேவன் மறைந்தார் . பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் அதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2400 கோடி லஞ்சம் தொடர்பான தகவல் அம்பலமாகியுள்ளது.

இன்று,
நவம்பர்-26.
உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
மாவீரன் பிரபாகரன் பிறந்த தினம் (1954)
நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)
மாவீரன் பிரபாகரன்.
தமிழன்
யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை
மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப்
போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின்
எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
தமிழர்களுக்கு
தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர்
என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக்
காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான்
தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .
இனித்
தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த
போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும்
நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை
கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.
இணையத்தில்
தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர்
தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ்
இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத்
தோன்றாத் துணையாக நிற்பவர்
பலரை
வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில்
ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம்
நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச்
சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.
அன்று
தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை
வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம்
தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப்
போர் தார்மீக அடிப்படையிலானது.
அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து
வருகிறது.
சிங்களவர்கள்
உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம்
இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள்
நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப்
பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே
மாறப்போவதில்லை.
“
விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’
என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து
பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை.
வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம்
வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .
தமிழர்களை
ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள
தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க
அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின்
நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக்
கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.
இரத்த
வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான்
உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல்
மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து
சேர்ந்தனர்.
புத்த
மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள்
மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம்
கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில்
சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது
எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள
பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர்
திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற
கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .
சிறிலங்கா
தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது
புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம்
இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற
மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது
தமிழ்
நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர்
செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின்
மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால்
வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.
ஈழத்
தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின்
எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று
சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ்
கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற
வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை
இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த
பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள
இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை
ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.
பழைய
ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த
நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது
இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா
சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள்
இடைவிடாது நடக்கின்றன.
எந்தக்
கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற
பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்
படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும்
குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழர்
நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர்
பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல்
மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி
கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின்
அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க்
குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும்
வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.
ஓரு
தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார்
குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை,
மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது
வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.
குடியேற்றத்தின்
மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல்
ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம்
சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு
நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம்
அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்
தாம்
குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும்
வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு
ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன்
தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும்
சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.
பாதிக்கப்பட்ட
தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ்
டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில்
தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற
கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்
தமிழர்
தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள்
கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள்
தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன
கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது
முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.
வரலாறு
எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “
சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே
மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .
பிரபாகரனின்
தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த
கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர்
மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம்
தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி
அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு
ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு
அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம்
காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.
சாதி
ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத்
தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி
சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள்
வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை,
புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம்
நிரந்தரமானது.
தேசியத்
தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும்
வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “
என்று சொன்னார்.
தன்னாட்சி
பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின்
தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம்
பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார்
சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட
இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர்
சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார்.
அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப்
பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது
என்று கூடச் சொல்லலாம்
தமிழினத்தை
கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன்
அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக
தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க
முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.
தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர்
அவருக்கு வயது 88.
அக்டோபர் 2, 1930இல் திருச்சிராப்பள்ளி அருகில் மண்ணச்சநல்லூரில் பிறந்ந்தார். திருச்சி வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.
1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியில் பணி புரிந்த இவர், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராக பொறுப்பு வகித்தார்.
சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) குறித்த ஆய்வில் மிக ஈடுபாடு கொண்டிருந்தார். பழங்கால நாணயங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்தார். இதையொட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்
அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார்.
1970-ஆம் ஆண்டு: புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை அளிக்கப்பட்டு, சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மா. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பதை அறிவித்தார்.
2009 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 – 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
முகநூல் அதிரடி.
Syed Khaleel
"இருபது அம்ச பொருத்தம்"
1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள்.
2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார்

3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக
நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்..
5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன...
6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்...
7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்..
8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்...
9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்...
10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்..
11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...
12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்...
13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்...
14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்...
15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்...
16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...
17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்...
18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தாள். அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...
19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...
20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்...
இந்த பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய வரலாற்று பதிவு, மோடிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை...நீங்கள் மோடியை கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பு அல்ல....!
தகவலுதவி:
தோழர் நாஞ்சில்ஓய். ஜோனி மோசஸ்