புதன், 30 ஏப்ரல், 2014

கோடை காலத்தை ....


suran

ஆரோக்கியத்துடன் கடத்திட....,

ஆண்டுக்கு,ஆண்டு நாம் சொல்லும் வார்த்தை இந்த ஆண்டு வெயில் அதிகம் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே இந்த வெட் கையா?என்பதுதான்.
ஆனால் இந்த ஆண்டு வெயில் கொடுமை மிக அதிகமாகத்தான் இருக்கப்போகிறது.அப்படித்தான் வானிலை ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
தமிழ் நாட்டில் 113 முதல் 115வரை வெப்ப நிலை இருக்கலாம்.இருக்கும் என்கிறது அந்த அறிக்கைகள்.
ஆண்டுக்கு ஆண்டு வெப்ப நிலை கூட .மழை அளவு குறைய மரங்களை வெட்டி சாய்ப்பதும்,நீர் நிலைகளை முழுக்க மனைகளாக்கி விற்றதும்தான் காரணம் என்பதை எத்தனை தடவைதான் கூறுவது.இதை கண்காணிக்க வேண்டிய அரசுதான் சாலை ஒர மரங்களை எல்லாம் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்று வெட்டித்தள்ளுகிறது.
suran
குளங்கள்,ஏரிகளை மழை நீர் இல்லாத காலங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மூலம் பட்டா போட்டு வீடுகளாக்கி விட்டனர்.
இந்நிலையில் இந்த அரசிடமே நாம் மரங்களை ,குளங்களை பாதுக்காக கூற முடியுமா?
இவ்வளவு பட்டும் திருந்தாத அரசுகள் இனியும் திருந்தும் என்று தெரியவில்லை.
காற்றுக்கு வீச பான் ஓலை விசிறி கூட கடைகளில் கிடைப்பதில்லை.மின் விசிறியால் வெப்பத்தை போக்கலாம் என்பதையும் மின்வெட்டு கனவாக்கி விட்டது.

இந்த வெயில் கொடுமையிலிருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்வது...? என்பது பற்றி யோசிப்பதே நல்லது.

* வெயில் காலத்தில் உடலில் ஈரப்பதத்தை சீராக வைத்துக்கொள்ளுவது முக்கியம். அவசியம். 
குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும். அப்போதுதான், நாள் முழுவதும் தலையில் ஈரப்பதம் இருக்கும். அதனால், சூரிய வெப்பம் நேரடியாக உங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்கலாம்.

வெளியில் செல்லும் பொது,வாகங்களை ஊட்டும் போதும் குளிர் கண்ணாடிகளை மாட்டிக்கொள்வது நமக்கு அழகைத் தருகிறதோ இல்லையோ நம் கண்களை பாதுகாத்து தரும்.

* சூரிய வெப்பம் நேரடியாக உடலில் படுவதால் சரும நிறம் மாறுபடும். வெயில் படாத இடங்களில் ஒரு நிறமும், வெயில் படும் இடங்களில் சருமம் கறுத்தும் போய்விடும். 

* வியர்வையுடன் இருக்கவே கூடாது. 
அடிக்கடி கைக்குட்டையால் துடைத்தோ,தண்ணீர் ஊற்றி கழுவியோ  வியர்வையை அப்புறப்படுத்த வேண்டும். 
suran
* வெயில் காலங்களில் பெப்சி,கோலா போன்ற மென்பானங்கள்  குடிப்பதை விரும்புவார்கள். 
இது தவறு. 
இது போன்ற பானங்களை  குடிப்பதால், அதில் அடைக்கப்பட்டுள்ள வாயு , உடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். 
இதனால், நன்னாரி சர்பத்,பதநீர்,நெல்லிக்காய் சர்பத்  இளநீர் போன்றவற்றை குடிப்பதே நல்லது. காதி ,சர்வோதாயா கடைகளில் இயற்கையான நன்னாரி,நெல்லிக்காய்,அண்ணாச்சி,ஆப்பிள்,திராட்சை சாறு வகைகள் கிடைக்கிறது.அதை வாங்கி வைத்து தண்ணீர் கலந்து சாப்பிடலாம்.

இல்லை என்றால்  அதிகளவு தண்ணீர் ,நீராகாரம் [சிறு வெங்காயத்துடன் ]குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் ஆரோக்கியத்தையும்,உற்சாகத்தையும் தரும்.
வெயிலில் வியர்க்க ,வியர்க்க அலைந்து வந்து உடனே குளிர் நீரை பருகாதீர்கள்.கை மேல் பலனாக சளி பிடித்துக்கொள்ளும்.வெது,வெதுப்பான நீரை சிறிது குடித்து பின்னர் சிறிது நேரம் கழித்து குறி நீரை குடியுங்கள்.அது மண் பானை நீராக இருந்தால் மிக நன்று.
முயற்சித்துப்பாருங்கள்.
இந்த கோடை காலத்தை ஆரோக்கியத்துடன் கடத்திட வாழ்த்துக்கள்.. 
suran

                                  "வெப்பத்தை தணிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?"
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

suran

"மே தின வாழ்த்துக்கள்.!"


எதை ,எதையோ கொண்டாடுகிறோம்.ஆனால் உழைத்து வாழும்நாம்  நமக்கென்று உள்ள தொழிலாளர் தினமாகிய "மே தினத்தை "விருப்புடன் கொண்டாடுவதில்லை.நடிகர் ,நடிககையர்,அரசியல் வாதிகள் பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கடன் வாங்கியாவது கொண்டாடி மகிழ்கிறோம் .
suran

18 ம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பட்ட பாட்டை பற்றியும் அதலிருந்து மீண்டு இன்றைய நிலையை நாம் அடைய பட்ட பாட்டையும் ,விட்ட உயிர்களையும் பற்றி நாம் உணராததே இதற்கு ,இந்நிலைக்கு காரணம்.
18 ம் நூற்றாண்டுவரையில் கடுமையான தொழில் புரட்சி உலக அளவில் ந டந்தது.
அதுவரை ஆங்காங்கே குடிசைத்தொழில்களாக நடந்து வந்தவை ஓரிடத்தில் இணைந்து பணக்காரார்கள் முதலீட்டை கொட்ட தொழிற்சாலைகள் உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன.
அதற்கு இயந்திரங்களுடன் ஓயாது உழைக்க மனிதர்கள் தேவை.
அதற்காக எழைகள் தேவை.முதலில் அவர்களை  பார்த்த தொழிலில் இருந்தும் விவசாயத்திலிருந்தும்.
பிரித்து அரசு துணையுடன் தொழிற்சாலைகளில் உழைக்க அமர்த்தப்பட்டனர்.

அங்கேயே இருக்க ஓரமும்,உணவுக்கு காய்ந்த ரொட்டிகளும் கொடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வே ண்டியிருந்தது.
தூங்கக்  கூட அனுமதிப்பது கடினமானதாக இருந்தது.எந்திரம் உழைக்கும் போதெல்லாம் அவர்களும் அத்துடன் இணைந்து வேலைசெய்யும் கருவிகளில் ஒன்றாகவே கருதப்பட்டனர்.
தொழிற்சாலைகளில் இருந்து தப்பித்தால் அவன் குற்றவாளியாக கருதப்பட்டான்.அரசு அவை தேடி கண்டு பிடித்து தண்டணை வழங்கியது .
மீண்டும் தப்பியவன் மாட்டினால் அவன் நெற்றியில் சூட்டுக்  கோ லால்  இலச்னை இட்டு அவமானப் படுத்த ப்பட்டான் .அதன்பின் அவன் மாடு போல் உழைத்தாலும் நரக வாழ்வுதான்.கழிப்பறையும்,வாழுமிடமும் ஒன்றுதான்.அடிப்படை தொழிலாளிக்கு சம்பளம் கிடையாது.காய்ந்த துரப்போடும் நிலையில் உள்ள ரொட்டிதான்.அவர்களை மேய்க்கும் கண்காணிகளுக்கு கைக்கும் வாய்க்கும் பற்றாத சம்பளம்.
முதலாளியோ புதிது,புதிதாக தொழிற்சாலைகளை உருவாக்கிக்கொண்டு பணத்தை குவித்துக்கொண்டிருந்தனர்.தொழிற் புரட்சி என்று வரலாறு பக்கங்க்கள்ல் உள்ளவற்றின் இருண்ட மறு பக்கம் உயிர் மட்டும் ஒட்டியுள்ள மனித எந்திரங்களின் சோக வாழ்வே உள்ளது.
18-ம் நூற்றாண்டு இறுதியிலும் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் தொழிலாளர்கள் சிந்திக்கவும்-போராடவும் ஆரம்பித்தனர்.
நெஞ்சில் குமுறிய உழைப்பாளர்கள் ரகசியமாக தங்களுக்கு உழைப்புக்கிடையில் ஓய்வும்,சரியான சாப்பாடும்,இருக்க குடும்பம் நடத்த  தனியாக  இடமும் தேவை என்று முடிவெடுத்து அதற்காக போராட தயாராகினர்.
suran
ஒன்றுமே இல்லாத தாங்கள் இனி இழக்க ஒன்றுமே இல்லை.வென்றால் பொன்னுலகம்தான் என  முடிவெடுத்து கடுமையாக போராடி பல உயிர்களை இழந்து தங்களுக்கான உரிமைகள் சிலவற்றை பெற்றனர்.
அதில் தலையானது 8மணி நேர வேலை.
முதலில் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொழிலாளர் போராட்டத்தில்  குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம்.இந்த  இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது.
 அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

"8 மணி நேரம் வேலை "
அது கிடைக்க பல போராட்டங்கள்.ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856-ல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.
 இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் முதல் மைல் கல்.
1896 ஏப்ரல் மாதத்தில் மாமனிதன் "லெனின் 'மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யாவில் தொழிலாளர்  புரட்சி செய்து ஆட்சியையே மாற்றியதற்கும்,கம்யூனிசம்  உண்டானதற்கும் முதல் காரணம்.
தொழிலாளர் வர்க்கம் ஆட்சியையே மாற்றியது ரஷ்யாவில்தான் என்றாலும் "மே-1 தினம்"
தொழிலாளர் தினமாக வடிவானது முதலாளித்துவ அடையாளமான அமெரிக்காவில்தான்.
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.
அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.

"கூட்டத்துக்கு வாங்க "
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு  விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக இரு ந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும்1200 தொழிற்சாலைகளில் இருந்து  3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
 தொழிலாளர்களின்  வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஊர்வலங்களில் கலந்து கொண்டு அரசை திகைக்க வைத்தனர்.
தொழிலதிபர்களும் அவர்களுக்கு ஆதரவாக அரசும் இணைந்து இந்த தொழிலாளர்களின்  ஒற்றுமையான போராட்டத்தை சிதைத்து தங்கள் வழிக்கு கொண்டுவர திட்டங்கள் தீட்டினர் .தங்கள் ஆட்களை கருங்காலிகளாக வெளியெ வராமல் ஐந்தாம் படையாக தொழிலாளர் கூட்டங்களில்  ஊ டுருவ வைத்தனர்.
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு  கூட்டத்தை நடத்தினர். அங்கு இந்த ஐந்தாம் படையினர் வன்முறையை தூண்டி கலவரமாக வெடிக்க வைத்தனர்.அதை பயன் படுத்திய   காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் 4 தொழிலாளர்கள் பலியாயினர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் நடத்தினர் தொழிலாளர்கள்.
ஆயிரக்கணக்கில்  தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியாக நடைபெற்றது.
அதில் மறைந்திருந்த முதலாளிகள் ஆட்கள்  திடீரென்று காவல் துறையினர் மீது  வெடிகுண்டு வீசினர்.
 அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின் கேட்கவா .வெண்டும் இதற்கென்றே காத்திருந்த காவல்துறையினர்  கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.
 அத்துடன் தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர உட்பட பலரை   கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.நவம்பர் 11,1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் 7 பேர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில்  5 லட்சம் பேர்  கலந்து கொண்டு அரசுக்கு எதிர்ப்பை காண்பித்தனர்., அமெரிக்கா முழுவதும் கறுப்பு கொடிகள் எற்றி துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது.
 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்தது.
 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
அதன் முதல்  மே முதல் நாள் , சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக உலகமெங்கும் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
நமது இந்தியாவில் சென்னை மாநிலத்தில்தான் முதன் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதியான " ம.சிங்காரவேலர்" 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடி செங்கொடியை ஏற்றினார்.
முன்னாள் முதல்வர் கலைஞர்  மு.கருணாநிதி தான் தமிழ் நாட்டில் இந்தியாவிலேயே முதன் முதலாக1969 இல்  "மே தின"த்துக்கு அரசு விடுமுறை வழங்கியவர்.1990 ம் ஆண்டு மே தினத்தின் 100 ஆண்டுகள் நினைவாக நேப்பியர் பூங்காவுக்கு "மே தினப்  பூங்கா " என பெயரை  சூட்டி அங்கே மேதின நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தார்.
suran
பல உயிர்களை இழந்து போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் இப்போது தொழிலாளர்கலாலேயே விட்டுக்கொடுக்கப்படுகிறது.அரசும் முன்பை போல் முதலாளிகள் கூட்டணியுடன் உழைப்பவர்களை ஏமாற்ற ஆரம்பித்தள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே தொழிற்சங்க உரிமைகள் பறி போக வைக்கும் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய உதாரணம் ஹுண்டாய் .தொழிற் சங்கம் அமைக்கவும் உரிய கூலி பெறவும் எவ்வளவு பொராட்டங்கள் .தொழிற் சங்கக் கொடியை ஏற்றியதற்காக தொழிற்சங்க தலைவர்
கை விலங்குடன் இழ்த்துச் செல்லப்பட்ட கொடுமையும் நடந்தது.
தகவல் தொழில் நுட்ப துறையில் 8 மணி நேரப் பணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.தான் படித்தவன் கணினி நிபுணர் என்ற கனவில் இருப்பவர்கள் தான் போராடி,உயிர் இழந்து பெற்ற தொழிற் சங்க உரிமைகளை காவு கொடுக்கிறார்கள் .
கை நிறைய கிடைக்கும் சம்பளத்துக்காக.
ஆனால் அமெரிக்காவில் ஓபாமா தும்மினால் அடுத்த நொடியில் இவர்கள் வேலை எந்த உத்திரவாதமும் இல்லாமல் பறி போய்விடும் என்ற அபாயத்தை அவர்கள் உணர்ந்தது போல் தெரிய வில்லை.
இவர்களுக்கும் சேர்த்து  
"மே தின வாழ்த்துக்கள்.!" 
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
                          ரஷ்யாவில் ஒட்டப்பட்ட உலகின் முதல் மே தின சுவரொட்டி.

வரும் !.......ஆனா வராது?

கோச்சடையான் படம் .அன்னாகசாரே யின் லோக் பால் மசோதா வுக்கும்,தமிழ் நாட்டில் மின்தடை நீங்கும் காலம் வருவது எப்போது என்ற அள்வில் எதிர்பார்ப்புகளை தந்துள்ள படம் அவரது ரசிகர்களுக்கும்-ஊடகங்களுக்கும்.மக்களுக்கு அவர்களின் கவலை எல்லாம் மின் வெட்டு பற்றிதான்.
கொச்சடையான்  படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா?
என்கிற பயமும் - குழப்பமும்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இருக்கிறது .இதுதான் இன்றைய நிலவரம்..
suran
கொச்சடையான் மே 9ல் வெளியாகிறது விளம்பரம் கண்டு  சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தயாரித்து வரும் முரளி மனோகரை சந்திக்க கடன்காரர்கள் கூட்டமாக வந்துவிட்டார்கள்.
 மாற்றான் படத்தை வெளியிட்ட வகையிலேயே இவர் பனிரெண்டு கோடி ரூபாய் நஷ்டத்தைஇவர் இன்னமும்  ஈடு கட்ட வேண்டியிக்கிற தா ம். இதுபோல் இவரின் சில படங்களையும் சேர்த்து சுமார் நாற்பது கோடி கடன்.
இந்த படம் வெளியாகிவிட்டால் முரளி மனோகர் லண்டனுக்கு சென்று  காணாமல் போய் விடுவார். அதற்கப்புறம் அவர் சென்னை வருவது எப்போது என்று யாருக்கும் தெரியாது.மேலும் கொச்சடையான் ரஜினி நடித்தப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் அது அசைவூட்டப்படம்.அதான் அனிமேசன் படம்.கதாநாயக கார்ட்டூனின் முகம் மட்டும் ரஜினி முகம் வரையப்பட்டுள்ளது என்பதும்.படம் வெளியானால் சின்னக்குழந்தைகள்தான் பார்க்க வேண்டும் ரஜினி வெறியர்கள் மீண்டும் ,மீண்டும் பார்க்க மாட்டார்கள் பணத்தை எடுப்பது மிக கஷ்டமான வேலை என்றும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.
அதனால் கடனை வசூலிக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய விட்டால், மொத்த பணமும் அம்போதான் என்ற முடிவுக்கு  கடன்காரர்களுக்கு வந்து முரளி மனோகரை ,சுற்றி வளைத்து ஒரு முடிவு  கட்டிவிட்டார்கள்..
பணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லேன்னா விட மாட்டோம் என்பதுதான் அவர்களின் காச் மூச் கத்தல்கள். இல்லேன்னா ரஜினியை பணத்துக்கு   பொறுப்பேத்துக்க சொல்லுங்க என்று சொல்ல  ரஜினியோ, படம் வெளிவந்தாலும்,வரா விட்டாலும் நான் பொறுப்பேற்க முடியாது என்றும் அது பற்றி   எனக்கு கவலையில்ல என்றும்  கூறிவிட்டார் . கொச்சடையானைப்பற்றியும் -தனது மகள்களின் இயக்கம் திறமையைப்பற்றியும் ரஜினிக்கு தெரியாதா என்ன?
அப்புறம் என்ன செய்வார் முரளி மனோகர்?  கடன்காரர்களின் காலில் விழுந்து ஐந்து கோடி கடனை தள்ளுபடி செய்ய சொன்னார்.
வேறு வழியின்றி அதற்கும் கடன்காரர்கள் அதற்கு ஒப்புக்கொள்ள . இறுதியாக பத்து கோடி ரூபாயை பணமாக செட்டில் செய்தார்.
 மீதி இருபத்தைந்து கோடிக்கு செக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.வரும்  திங்கட் கிழமை செக் செல்லுபடியானால் படம் வெளியாகும்.
இல்லையேல்?
கோச்சடையானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மொத்த பேரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.இதுதான் இன்றைய கொச்சடையான் நிலை.
இப்படம் வெளியாகாவிட்டால் ரஜினிக்குத்தான் அசிங்கம்.தனது மகள்கள் திரையுலகத் திறமை பற்றி முன்பே தெரிந்தும்,பணத்தை இழந்தும் ரஜினி அ வர்களை அடுத்தவர் பணத்தில் மஞ்சள் குளிக்க வைத்தது தவறு.அதேபோல் ரஜினி மகள்களை வைத்து படம் எடுத்தால் அது போண்டியானாலும் ரஜினியை வைத்து சமாளித்து விடலாம் என்று முரளி மனோகர் போல் தயாரிப்பாளர்கள் எண்ணுவதும் தவறு.
கொச்சடையான் எல்லோருக்கும் நல்ல பாடம்.


suran

suran

suran

திங்கள், 28 ஏப்ரல், 2014

செல் பேசியின் தந்தை யார்? கூப்பர்?
 
ஸ்டுபிர்ஃபீல்டு?
  
இன்றைய காலக்கட்டத்தில் செல் பேசி மூலம், தொலைத் தொடர்பு, இணையத்தில் உலாவருதல், பொழுதுபோக்கு, இசை முதலிய சேவைகள் பெறுவது, நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாதது..
உலக தொலைத் தொடர்பு ஒன்றியம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தற்போது, உலகளவில் செல்பேசியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 680கோடி அடைந்துள்ளது.
suran
 இது, உலகின் பொது மக்கள் தொகையில் 96விழுக்காட்டு வகிக்கிறது. செல்லிட பேசியைப் பயன்படுத்துகின்ற போது, அதனைக் கண்டுபிடித்தவர் பற்றி, உங்களுக்கு தெரியுமா?
1973-ஆம் ஆண்டு, மார்ட்டீன் கூப்பர், உலகில் முதலாவது செல் பேசியைக் கண்டுபிடித்தார்.
நவீன செல்பேசியின் தந்தை என்னும் பெருமையை அவர் பெற்றார்.
 எனினும், 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், பிரிட்டானின் டெய்லி மெயில் (Daily Mail) ஏட்டில் வெளியிட்ட தகவலில், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் (Nathan ubblefield) என்ற அமெரிக்கரே, செல்பேசியைக் கண்டுபிடித்த முதலாவது நபர் என வெளியாகியுள்ளது.
மேலும், Virgin செல்பேசி வலைபின்னல் நிறுவனர் சர் ரிச்சார்டு பிரான்சனும், நாதனின் செல் பேசி தந்தையாக கருதுகின்றார்.
நாதனின் கண்டுபிடிப்பு, உலகின் தொலைதொடர்பை மேம்படுத்தும் வழிகளில் ஒன்றாகும் என்று சார் ரிச்சார்டு பிரான்சன் கூறினார்.
மேலும், நாதனின் நினைவாக, சார் ரிச்சார்டு பிரான்சன் ஒரு சிறப்பு இணையப்பக்கத்தையே அமைத்து விட்டார். மார்ட்டீன் கூப்பர், நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு, யார்தான்  செல் பேசி தந்தை?
suran
நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு
உண்மையில், நடமாடும் தகவல் தொடர்புத் துறையில் ஈடுபடும் பணியாளர்களைத் தவிர, மார்ட்டீன்கூப்பர், நாதன் ஸ்டுபின்ஃபீல்டு பற்றி அறிந்தோர் மிகவும் குறைவாகவே உள்ளனர். ஆனால், அவர்கள் ஆற்றிய பங்கு, எடிசன் முதலியோருடன் ஒப்பிடுகையில், குறைவாக இல்லை.
 நாதன் ஸ்டுபின்ஃபீல்டு, தொலைதொடர்புத் துறை பணியாளர் அல்ல. அவர், அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வாழ்ந்த விவசாயி ஆவார்.
 உள்ளூர் சமூக நிறுவனம், குடிமக்களுடன் தொடர்புக் கொள்வதற்காக உதவி செய்வது என்பது, நாதன் ஸ்டுபின்ஃபீல்டு செல்பேசியை ஆராய துவக்கிய நோக்கமாகும்.
1902-ஆம் ஆண்டு, சளையாத முயற்சியுடன், முதலாவது செல்பேசியை நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் வெற்றிகரமாக தயாரித்தார்.
6 ஆண்டுகளுக்குப் பின்பு, செல் பேசிக்கான அறிவுசார் காப்புரிமையை அவர் தடையின்றி பெற்று விட்டார்.
இருப்பினும், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் தயாரித்த இந்தச் செல் பேசியின் தோற்றம், குப்பை தொட்டியின் மூடி போன்று பெரியது. காந்த் புலத்தின் மூலம், ஒலி மற்றும் இசையை ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்கு அனுப்ப  முடியும்.
suran
மார்ட்டீன் கூப்பர்
செல்பேசி தந்தை என கருதப்படும் மற்றொருவரான  மார்டீன் கூப்பர், பொறியியல் தொழில் நுட்ப பணியாளராவர்.
1954-ஆம் ஆண்டு முதல், அவர் மோட்டார்ரோலா நிறுவனத்தில் வேலை செய்ய துவக்கினார். அவர் நடமாடும் தொலைத் தொடர்பு வசதியை ஆராய பாடுபட்டு வந்தார்.
1973-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மன்ஹாட்டன் வணிகப் பிரதேசத்துக்கு அருகிலுள்ள சாலை ஒன்றில் மார்ட்டீன் கூப்பர் நின்று, Dyna TAC எனும் செல்பேசியை அவர் பொது மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.
தற்போதைய செல் பேசியுடன் ஒப்பிடுகையில், Dyna TAC எடை மிகவும் அதிகம்.
அதன் நீளம் 33சென்டி மீட்டர், எடை 794 கிராம். அதன் மூலம், ஒரு மணி நேரம் தொடர்புக் கொண்டு பேச முடியும்.
அதில் 30 தொலைபேசி எண்களை சேமிக்கப்பட முடியும். இதுதான் இன்றைய செல்பேசியுடன் ஒத்துப்போகக் கூடிய வடிவமை ப்புடன் இருந்தது.
இந்தச் செல்பேசிக்கு, பேசுதல் சேவை புரியம் தான். Dyna TAC, தற்போதைய செல் பேசியின் மூலப்படிமமாகும்.
suran
அது அதிக எடையுடன் இருந்த போதிலும், Dyna TAC உருவானது தான், கம்பியில்லா தொலைத் தொடர்பு என்ற புதிய காலத்தின் துவங்கியதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
கடைசியில், மாட்டீன் கூப்பர்தான் செல்பேசியின் தந்தை என்ற பெருமையை தட்டிக்கொண்டு  போனார்..
கூப்பர் தயாரித்த செல் பேசி, தற்போது பொது மக்கள் பயன்படுத்துகின்ற செல்பேசியுடன் மிகவும் ஒத்திருக்கிறது.
மேலும், மாட்டீன் கூப்பர் இந்த செல்பேசியை வெற்றிகரமாக சந்தையில் விற்பனைக்கு விட்டார்.இச்செல்பேசியும் விற்பனையில் வேகம் பெற்று உலகெங்கும் பரவியது.அதன் வடிவமைப்பும் இன்று பெருமளவு மாறி விட்டது.கிட்டதட்ட ஒரு கணினியின்  பணியை செல்பேசி மூலமெ செய்து முடிக்கலாம் என்ற அளவில் அதன் வசதிகளும் - பயன்பாடுகளும்  வளர்ந்து விட்டது. .
சொந்த வீடும்,வாகனமும் இல்லா மனிதர்களை பார்க்க முடியும்.ஆனால் இந்த செல்பேசி இல்லா மனிதனைக் காண்பது மிக அரிது என்றாகி விட்டது.
 
உதவி:சீன தமிழ் வானொலி
---------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் தகவல் தொழில் நுட்ப தரவரிசைப் பட்டியலில்,வளரும் நாடுகளில் இடங்கள் பின் தங்கியே  இருக்கின்றன.
உலகப் பொருளாதார மன்றம் அண்மைக்காலமாக வெளியிட்ட 2014ஆம் ஆண்டு உலக தகவல் தொழில் நுட்பம் பற்றிய அறிக்கையில் அது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பின்லாந்து, சிங்காப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள், இந்த தரவரிசையில் முதல் மூனறு இடங்களைப் பிடித்துள்ளன.
 வளரும் நாடுகளில் ரஷியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா முறையே 50-வது, 62-வது, 69-வது, 70-வது மற்றும் 83-வது இடத்தில் வகிக்கின்றன என்று அறிக்கையில் வெளியிட ப்பட்டுள்ள து.
-------------------------------------------------------------------------------------------------------------------------

வேட்டுவைக்கும் நடவடிக்கை.......,


இன்று இந்தியாவை கவலையில் ஆழ்த்தும் ஒரு செயல் மலிவு விலையில் வந்து குவியும் சீனத் தயாரிப்புகள்.
கண்ணைக்கவரும் வகையில் தரக்குறைவான பொருட்களை  கண்டெய்னர்களில் அனுப்பி வரிந்து  கட்டிக்கொண்டு களம் இறங்குகிறது சீனா .
 இங்குள்ள பெரிய பிரபல நிறுவனங்கள் தயார்ப்புகளைப்போல பேபி ஆயில், குளியல்  சோப்பு, பாடி ஸ்பிரே, பொம்மைகள் செல்பேசிகள்,எலக்ட்ரானிக் பொருட்களை  அடுக்கடுக்காக அனுப்பி  இந்தியாவை எந்த அளவுக்கு சீர்குலைக்க முடியுமோ அந்த அளவு  முயற்சி செய்கிறது.
 கப்பல்களில் கன்டெய்னர், கன்டெய்னராக நிரப்பி  அனுப்பப்படும் இந்த பொருட்களை பயன்படுத்தினால்  உடல்நலத்துக்குத்தான் பாதிப்பு.
 சீன அழகுசாதன பொருட்களை  பயன்படுத்த வேண்டாம் என தோல் நோய் நிபுணர்கள் எச்சரிக்கை  விடுக்கும் அளவுக்கு தரம் குறைந்தவையாக அவை உள்ளன.
suran
சுங்கத்துறையினர் இதை பல முறை கண்டுபிடித்து அவற்றை  சீனாவுக்கே திருப்பி அனுப்பினாலும் தனது விடா முயற்சியில் சீனா  தளர்வதே இல்லை. சில சமயம் பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள்  மூலமாகக்கூட தனது பொருட்களை சந்தைப்படுத்தி சாதுர்யத்தை  வெளிப்படுத்துகிறது சீனா.
நமது சந்தையில் சீன தயாரிப்புகள்  அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கின்றன.
 வேறு வகையில்  சொல்வதானால், மலிவு விலையில் கிடைக்கும் பொருள் என்றாலே  சீன தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதும் அளவுக்கு  நாட்டின் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கின்றன. இப்படி ஒவ்வொரு  வகையிலும் இந்திய பொருளாதார சீர்குலைவுக்கு வழி வகுக்கும் சீனா,  தற்போது சிவகாசி பட்டாசுக்கும் வேட்டுவைக்கும் நடவடிக்கைகளில்  ஈடுபட துணிந்துவிட்டது.

சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் பேர்  பிழைக்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீத வளர்ச்சி  பெற்றுவருகிறது இந்த துறை. சுமார் ஸீ 150 கோடிக்கு ஏற்றுமதி  செய்யப்படுகிறது.
நாட்டில் தயாராகும் மொத்த பட்டாசுகளில் 80  சதவீதம் தமிழகத்தில்தான் தயாராகிறது. இந்நிலையில் இந்தியாவில்  தடை செய்யப்பட்டுள்ள பொட்டாசியம் குளோரைடு என்ற மலிவான  கச்சாப்பொருளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கிறது சீனா.
 இது  இந்தியாவுக்கு கடத்தப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்  ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது.
suran

இருப்பினும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் தடுப்பு  ஒருங்கிணைப்பு பிரிவு விதிகள் சில சீன பட்டாசு சட்டப்பூர்வமாக  இறக்குமதி செய்ய வழிவகுக்கும் என்று கொதிக்கின்றனர் பட்டாசு  உற்பத்தியாளர்கள்.
தரமற்ற பொருட்களை அனுப்பி சில்மிஷ  வேலைகளில் ஈடுபட்டுவரும் சீனாவுக்கு வேட்டு வைத்தால்தான் நம்  நாட்டின் பொருளாதாரத்தை மட்டமல்ல ,இந்தியாவின்  பாதுகாப்பையும் நம்மால் பலப்படுத்த இயலும்.
அது மத்திய அரசின் சுங்கத்துறையின் கையில்தான் இருக்கிறது.அவர்கள் கப்பல்கள் மூலம் வரும் கண்டெய்னர்களை கவனத்துடன் சோதனையே செய்யாமல் இருப்பதால்தான்,பணத்தை இறக்குமதியாளர்களிடம் வாங்கிக் கொண்டு கண்டெய்னர்களை அனுமதிப்பதால்தான் இந்த சீனத் தயாரிப்புகளே இந்திய சந்தையை நிரப்புகிறது.
அமேரிக்கா மன்மோகன்-சோனியா-ப.சிதம்பரம் மூலம் தனது அந்நிய மூலதனத்தை இந்தியாவில் குவிக்கிறான் என்றால் சீனா தனது பொருட்களை மலிவு போர்வையில் சந்தையிடுகிறது.
இவைகளை தனது சுய லாபத்துக்காக அதிகாரிகளும்,அமைச்சர்களும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதன் பாதிப்பை சுமக்கிறவர்கள் நமது தொழிலாளர்களும்,மக்களும்தான்.
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran
சிக்குவானா தாவூத்? 

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை எப்படியும் பிடித்து, இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என, ஒரு குஜராத்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்தான்தான் அடுத்த பிரதமர் என்ற கனவில் உள்ள  நரேந்திரமோடி கூறி உள்ளார்.
இது குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரியும், தாவூத் இப்ராகிம் தூண்டுதலால், கடந்த 1993ம் ஆண்டில் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணை அதிகாரியுமான ஒய்.சி. பவார் கூறுகையில், பிரதமர்  பதவியில் உறுதியாக முடிவெடுக்கும் தலைவர்கள் அமர்ந்தால் , தாவூத் போன்ற குற்றவாளிகளை கொண்டு வந்து தண்டிக்க முடியும்,' என்றார.
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பதுங்கியிருக்கும் தாவூதை அவ்வளவு சுலபமாக கொண்டு வர முடியுமா? என்று பவாரிடம் கேட்டபோது,
'அது ஒன்றும் பெரிய காரியமல்ல. தாவூதின் ஒவ்வொரு நடமாட்டமும் எங்களுக்கு தெரியும். கராச்சியில் உள்ள ஒரு தர்காவிற்கு, தொழுவதற்காக அவன் அடிக்கடி வருகிறான். அப்படி வரும்போது தாவூதை கொன்றுவிட, அவனின் எதிரியான சோட்டா ராஜன் தனது ஆட்களை அனுப்பினான்.
 ஆனால், சோட்டா ராஜனின் ஆட்கள் காத்திருந்த நிலையில், தாவூத் அன்று வரவில்லை. அதனால், அந்த ஆபரேஷனை அவர்கள் கைவிட்டனர்.
ஆனால், அவனை பிடித்து வர போதிய ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. தாவூதை எளிதாக பிடித்துவிடலாம் என்று கூறி, அங்கு செல்ல அனுமதி கேட்டபோதெல்லாம், டில்லி மறுத்துவிட்டது,' என்று விளக்கமாக கூறினார்.
ஆனால், சில புலனாய்வு அமைப்புக்கள் கூறுவது வேறுவிதமாக உள்ளது. தாவூதை பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அவை கூறுகின்றன.
 எப்பொழுதும் ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு வளையத்துடன் வலம் வரும் தாவூத், பாதுகாப்புக்கு என, தனியார் பாதுகாப்பு வீரர்களையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு, தாவூதின் வலது கரம் என்று கூறப்படும் சோட்டா ஷகீல், 'தாவூது ஒன்றும் அல்வா துண்டு அல்ல. லபக் என்று எடுத்து வாயில் போடுவதற்கு' என கிண்டலாக கூறி உள்ளான்.
suran
ஆனால், சில உளவுத்துறை அதிகாரிகள் தாவூதை பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றே கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., ஒன்றும் அவ்வளவு திறமையானது அல்ல. பெரும்பாலான நேரங்களில் அது கோட்டை தான் விட்டுள்ளது. உதாரணமாக, ஒசாமா பின்லாடன் மரணத்தை கூறலாம். பின்லாடனும் ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு வளையத்தில் தான் இருந்தார்.
 ஐந்து, ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், சி.ஐ.ஏ., எனப்படும் அமெரிக்க புத்திசாலிகள் முன் அவர்கள் திறமை எடுபடவில்லை,' என்றனர.
 
இந்நிலையில்தற்போது  தாவூதை பிடிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் முன்கூட்டியே சில முயற்சிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.
அதாவது தாவூதிற்கு சொந்தமான 12 பெரிய சொத்துக்கள் வருமானவரி துறையிடம் உள்ளன. அவற்றை பல முறை ஏலம் விட முயன்றும் அது முடியவில்லை, எனவே, முதலில் அந்த இடங்களை ஏலம் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் சில இடங்கள் தாவூதின் அடியாட்களின் கைகளில் உள்ளன. அவற்றையும் மீட்க வேண்டும். மேலும், தங்கள் நடமாட்டத்திற்காக தாவூதின் ஆட்கள் குஜராத் கடற்கரை பகுதியில் நிலம் வாங்க முயற்சி செய்கின்றனர். அதை மாநில-மத்திய அரசுகள்  தடுக்க வேண்டும்,' என்றனர்.
முன்பு வந்த செய்தி ஒன்று:
தாவூத் இப்ராகிமை சுலபமாக கைது செய்யும் வாய்ப்பை, அப்போதைய உள்துறை மந்திரி SC.சவான் தடுத்து விட்டார். என காங்கிரசின் முகமூடியை கிழித்துள்ளார்,மும்பை முன்ணாள் போலீஸ் கமிஷனர் M.N.சிங்.
அவர் ஐ.பி.என். தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.    1993 ஆம் வருடம் மார்ச் 12 ஆம் தேதி,இந்தியாவையே உலுக்கிய மும்பை  குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக,நிழல்உலக தாதா,தாவூத் இப்ராகிமை  மும்பை போலீசார் தேடிவந்தனர்.குண்டு  வெடிப்பு  நட்ந்தவுடன், தலை-மறைவாகிவிட்ட தாவூத் துபாயில் தங்கியிருப்பதை மும்பை போலீசார் உறுதிபடுத்தினர்.
  இதை தொடர்ந்து துபாய்க்கு ஒரு போலீஸ் டீமை அனுப்பி,தாவூத்தை கைது செய்து கொண்டு வர அனுமதி கேட்டு மும்பை போலீஸ், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர் S.C.சவான் அனுமதி வழங்க மறுத்ததோடு மட்டுமல்லாமல்,இனிமேல் இது குறித்து சிந்திக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
  அதற்கு பின் சில மாதங்கள் கழித்துதான் தாவூத் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த
நிகழ்வு நடந்தது. அதன் பின் மும்பை போலீஸ் ஒருபோதும் இது குறித்து முயற்சி எதுவும் செய்யவில்லை.என ஐ.பி.என்  சேனலின் எடிட்டரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரனை சில மாதங்களில் முடிவடைந்து 123 பேர் கைது செய்யபட்டு,குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய பட்டபோதும்,20 ஆண்டுகளாக, சுப்ரீம் கோர்ட் இன்னும் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
    தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து  மேற்கொள்ளபடுவதாக அவ்வப்போது மக்களை ஏமாற்றி வந்த காங்கிரஸ் அரசின் முகமூடியை சிங் அவர்களின் இந்த பேட்டி கிழித்தெறிந்துள்ளது.
 
 
தினமலர் உதவியுடன்,
--------------------------------------------------------------------------------------------------------------------------
காத்திருப்பு
அன்றும் -இன்றும்,,

funny pictures picdumps

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

உடல்நலம் காக்கும்

  பப்பாளி

கரிகா பப்பயா  (Carica Papaya) என்னும் தாவரவியல் பெயரினைக் கொண்ட பப்பாளிப் பழம் வெப்பப் பகுதிகளில் வளரக்கூடியது.
 மத்திய அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் முதன்முதலில் அறியப்பட்ட பப்பாளி. போர்ச்சுகீசியராலும் ஸ்பானிஷ் மக்களாலும் பிற ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் ஆரோக்கிய மரம் என்றும் பப்பாளிப் பழம் ஆரோக்கியப் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்களுள் முதலிடத்தில் மாம்பழமும் இரண்டாம் இடத்தில் பப்பாளியும் உள்ளன. பப்பாளி பழுக்கப் பழுக்க வைட்டமின் சி சத்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.
 100 கிராம் காயாக உள்ள பப்பாளியில் 32 மில்லி கிராமும், சிறிது பழுத்த பப்பாளியில் 40-72 மி.கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53-95 மி.கிராமும் நன்கு பழுத்ததில் 68-136 மி.கிராமும் வைட்டமின் சி இருக்கும்.
மேலும், வைட்டமின் பி1, பி2, போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்து, நியாசின் போன்ற சத்துகளும் உள்ளன.
நன்கு வளர்ந்த பழுக்காத காய் வாட்டான பப்பாளிக் காயில் உள்ள புரோடியா லிடிக் என்சைம்ஸ் என்ற தாது புரதத்தையும் மேலும் சிலவற்றையும் செரிக்க வைக்கும் தன்மை உடையது. அர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்களை, இந்தப் புரதத்தைச் செரிக்க வைக்கும்போது உற்பத்தி செய்ய உதவுகிறது.
நமது உடலில் உள்ள தசைகளைப் பலப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் அர்ஜினைன் பெரிதும் உதவுகிறது. ஒரு கிராம் பப்பைனுக்கு (Papain)35 கிராம் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் ஆற்றல் இருப்பதால், இறைச்சியை மென்மையாக்க சமையலில் சேர்க்கப்படுகிறது.
 நன்கு வளர்ந்த பழுக்காத காயில்தான் பப்பைன் அதிகமாக உள்ளது.
நமது குடலில் புகுந்த தேவையற்ற கிருமிகள் (பாக்டீரியாக்கள்) மற்றும் ஏனைய புல்லுருவிகளையும் பழுக்காத பழம் அழிக்கிறது.
இதயம், கல்லீரலைக் காப்பதுடன், பித்தம் நீக்கி உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டும். பல் தொடர்பான குறைகள், சிறுநீர்ப் பிரச்சினைகள், ரத்த சோகை போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
பப்பாளிப் பழத்தைத் தேனில் தோய்த்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளிப் பழத்தில் உள்ள என்சைம் நொதி தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி தோலினை மிருதுவாக்கும்.
புற்றுநோய் செல்களிலுள்ள ஃபைப்ரின் (Fibrin) என்பதை அழிக்க பப்பாளியில் உள்ள பப்பைன் பயன்படுகிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கும் ஆற்றல் பப்பைனுக்கு உள்ளது.
பப்பாளிப் பழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாகச் சேர்வதில்லை. எனவே, நீரிழிவு நோயாளிகளும் தினமும் பப்பாளி சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்ளலாம். பட்டினி இருப்பவர்கள் பப்பாளிச் சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் பருகி பயன் அடையலாம்.
பப்பாளி மரத்திலிருந்து வரும் பால் (Latex) காயங்களைக் குணமாக்கும் வல்லமை கொண்டது.
பப்பாளி மரத்தின் பச்சைப் பகுதிகளிலும் விதைகளிலும் உள்ள கார்பைன் (Carpine) எனும் ஆல்கலைட் இதயத் துடிப்பைச் சீராக வைக்க உதவுகிறது. பப்பாளி கரோட்டின் சத்தினை அதிகம் கொண்டிருப்பதால் கண் பார்வைக்கும் உறுதுணை புரிகிறது.
பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து நம்மைக் காக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO).
நுண்ணுயிர் எதிரி (ANTIBIOTIC) மருந்துகளைச் சாப்பிட்ட ஒருவரின் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பப்பாளிக்கு உள்ளது.  தினமும் பப்பாளி சாப்பிடுபவர்களை எந்த நோயும் எளிதில் தாக்காது.
நோய்த் தொற்றுகளும் ஏற்படாது. இயற்கையிலேயே விசக் கிருமிகளைக் கொல்லும் சத்து பப்பாளியில் இருப்பதால், ரத்தத்தில் நோய்க்கிருமி தாக்கி நோயினை உருவாக்கும் வாய்ப்பு இல்லை
suran
-------------------------------------------------------------------------------------------------------------------

மாறிக்கொண்டே இருக்கும் உலக வரைபடம்! 

 
800px-1500_map_by_Juan_de_la_Cosa-North_up
ஜுவான் டி லா கோசா வரைபடம் (1500)
juan de la cosa map
ஸ்பானிஷ் வரைப்பட வல்லுநரான ஜுவான் டி லா கோசா, (juan de la cosa map) ஆய்வாளர் மற்றும் வெற்றியாளரான இவர் காந்தாபிரியாவின் (Cantabria) வடக்கு தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள  சண்டோனாவில் (Santona) பிறந்தார். 1500ம் நுற்றாண்டுகளில் உருவான மாப்பா முண்டி உலகவரைப்படங்களில் பெரும்பாலனாவை இவரால் வரையப்பட்டவையே. இந்த வரைப்படமே அமெரிக்காவால்  முதலில் அறியப்பட்ட ஐரோப்பிய வரைப்படமாக பிரசித்தி பெற்றடைந்தது.
 Cantino_Planisphere
காண்டினோ உலக வரைபடம் (1502)
cantino world map
காண்டினோ பிளன்ஸ்பியர் (cantino planlsphere) அல்லது காண்டினோ உலக வரைபடம் (cantino world map) கிழக்கு மற்றும் மேற்கு போர்த்துகீசியத்தின்  கண்டுபிடிப்புகள் (Portugese Discoveries) காட்டும் பழமையான வரைபடம் ஆகும். இந்த உலக வரைப்படம்,  கரீபியன் (Carribean) மற்றும் புளோரிடா (Florida) கடலோரங்களையும், அத்துடன் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய தீவுகளையும் தெளிவாய் எடுத்துகாட்டியது.
 800px-Caverio_map_medium_res
கவேரியோ வரைப்படம் (1505)
caverio map
காவிரி வரைப்படம் என்று அழைக்கபடும் கவேரியோ வரைப்படம் அல்லது கனேரியோ வரைப்படம் நிக்கோலோ டி காவேரியால் 1505ல் வரையப்பட்டது.   இந்த உலக வரைப்படம் 1.15 க்கு 2.25 மீட்டர் (7.4, 3.8 அடி) என்ற அளவில், பத்து பிரிவுகள் அல்லது பேனல்கள் கொண்ட நிலையில், எழுதுவதற்கு பயன்படும் வகையில் பாடம் செய்யப்பட்ட ஆட்டு தோலில் வண்ணங்களைக் கொண்டு  கையினால் வரையப்பட்டது.  இந்த உலக வரைப்படம், வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பற்றிய ஆச்சரிய விவரங்களை தந்தது மேலும் 1507-ல் வரையப்பட்ட வால்ட்சீமுல்லர் உலக வரைப்படத்திற்கு Waldsemuller map தேவையான முதன்மை ஆதாரங்களை திரட்டவும் பயன்பட்டது. இப்போது இந்த காவேரியோ உலக வரைப்படம் பாரீஸில் உள்ள பிபிலியோதிக் நேஷனாலி டி பிரான்ஸில் bibliotheque nationale de france பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ரூசிச் உலக வரைப்படம் (1507)
ruysch world map
ஜோகன்னஸ் ரூசிச் (johannes ruysch), வானியல், வரைப்பட வல்லுநர் மற்றும் ஓவியரான  இவர் குறைந்த நாடுகளைக் கொண்ட இரண்டாவது புதிய உலக வரைப்படத்தை வரைந்தார். பழமையான அச்சி பிரதிநிதித்துவத்தில் இந்த வரைப்படத்தை அவர் தயாரித்தார். ரூசிச் வரைபடம் 1507-ல் வெளியிடப்பட்டு பரவலாக விநியோகிக்கப்பட்டது.
 Ruysch_map
வால்ட்சீமுல்லர்  மற்றும் ரிங்க்மேன் உலக வரைப்படம் (1507)
waldseemuller and ringmann map
தெற்கு ஜெர்மனியை சேர்ந்த வரைப்பட வல்லுநர்களான மார்ட்டின் வால்ட்சீமுல்லர் Martin Waldseemüller மற்றும் மத்தியாஸ் ரிங்க்மேன் Matthias ringmann , உலக வரைப்பட நண்பர் ரெனே மிமி டியூக்  ஆப் லோரெய்ன் Rene II duke of lorraine ஆதரவுடன்  ஒரு கூட்டு முயற்சியாக, புவியியல் மற்றும் வரைபடவியலில் பல ஆண்டுகளாய் சேகரித்த உலகவரைப்பட  விவரங்கள் மற்றும் அன்றைய காலகட்டத்தின் மிக சமீபத்திய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் கொண்டு ஒரு வரைப்படத்தை உருவாக்கினார்.  இந்த உலக வரைப்படம் 1507-ல் உருவாக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
suran= ஆலப்புழா

இதுதான் இந்தியா? கோவாவில்  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த பட்டியலில் அமிர்கான், கபில்தேவ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.100 வீதம் 150 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அவுங்களும் பொய்யாக எத்தனை பெயர்களைத்தான் யோசிக்க முடியும் ?.
====================================================================
@நாட்டின் அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, சென்ற 18ம் தேதி­யுடன் முடி­வ­டைந்த வாரத்தில், 3.16 கோடி  டாலர் சரி­வ­டைந்து, 30,941 கோடி டால­ராக குறைந்­துள்­ளது என, ரிசர்வ் வங்கி, வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் கூறப்பட்டுள்ளது.
suran
 ஏப்ரல் மாதத்தின் முதல், 15 தினங்­களில், முன்­பேர சந்­தை­களில் வர்த்­தகம், 70 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 2.36 லட்சம் கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது

ஆனால் நமது பொருளாதாரப் புளி[?]
நாட்டின் பொரு­ளா­தாரம் சிறப்­பாக உள்­ளது. இது, மேலும் வலு­வ­டையும் என, மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்­பரம் தெரி­வித்தார்.
====================================================================
தேர்தல் நேரங்களில் மட்டும் தலித்களின் வீடுகளுக்கு தேனிலவுக்கு செல்வது போல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பயணம் செய்கிறார்.கஞ்சி குடிக்கிறார். எனக்கூறிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
=====================================================================
விளங்கிடும் .......!
தமிழ் நாட்டில் தேர்தல் நாள் வரை , தடையில்லா மின்சாரம் வழங்கிய நிலையில், தேர்தல் முடிந்த கையோடு, மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று  ஆண்டுகளாக, கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது;
இதை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது. தற்போது, கோடை காலத்திற்கு முன்
னதாக, மின் தேவை அதிகரித்துள்ளது. அணைகள் வறண்டு கிடப்பதால், நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.
 மேட்டூர் மற்றும் வட சென்னை விரிவாக்க புதிய அனல் மின் நிலையங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்றாலை மூலமாகவும், எதிர்பார்த்த அளவிற்கு மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை. எனவே, சென்னை உட்பட பல இடங்களில், மின் தடை செய்யப்பட்டு வந்தது. இதனால், லோக்சபா தேர்தல் நாளின் போதும், மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அன்று, அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், மின் தேவை, 10,810 மெகா வாட்டாக இருந்தது. மின் உற்பத்தி, இதே அளவிற்கு இருந்ததால், மின் தடை செய்யப்படவில்லை.
 இந்நிலையில், நேற்று வழக்கம் போல், அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்கின. இதனால், மின் தேவை, 12,340 மெகாவாட்டாக அதிகரித்தது; மின் உற்பத்தி, 11,860 மெகாவாட் ஆனது; 480 மெகாவாட், பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தேர்தல் முடிந்த கையோடு, சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில், மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது எற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு-தடை பற்றி தமிழக மின்  துறைசார்ந்த ஒரு  அதிகாரி  கூறுகையில்,
 'மின் தேவை குறைவாக இருக்கும் என, கருதி, சில மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால், விடுமுறைக்கு பின், ஒரே நேரத்தில், தொழிற்சாலைகள் உட்பட, பல நிறுவனங்கள் இயங்கியதால், மின் தேவை அதிகரித்தது.எதிர்பாராதது.விரைவில் இது சரி செய்யப்படும் '
என்றார்.
\
கடுமையா மின்தட்டுப்பாடு நிலவும் இந்த நேரம் வெயிலின் தாக்கமும் அதிகமாயுள்ள இந்நேரம் மின்தேவை குறைவாயிருக்கும் என்று மின் உற்பத்தியை குறைத்தார்களாம்.
இப்படி பட்ட இம்சை அரசர்களை வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்தினால் உண்மையிலேயே தமிழ்நாட்டு பெயர் விளங்கிடும்.
====================================================================
ஸ்மார்ட்போன் வாங்க..


சில ஆலோசனைகள்!

5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பலரும் அதை எளிதில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஸ்மார்ட்போனை நமக்கு உதவுகிற மாதிரி பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.
நவீன வாழ்க்கையின் இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து  இனி...
 
விலை!
ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச் செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான் எனில், அதற்குத் தகுந்தமாதிரியான ஸ்மார்ட்போனைத் தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச் செல்லும்போது நம் செலவு அதிகமாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆராய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப் படிப்பது அவசியம்.

நினைவகம் (Memory)!
தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள மனிதனுக்கு மூளை எந்தளவு முக்கியமோ, அதுபோல ஸ்மார்ட்போன்களுக்கு நினைவகங்கள் முக்கியம். ஸ்மார்ட்போன்கள் என்பவை கணினிபோலவே, ரேம் மற்றும் உள்நினைவகங்களுடனேயே (RAM, Internal Memory) வருகின்றன. எனவே, உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்கவேண்டும்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் குறைந்தபட்சம் 512 எம்.பி. இருந்தால் நல்லது. உள்நினைவகம் குறைந்தபட்சம் 150-200 எம்.பி. இருப்பது அவசியம். எக்ஸ்டர்னல் நினைவகத்துக்கான வேலையை மெமரி கார்டே செய்துவிடும். அது 32 ஜிபியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
பிராசஸர் (Processor)!
உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இதுதான். குறைந்தபட்சம் பிராசஸர் ஸ்பீடு 800 விலீக்ஷ் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
suran
 
பேட்டரி (Battery)!
பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக (Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரியைத் தேர்வு செய்யுங்கள்.
 
இணையம் - இணைப்புத்தன்மை!
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதேபோல, Bluetooth, Wi-Fi, GPS, USB  வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்தபட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரானது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.
 
அளவு!
ஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.
 
suran
 
கேமரா!
எந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்துகொண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.
 
எடை மற்றும் அளவு!
ஒரு போன் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக்கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
 
டிஸ்ப்ளே (Display)!
டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
 
இயங்குதளம் (Operating System)!
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.
 
நன்றி:விகடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran

பாதுகாப்பு-கையில் காப்பு?

-
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம் சாட்டுகின்றனர்.
ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது தனது ஹெலிகாப்டர் கணக்கு வேட்பாளர் கணக்கில் வருவது பற்றித்தான்.
suran.
பிரவின்குமாரின் தேர்தல் ஆணையம்  எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளதாகத்தான் தெரிகிறது.
ஒன்று பணம் வாங்கினால் கைது-சிறை என்று பாமர மக்களை ஒருபக்கம் மிரட்டி விட்டு வாக்கு சாவடி வரிசை வரை அதிமுகவினரை பணம் கொடுத்து இலைக்கு வாக்கு கேட்க அனுமதித்தது.அதற்காகவே மற்ற கட்சியினர் கூட்டம் போட்டு எதிர்ப்பதை தடுக்க 144 தடையை கொண்டு  வந்தது.
இதனால் அப்போதைய கஞ்சிக்கு அதிமுக தரும் பணத்தை வாங்க மக்கள் பயந்து 1000 ரூபாய் வர வேண்டிய இடத்தில் மிகக் குறைவாக 200 மட்டுமே கொடுத்தது.இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக வாக்குகளுக்கு விலை தந்தால் கட்டு படியாகுமா?
கொலை செய்தவனை விட தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்.
ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்படி பணம் கொடுத்தவனுக்கு கொடுக்க காவல்துறை,பறக்கும்படை பாதுகாப்பு.
பணம் வாங்கியவனுக்கு கையில் காப்பு என்பது விசித்திரம்.
சரி.அதுதான் இருக்கட்டும்.
இரண்டாவது.தேர்தல் வாக்குப்பதிவை வைகாசி பிறக்கும் வரை ஒத்திப்போடவேண்டும் என்ற தமிழக மக்கள் ஆவலை மீறி அதற்குள் வாக்குப்பதிவை நடத்தி முடித்தது.
suran-dinamalar
இதனால் பழைய குருடி கதவை திறடி என்று மீண்டும் மின்வெட்டு தமிழகத்தை தேர்தல் ஆணையம் கையில் இருந்து தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதே.
25ம் தேதி முதல் எங்கள் பகுதியில் 6 மணி நேரம் மின் வெட்டு மீண்டும் வந்து மக்கள் உடலையும் ,மனதையும் கொதிக்க வைத்து வருகிறது.
இதற்காக த்தான்  வைகாசி வரை பிரச்சாரம் செய்ய அவகாசம் கொடுத்து காற்றடி காலம் துவங்கியதும் வாக்குப் பதிவை வைத்திருந்தால் இப்படி மக்கள் புழங்கி சாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஜெயா அரசு கடனை உடனை வாங்கி மின்தட்டுப்பாடு வராமல் பார்த்து கொண்டிருந்திருக்கும்.அதை கெடுத்தது தேர்தல் ஆணையம்தான் .
எப்படியோ அதிமுகவினர் தங்களை அதிரடி தோல்வியில் இருந்து காத்துக்கொள்ள மட்டுமே தேர்தல் ஆணைய செயல் பாடுகள் பயன் Photo: மீண்டும் பல மணிநேரம் இருட்டு தேர்தல் முடிந்தது மின்வெட்டு வந்ததுநெல்லை:தமிழகத்தின் மின் தட்டுப்பாடு கடந்த 2 மாதமாக அதிக  அளவில் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கியதால் ஆளுங்கட்சிக்கு மின்வெட்டு பெரும் நெருக்கடியாக  இருந்தது. இதையடுத்து, வெளியிலிருந்து கொள்முதல் செய்யப்படும்....- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=89291பட்டுள்ளது.மக்கள் நலனுக்கல்ல.

இதன் கடைசியில் ஒரு பொன் மொழி.இது ஜெயலலிதாவுக்கு .
"இந்த மக்களவை தேர்தலில் உங்களுக்கு கிடைத்த சில இடங்களும் உங்கள் செல்வாக்கிலோ,ஆட்சித்திறமையிலொ கிடத்ததல்ல .உங்கள் தொண்டர்கள் கண்விழித்து காசு கொடுத்து வாங்கியதுதான்.
உங்கள் ஆட்சி-நிர் வாகத்திறமையை பற்றி தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க போக முடியாமல் திணறிய உங்கள் வேட்பாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக பன்னீர் செல்வத்திடமிருந்து.
தஞ்சாவூரில் முகவர்கள் சென்ற பிறகு அதிமுகவினர்களை வைத்துக் கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்ட முத்திரையை நீக்கி நோண்டிய  மண்டல  அலுவலர் மீது நடவடிக்கையும் இல்லை .அங்கு மீண்டும் வாக்குப்பதிவு இல்லை என்கிற பிரவின்குமாரின் நடுநிலை செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது.[ஜெயா கட்சியினரால் மட்டும்.}
suran-Sasi Kumar's photo.

பதில் மரியாதை...
  
 பஞ்சாப் மாநில, தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தன் காலில் விழுந்து வணங்கிய, பெண் வேட்பாளருக்கு பதில் மரியாதை செலுத்திய மோடி. ...
 
 மேலும் படிக்க : http://election.dinamalar.com/photo.php?id=257163

"கும்பிடே சரியில்லையே?"பாரத்து மோடியிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் ,!"
Photo
------------------------------------------------------------------------------------------------------------------------


எச்சரிக்கை Heartbleed வைரஸ்

இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர்.
 இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி, குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புகிறது.
இணையத்தில் தகவல்கள் அனுப்பப்படுகையில், அது சுருக்கப்பட்டு அனுப்பப்பட்டு, பின்னர் தேவைப்படும் இடங்களில் விரிக்கப்பட்டு காட்டப்படுகிறது.
இணையத் தகவல் பரிமாற்றத்தில் இது ஒரு முக்கியமான தொழில் நுட்ப நடைமுறையாகும். இணைய ஒருங்கு முறையில் இது OpenSSL என அழைக்கப்படுகிறது.
தகவல் பாக்கெட்கள் பரிமாறப்பட்டு, அவை தேவைப்படும் கம்ப்யூட்டரை அடையும்போது, இந்த வைரஸ், சுருக்கப்பட்ட தகவல்களை விரிக்கும் குறியீடு போல நுழைந்து, கம்ப்யூட்டரைக் கைப்பற்றி தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், அதன் மெமரியில் உள்ள தகவல்களைப் படிக்கிறது.
படித்து, தன் பைலில் பதிவு செய்து கொண்டு, வைரஸ் குறிப்பிடும் இணைய முகவரிக்கு அனுப்புகிறது.
இந்த வகை வைரஸ் செயல்பாடு மிக மிக மோசமான விளைவுகளைத் தரக்கூடியது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மோசமான விளைவுகளைக் குறிப்பிடுகையில்,வைரஸ் ஒன்றின் செயல் தன்மையினை ஒன்று முதல் பத்து வரையிலான அளவுகோலில் குறிப்பிடுவார்கள்.
இந்த வைரஸைப் பொறுத்தவரை, அந்த அளவுகோலையும் தாண்டி, மோசத்தின் அளவை 11 எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
OpenSSL என்பது, இணையத்தில் இயங்கும் 60 சதவீத சர்வர்களில் பயன்படுத்தப்படும் ஒரு இயக்கமாகும்.
SSL என்பது Secure Sockets Layer என்பதன் சுருக்கம். இதனை முதன் முதலில் வடிவமைத்துத் தந்தவர்கள் நெட்ஸ்கேப் நிறுவனம். இணையம் வழியே, தனிப்பட்ட டாகுமெண்ட்களைப் பரிமாறிக் கொள்ள பாதுகாப்பான வழிமுறையாக இதனை அமைத்தது.
நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர்கள் இதனை சப்போர்ட் செய்தன. பல இணைய தளங்களும், ரகசிய தகவல்களை (கிரெடிட் கார்ட் எண், வங்கி அக்கவுண்ட் எண் போன்றவை) பெற இதனைப் பயன்படுத்தின.
SSL பயன்படுத்தும் இணைய தளங்கள், வழக்கமான http: க்குப் பதிலாகத் தங்கள் இணைய முகவரியில் டttணீண்: பயன்படுத்தி வருகின்றன. HTTPS என்பதுவும் இதனைப் போன்ற ஒன்றுதான். SSL கிளையண்ட் கம்ப்யூட்டருக்கும், சர்வர் கம்ப்யூட்டருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துகிறது
. https தனிப்பட்ட முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
HTTPS என முன்னொட்டினைக் கொண்டு இயங்கும் சர்வர்கள் பாதுகாப்பு மிகுந்தவை என நாம் அறிவோம். வங்கிகள் மற்றும் முக்கிய நிதி பரிமாற்றம் சம்பந்தமான பல சர்வர்களின் முகவரிகளில் இதனைக் காணலாம். இது கூடுதல் பாதுகாப்பினைக் குறிக்கிறது.
 இத்தகைய சர்வர்களின் செயல்பாட்டில் இந்த வைரஸ் குறுக்கிட்டு தகவல்களைத் திருடுகிறது. மாறா நிலையில் தகுந்த பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படும் விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் கம்ப்யூட்டர்கள் கூட, இந்த தொழில் நுட்பத்தைச் சில வேளைகளில் பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
அப்போது ஹார்ட் ப்ளீட் வைரஸ் குறுக்கிடும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
heart
இதற்கிடையே ஹார்ட் ப்ளீட் வைரஸ் மொபைல் அப்ளிகேஷன்களையும் பாதித்துள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே மொபைல் பேங்கிங் வேலையை மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி இணைய தளங்களை இந்த வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளனவோ, அதே போல, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் சாதனங்களில் இந்த வைரஸால் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
எனவே, நிலையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் வரை மொபைல் சாதனங்கள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் கூகுள் ப்ளே சர்வரில் உள்ள 3 லட்சத்து 90 ஆயிரம் அப்ளிகேஷன்களை ஸ்கேன் செய்ததில், 1,300 அப்ளிகேஷன்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. இவற்றில் அதிக அபாய வாய்ப்பு உள்ளதாக, வங்கிகள் பயன்படுத்தும் 40 அப்ளிகேஷன்களும், 10 ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேஷன்களும் உள்ளன.
இவற்றுடன் பலரும் பயன்படுத்தும் சில அப்ளிகேஷன்களும் கேள்விக்குறிகளாகி உள்ளன.
மெசேஜ் அனுப்ப பயன்படும் புரோகிராம்கள், உடல் நலம் குறித்த சாப்ட்வேர்கள், பல மொழி உள்ளீடுகளுக்குப் பயன்படும் கீ போர்ட் இன்புட் புரோகிராம்களும் இந்த வகை ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.
இந்த வேளையில், ஆப்பிள் நிறுவனம் தன் இயக்க முறைமைகளான, ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ் மற்றும் ஐ க்ள்வ்ட் ஆகியவற்றில் இந்த வைரஸ் தாக்கம் இருக்க வாய்ப்பே இல்லை என அறிவித்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் சாதனப் பயனாளர்கள், தாங்கள் அணுகிப் பயன்படுத்தும் இணைய தளங்களின் நிலையை இது குறித்து அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்பிள் சாதனங்கள் மூலம் Yahoo, Facebook மற்றும் Tumblr ஆகிய சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு ஏன் ஹார்ட் ப்ளீட் (Heartbleed) எனப் பெயரிட்டுள்ளனர் என்பதனைப் பார்க்கலாம். OpenSSL செயல்முறையில், இறுதி நிலையில், தகவல் சுருக்கத்தினை விரிக்கையில், இந்த இயக்கம் சோதனையிடும் அம்சத்தினை heartbeat என அழைக்கின்றனர்.
இதில் தான் இந்த வைரஸ் புகுந்து விளையாடுகிறது. எனவே தான் இந்த வைரஸிற்க்கு Heartbleed எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்துள்ள இணைய சர்வர்களைப் பயன்படுத்தும் நம்மால், அந்த சர்வர்களை சரி செய்திட முடியாது. அதன் வழியாக இந்த வைரஸ் நம் தகவல்களையும் திருடலாம்.
அதிக பட்சம் நாம் அடிக்கடி நிதி சார்ந்த செயல்பாட்டிற்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றிக் கொள்வதே நல்லது.
இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதற்கும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. OpenSSL கட்டமைப்பில் மைக்ரோசாப்ட் சம்பந்தப்படவில்லை.
தனிநபர் பயனாளிகள் என்ன செய்திட வேண்டும்? நிதி மற்றும் தனிநபர் தகவல்களைப் பயன்படுத்தும் சேவைத் தளங்களில், இந்த வைரஸிற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, அடிக்கடி உங்கள் பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்வேர்ட், இந்த வைரஸால் எளிதாகக் கண்டறிந்து திருடப்படக் கூடியதா என அறிய http://filippo.io/Heartbleed மற்றும் https://lastpass.com/heartbleed என்ற முகவரிகளில் உள்ள தளங்களை அணுகலாம்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தளங்களில், எடுத்துக்காட்டாக, Google, GitHub, மற்றும் Microsoft ஆகியவற்றில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு (twofactor authentication) தரப்பட்டிருந்தால், அவற்றைப் பயன்படுத்தவும்.
 உங்கள் வெப் பிரவுசர்களில் உள்ள குக்கீஸ், கேஷ் பைல்கள் மற்றும் ஹிஸ்டரி பைல்கள் ஆகியவற்றை முழுமையாக நீக்கவும்.

இவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் .

1. குரோம் பிரவுசர்:
 இதில் பிரவுசர் பாரில் chrome://settings/clearBrowserData எனக் கொடுத்து எண்டர் செய்திடவும். பின் கிடைக்கும் பக்கத்தில் எவற்றை எல்லாம் நீக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அவை Clear browsing history, Clear download history, Empty the cache, Delete cookies and other site and plugin data, என இருக்கும். இந்த பட்டியலில் தேவைப்படுபவற்றை அல்லது அனைத்தையும் நீக்கலாம்.

2. பயர்பாக்ஸ் பிரவுசர்:
இதில் Tools or History மெனு செல்லவும். அங்கு Clear Recent History என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Time range to clear என்ற பிரிவில், நீங்கள் சந்தேகப்படும் நாட்களுக்கான காலத்தை வரையறை செய்து தரவும். அடுத்து “Details” என்பதில் கிடைக்கும் கீழ்விரி மெனுவில், எவை எல்லாம் நீக்கப்பட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து எண்டர் செய்திடவும்.
3. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
9 அல்லது அதற்குப் பின்னர் வந்தவற்றில், கியர் ஐகான் கிளிக் செய்து, அங்கு Tools > Safety > Delete browsing history எனச் சென்று நீக்கலாம். இங்கேயே temporary Internet files, and cookies போன்றவற்றை நீக்கவும் வசதிகள் கிடைக்கும். பயன்படுத்தவும்.

நன்றி:தமிழ் சி.என்.என்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------

இணையத்துடன் இணைய முடியவில்லையா?

நமது கணினி யில் இணைய   இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
 ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக் காமல், சில வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் தகவல்கள் பொதுவானதாகவே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. பாதுகாப்பு சான்றிதழ் சிக்கல் (Certificate error):
இத்தகைய பிழைச் செய்திகள் பெரும்பாலும் SSL certificate error அல்லது Security Certificate error எனக் கிடைக்கும். இது HTTPS சுருக்கத்தில் ஏற்பட்ட பிழை.
 சில  இணைய தளங்களைப் பெற முயற்சிக்கையில் மட்டுமே இத்தகைய பிழைகள் காட்டபப்டும்.
suranஇது போன்ற தகவல் சுருக்கு முறைகளைக் கையாளுகையில், இணையதளங்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை முதலில் அனுப்பு கின்றன. எடுத்துக்காட்டாக Google.com இணைய தளம், இதற்கென சான்றளிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து பாதுகாப்பான தளம் என்பதற்கான சான்றிதழைப் பெற்றிருக்கும்.
சான்றிதழ் அதிகார அமைப்பு வழங்கிய இந்த சான்றிதழுக்கு உரிமையாளரான Google.com என்ற தளத்திலிருந்து இது வருகிறதா என நம் பிரவுசர் இதனைச் சரி பார்க்கும். சரியான அதிகார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதா எனச் சரி பார்க்கும்.
அதே போல, அந்த சான்றிதழில் கூறப்பட்டுள்ள Google.com தளம் உண்மையிலேயே அதுதானா? அல்லது அதே பெயரில் உள்ள வேறு ஒரு தளமா என்பதனையும் சரி பார்க்கும்.
நாம் பிழைச் செய்தி ஒன்றைப் பெற்றால், நாம் தேடும் Google.com தளத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்பட வில்லை என்று சந்தேகிக்கலாம். எடுத்துக்காட்டாக, வை-பி இன்டர்நெட் இணைப்பு உள்ள இடத்தில், நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கினை அணுகும்போது, இந்த பிழைச் செய்தி கிடைத்தால், வை-பி சார்ந்த நெட்வொர்க்கில் ஒருவர், உங்கள் வங்கிக் கணக்கினைக் காட்டும் தளத்தைப்போல ஒன்றை உங்களுக்குக் காட்டி உங்களை ஏமாற்றும் வழியை மேற்கொண்டுள்ளார் என்று பொருள்.
 நீங்கள் தேடும் தளம், அதற்கான பாதுகாப்பு சான்றிதழை புதுப்பிக்காமல் இருந்தாலும் இது போன்ற பிழைச் செய்தி கிடைக்கும்.

2. மால்வேர் எச்சரிக்கை:
சில நேரங்களில், இணைய தளங்களை அணுகுகையில், பிஷ்ஷிங் ("web forgery”) மற்றும் மால்வேர் எச்சரிக்கைகளை நாம் பெறலாம். நாம் எந்த பிரவு சரைப் பயன்படுத்தினாலும், அவை வழக்கமாக சில தீமை விளைவிக்கும் அபாயமான இணைய தளங்களின் பட்டியலையும் பெறுகின்றன.
இந்த பட்டியலில் உள்ள இணைய தளம் ஒன்றினை, நீங்கள் இறக்கிப் பார்க்க முயற்சிக்கையில் இந்த எச்சரிக்கை செய்தி காட்டப்படுகிறது. மால்வேர் புரோகிராம்களை இணைத்துக் கொண்டுள்ள இணைய தளங்கள், புகழ் பெற்ற இணைய தளங்களைப் போல தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிரெடிட் கார்ட் எண்கள், பாஸ்வேர்ட் ஆகிய ரகசிய தகவல்களைத் திருடும் தளங்கள் பிரவுசரில் கிடைக்கும் போது, அவற்றின் முகவரிகள் பட்டியலிடப்பட்டு வைக்கப்படுகின்றன.
நீங்கள் இந்த பட்டியலில் உள்ள முகவரிகள் உள்ள தளங்களைப் பார்க்க முயற்சிக்கையில், இந்த எச்சரிக்கை செய்திகள் காட்டப்படுகின்றன. இது போன்ற செய்திகள் கிடைக்கும்போது, நாம் தொடர்ந்து அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிக்கக் கூடாது.

3. இணைய தளம் காணப்படவில்லை ("404 Not Found):
 அடிக்கடி கிடைக்கும் பிழைச் செய்திகளில் இதுவும் ஒன்று. இதன் பொருள்-- நீங்கள் காண முயற்சிக்கும் இணையதளம், இணையத்தில் இல்லை என்பதே.
இந்த தளம் நீக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது, நீங்கள் அதன் முகவரியைப் பிழையுடன் டைப் செய்திருக்க வேண்டும்.
 அல்லது நீங்கள் ஏதேனும் லிங்க் கிளிக் செய்து இதனைக் காண முயற்சித்திருந்தால், அந்த லிங்க்கில் எழுத்துப் பிழை இருக்க வேண்டும்.

4. சர்வர் காணப்படவில்லை (Server not found):
 பயர்பாக்ஸ் இந்த வகையிலும், கூகுள் Google Chrome could not find [website.com] எனவும் பிழைச் செய்தி காட்டினால், உங்கள் பிரவுசரால், நீங்கள் தேடும் இணைய தளத்தினைக் காண இயலவில்லை எனப் பொருள்.
 இங்கும் நீங்கள் முகவரியினைத் தவறாக டைப் செய்திருக்கலாம்; அல்லது உங்கள் டி.என்.எஸ். சர்வர் செயல் இழந்து இருக்கலாம்.

5. இணைக்க இயலவில்லை (Unable to connect):
 உங்கள் முகவரியைப் படித்த டி.என்.எஸ்.சர்வர், நீங்கள் விரும்பிய இணைய தளத்திடமிருந்து சரியான பதிலைப் பெறவில்லை என்ற பொருளில் இந்த செய்தி தரப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட இணைய தளம் செயல் இழந்து நிற்கலாம்.
இது போல நேர்கையில், http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, குறிப்பிட்ட தளம் செயல் இழந்து உள்ளதா?
அல்லது உங்களுக்கு மட்டும் இணைப்பு கிடைக்கவில்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.
இது போல பல பிழைச் செய்திகளை நீங்கள் பெறலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ளவை தான், அடிக்கடி நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளாகும்.

நன்றி:கம்யூட்டர்  மலர்.

suranஇவ்வுலகில் வாழப்பிறந்தவர்கள் நாம் மட்டுமல்ல.நம் சக வாழ் உயிர்களுக்கும் இவ்வுலகில் சம பங்கு உண்டு.நாமும் இவர்களைப்போல் இவ்வுலகில் உருவான ஒரு விளங்கினம்தான்.சிந்திப்பதும்-தன்னலமும் மட்டுமே நமது தனி சிறப்பு.

இவ்வுலகில் வாழப்பிறந்தவர்கள் நாம் மட்டுமல்ல.நம் சக வாழ் உயிர்களுக்கும் இவ்வுலகில் சம பங்கு உண்டு.நாமும் இவர்களைப்போல் இவ்வுலகில் உருவான ஒரு விலங்கினம்தான்.சிந்திப்பதும்-தன்னலமும் மட்டுமே நமது தனி சிறப்பு.--------------------------------------------------------------------------------------------------------------------------
suran