வேட்டுவைக்கும் நடவடிக்கை.......,


இன்று இந்தியாவை கவலையில் ஆழ்த்தும் ஒரு செயல் மலிவு விலையில் வந்து குவியும் சீனத் தயாரிப்புகள்.
கண்ணைக்கவரும் வகையில் தரக்குறைவான பொருட்களை  கண்டெய்னர்களில் அனுப்பி வரிந்து  கட்டிக்கொண்டு களம் இறங்குகிறது சீனா .
 இங்குள்ள பெரிய பிரபல நிறுவனங்கள் தயார்ப்புகளைப்போல பேபி ஆயில், குளியல்  சோப்பு, பாடி ஸ்பிரே, பொம்மைகள் செல்பேசிகள்,எலக்ட்ரானிக் பொருட்களை  அடுக்கடுக்காக அனுப்பி  இந்தியாவை எந்த அளவுக்கு சீர்குலைக்க முடியுமோ அந்த அளவு  முயற்சி செய்கிறது.
 கப்பல்களில் கன்டெய்னர், கன்டெய்னராக நிரப்பி  அனுப்பப்படும் இந்த பொருட்களை பயன்படுத்தினால்  உடல்நலத்துக்குத்தான் பாதிப்பு.
 சீன அழகுசாதன பொருட்களை  பயன்படுத்த வேண்டாம் என தோல் நோய் நிபுணர்கள் எச்சரிக்கை  விடுக்கும் அளவுக்கு தரம் குறைந்தவையாக அவை உள்ளன.
suran
சுங்கத்துறையினர் இதை பல முறை கண்டுபிடித்து அவற்றை  சீனாவுக்கே திருப்பி அனுப்பினாலும் தனது விடா முயற்சியில் சீனா  தளர்வதே இல்லை. சில சமயம் பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள்  மூலமாகக்கூட தனது பொருட்களை சந்தைப்படுத்தி சாதுர்யத்தை  வெளிப்படுத்துகிறது சீனா.
நமது சந்தையில் சீன தயாரிப்புகள்  அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கின்றன.
 வேறு வகையில்  சொல்வதானால், மலிவு விலையில் கிடைக்கும் பொருள் என்றாலே  சீன தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதும் அளவுக்கு  நாட்டின் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கின்றன. இப்படி ஒவ்வொரு  வகையிலும் இந்திய பொருளாதார சீர்குலைவுக்கு வழி வகுக்கும் சீனா,  தற்போது சிவகாசி பட்டாசுக்கும் வேட்டுவைக்கும் நடவடிக்கைகளில்  ஈடுபட துணிந்துவிட்டது.

சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் பேர்  பிழைக்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீத வளர்ச்சி  பெற்றுவருகிறது இந்த துறை. சுமார் ஸீ 150 கோடிக்கு ஏற்றுமதி  செய்யப்படுகிறது.
நாட்டில் தயாராகும் மொத்த பட்டாசுகளில் 80  சதவீதம் தமிழகத்தில்தான் தயாராகிறது. இந்நிலையில் இந்தியாவில்  தடை செய்யப்பட்டுள்ள பொட்டாசியம் குளோரைடு என்ற மலிவான  கச்சாப்பொருளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கிறது சீனா.
 இது  இந்தியாவுக்கு கடத்தப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்  ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது.
suran

இருப்பினும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் தடுப்பு  ஒருங்கிணைப்பு பிரிவு விதிகள் சில சீன பட்டாசு சட்டப்பூர்வமாக  இறக்குமதி செய்ய வழிவகுக்கும் என்று கொதிக்கின்றனர் பட்டாசு  உற்பத்தியாளர்கள்.
தரமற்ற பொருட்களை அனுப்பி சில்மிஷ  வேலைகளில் ஈடுபட்டுவரும் சீனாவுக்கு வேட்டு வைத்தால்தான் நம்  நாட்டின் பொருளாதாரத்தை மட்டமல்ல ,இந்தியாவின்  பாதுகாப்பையும் நம்மால் பலப்படுத்த இயலும்.
அது மத்திய அரசின் சுங்கத்துறையின் கையில்தான் இருக்கிறது.அவர்கள் கப்பல்கள் மூலம் வரும் கண்டெய்னர்களை கவனத்துடன் சோதனையே செய்யாமல் இருப்பதால்தான்,பணத்தை இறக்குமதியாளர்களிடம் வாங்கிக் கொண்டு கண்டெய்னர்களை அனுமதிப்பதால்தான் இந்த சீனத் தயாரிப்புகளே இந்திய சந்தையை நிரப்புகிறது.
அமேரிக்கா மன்மோகன்-சோனியா-ப.சிதம்பரம் மூலம் தனது அந்நிய மூலதனத்தை இந்தியாவில் குவிக்கிறான் என்றால் சீனா தனது பொருட்களை மலிவு போர்வையில் சந்தையிடுகிறது.
இவைகளை தனது சுய லாபத்துக்காக அதிகாரிகளும்,அமைச்சர்களும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதன் பாதிப்பை சுமக்கிறவர்கள் நமது தொழிலாளர்களும்,மக்களும்தான்.
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran
சிக்குவானா தாவூத்? 

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை எப்படியும் பிடித்து, இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என, ஒரு குஜராத்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்தான்தான் அடுத்த பிரதமர் என்ற கனவில் உள்ள  நரேந்திரமோடி கூறி உள்ளார்.
இது குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரியும், தாவூத் இப்ராகிம் தூண்டுதலால், கடந்த 1993ம் ஆண்டில் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணை அதிகாரியுமான ஒய்.சி. பவார் கூறுகையில், பிரதமர்  பதவியில் உறுதியாக முடிவெடுக்கும் தலைவர்கள் அமர்ந்தால் , தாவூத் போன்ற குற்றவாளிகளை கொண்டு வந்து தண்டிக்க முடியும்,' என்றார.
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பதுங்கியிருக்கும் தாவூதை அவ்வளவு சுலபமாக கொண்டு வர முடியுமா? என்று பவாரிடம் கேட்டபோது,
'அது ஒன்றும் பெரிய காரியமல்ல. தாவூதின் ஒவ்வொரு நடமாட்டமும் எங்களுக்கு தெரியும். கராச்சியில் உள்ள ஒரு தர்காவிற்கு, தொழுவதற்காக அவன் அடிக்கடி வருகிறான். அப்படி வரும்போது தாவூதை கொன்றுவிட, அவனின் எதிரியான சோட்டா ராஜன் தனது ஆட்களை அனுப்பினான்.
 ஆனால், சோட்டா ராஜனின் ஆட்கள் காத்திருந்த நிலையில், தாவூத் அன்று வரவில்லை. அதனால், அந்த ஆபரேஷனை அவர்கள் கைவிட்டனர்.
ஆனால், அவனை பிடித்து வர போதிய ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. தாவூதை எளிதாக பிடித்துவிடலாம் என்று கூறி, அங்கு செல்ல அனுமதி கேட்டபோதெல்லாம், டில்லி மறுத்துவிட்டது,' என்று விளக்கமாக கூறினார்.
ஆனால், சில புலனாய்வு அமைப்புக்கள் கூறுவது வேறுவிதமாக உள்ளது. தாவூதை பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அவை கூறுகின்றன.
 எப்பொழுதும் ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு வளையத்துடன் வலம் வரும் தாவூத், பாதுகாப்புக்கு என, தனியார் பாதுகாப்பு வீரர்களையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு, தாவூதின் வலது கரம் என்று கூறப்படும் சோட்டா ஷகீல், 'தாவூது ஒன்றும் அல்வா துண்டு அல்ல. லபக் என்று எடுத்து வாயில் போடுவதற்கு' என கிண்டலாக கூறி உள்ளான்.
suran
ஆனால், சில உளவுத்துறை அதிகாரிகள் தாவூதை பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றே கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., ஒன்றும் அவ்வளவு திறமையானது அல்ல. பெரும்பாலான நேரங்களில் அது கோட்டை தான் விட்டுள்ளது. உதாரணமாக, ஒசாமா பின்லாடன் மரணத்தை கூறலாம். பின்லாடனும் ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு வளையத்தில் தான் இருந்தார்.
 ஐந்து, ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், சி.ஐ.ஏ., எனப்படும் அமெரிக்க புத்திசாலிகள் முன் அவர்கள் திறமை எடுபடவில்லை,' என்றனர.
 
இந்நிலையில்தற்போது  தாவூதை பிடிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் முன்கூட்டியே சில முயற்சிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.
அதாவது தாவூதிற்கு சொந்தமான 12 பெரிய சொத்துக்கள் வருமானவரி துறையிடம் உள்ளன. அவற்றை பல முறை ஏலம் விட முயன்றும் அது முடியவில்லை, எனவே, முதலில் அந்த இடங்களை ஏலம் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் சில இடங்கள் தாவூதின் அடியாட்களின் கைகளில் உள்ளன. அவற்றையும் மீட்க வேண்டும். மேலும், தங்கள் நடமாட்டத்திற்காக தாவூதின் ஆட்கள் குஜராத் கடற்கரை பகுதியில் நிலம் வாங்க முயற்சி செய்கின்றனர். அதை மாநில-மத்திய அரசுகள்  தடுக்க வேண்டும்,' என்றனர்.
முன்பு வந்த செய்தி ஒன்று:
தாவூத் இப்ராகிமை சுலபமாக கைது செய்யும் வாய்ப்பை, அப்போதைய உள்துறை மந்திரி SC.சவான் தடுத்து விட்டார். என காங்கிரசின் முகமூடியை கிழித்துள்ளார்,மும்பை முன்ணாள் போலீஸ் கமிஷனர் M.N.சிங்.
அவர் ஐ.பி.என். தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.    1993 ஆம் வருடம் மார்ச் 12 ஆம் தேதி,இந்தியாவையே உலுக்கிய மும்பை  குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக,நிழல்உலக தாதா,தாவூத் இப்ராகிமை  மும்பை போலீசார் தேடிவந்தனர்.குண்டு  வெடிப்பு  நட்ந்தவுடன், தலை-மறைவாகிவிட்ட தாவூத் துபாயில் தங்கியிருப்பதை மும்பை போலீசார் உறுதிபடுத்தினர்.
  இதை தொடர்ந்து துபாய்க்கு ஒரு போலீஸ் டீமை அனுப்பி,தாவூத்தை கைது செய்து கொண்டு வர அனுமதி கேட்டு மும்பை போலீஸ், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர் S.C.சவான் அனுமதி வழங்க மறுத்ததோடு மட்டுமல்லாமல்,இனிமேல் இது குறித்து சிந்திக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
  அதற்கு பின் சில மாதங்கள் கழித்துதான் தாவூத் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த
நிகழ்வு நடந்தது. அதன் பின் மும்பை போலீஸ் ஒருபோதும் இது குறித்து முயற்சி எதுவும் செய்யவில்லை.என ஐ.பி.என்  சேனலின் எடிட்டரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரனை சில மாதங்களில் முடிவடைந்து 123 பேர் கைது செய்யபட்டு,குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய பட்டபோதும்,20 ஆண்டுகளாக, சுப்ரீம் கோர்ட் இன்னும் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
    தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து  மேற்கொள்ளபடுவதாக அவ்வப்போது மக்களை ஏமாற்றி வந்த காங்கிரஸ் அரசின் முகமூடியை சிங் அவர்களின் இந்த பேட்டி கிழித்தெறிந்துள்ளது.
 
 
தினமலர் உதவியுடன்,
--------------------------------------------------------------------------------------------------------------------------
காத்திருப்பு
அன்றும் -இன்றும்,,

funny pictures picdumps

--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?