நாம் குஜராத்திகளாக இல்லை.
கௌதம் அதானி 2023 புத்தாண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் (Forbes) ரியல் டைம் உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 3வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சந்தை மதிப்பீட்டில் இருந்து 4.17 லட்சம் கோடி ரூபாய் அதானி குழும்ம் இழந்துள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில், நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன என்றும், இது பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பு செய்து பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதானி குழுமம் குறித்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை மிகவும் நம்பகமானது மற்றும் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக பில்லியனர் முதலீட்டாளர் வில்லியம் எக்மேன் தெரிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பில் தொடர்ச்சியான சரிவு காரணமாக அவர் இந்தப் பின்னடைவை அடைந்துள்ளார். அ...