தலைகீழ் பாடம்

 30 ஆண்டுகள் வரை ஐ பி எஸ் ஆக இருந்துள்ளீர்கள், பல்வேறு நகரங்களில் பணி புரிந்த அனுபவம் , பதவி ஓய்வு பெற்ற பின் அதிக நேரம் கிடைத்தது. நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை. 

ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பணியாற்றுவது மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியை கற்று வருவதாகவும் கூறினார். 

தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் கட்டிடக் கலை கிரேக்க கட்டடக்கலை கூட தோற்கும் என குறிப்பிட்ட அவர், தமிழின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தானது

என்பதை இது காட்டுகிறது

. நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது.


எனவே, நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளுமாறு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள், மொழியை கற்று கொள்ளுங்கள், உங்கள் பணியை செய்யுங்கள். 

இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எவ்வளவு அமைதியாக செயல்படுகிறீர்கள்

என்பது முக்கியம். நீங்கள் பணி செய்யும் இடம் சிறியதா , பெரியதா

என்பது முக்கியமல்ல தொடர்ந்து பணியாற்றுங்கள், உங்கள் பணியில் நீங்கள் சிறந்தவராக விளங்க வேண்டும்.

இவை எல்லாம் கூறியது யார்?

தமிழ்நாடு என்று கூறக்கூடாது.இந்தியாவில் எல்லோரும் ஒரு வழியில் சென்றால் அதை ஏற்காமல் தனி வழியில் போகிறது தமிழ்நாடு என்று கூறி பேசிய ஆர்.என்.ரவி தான் இவ்வாறு பேசியுள்ளார்.

"தமிழ்நாடுனு சொல்லக்கூடாதுன்னு ஒருத்தன் புலம்பிகிட்டு இருக்கானே.அவனுக்கு தமிழ்நாடு வரலாறு தெரியுமா?"

என்று முதல்வர் பேசிய பின் இந்த மாற்றம்.

தமிழ்நாடு வரலாறை படித்திருப்பார் போல!

----------------------------------------------------------இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு