இண்டியா: தி மோடி க்வெஸ்டின்’

இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ என்ற இரண்டு அத்தியாய ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியுள்ளது. 

இதன் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது. 

முதல் அத்தியாயத்தில் நரேந்திர மோதியின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை காட்டப்பட்டது. அதில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னேறி குஜராத்தின் முதலமைச்சர் பதவியை அடைவது வரை சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படம் பிரிட்டிஷ் வெளியுறவு

அலுவலகத்திலிருந்து பிபிசியால் பெறப்பட்ட, வெளியிடப்படாத அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 

நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறையில் குறைந்தது 2000 பேர் இறந்தது குறித்து இந்த ஆவணப்படத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


2002ல் குஜராத்தில் வன்முறைச் சூழலை ஏற்படுத்தியதற்கு மோதிதான் நேரடிப் பொறுப்பு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.
வன்முறைக்கு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோதி தொடர்ந்து வன்மையாக மறுத்து வருகிறார். 

ஆனால் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகத்திற்காக அறிக்கை எழுதிய பிரிட்டிஷ் தூதாண்மை அதிகாரியிடம் பிபிசி பேசியபோது, அவர் தனது அறிக்கையை தொடர்ந்து பற்றி நிற்பதாகத் தெரிவித்தார்.


குஜராத் வன்முறையில் பிரதமர் மோதிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது. செய்தியாளர் கூட்டத்தில் இந்த ஆவணப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி "எங்கள் கருத்துப்படி இது ஒரு துஷ்பிரச்சாரம் என்று நான் தெளிவுபடுத்துகிறேன். 

மக்கள் ஏற்கனவே நிராகரித்த ஒரு வகையான கதையை முன்வைப்பதே இதன் நோக்கம்,” என்று கூறினார்.
இந்த ஆவணப்படம் துஷ்பிரச்சாரம் மற்றும் காலனித்துவ மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டதாக அரசுடன் தொடர்புடைய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 அதே நேரம், முழுமையான ஆய்வுக்குப் பிறகு பிபிசியின் தலையங்க விதிமுறைகளின்படி இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதாக பிபிசி கூறுகிறது.
முன்னதாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில கல்வி வளாகங்களில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். 

மேலும், பல பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். 

குடியரசு அறிவிப்பு விகடன் தலையங்கம்





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?