பி.பி.சி , வரலாறு

 1922-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பி.பி.சி நிறுவப்பட்டது. இது முன்பு பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் நிறுவனம் என்று அழைக்கப்படும் ஒரு தனியார் நிறுவனமாக இருந்தது. 

பிரிட்டிஷைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குகளை வைத்திருக்கஅனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் நிறுவனம் வளர்ச்சியடைய போராடியது. 1926 பொது வேலைநிறுத்தத்தின் போது அதன் அதிர்ஷ்டம் திரும்பியது. பேராட்டம் மற்றும் நெருக்கடி பற்றிய பிபிசியின் கவரேஜ் பிரிட்டிஷ் மக்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது, இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக அமைந்தது.

அதே ஆண்டின் பிற்பகுதியில் பாராளுமன்றக் குழு பி.பி.சியை பொது நிறுவனமாக மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தது.

 தனியார் நிறுவனத்திற்குப் பதிலாக கிரவுன்-சார்ட்டர்ட் நிறுவனம் என பிரிட்டிஷ் ஒளிப்பரப்பு கழகத்தால் மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் நிறுவனம் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது.

இன்று வரை, பிபிசி ராயல் சாசனத்தின் ( Royal Charter) விதிப்படி செயல்படுகிறது. 

இது ஆளும் மன்னரால் வழங்கப்படும் முறையாகும். இது இருந்தால் தான் நிறுவனம் உரிமம் பெற முடியும். நாட்டின் உள்துறை செயலாளர் உரிமத்தை வழங்குவார். 

10 வருடங்களுக்கு ஒரு முறை சாசனம் புதுப்பிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சாசனம் டிசம்பர் 31, 2027 வரை செயல்படும்.

சாசனம் ஒளிபரப்பு நிறுவனத்தின் நோக்கங்களையும் விளக்குகிறது. பிபிசி “யுனைடெட் கிங்டம் மற்றும் உலக நாடுகளுக்கு அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களின் புரிதலை துல்லியமாக, பாரபட்சமன்றி, உண்மை நிலவரங்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படியே பி.பி.சி,செயல்படுகிற்து.அதன் செய்திகள் நம்பகத்தன்மைக்காக  நடுநிலைக்காக உலகம் முழுக்க உள்ள மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

அதன் நிர்வாக வாரியம் மற்றும் Ofcam எனப்படும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. 2016-ல் மதிப்பாய்வுக்குப் பிறகு குறைபாடு கண்டறியப்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, நிறுவனத்தை நிர்வகிக்க பிபிசி வாரியம் அமைக்கப்பட்டபோது, ​​அதை ஒழுங்குபடுத்தும் முழுப் பொறுப்பும் ஆஃப்காம் (Ofcam) ஒழுங்குமுறை ஆணையத்திற்கு
வழங்கப்பட்டது. இந்தக் குழு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறது.

பிபிசி நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகளைப் பெற அல்லது பதிவு செய்வதற்கான உபகரணங்களுடன் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வருடாந்திர தொலைக்காட்சி கட்டணத்தில் இருந்து நிதியுதவி பெறுகிறது. அதோடு பிபிசி ஸ்டுடியோஸ் மற்றும் பிபிசி ஸ்டுடியோவொர்க்ஸ் ஆகியவற்றிலிருந்தும் வருமானம் பெறுகிறது.

2022-ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வருடாந்திர தொலைக்காட்சி கட்டணத்தை முடக்குவதாக அறிவித்தபோது நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அது மட்டுமின்றி, 2027-ம் ஆண்டுக்குள் வருடாந்திர தொலைக்காட்சி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து விடுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தி கார்டியன் வெளியிடப்பட்ட அறிக்கையில் , “பிபிசி ஆண்டுக்கு 3.2 பில்லியன் பவுண்டுகள் உரிமக் கட்டண வருவாயைப் பெறும் என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்றவற்றின் போட்டி காரணமாக அதன் திட்டங்களை உருவாக்குவதற்கான செலவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து அரசாங்கத்துடன் பி.பி.சி-யின் உறவு

முன்பு குறிப்பிட்டது போல், பிபிசி தனது செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் தலையீடு இல்லாமல் நடத்துவதற்கு முழு சுதந்திரம் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது பலரிடமிருந்து சிக்கல்களை எதிர்கொள்கிறது. பிரச்சினைகளில் முரண்படுகிறது.

பல ஆண்டுகளாக, நிறுவனம் இடதுசாரி சார்பு கொண்டதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறது. பிரதமர் மார்கரெட் தாட்சரின் பதவிக் காலத்தில், அவரது கட்சி உறுப்பினர்கள் பலர் பிபிசி கண்டித்தனர்.

 2016 தேர்தல் நேரத்தில் “பிரெக்சிட் எதிர்ப்பு” கவரேஜ் செய்ததற்காகவும் இது விமர்சனத்தை எதிர்கொண்டது.

2020- ம் ஆண்டில், டிம் டேவி பி.பி.சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாகப் பொறுப்பேற்றபோது, ​​அவர் இந்தச் சிக்கலைச் சமாளிப்பதாக உறுதியளித்தார். மேலும், இடது சாரி   ஊழியர்கள் மாற்றப்படுவார்கள்அல்லது வெளியேறும்படி கேட்டுக் கொண்டார்.ஒன்றும்நடக்கவில்லை இதுவரை.

மோடியின் உண்மைகள் பகிங்கமாவதுதான் நடந்துள்ளது..

--------------------------------------------------------------------------------------------------------------------


74 வது குடியரசுத் தினம்.(26.01.2023)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?